Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 263
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல் 
பாகம்- 8
பாகம்- 8
தேனருவி தூங்கிக் கொண்டு இருந்தவள் கதவைத் தட்டியதை உணர்ந்து தினமும் திறப்பது போல் திறந்தவள் பிறகு அதிர்ந்தவளாக தனது அறையைத் திரும்பிப் பார்த்தாள்.
தான் இரவு செய்து வைத்து இருந்தது எதுவும் இல்லாமல் பளிச் சென்று சுத்தமாக இருந்தது. தனது கட்டிலை சுற்றிலும் தேடினாள்.
பிறகு கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்ப்பதைப் பார்த்த பூவிழி தேனக்கா என்ன? புதுசா
தண்டால் எல்லாம் எடுக்கிறாய்?
அதெல்லாம் ஒன்றுமில்லை போ நான் கிளம்பி வருகிறேன் என்று அவளைத் துரத்தி விட்டு விட்டு
நேற்றைய இரவு நடந்ததை நினைத்துப் பார்த்தால்.
அப்போது தான் அடச்சீ நாம் தானே இதை எல்லாம் சுத்தம் செய்தோம் அதுவே மறந்து விட்டேனே அது மட்டும் நியாபகத்தில் இல்லாமல் அழிந்தது.
நீ உடல் நான் நிழல்
நீ கட்டிலைச் சுற்றி வைத்தால் எனக்கு பாதுகாப்பு தான் நான் இங்கே உன் கூடவே இருந்து கொள்வேன். எனக்கும் கல்லறைக் கல்லூரிக்குப் போய் போர் அடித்து விட்டது. நான் உன் கூடவே கல்லூரிக்கு வருகிறேன்.
எனக்கு உன் கேண்டீன் உளுந்து வடை வாசம் ரொம்ப பிடித்து விட்டது. நான் தான் கல்லூரி செல்லும் முன்னே நிழலாகிப் போனேன்.
பிறகு எப்படி நீ இந்தப் புக்கில் வந்தாய்? என்று தேனருவி கேட்க
அச்சோ இப்படி எல்லாம் குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது. பிறகு நான் ஆரம்பத்திலிருந்து சொல்ல ஆரம்பித்து விடுவேன்.
நான் அன்றைக்குத் தான் பேயாக மாறி இருந்தேன். அதனால் எனக்கு இதுக்கு முன்னால் இருந்த பேய்களின் ரூல்ஸ் தெரியவில்லை. அதனால் நான் பாட்டுக்கு புளியமரத்தின் மேல் கொம்பில் தொங்கிக் கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டு இருந்தேன்.
தினமும் இரவில் இதுவே வாடிக்கையானது. அப்போது தான் பேய்கள் ஒளிந்து விளையாடிக் கொண்டு இருந்தோம். நான் எந்தப் பேய்க்கும் சிக்காமல் இந்த அரண்மனை வீட்டிற்குள் வந்தேன். அந்த அறையில் இருந்து கெண்டேன்.
நான் ஒளியும் போது திறந்து இருந்த பெட்டி நான் ஒளிந்ததும் மூடி விட்டது.
நீ தான் பேயாச்சு தப்பித்துப் போய் இருக்கலாம் தானே. சரியான லூசு நீ.
அது தானே உன்கிட்ட மாட்டி இருக்கிறேன்.
அன்று கிரஹணம் அதனால் உள்ளே வந்து ஒளிந்த என்னால் திரும்ப அடுத்த கிரஹணம் வரும் வரை இந்த வீட்டில் அந்தப் பெட்டிக்குள் தான் இருக்க வேண்டும் என்று எங்கள் தலைமைப் பேய் சொல்லி விட்டது.
அச்சோ அப்புறம் உனக்கு ஒரே இடத்தில் இருக்கப் போர் அடிக்கலையா?
நான் பகலில் பூராவும் கல்லறையில் தூங்கிக் கொண்டு இரவில் புளியமரத்தில் ஊஞ்சலாடி விளையாண்டு கொண்டு இருந்தேன். ஆனால் தெரியாமல் இந்த வீட்டில் வந்து மாட்டி கிட்டேன்.
நிழல் நீ என்னிடம் பொய் தானே சொல்கிறாய்? கிரஹணம் அன்று பேய்களுக்கு சைத்தான்களுக்குத் தான் பவர் அதிகமாக இருக்கும் என்று நான் கதையில் படித்து இருக்கிறேன்.
அய்யோ இது எனக்குத் தெரியாமல் போய் விட்டதே என்று இப்போது நிழல் சத்தம் போட்டு சிரித்தது.
மெதுவா சிரி நீ இந்தச் சிரிப்பு சிரித்தால் மற்றவர்களுக்கு காது கேட்டு விடும். நீ இன்றைக்கு வகுப்பில் என் கூட சத்தம் போட்டு சிரித்ததால் நான் உன்னை அடிக்க எல்லாரும் என்னை லூசு என்று நினைத்து விட்டார்கள் என்று தேனருவி அழுக.
