Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 362
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 80
பாகம் - 80
விஜயலதா வனிதா செயலில் விக்கித்து நின்றவள். நீயும் ஒரு பெண் தானே நான் உனக்கு அக்கா முறை வேண்டும் என்னிடம் இது போல் பேச உனக்கு வெட்கமாக இல்லையா?
எதே நீங்க வெட்கத்தைப் பற்றி பேசுகிறீர்களா? சொந்த தங்கச்சி அவளையே உங்கள் கொழுந்தனார் அறைக்குள் பால் சொம்பு கொடுத்து உள்ளே போகச் சொன்னவங்க தானே நீ எல்லாம் வெட்கம் மானம் சூடு சொரனை இதைப் பற்றி பேசுகிறாயே.., அது தான் சிரிப்பா இருக்கிறது.
நீ என்ன பெரிய உத்தமியாடி நீயும் தானே தேவ் ஆனந்த் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று இப்போது வரைக்கும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எந்த சந்தர்பம் கிடைக்கும் என்று திரிகிறாயே இது என்ன நல்ல பெண்ணுக்கு அழகோ?
நீயும் சாக்கடை நானும் சாக்கடை இப்படி நம்ம இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக் கொள்ளாமல் நம் எதிரிகளின் கண்ணில் விரலை வைத்து ஆட்டாமல் நாம் இருவரும் சண்டை போட்டுக் கொள்வதில் என்ன இலாபம் இருக்கிறது என்று விஜயலதா அவளை பிரைன் வாஸ் செய்து அவளிடம் இருந்து தன் சேலையை வாங்கிக் கொண்டாள்.
நான் தான் எல்லாரையும் கதி கலங்க வைப்பேன் என்னையே கலங்க அடித்து விட்டாளே கொஞ்ச நேரத்தில் அய்யோ இப்ப இங்கே இருந்து எப்படி தப்பித்து நம் அறைக்குச் செல்வது.
என்னக்கா அப்படியே நைசா பேசி நழுவிட்டிங்களே அவ்வளவு சீக்கிரம் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது.
அடப் பைத்தியமே எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. ஆனால் உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லூசு மாதிரி பிஹேவ் செய்யாமல் ஒதுங்கிப் போய் விடுடி.
ஓஹோ நான் உங்களை என்ன செய்து விடுவேன் இந்தப் பயம் பயக்கிறீர்கள் என்ன என்னை நம்பச் சொல்கிறீர்களா? உங்கள் நடிப்புத் திறமையை என்னிடம் காட்டி என்ன? நான் உங்களை வைத்து சினிமாப் படமா எடுக்கப்
போகிறேன். நீங்கள் ஆடுபாம்பே என்று டேன்ஸ் ஆடப் போகிறீர்களா?
வனிதா நல்லாத் தானே இருந்தாய் உனக்கு என்னாச்சுடி ஆம்பளை மாதிரி குரல் மாறிவிட்டது. என்று விஜயலதா பயக்கவும்.
ஆமா நான் ஆம்பளையே தான் என்று அந்த அறையே அதிரும் அளவுக்கு சிரித்தால் வனிதா. நான் ஆம்பளை தான் ஆனால் பெண் உருவில் இருக்கும் ஆம்பளை பாக்கிறாயா? என்று சிரிக்கிறாள் அவளது வாயில் இருந்த பல் எல்லாம் கருப்பாக மாறி நாக்கு பூராவும் இரத்தம் வடிந்தது.
அட கிறுக்கச்சி பேசும் அவசரத்தில் நாக்கை கடித்து விட்டாளே என்று விஜயலதா நினைக்கவும்.
என்னடி உனக்கு யோசனை என்று வனிதா மிக அருகில் வரவும் பயந்து விஜயலதா பின் வாங்கினாள்.
வனிதாவிற்குள் நிழல்கள் இறங்கி இருக்கிறது. அது தெரியாமல் விஜயலதா வாயைக் கொடுக்கவும் நாக்கை சொலட்டி
ஒழுகும் இரத்தத்தை வனிதா சுவைக்கவும்.. பயத்தில் விஜயலதா தன் கண்ணை மூடி விட்டு கத்தி விட்டால் பேய் என்னை யாராவது காப்பாத்துங்க என்று இப்போது வேகமாக கதவைத் தட்டிக் கொண்டு இருந்தாள்.
ஏய் நீ என்ன கத்தினாலும் வெளியே சத்தம் கேட்காது. என்று இப்போது வீடு அதிர சிரித்த வனிதா நான் ஒதுங்கிப் போனா நீ என்னை வைத்து நாடகம் ஆடுகிறாயா? நான் என்ன ஏமாளியா? என்று அவளை நெருங்கிய வனிதா உருவில் இருக்கும் நிழல்கள் அவளை அப்படியே ஒற்றைக் கையால் தூக்கி தலைக்கு மேல் வைத்து சுற்றியது.
