Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 359
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் -77
பாகம் -77
கிருஷ்ணவேணி சத்தம் போட்டார். இரண்டு பேரும் கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருங்க என்று சொல்லி விட்டு இப்போது யசோதாவிடம் சென்றவர்.
சம்பந்தி நாளைக்கு காலையில் நேரத்தில் ஏழு மணிக்கு மண்டபத்திற்குப் போய் விடலாம்.
காலையில் டிபனுக்கே போய் விடலாம் என்று சொல்லியவர். அன்றைக்கு கோவிலில் நிச்சயம் செய்து விட்டோம். அதனால் நாம் நேரா பட்டினித் தண்ணீர் ஊற்றி கொள்ளலாம். அப்பத்தான் உருமால் கட்டும் சீர் எல்லாம் முடிக்க முடியும்.
சம்மந்தி நாளைக்கு காலையில் நான் உங்கள் கிட்ட ஏற்கனவே சொன்ன மாதிரி சின்னவள் பூவிழிக்கு நிச்சயம் செய்து விடலாமா?
அட ஆமாம் ல நான் மறந்தே விட்டேன். தப்பா நினைச்சு விடாதீங்க சம்பந்தி.. நீங்கள் போன் செய்து இருந்தீர்கள் என்று உங்க அண்ணா சொன்னார். நான் தான் நீச்களே இப்போது பார்த்தீர்கள் தானே வீட்டிலும் இப்படி பஞ்சாய்த்தைக் கூட்டி விடுகிறாள். அதில் இதை மறந்து விட்டேன்.
விடுங்க சம்பந்தி விசேச வீட்டில் இது எல்லாம் சகஜம் தான். என்று கூறிவிட்டு கிருஷ்ணவேணியை சமாதானம் செய்தார்.
பூவிழி தன் அக்கா மாமியார் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
நீ மெஹந்தி வைக்கவில்லையா? என்று கமலா அத்தை கேட்கவும்.
அங்கே கூட்டமாக இருக்கிறது. நான் பிறகு வைத்துக் கொள்கிறேன்.
பூவிழியின் பக்கத்து வீட்டுப் பெண் எஸ்தர் உள்ளே வந்தவள் பூவிழி நீ யாருக்காக காத்திருக்கிறாய்? என்று எனக்குத் தெரியும் என்று சொல்லவும்.
ஏன்? பூவிழி இன்னும் உன் ப்ரண்ட்ஸ் யாராவது வருகிறார்களா? அவர்களுக்காகத்தான் காத்துக் கொண்டு இருக்கிறாயா? என்று வினிதா கேட்கவும்.
மஞ்சுளா உடனே ஆமா அவளோட ஆள் வரவேண்டும் அவரைப் பார்க்காமல் எப்படி அவள் கையில் மெஹந்தி வைக்குவா? அப்புறம் அவர் முகத்தைப் பார்க்காமல் மருதாணி சிவக்கவில்லை என்றால் என்று மஞ்சுளா கேட்கவும்.
பூவிழி தான் இப்போது தன் தலையைக் குனிந்து கொண்டாள். அவளுக்கு வெட்கம் வந்து விட்டதாம்.
ஜெயா வந்து ஏய் பூவிழி நீ இங்கே உட்கார்ந்து இருக்கிறாய் உன் ஆள் வந்தாச்சு
உன் அண்ணிகள் எல்லாம் இப்போது வாசலில் இரண்டு மாப்பிள்ளைகளையும் வரவேற்கப் போய் விட்டாங்க.
கிருஷ்ணவேணி யசோதா கமலா மூன்று பெரியவங்களும் என்ன
பிள்ளைகள் எல்லாம் பாட்டுப் பாடி டேன்ஸ் ஆடுகிறாங்களா?
ஏன் பாப்பா நாளைக்கு மண்டபத்தில் ஆடினால் எல்லாரும் பார்ப்பாங்களே அப்புறம் வீடியோ போட்டோ எல்லாம் எடுக்குவாங்களே. என்று கமலா அத்தை சொல்லவும்.