உன்னை நான் காப்பாற்றி தான் இருக்கிறேன். நீ அந்த டீச்சரைப் பேசிய பேச்சுக்கு அவர் ஆபீஸில் சொல்லி இருந்தால் உன் நிலைமை நினைத்துப் பாரு.
சரி இதை எல்லாம் எடுத்து போடு நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வருகிறேன்.
ஏய் இந்த நேரத்தில் வெளியே போகிறேன் சொல்கிறாய்? உனக்குப் பயமில்லையா?
என்னைய என்ன நீ என்று நினைத்து விட்டாயா? நான் உன் கூட பேசியதில் பழைய நினைவு வந்து விட்டது. அதனால் போய் புளியமரத்தில் ஊஞ்சலாடி வருகிறேன்.
அப்படியே போய்த் தொலை வேறு எங்காவது இங்கே வந்து விடாதே என்று தேனருவி வாய்க்குள்
முனங்கினாள்.
நான் உன் உடம்புக்குள் தான் நேற்றே வந்து விட்டேன். இனி நானாகப் போகும் வரை உன்னுடலில் தான் இருப்பேன் என்று நிழல் சென்று விட்டதை நினைத்தவள்.
சரி அது நம்மை ஒன்றுமே செய்ய வில்லை. இப்போது அது வருவதற்குள் நாம் காலேஜ் சென்று விடலாம்.
அட நம்ம சாரு இன்றைக்கு பேப்பர் தருவார். பூரா மார்க்கும் எனக்குத் தான் என்று ஒரு கெத்தாகவே கிளம்பி கல்லூரிக்கு வந்தாள்.
முதல் வகுப்பே தேவ் ஆனந்த் தான் வந்ததிலிருந்து தேனருவியைத் தான் முறைத்துக் கொண்டு இருந்தான்.
அவன் பார்வையில் அவளுக்கு அல்லுவிட்டது.
மலர்க்கொடி சில்பா இருவரும் கூட, ஏய் எருமை என்னடி செஞ்சு வைத்தாய்? சார் உன்னை இந்த முறை முறைக்கிறார்?
அதற்குள் மற்ற மாணவர்கள் சார் இன்றைக்கு டெஸ்ட் பேப்பர் தருகிறேன் சொன்னீங்க.
தந்துட்டாப் போச்சு என்று அனைவருடைய பேப்பரும் கொடுத்து முடிக்க.
தேனருவி மட்டும் அவளுடைய பேப்பருக்காக வெயிட்டிங்.
ஒரு வேளை நான் தான் முதல் மார்க் என்னவோ? அது தான் மற்றவர்களுக்கு கொடுத்த பிறகு நமக்கு ஸ்பெஷலாக கொடுப்பாரோ? என்று மனதிக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருந்தாள்.
(அவனோ இவளைக் கத்தி குதறலாம் என்ற ரீதியில் முறைத்துக் கொண்டு இருந்தான்.)
சில்பா என்னடி உன் பேப்பர் மட்டும் காணவில்லை. என்னவோ? நீ எழுதிய ஸ்பீடு பார்த்து சாருக்கு குளிர் ஸூரம் வந்து விட்டது என்று சொன்னாய். அப்படி பதில் எழுதி இருந்தா இப்போது உன் பேப்பர் எங்கே போச்சு.
நானே குழப்பத்தில் இருக்கிறேன். இருடி எனக்கு என்ன பயம் நானே கேட்கிறேன் என்று எழுந்து சார் எல்லாருக்கும் கொடுத்து விட்டீர்கள் என் பேப்பர் மட்டும் கொடுக்கவில்லை.
அது டிரெயின்லா வந்துட்டு இருக்குது. நீ ஸ்டாப் ரூமிற்கு வந்து வாங்கிக் கொள். என்று கூறிக் கொண்டு முறைத்ததில் அதற்கு மேல் கேட்க அவளுக்குத் தைரியம் இருக்கிறதா?
மற்ற மாணவர்களுக்கு வேறு வேலைகளைக் கொடுத்தவன் ஸ்டாப் ரூமிற்கு சென்றான்.
அவன் சென்ற கொஞ்ச நேரம் கழித்து தேனருவி பயந்து கொண்டு சென்றால் நேற்று தான் போட்ட ஆட்டம் என்ன? டெஸ்க்கில் தாளம் போட்டது என்ன? இப்போது தன் நிலைமையை நினைத்து நொந்தவள் நான் நல்லாகத் தானே பதில் எழுதினேன்.
வெளியே நின்று கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்தாள். வேறு மேம் யாராவது இருக்கிறார்களா?
அவளைப் பார்த்து விட்டான் தேவ் ஆனந்த் ஹேய் உள்ளவா தப்பு செய்யும் போது தையரியமாக செய்வது மாட்டி கிட்டால் எதுவுமே தெரியாத மாதிரி பம்பிக் கொள்வது.
மனதில் உறுதி வேண்டும் என்று தேனருவி தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு தேவ் ஆனந்த் முன்பு போய் நின்றாள்.
அவளின் முகத்திற்கு நேராக பேப்பரைத் தூக்கிப் போட்டான்.