ஏற்கனவே வயிற்றில் இருப்பது அனைத்தும் வாமிட் செய்து இருக்க இப்போது தலை கிர் என்று ஆனதோடு மயக்கத்திற்குச் சென்று விட்டாள்.
அவளின் தலை தொங்குவதைப் பார்த்து இப்போது அவளை கீழே பொத்து என்று வீசியது நிழல்கள்.
அத்தனை உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் அவளுக்கு இடுப்பின் எலும்பு பிராக்ச்சர் ஆகி விட்டது.
விஜயலதாவை கதவின் ஓரம் தள்ளி விட்டு விட்டு இப்போது வனிதாவின் உடலில் இருந்து வெளியே வந்தது நிழல்கள்.
அவளோ நல்ல போதையில் இருப்பவள் போல் மயக்கத்தில் கிடந்தாள். இது என்ன பிசுபிசுனு இருக்கிறது என்று தனது நாக்கில் சுவைத்தது இத்தனை நேரம் பெர்பாமன்ஸ் செய்த நிழல்.
டேய் அங்கே எதை எடுத்து நக்கிட்டு இருக்கிறாய்?
நிழல்ஸ் இந்தப் பாட்டிலில் இருப்பது சுவையாக இருக்கிறது. அது தான் சுவைத்தேன்.
ஏண்டா போண்டா வாயா அவசரத்தில் ஜாம் பாட்டில் எடுத்து அந்த பெண்ணின் வாயில் ஊற்றி விட்டாயே நல்லவேளை அவளுக பயத்தில் அதை சுவைத்துப் பார்க்கவில்லை. இல்லை என்றால் தக்காளி சட்னி மாதிரி நம் நாட்டாமை நிழல் நம்மை ஜூஸ் ஆக்கி இருக்கும்.
இது தான் நான் நிழலாக வந்ததும் முதல் ப்ராஜெக்ட் இதில் சொதப்பி இருந்தால் வெளிநாடு செல்லும் வாய்ப்பை இழந்து இருப்பேன் என்று ஒரு நிழலா
சொல்லவும்.
நீயே பேயாக சுற்றுகிறாய்? இதில் உள்நாடு வெளிநாடு என்று எதற்கு பிதற்றுகிறாய்?
நான் இங்கே சுற்றுலா வந்த இடத்தில் இறந்து விட்டேன். நான் என் தாய் நாடு பார்க்க வேண்டும் என்று வெளிநாட்டு பேய் சொல்ல.
நீ பாரின் பேயா சரி அங்கே எல்லாம் இதே போல் கல்லறை தோட்டத்தில் கல்லூரி இருக்கிறதா?
நீங்கள் நினைக்கிற நேரத்தில் இப்படி வெளியே உலா பேகிறீர்கள். ஆனால் அங்கே கல்லறைத் தோட்டம் மட்டும் தான் இருக்கும். நாங்கள் எல்லாம் எங்கேயும் போக முடியாது.
ஏன் அப்படி சொல்கிறாய்?
அட இது கூடவா புரியவில்லை நம் நாட்டில் அதிகப்படியாக குழி தோண்டி புதைத்து விட்டு சென்று விடுவார்கள். எப்படியும் பேயால் வெளியே வந்து விட முடியும். ஆனால் அங்கே எல்லாம் அதற்கு வாய்ப்பே இல்லை தெரியுமா?
ஏன்?
கல்லறை கட்டி வைத்து விடுவார்கள் அதுவும் தலை மேல் ஒரு பெரிய கருங்கல் தூண் போல் பெயர் பிறந்த தேதி இறந்த தேதி எல்லாம் போட்டு வைத்து விடுவார்கள்.
அப்படியே மூச்சு முட்டி விடும். இதில் எங்கே உலாப் போவது எல்லாம் சான்ஸே இல்லை.
ஓஹோ உனக்கு சிறையில் இருக்கத்தான் ஆசையா? அது தான் மறுபடியும் அங்கே போக ஆசைப்படுகிறாயா?
நான் எப்போது அப்படி சொன்னேன்.
இங்கிலீஷ் பேய் என்பது சரியாகத்தான் இருக்கிறது.
எங்கள் ஊரில் எல்லாம் பேய்களுக்கு பிரியாணி குவார்ட் எல்லாம் வாங்கி கொடுப்பாங்க. அத்தோட நிறைய புளியமரம் இருக்கிறது.
புளியமரத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்.
நீ எல்லாம் கல்லூரி வாசலே மிதிக்க லாய்க்கு இல்லை முதலில் எல்கேஜியே படித்து முடிக்கவில்லை போ என்று வெளியே தள்ளியது மற்றொரு நிழலா?
ஏய் சண்டையை நிறுத்துங்க இவங்க இரண்டு பேரும் எங்கேயாவது எழுந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய நிழலா இப்போது
வீட்டிற்கு வெளியே வந்து நின்று கொண்டது.