அம்மா நாளைக்கும் மண்டபத்தில் ஆடி விடலாம். இன்றைக்கு இங்கே வீடியோ கவரேஜ் செய்கிறாங்க நீங்களும் வாங்க என்று அழைத்துச் சென்றனர்.
தேனருவி யின் பெரியப்பா பையன் அட நல்ல பாட்டு போட்டு விடுங்கள்..
பிரண்ட்ஸ் நீங்கள் எல்லாரும் ஆடுங்க மாப்பிள்ளை இரண்டு பேரும் சிவப்புக் கம்பளத்தில் வாங்க என்று சொல்லி விட..
ஆதிரா முதல் பாடல்..
அன்பான உடன்பிறப்பே..
ஆனந்த வைபோகம் ஒன்று கூடி
உன் தங்கைகள் வரவேற்கிறோம்..
மகிழினியின் பாடல்..
வாழையடி வாழையாக..
வாழும் சொந்தங்களே..
இரு அண்ணன்களும்
வாருங்களேன்.. வருங்கால
அண்ணிகளைப் பாருங்களேன்..
இந்துஜா பாடல்..
கம்பீரமா எங்க அண்ணாங்க வராங்க.. ஆராத்தி கரைச்சு
எடுதிட்டு வாங்க.. பூப்போல
மின்னும் குத்துவிளக்கு நாங்க..
சாராவின் பாடல்..
ராஜ தோரனையில் கம்பீர
நடையழகில்.. நாணிக்கிட்டு
நிற்கிறாங்க நீங்கள் கை பிடிக்கும் நங்கைகளும்..
எஸ்தரா பாப்பாவின் பாடல்..
எங்கள் அண்ணாக்கள் சூப்பரு..
அவுங்க ஸ்டைலில் டாப்பரு..
ஜெயாவின் பாடல்
வந்தனம் வந்தனம் சொல்லனும்
வாழ்த்திப் பாடி... புகழைச் சேர்க்கனும்..
ஊருக்காக உழைத்த பரம்பரை
அதைச் சொல்வதில் எங்கள் பெருமையே..
மஞ்சுளா அவுங்க பாடல்..
மங்களம் மங்களம் சுபமங்களம்
பாடி வரவேற்கிறோம்.. பாதம் எடுத்து வைச்சு பாயும்புலி
வாருங்களேன்.. பத்னிகள் இருவரும் காத்திருக்கிறாங்க..
வினிதா அவர்கள் பாடல்..
கண்ணிலே காதலே..
துள்ளுதே இளமையில்..
புத்தம் புது ஜோடி பூத்திருக்குதே
மின்னல் வெட்டி மின்னல் தாக்குதே புன்சிரிப்பிலே...
நித்யா அவுங்க பாடல்..
தம்பிகளே வாருங்கள்..
தாரகைகள் உங்களுக்குத் தான்..
தாலிகட்டி கூட்டிச் செல்ல
தாரை வார்த்துக் கொடுக்க நாங்க
தவிளோடு காத்திருக்கோம்..
ஆலாமிட்டாய் பட்டணத்தில்
ஆர்பரிக்கும் சொப்பனத்தில்
ஆரஞ்சு மிட்டாய் காலத்தில்
ஆடிப்பாடி கொண்டாடுவோம்..
ஆனந்தமாக வாழ்ந்திடுவோம்..
தேவிகா வின் பாடல்..
கண்ணன்களே வாருங்க..
கவிதாயினிகளைப் பாருங்க..
குயிலோசை போலவே..
குலவிளக்காக தங்கைகள்..
கல்யாண மாப்பிள்ளையை
கரம் கொண்டு அழைத்திடவே..
கார்த்திகை தீபங்களாய்..
தேனருவி பூவிழி திருமண கொண்டாட்டம்..
எல்லா அண்ணனும் சேர்ந்து மொத்தமாக பாடுகிறோம்..
மாப்பிள்ளை மாப்பிள்ளை
வாருங்கள்...
எங்கள் தங்கச்சிகள்
வரவேற்ற அழகைப் பாருங்கள்..
