• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
360
நீ உடல் நான் நிழல்
பாகம் - 78


எல்லோரும் ஆடிப்பாடி களைத்து விட்டனர். தேவ் ஆனந்த் குடும்பமும் கார்முகிலன் குடும்பமும் சென்று விட்டனர்.

குட்டீஸ் அனைவரும் தூங்கி விட்டனர். நாளைக்கு பூவிழிக்கு நிச்சயம் என்பதால் அவளும் தூங்கச் சென்று விட்டாள்.

ஆமாம் நாங்க கிருஷ்ணவேணி அம்மா அங்கே வாங்க என்று அழைத்தபோது கூட உன் காதல் கை கூடியதை கேட்கும் ஆசையில் தான் இங்கேயே இருந்து விட்டோம் என்று கூறிவிட.

அக்கா என்று தேனருவி சொல்லி விட.. ஏய் நாங்க எல்லாரும் உனக்கு அண்ணி டி அந்த உறவுமுறையே சொல்லிக் கூப்பிடு நீ பாட்டிற்கு அக்கா என்று பாசமழை பொழிய வேண்டாம். நாங்க எப்போதும் உனக்கு நாத்தனார் தான் என்று
மிரட்டவும்.

தேனருவி பயந்து விட்டாள். ஏய் நீ பயக்கும் ஆள் தான் நாங்க நம்பி விட்டோம்.. அந்த நிழலா பேயவே பம்மி உச்சா போக வைத்தவள் தானே நீ இந்த பயமாக இருப்பது போல் நடிப்பதை எங்கள் அண்ணா நம்பலாம் நாங்க நோ சான்ஸ்
தேனருவி என்று அவர்கள் உரிமையாய் சொல்லி விட,

ஆமா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?

நல்லா கேள்வி கேட்டாய் போ?

என்னம்மா தேனு நாங்க உன் பக்கத்தில் தான் உட்கார்ந்து இருக்கிறோம் அதாவது தெரிகிறதா?

போங்க அண்ணி எனக்கு என்ன கண் குருடா அது தான் எல்லாரும் நாட்டாமை மாதிரி என் முன்னால் தானே உட்கார்ந்து இருக்கிறீங்க.

ஏய் பாருங்கப்பா புள்ளை நம்மளை எல்லாம் நாட்டாமை என்று சொல்லுது என்று வினிதா சொல்லவும்.

அது தான் பாருங்களேன் நான் கூட தேனருவி கொஞ்ச மக்குப் பாப்பா என்று நினைத்தேன். எஸ்தர் சொல்லவும்.

ஆதிரா எந்த சட்டமும் இல்லை. மேடம் யாராச்சும் தொந்தரவு செய்தால் நேரா எண்ட்ரி கொடுக்கும்.

ஏய் என்னக்கா சொல்கிறீங்க உண்மையில் நிஜமாவா சொல்கிறீங்க செம இன்ரஸ்ட்டிங் தெரியுமா?

அதைவிட நம் தேனு இருக்காளே அந்த நிழலை நில்லுனா நிக்கனும் அப்படி மிரட்டி வைத்து இருக்கிறாள்.

அக்.. என்று சொல்ல வந்தவள் அதைப் பாதியில் நிறுத்திவிட்டு அண்ணி அப்படி எல்லாம் இல்லை. உங்களுக்கு என்ன இப்போது நிழலா பார்க்க வேண்டும் அது தானே.

ஆமாம் நாங்கள் நிழலாவைப் பார்க்கவே வந்துள்ளோம். என்று இப்போது நித்யா சொல்லவும்.

அண்ணி நிழலா உங்கள் ஆலாமிட்டாய் வாசத்திற்கு அடிமை என்று தேனருவி சொல்ல

இது என்ன பொதுவா பேய் பிடித்தவர்களுக்கு மந்திரித்து பிரியாணி குவார்ட் தான் கொடுபாபாங்க. ஆனால் நிஜத்தில் பேய் மோப்பம் மட்டுமே பிடிக்கும் என்று சொல்கிறாய்?

ஆமா நீங்கள் கதையில் கூடப் படித்து இருப்பீர்களே கல்லூரியில் கேண்டீனில் சென்று உளுந்து வடையை மோப்பம் பிடிப்பது போல் இருக்குமே என்று ஜெயா சொல்லவும்.

தேனருவி உடனே நிழலா நீ இங்கே வந்து பாரு உன் பேன்ஸ் எல்லாம் வந்து இருக்கிறார்கள் என்று சொன்னால்.

நீ சொன்னா நான் உடனே வந்துருனமா ?என்னை நீ கண்டுக்கவே இல்ல இன்னைக்கு எல்லாரும் பாட்டு பாடுறாங்க தேவானந்துக்கு கார்முகிலனுக்கு இரண்டு பேருக்குமே எனக்கு யாருமே பாட்டு பாடல என்ற நிழலா கோபித்துக் கொள்ள.