இவுங்க இரண்டு பேரும் திருமணத்திற்கு வருவதற்கு பதிலாக வராமல் இருப்பதே தான் நல்லது. வந்தால் வேண்டும் என்றே ஏதாவது செய்வார்களே என்று நினைத்தது. அது தான் கடைசி நேரத்தில் இவ்வாறு விஜயலதா இடுப்பு எலும்பில் ப்ராக்ச்சர் செய்து விட்டது.
அதே போல் வனிதாவின் உடலில் கொஞ்ச நாட்கள் ஒரு நிழலாவை உள்ளே இருக்க வைத்து அவளுக்கு பேய் பிடித்தது போல் மாற்றி விட வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டு இப்போது வீட்டின் உள்ளே சென்றது.
இனி தேனருவி இங்கே தானே வாழப் போகிறாள். அவளுக்கு இவர்களால் எந்தப் பாதிப்பும் வராத மாதிரி ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.
இப்போது விடியற்காலை ஆனதால் அனைவரும் எழுந்து கொள்ள ஆரம்பித்தனர்.
ரவிக்குமார் நினைவு வந்தவன் இப்போது தான் நேற்று அவர்களை அந்த அறையில் வைத்து பூட்டியது நினைவு வந்தது.
உடனே சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து பார்க்கும் போது அந்த அறை திறந்து இருந்தது.
அது தானே அவளே வில்லி அவள் வேறு ஒரு சாவியை வைத்து கதவைத் திறந்து வெளியே வந்து விட்டாள் போல் இருக்கிறது.
சரி அவளும் ரெடியாகி விடுவாள். நாம் போகலாம் குளித்து ரெடியாகி மண்டபம் போக வேண்டும் என்று ரவிக்குமார் சென்று விட்டார்.
உண்மையில் நிழலா தான் இவ்வாறு செய்தது. இல்லை என்றால் ரவிக்குமார் உள்ளே வந்து பார்த்து இருந்தால் இவளுக நாடகமாடி இருப்பாள்
மறுபடியும் திருமணத்தை சாக்காக வைத்து எந்த ஒரு தடங்கல்களும் உருவாக விடக் கூடாது என்று உறுதியாக இருந்தது.
இரண்டு நிழலாவை அங்கே விட்டு விட்டு இப்போது தேனருவியின் வீட்டிற்குச் சென்று இருந்தது. வாசலில் மிகப்பெரிய கோலம் போடப்பட்டு அதற்கு கலர் பொடி கொடுத்து அழகாக இருந்தது.
தோழிகள் அனைவரும் காலையில் எழுந்ததும் குளித்து ரெடியாகி மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியவைகளை எடுத்து வைத்து விட்டு அனைவருக்கும் காஃபி போட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தனர்.
தேனருவியை ஒரு கும்பல் அலங்கரிக்க பூவிழியை ஒரு கும்பல் அலங்கரித்தது.
அண்ணி நான் ஈவ்னிங் தானே ரிசப்ஷனில் நிற்கிறேன். அதனால் அவளுக்கு நிச்சயம் காலையில் அதனால் அவளை ரெடி செய்து இருக்கலாம்.
ஆமாம் அவளுக்கு இன்றைக்கு நிச்சயம் மட்டும் தான் ஆனால் நீ தான் இன்றைக்கு இளவரசி எங்கள் அண்ணா இளவரசனைக் கட்டிக் கொள்ளும் மணவாட்டி டி. அதனால் இந்த நினைவுகள் காலத்திற்கும் நினைத்துப் பார்க்க வேண்டியவைகள் அதுவும் அழகாக இருக்க வேண்டாமா?
அண்ணி நீங்களும் ரெடியாகுங்க ஈவினிங் எல்லோரும் ஓரே மாதிரி பட்டுச்சேலை கட்டுகிறோம் சரியுங்களா? என்று ஹைபை போட்டுக் கொண்டனர்.
அண்ணி அது போல் எல்லோரும் ஒரே மாதிரி மணப்பெண் அலங்காரம் தான் நீங்களும் செய்து கொள்ளுங்கள்.
என்னம்மா பொண்ணுப் பிள்ளை நீ தான் நாங்க இல்லை.
அதெல்லாம் எல்லோரும் ஒரே மாதிரியான மேக்கப் தான் ஒட்டியாணம் நெத்தி சுட்டி எல்லாம் வைத்துக் கொண்டு செம எஞ்சாய் செய்றோம். அது மட்டும் இல்லாமல் பிரதிலிபியில் இருந்து நிறையப் பேர் வரப் போகிறார்கள்.
ஆமாம் நாங்கள் இரண்டு நாட்கள் இங்கே தான் இருக்கப் போகிறோம் அப்பவே வீடு நிறைஞ்சு இருக்கிறது. இன்னும் நம் சொந்தங்கள் வந்தா இடமே பத்தாது.
அப்படி யாரெல்லாம் வரப் போகிறார்களோ? நம் மேக்கப் பார்த்து பயந்து போகாமல் இருந்தால் சரி என்று பேசி சிரித்தாங்க.
தொடரும்...