ஆனாலும் நாங்க அண்ணா தங்கச்சிகள் தாங்க..
முடிசூடா மன்னன் நானே..
தேனருவி பூவிழிக்கு தாய் மாமன் தானே..
வாங்க.. மாப்பிள்ளை..
வாங்க.. வரவேற்கும் எங்கள் தங்கச்சி பாருங்க..
குற்றால அருவி போல உங்கள்
குலம் காக்கும் தேவதையை
கரம்பிடிக்கும் கைக்கு போடுகிறோம்.. மருதாணி..
ஆஹா மருதாணி என்று பாடி முடிக்க..
கல்யாணக் களை வந்து விட்டது. இன்றைக்கே என்று கிருஷ்ணவேணி அம்மா கண்ணன் அப்பா, யசோதா கமலா அனைவருக்கும் கண்ணில் நீரே வந்து விட்டது.
சிவக்குமார் ரவிக்குமார் இருவருக்கும் நமக்கு இத்தனை சொந்தங்கள் கிடைத்து விட்டாங்க என்று மகிழ்ச்சி.
விஸ்வநாதன் மலர்விழி இருவரும் அதற்கு மேலே போய் விட்டார்கள்.
தங்கங்களே உங்களை மாதிரி நாங்க எந்த ஒரு கல்யாணத்திலும் பார்த்தது இல்லை. கொஞ்ச நேரம் இது எல்லாம் நிஜம்தானா? என்று நானே என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
மலர்விழி உடனே அம்மாடிகளா? என் பையன் இன்றைக்குத் தான் வருகிறான். அவனுக்கும் சேர்ந்து நீங்கள் எல்லாம் பாடியது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது மா என்று கண்கலங்கினாங்க.
அம்மா அழுகாதீங்க நாங்க இத்தனை பொண்ணுக இருக்கிறோம். நீங்கள் எதுக்கு அழுகிறீங்க அதெல்லாம் இது
விடயமே இல்லை.
கமலா அம்மாவிற்கு குழந்தை இல்லை. ஆனால் இத்தனை நாட்கள் அதை நினைத்து வருத்தப்பட்டவங்க இன்றைக்கு
இந்த பொண்ணுங்க பூராவும் அம்மா என்று அழைக்க அவருக்கு அத்தனை சந்தோஷம்.. இங்கே பாருங்க டா இன்றைக்கு இரவுக்கு சுத்திப் போடனும் அதனால் சாப்பிட்டு விட்டு அனைவரும் இதே மாதிரி ஹாலில் கூடி விடவேண்டும் என்று கூறிவிட்டார்.
அப்புறமென்ன தேனருவி கையில் மெஹந்தி போட்டு முடிச்சாச்சு.. அடுத்து அடுத்து பூவிழி மற்றவர்கள் அனைவரும் இப்போது கையில் மெஹந்தி போட்டு இருக்கிறாங்க எல்லா உட்கார்ந்து கதை பேசிக் கொண்டு இருக்கிறாங்க.
அங்கே வந்த கிருஷ்ணவேணி அம்மா யசோதா அம்மா கமலா அம்மா மலர்விழி அம்மா நான்கு பேரும் நீங்கள் எல்லாரும் ஒரே இடத்தில் உட்காருங்க நாங்க நாலு பேரும் உங்களுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறோம்.
இல்லைம்மா நாங்கள் இத்தனை பேர் இருக்கிறோம். நீங்கள் நான்கு பேர் தான் இருக்கிறீங்க எப்படி எங்கள் எல்லாருக்கும் பசி வந்தா ஒரே நேரத்தில் உங்களால் ஊட்ட முடியாது அதனால் நாங்கள் கை கழுவிட்டு சாப்பிடுகிறோம்.
அங்கே வந்த தேவிகா அம்மா பாப்பா எல்லாரும் அமைதியாக உட்காருங்க முதலில்.. இத்தனை நேரம் பாட்டுப் பாடி ஆடிவிட்டு இப்போது தான் எல்லோரும் கையில் வைத்து இருக்கிறீங்க.. இதோ நானும் அவுங்க கூட இருக்கிறேன். ஒரு அம்மா இரண்டு பேருக்கு ஊட்டி விட முடியும். அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை.