அட பாவமே நிழலா நாங்க எல்லாம் உன்னோட ஃபேன்ஸ் நீ இருக்கிறது எங்களுக்கு தேன் அருவிக்கு மட்டும்தான் தெரியும் வீட்டில் மத்தவங்களுக்கு எல்லாம் தெரியுமா எப்படி எல்லாத்துக்கும் முன்னால உனக்கு பாட்டு பாடுவது நீ கல்லூரி கல்லறை கல்லூரி படிக்கிறேன் சொன்ன உனக்கு இது கூட தெரியல உனக்க ஒரு சென்சே இல்ல அப்படின்னா தானே இப்படி நீ கேள்வி கேட்டு இருப்பியா சரியான லூசு நிழலா என்று எஸ்தர் சொல்லவும் .

ஓ நீதானா டெய்லி ஒரு சட்டத்தைப் பத்தி விளக்கம் கொடுத்துட்டு இருக்கியா? குடுமா குடு நிறைய பேருக்கு எதுவுமே தெரியறது இல்ல சும்மா குருட்டாம் போக்குல ஆளுக்கு ஒரு சட்டத்தை பேசிட்டு இருக்காங்க சட்டம் எப்படி இருக்குது அப்படிங்கறத தெளிவுபடுத்திட்டா ஒரு வேலை நிறைய விஷயங்கள் தெரியாம இருக்கிறவங்க தெரிஞ்சுக்க வாங்க..

அட நிழலா என்ன நீ எஸ்தர் ஃபேன் ஆயிட்டு போல இருக்குது நாங்களும் இங்க தான் இருக்கிறோம் கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க ஆதிரா சொல்லவும்.

அதுவே அப்படின்னு சொல்லிட்டு இருக்கீங்க எப்ப தான் சொல்ல போறீங்க?

நீ பாருடா நிழலெல்லாம் கொடுக்கிறீர்களா? எனக்கு ஒரு நாளாவது கொண்டு வந்தீங்களா? சும்மா வெறும் கை வீசிட்டு வந்துட்டீங்க.

அட நிழலா நீ எப்படி சாப்பிடுவது சாப்பிட மாட்டியாச்சு அதனால கொண்டு வரல.

இருந்தாலும் என்னை நீங்க பாக்குறதுக்கு இப்படி எல்லாம் வெறும் கையில் வந்தீங்களா நான் உங்ககிட்ட எல்லாம் இது எதிர்பார்க்கவே இல்லை.

சரி உனக்கு என்ன வேணும் சொல்லு நாங்க இப்ப பண்ணி தரோம்.

சமையல் ரூம்ல போய் ஒன்னு நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்.

நீ தான் தெரியுமா? இந்த கதையோட ஆணி வேரே?

என்னது என்னை ஆணிவேர் இவள் முன்னால சொல்லாதீங்க..இவ என்னைக் கழுவி கழுவி ஊத்துவா..

என்னமோ அவளோட அடிமை நினைச்சிருக்கிறா ஆமா நீ அவளுக்கு மேஜிக் பேனா கொடுக்கிற எத்தனை ஹோம் ஒர்க் எல்லாம் எழுதி கொடுத்த ரெக்கார்டு நோட்டு கூட நீங்க தேன் எழுதி கொடுத்த அதான் உன்னை அடிமையா வைத்திருக்கிறாள்.

நீ பேசாம எங்க கூடவா நாங்க கூப்பிட்டு போயி என் வீட்டில் ஒவ்வொரு நாளைக்கு ஒருத்தர் வீட்டில் உன்னை வைத்துக் கொள்கிறோம். நிறைய பிரச்சனை நீ சால்வ் பண்ணி விடுவாய்ல.

நான் வரமாட்டேன் நான் வரமாட்டேன் எனக்கு இதுவே புடிச்சது எனக்கு இங்க தான் கல்லறை கல்லூரி இருக்குது.

நானும் நாட்டாமை வேலை பண்ணிட்டு இருக்கேன். நீங்களே இப்படி சொல்றீங்க ?அப்புறம் என்னுடைய எதிரி இந்த இடத்தில் இருக்கிறானுங்க அவிங்கள எல்லாம் நானும் ஒரு வழி பண்ணிட்டு இருக்கேன்.

ஆமாமா நீ பண்றது நாங்களும் பார்த்துட்டு தான் இருக்கிறோம். விஜய் லதா வானதி அவ மூஞ்சில அப்பப்ப தெறிக்க விட்ற நல்லா நிஜமாலுமே நாங்க உனக்கு ஃபேன் ஆயிட்டோம்.

எனக்கு பேனா ஆயிட்டீங்களா? நானே எப்பவுமே ஃபேன் மேல சுத்திட்டு படுத்துட்டு இருப்பேன். அப்போ நீங்க எனக்கு பேன்னா அப்புறம் உங்க தலை மேல வந்தது உட்காந்துக்கோணும்.

அந்த வேலையெல்லாம் பண்ண வேண்டாம். நீ என் தலை மேல உக்காந்து இருந்தா நான் எப்படி எல்லாம் செய்ய முடியும்.