அந்தப் பேப்பரில் கண்ணைப் பதித்தவளுக்கு கண்ணா முழிகள் வெளியே வந்து விடும் அளவுக்கு கண்ணை விரித்தாள் அதிர்ச்சியில். நேற்று அவள் பேப்பரில் எழுதியது எதுவும் இல்லை அதற்கு பதில் நீ உடல் நான் நிழல் என்று இருந்தது.
ஏய் இது என்ன? நான் உடல் நீ நிழல் கல்லூரிக்கு எதுக்கு வருகிறாய். காதல் செய்யவா? நீ
மாணவி நான் வாத்தியார் அது நினைவு இருக்கிறதா?
நேற்று ஒரு நாள் உனக்கு உதவியதால் நீ உடனே கற்பனை கோட்டை கட்டி விட்டாயா?
இந்தப் பதிலை எழுதுவதற்கு தான் அத்தனை பில்டப் போட்டாயா? இந்த லட்சணத்தில்
இதை அனைவர் முன் உன் பேப்பரை கொடுக்கவில்லை என்று பீல் செய்கிறாய்?
தேனருவி விட்டாள் அழுது விடுவாள் போல் நின்று கொண்டு இருந்தவள். சார் போதும் நிறுத்துங்கள் என்று அவன் முன்னால் பேசத்தான் நினைத்தால் ஆனால் பயமாக இருந்தது.
சார் சத்தியமாக இதை நான் எழுதவில்லை. வேறு யாரோ என் ஹேண்ட் ரைட்டிங் மாதிரி எழுதி வைத்து பேப்பரை மாற்றி இருக்கிறார்கள். அது தெரியாமல் நீங்கள் என்னைச் சத்தம் போடுகிறீர்கள். உங்களுக்கு உண்மை தெரிந்தால் பீல் செய்வீர்கள்.
ஏய் செய்வதெல்லாம் பித்தலாட்டம். இதில் மற்றவர்களை குற்றம் சொல்கிறாயா?
அப்போது தான் காலாண்டர் பார்த்தவள் ஏப்ரல் ஒன்று இன்றைய தேதி என்று தெரிந்தவள்.
சார் இன்றைக்கு என்ன நாள் அது தான் நீங்கள் இப்படி என்னைச் சொல்கிறீர்களா? எனக்கு இப்போது தான் புரிந்தது.
என்ன? சொன்ன விளையாட்டா?
ஆமா சார் இன்றைக்கு ஏப்ரல் ஒன்று தானே அது தான் ஏப்ரல் பூல் செய்கிறீர்களா? அச்சோ நான் நிஜம் என்று நம்பி விட்டேன். ரொம்ப பயந்து விட்டேன். போங்க சார் இப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. என்னோட மார்க் எவ்வளவு சார் நான் எழுதிய விடைத்தாள் எங்கே சார் என்று கேட்டு நின்றாள்.
இவளை என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தான். கோசலை மேம் வந்தவர்கள். தேனருவி நீ டாக்டரைப் போய் பார்த்தாயா?
தேவ் ஆனந்த் எதுக்கு டாக்டர் பார்த்தாளா கேட்கிறீங்க மேம்? அது தான் நேற்று காலையில் மருத்துவமனை சென்று தான் வந்தாளே என்று நேற்று காலையில் நடந்த நிகழ்வை மனதில் வைத்து சொல்ல.
இல்லை சார் நேற்று லன்ஞ் விடுவதற்கு முதல் ப்ரியடு நான் தான் அப்போது தேனருவி நடந்து கொண்டதையும் தான் வெளியே அனுப்பியதையும் அதற்கு பிறகு தேனருவி தன்னைக் கேலி பேசியதும் அதற்கு அவளை அவர் திட்டியதும். அப்போது அவள் செய்த சேட்டையில் தான் ஏதோ மன அழுத்தம் போல் இருக்கிறது. அது தான் மருத்துவரை போய் பார்க்கச் சொன்னேன்.
அது தான் போனாயா? தேனருவி ஆமா இப்போது எதுக்கு இங்கே வந்து சார் கிட்ட திட்டு வாங்குகிறாய்?
மேடம் நேற்று டெஸ்ட் வைத்தேன் அது தான் பதில் எழுதவில்லை. அதை வகுப்பில் அனைத்து ஸ்டுடண்ட் முன் திட்டினால் இவளின் வருங்காலம் பாதிக்கப்படும் அது தான் இங்கே வந்து அறிவுரை சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
தேனருவி உனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தானே. நாளைக்கு படித்து வா. உனக்கு டெஸ்ட் வைக்கிறேன்.
இதே கேள்வி கேட்க மாட்டேன் வேறு கேள்வி தான் கேட்பேன். போ நாளைக்கு ஒழுக்கமாக பதில் எழுதவில்லை அப்புறம் உன் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று மிரட்டி தான் அனுப்பி வைத்தான்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டாள்.
தொடரும்...
இவளின் சேட்டையில் தேவ் ஆனந்த் கவரப்படுவானா?
Last edited: