Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 361
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 79
பாகம் - 79
விமலா ஒரு ஐடியா சொல்லவும் அனைவரும் அதைச் செயல்படுத்த முடிவு செய்தனர்.
நிழலா நீ பதிவு செய்து வைத்ததை எங்கள் செல்லில் டவுன்லோட் செய்து கொள்கிறோம். அதை தேவ் ஆனந்த் அண்ணா சிவக்குமார் அண்ணா ரவிக்குமார் அண்ணா மூவருக்கும் வாட்சாப்பில் பகிர்ந்து விடலாம். அது மட்டும் போதும் அதை அவர்கள் பார்த்துக் கொண்டு அவர்கள் அவர்களை கண்டித்துக் கொள்வார்கள் என்று ஒரு மனதாக அனைவரும் முடிவு செய்து கொண்டு அதே போல் செய்தனர்.
சரி எல்லோரும் போய் தூங்கலாம் நாளைக்கு காலையில் நேரத்தில் மண்டபம் செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டு அனைவரும் உறங்கச் சென்றனர்.
நிழலா தன் கல்லறைத் தோட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களை அழைத்து சில பொறுப்புகளை ஒப்படைத்தது.
அதே போல் மண்டபத்தில் கொஞ்சம் நிழலா பாதுகாப்பிற்கும். கொஞ்சம்
நிழலாக்கள் தேனருவி வீட்டிற்கும்.
தன்னோடு சில அப்சரண்டிங்களை அழைத்துக் கொண்டு தேவ் ஆனந்த் வீட்டிற்குத் தான் சென்றது.
நிழலா அங்கே சென்றது விஜயலதா வனிதா இருவரும் மேற்கொண்டு எந்த வில்லத்தனம் செய்வதை தவிர்க்கவே.
ஏற்கனவே தங்களது மொபைலில் வந்த வீடியோவைப் பார்த்து அறிந்த ரவிக்குமார் தன் மனைவியை கவனிக்க வேண்டும் என்று தான் அறைக்குள் கண் விழித்து இருந்தான்.
அப்போது விஜயலதா ரவி தூங்கி விட்டான் என்று திருடி போல் மெதுவாக பெட்ரூமை விட்டு வெளியே சென்றாள்.
இவள் எதுக்கு இந்த நேரத்தில் எழுந்து செல்கிறாள். என்று அவளுக்குத் தெரியாமல் மறைந்து கொண்டு சென்றான்.
அவள் நேராகச் சென்று வனிதாவின் அறைக்கதவை தட்டியவள். சுற்றிலும் பார்த்தாள், தன்னை யாராவது கவனிக்கிறார்களா?
வனிதா வந்து கதவைத் திறந்ததும்.. ஏய் எத்தனை நேரமாக கதவைத் தட்டுகிறேன் உனக்காகத் தானே நான் இந்த நேரத்தில் தூங்காமல் பேய் மாதிரி வந்து நிற்கிறேன்.
அக்கா அது வந்து அங்கே நல்லா சாப்பிட்டு விட்டு வந்ததால் நன்றாகத் தூங்கி விட்டேன்.
இப்படியே இன்னும் இரண்டு நாட்கள் தூங்கினாய் என்றால்
அவனுக்கு திருமணம் நடந்து விடும். பிறகு என்ன செய்வாய்?
அக்கா என்ன சொல்கிறீங்க நான் தான் தேவ் ஆனந்த் கையால் தாலி வாங்குவேன்.
ஆமா இப்படியே தூங்கிட்டே இரு அப்படியே அவன் வந்து உன் கழுத்தில் தாலி கட்டி டுவான்.
சாரிங்க அக்கா நாம் போடும் திட்டம் யாருக்கும் தெரியக் கூடாது. சரி எதுக்கு இப்போது எழுந்து வந்தீங்க அதைச் சொல்லுங்க.
சரியான மரமண்டையா? இருக்கிறாளே இவளை வைத்து நம் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது. இவள் இப்போது என்ன செய்தாலும் இவள் அக்கா பேரும் கெடும். நாம் சுலபமாக அக்கா தங்கச்சி இருவரையும் கோர்த்து விட்டு விட்டு நல்ல பிள்ளையாக எஸ்ஸாகி விடலாம் என்று லாஜிக்கே இல்லாமல் யோசித்தாள்.
அக்கா நீங்க என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறீர்கள் பெரிய ப்ளான் ஏதாவது போட்டு விட்டீர்களா? ஒருவேளை சுனைனா அவளை அன்றைக்கு தேவ் ஆனந்த் மாமா அறைக்குள் அனுப்பியது போல் இப்போது என்னை அனுப்பப் போகிறீர்களா?
அடிக் கழுதை ஆசையைப் பார் குள்ளக் கத்திரிக்காய் மாதிரி இருந்து கொண்டு என்னம்மா என்னைக் கோர்த்து விடப் பார்க்கிறாள்.
வனிதா நாம் பேசாமல் அந்த தேனருவியைக் கடத்தி விடலாமா? என்று இப்போது ஐடியா கொடுத்தாள்.
அக்கா அது சாத்தியமாகுமா? நீங்களே அங்கே பார்த்தீர்களே அவுங்க எத்தனை பேர் புதுசா வந்த சொந்தங்கள் என்னமா பாட்டுப் பாடுகிறாங்க ஆட்டம் போடுகிறாங்க..
ஆமாண்டி எனக்கும் அது தான் கோபம் நம்ம வீட்டுக் கிழவியும் புதுசா வந்தவங்களைப் பார்த்து மகள்கள் என்று உறவு முறை கொண்டாடுகிறாங்க நம் இருவரின் கையில் மட்டும் தான் மெஹந்தி சிவக்கவே இல்லை.
ஆமாம் அக்கா அது தானே ஆனால் நான் ஒன்றும் அங்கே இருந்து சும்மா வரவில்லை.
என்ன வனிதா புதிர் போடுகிறாய்?
அக்கா நான் அங்கே இருந்து மருதாணி கோன்களை எடுத்து வந்து இருக்கிறேன். அதனால் நாம் இரண்டு பேரும் இப்போது மெஹந்தி போடலாம் வாங்க என்று அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
ரவிக்குமார் கூட இச்சை இந்த கேடிகள் மருதாணி போடத் தான் இந்த நேரத்தில் விழித்துக் கொண்டு இருக்கிறார்களா? சரி உள்ளேயே கிடக்கட்டும் இரண்டு பேரும் என்று இப்போது அந்தக் கதவை வெளியே இருந்து. அதே சமயம் சத்தம் கேட்காத வாறு பூட்டி விட்டு சாவியை எடுத்துச் சென்று விட்டார்.
இப்போது இரண்டு பேரும் ஒரே அறைக்குள் சிக்கி இருக்கிறோம் என்பது தெரியாமல் இரண்டு பேரும் மருதாணிக் கோன்களை எடுத்துக் கொண்டு பெட்டில் அமர்ந்து கொண்டு அனைவரையும் கரித்துக் கட்டிக் கொண்டு அழகான பூ வரைய அது அலங்கோலமாக மாறிக் கொண்டே இருந்தது.
விஜயலதா கை நடுங்க ஆரம்பித்து விட்டது. இது என்ன இன்றைக்கு இப்படி நடுங்குகிறது.
அக்கா உங்களுக்கு ஏன் கை இப்படி நடுங்குகிறது. ஒரு வேளை நரம்புத்தளர்ச்சி இருக்கிறதா?
போட்டன்னா பாரு நான் என்ன கிழவியா நடுங்குவதற்கு ஏனோ ஒரு மாதிரி கைகோனலாக போகுது என்னைச் சொல்கிறாயே உன் கையில் பாரு மண்டையோடு தான் போட்டு வைத்து இருக்கிறாய்.
மருதாணி கோன் தான் ஏன் இந்த நாத்தம் நாறுகிறது. ஆமாம் அக்கா எனக்கும் ஏதோ பேட் ஸ்மெல் வருகிறது. உங்களுக்கு தான் ஏதாவது வயிற்றுக் கோளாறு என்று நினைத்து விட்டேன். டிஸ் எண்ட்ரியா அது தான் ஏர் வருகிறதா?
நான் எப்போது சொன்னேன் உன்னிடம் எனக்கு டிஸ்எண்ட்ரி
என்று நீயாக கற்பனை செய்து கொண்டு பேசாதே உனக்கு உதவி செய்யத்தான் இப்போது நான் இந்த நேரத்தில் இங்கே வந்து அமர்ந்து கொண்டு இருக்கிறேன்.
சாரிக்கா தப்பாக நினைத்துக் கொள்ளாதீங்க எனக்கும் வயிற்றுப் பிரச்சினை இல்லை. உங்களுக்கும் இல்லை ஒரு வேளை இந்த வாசம் எங்கே இருந்து வருகிறது.
அப்படீனா இதுமருதாணியா? இல்லை எருமை மாட்டுச் சாணியா? இல்லை பெயரே தெரியாத என்னவா இருக்கும். என்று மூக்கின் அருகில் முகர்ந்து பார்த்தாள்.
அக்கா இதில் தான் பேட் ஸ்மெல் வருது என்று அவசரத்தில் கையில் இருந்த கோனை பிதுக்கி விட அது அத்தனையும் விஜயலதா முகத்தில் பீய்ச்சி அடித்து விட்டது.
அதிர்ச்சியில் இருந்த விஜயலதா வாயைத் திறந்து இருந்ததால் அவளின் வாய்க்குள் சென்று விட்டது. அருவருப்பில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வர இரவு சாப்பிட்ட அனைத்தும் இப்போது வனிதாவின் மேல் வாந்தி எடுத்து விட்டாள்.
இத்தனை நேரம் இருந்த நாற்றத்தோடு இப்போது வயிற்றுக்குள் இருந்து வெளியே வந்த அனைத்தும் சேர்ந்து பயங்கரமான நாற்றம்.
ச்சை என்று இருவரும் மூக்கைப் பிடிக்க அவர்களின் கையில் இருந்தவை அனைத்தும் முகத்தில் அப்பி விட்டது.
இருவரும் ஒரே நேரத்தில் குளியலறைக்குள் ஓடினர். சவரை திருகி விட்டு நின்று கொண்டனர் முதலில் கையிலிருந்த தை கழுவி விட்டு இப்போது உடலில் இருந்ததைக் கழுவிக் கொள்ளலாம் என்று ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செய்ய இருவரும் சேர்ந்து தண்ணீர் தான் வீணாகிறது. அவர்கள் இருவரும் அறியாத விடயம் நிழலா தான் இந்த வேலையைச் செய்தது என்பது.
அதை விட இப்போது தண்ணீர் கூட நின்று விடும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருவரும் சண்டையிட்டுக் கொள்ள இப்போது தண்ணீர் வராதது தெரிந்தது.
அவசரமாக இருவரும் பைப்பைத் திருகி னார்கள். அதில் வெறும் காற்று மட்டும் தான் வந்தது.
சரி நம் அறைக்குச் சென்று விடலாம். இல்லை என்றால் இவள் அறைக்குள் இருக்கும் வாமிட் நம்மை வளிக்க வைத்து விடுவாள் என்று வெகு அவசரமாக விஜயலதா வெளியே வரவும். இப்போது அவளைப் பின் தொடர்ந்து வனிதாவும் வந்தாள்.
தண்ணீர் வராததால் வெளியே சென்று சுத்தம் செய்து கொள்ளலாம் என்று. வந்தவள் அக்கா மருதாணியை விட நீங்கள் வாமிட் செய்தது தான் பயங்கர பேட் ஸ்மெல்லாக இருக்கிறது.
அதைச் சுத்தம் செய்து விட்டு போங்க..
ஏய் என்னடி நான் எதுக்கு சுத்தம் செய்ய வேண்டும். நீ பைத்தியம் போல் என் வாய்க்குள் அது என்ன கருமம் என்றே தெரியவில்லை அதைப் பிதுக்கி விட்டா வாந்தி வராமல் என்ன செய்யும். அதனால் நீ தான் சுத்தம் செய்ய வேண்டும். நீ எல்லாம் ஒரு ஆளு என்று உனக்கு உதவ வந்தேன் பாரு எனக்கு இந்த அவமானம் தேவை தான்.
இப்போது கதவைத் திறக்க நினைத்தாத் அதைத் திறக்க முடியவில்லை. ஏய் கதவை எதுக்குடி பூட்டி வைத்து இருக்கிறாய்?
என்னது நான் பூட்டினேனா? உங்கள் கண்முன்னே தான் இருந்தேன். உங்களுக்குத் தெரியாமல் நான் எப்படி பூட்டி இருப்பேன்.
ஏய் ஒழுங்கு மரியாதையா சாவியைக் கொடுடி நான் போய் எனீ அறையில் குளிக்க வேண்டும் என்னால் இந்த நாற்றத்தோடு இங்கே இருக்க முடியாது.
என்ன அக்கா அப்படியே பேச்சு மாறுகிறீங்க நான் சிவனே என்று தூங்கிக் கொண்டு இருந்தேன். நீங்கள் தான் வந்து கதவைத் தட்டி இங்கே உள்ளே வந்தது. ஒருவேளை நீங்களே பூட்டி சாவியை உங்கள் இடுப்பிலோ இல்லை ஜாக்கெட்டில் ஒளித்து வைத்து இருக்கிறீர்களா? என்று இப்போது விஜயலதாவின் மராப்புச் சேலையில் கை வைத்தாள் வனிதா.
வனிதா ஒழுங்கு மரியாதையா? என் சேலையில் இருந்து கையை எடு என்னிடம் சாவி இல்லை நான் எங்கேயும் ஒளித்து வைக்கவில்லை.
அப்படீனா கண்டிப்பாக உங்களிடம் தான் இருக்கிறது என்று விஜயலதாவை துரத்தினாள் வனிதா.
வனிதாவின் கைக்குச் சிக்காமல் எத்தனை நேரம் ஓடி ஒளிய முடியும் விஜயலதாவால்.. அவளின் சேலை முந்தானியை தன் கையில் சுழற்றி னால் வில்லன் போல வனிதா.
ஏய் விடுடி ஆம்பளை மாதிரி செய்யாதே நீயும் ஒரு பொம்பளைப் பிள்ளைதானே எதுக்கு என்னையவே குறுகுறுவென்று பார்க்கிறாய்?
ஆஹா செம கட்டை நீங்கள் ஒரு குழந்தை பெற்றவங்க மாதிரியே தெரியவில்லை. என்னமா இருக்கிறீங்க என்று எனக்கு சுத்து விடுது என்று அவள் சொல்லவும்.
ஏய் நீ அவனா என்று இப்போது விஜயலதா கேட்கவும்.
ஆ.. ம்ஹக்.. ஆ.. என்று வனிதா வேண்டும் என்றே பயத்தைப் போட்டால்.. எனக்கு இப்போது தேவ் ஆனந்த் கூட வேண்டாம்.. நீங்களே எனக்குப் போதும் நானும் நீங்களுமே ஓடிப் போய் விடலாமா? இப்போது தான் பெண்களே பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்களே என்று அவள் பிதற்றவும், தான் இப்போது விஜயலதாவிற்கு உரைத்தது.
இவளை நல்லவள் என்று நம்பி வந்து இப்போது தன்னை என்ன கேவலமாக நினைத்து விட்டாளே தன் தங்கை சுனைனா கூட இது போல் தன்னிடம் நடந்து கொள்ளவில்லை.
என்ன விஜயலதா சம்மதமா? ஓடிப் போய் கண்ணாலம் தான் கட்டிக்கலாமா??
ச்சை நீ ஒரு பொண்ணாடி..
தொடரும்...
அது மருதாணி இல்லை.. என்னவாக இருக்கும்.. அது நிழலாக்கு மட்டும் தான் தெரியும்.