நான் எப்பவுமே நீங்க எனக்கு உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா? நிழலான்னு கூப்பிடுங்க நான் உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி செய்கிறேன்.

எங்களுக்கு உதவி எல்லாம் ஒன்னும் வேண்டாம் . ஆனால் எப்படியாவது இங்கு கதையெல்லாம் இந்த சீசன்லையாவது ஜெயிக்க வைத்திருந்தா நான் ஒவ்வொரு தடவையும் போட்டி கதை எழுதிட்டது இருக்கிறோம் ஆனால் ஒரு தடவை கூட ஜெயிக்க மாட்டேங்குது.

நிழலா பேசியது நீங்க ஜெயிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள் உங்கள் எத்தனை நல்ல கதை இது தெரியுமா ?அதெல்லாம் அங்க வாசகர்கள் படிக்கிறாங்களாம் அதுதான் வெற்றி நீங்க பணத்த பாக்கறீங்க பணத்த விடுங்க வாசகர்கள் மனதில் இடம் பிடிக்கல அது தான் வெற்றி.

ஆமா நிழலா இப்படித்தான் மனச தேத்திக்கிறோம்.


ஆமா தேன் அருவி கல்யாணம் பண்ணி அந்த வீட்டுக்கு போயிட்டாள் நீ எங்கிருப்பீங்க இருப்பியா நான் வந்து தேனருவி எங்கு இருக்கிறான் என்றால் அங்கதான் இருப்பேன் இங்க இருந்தா இங்க வெளியில் சுத்திட்டு இருப்பேன் அங்க இருந்தா அங்க வெளியில் இருப்ப அங்கதான் எனக்கு என்டர்டெயின்மென்ட் நிறைய ஆளு இருக்குது ஆமா விஜய் லதாவா படுத்தி எடுக்க நீ நல்லா அவ மட்டும் இல்லை வனிதா இருக்கிறாள்.

ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்க கல்யாணத்துல பிரச்சனை பண்ணவே சுத்திட்டு இருக்காங்க ,உங்களோட ஹெல்ப் தேவைப்பட்டாலும் படும் அப்ப நான் உதவி கேப்பேன் நீங்க பண்ணனும்.

பாரு நிழலா நீயே எங்கள போய் உதவி கேக்குற ?

ஆமா அவங்க கோவிலுக்குள் எல்லாம் நீங்க இருக்கும்போது அவங்க ஏதாவது பண்ணாங்கன்னா என்னால கோயில்குள்ள வர முடியாது அப்ப நீங்க தானே இருக்கீங்க கோயிலுக்குள்ள அதனால தான் உங்களோட உதவி கேட்டேன் வெளியிலிருந்தா நானும் சமாளித்து விடுவேன். அப்புறம் அவங்க ரெண்டு பேத்தையும் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்.

நிழலு எப்பவுமே நியாயத்தின் பக்கம் தான் நீ இருப்பதால் நாங்க உன் பக்கம் தான் இருப்போம். ஆமா அன்றைக்கு நீ தானே அவர்கள் வீட்டில் சிசிடிவி அறையில் பேசிக் கொண்டு இருந்ததை நீ ஆல்ரெடி ரெக்கார்டு செய்து வைத்து இருக்கிறாயே?

அதை எப்போது ஆடியோ? ரிலீஸ் செய்யப் போகிறாய்?

கண்டிப்பாக ரிசப்ஷன் அன்று தானே அங்கங்கே டி வி வைப்பாங்க அதில் அரங்கேற்றம் செய்து விடலாம்.

இல்லை நிழலு அது திருமணத்திற்கு நிறையப் பேர் வருவாங்க அப்போது நீ அதைப் போட்டால்.. தேவ் ஆனந்த் அண்ணி இதில் சம்மந்தப்பட்டு இருக்காங்க அதனால் சின்ன அண்ணா ரவிக்குமார் அவருக்கு அவமானமாக இருக்கும்.

ஆதிரா சரியாகச் சொன்னாய் அண்ணா அவுங்களை வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டாள். அந்தக் கோபமும் தேனருவி மேல் தான் திரும்பும்.

எஸ்தர் உடனே இப்படியே பார்த்துக் கொண்டு இருந்தால் தவறு செய்பவர்களை கொம்பு சீவி விடுவது போல் தான் இருக்கிறது.

வக்கீல் மேடம் என்னமா? பாயிண்ட் எடுத்து விடுகிறீர்கள். ஆனால் இது அபிநவ் குட்டியோட அம்மாவாகவும் இருக்கிறாரே.. என்ன இருந்தாலும் தாய் தானே.

சரி என்ன தான் செய்வது என்று அனைவரும் யோசித்து ஒரு முடிவு எடுத்தனர். அதை உடனே செயலும் படுத்தினர். இந்த ஐடியாவைச் சொன்ன வினிதா வை அனைவருக்கும் பிடித்து விட்டது.

அப்படி என்ன தான் ஐடியா சொல்லி இருப்பார். காத்திருங்கள் அடுத்த பதிவில்


தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top