ஐய்யோ அம்மா நீங்கள் தான் இப்படி அழகான ஒரு கதையை உருவாக்கி எழுதிட்டு இருக்கிறீங்க நீங்கள் மெஹந்தி வைக்கவில்லையா? என்று பொண்ணுகள் கேட்க.
நாங்கள் எல்லாரும் மருதாணி வைத்துக் கொள்கிறோம். சரி எல்லாரும் வரிசையா உட்காருங்க என்று கூறிவிட்டு அனைவருக்கும் இனிப்பில் ஆரம்பித்து அப்படியே டிபன் வகைகளை ஆளுக்கு இரண்டு பேர் வீதம் ஊட்டி விட.
அண்ணி பெண் பிள்ளைகள் இல்லாத ஏக்கம் ஒரே நாளில் தீர்ந்து விட்டது. இவுங்க செய்த லூட்டியில்.. இவுங்களே இப்படி என்றால் இவுங்க குட்டீஸ் எல்லா அதற்கு மேல் இருக்கிறாங்க.
அம்மா நாங்க செலிப்ரேட் செஞ்சதில் அவுங்களை எல்லாம் மறந்தே விட்டோம்.
மம்மீஸ் நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சு என்று சொல்ல.
ஆமா உங்களுக்கு யாருடா சாப்பிடக் கொடுத்தாங்க.
அம்மா எங்களுக்கு எல்லாம் மாமாங்க தான் தலைவாழை இலை போட்டு அதிரா ஆதியா எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அபிநவ் தான் சாப்பிடவே தெரியலை.. அவன் குட்டிப் பையன் தானே அதனாலே நாங்க எல்லோரும் அவனுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டே ஊட்டி விட்டு விட்டோம் என்று
குட்டீஸ் சொல்ல..
அம்மா டிபன் எல்லாம் சூப்பரா இருக்கிறது என்று கூறினார்கள். நீங்க தான் எங்களுக்காக ஊட்டிக் கொண்டு நிற்கிறீங்க. அட சாப்பிடுங்க கண்ணுகளா? உண்மையில் எங்களுக்குத் தான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
எல்லோரும் சாப்பிட்டு விட இப்போது மைக் ரெக்கார்டர் அவரிடம் சும்மா குத்துப் பாட்டு போட்டு விடுங்க நாங்க எல்லோரும் ஆட வேண்டும் என்று இப்போது தங்கைகளின் சொல்லுக்கு மறுபேச்சு ஏது என்று அனைவரும் டேன்ஸ் ஆட..
இப்போது அத்தை அம்மா என்று பலகுரல்கள் நீங்களும் வாங்க ஆடலாம் என்று ஆஹா அந்த வரவேற்பு அறையே கலகலவென்று இருந்தது.
பழைய பாட்டு புதுப் பாட்டு எல்லாம் போட்டு எம். ஜி. ஆர் சிவாஜி வேடம் ஏற்று வசனம் பேசி இப்போது அனைவரும் ஓய்ந்து போய் உட்கார்ந்து விட்டாங்க.
அனைவரும் ஒரே இடமா உட்காருங்க நான் அனைவருக்கும் சுத்திப் போடுகிறேன் என்று கமலா அம்மா சொல்லவும்.. ஒரு பெரிய பூசனிக்காய் சூடம் வைத்து சுத்தி விட்டு வெளியே கொண்டு போய் உடைத்து விட்டு வந்தாங்க.
எல்லோருக்கும் இப்போது பசிக்குமே அதனால் பால் காய்ச்சுகிறேன் குடித்து விட்டு அப்புறம் போய் எல்லோரும் தூங்குங்கள்.
அம்மா நாங்க எல்லோரும் மெஹந்தியை கழுவுகிறேம் என்று அனைவரும் எழுந்து சென்று விட்டனர்.
தேனருவி பூவிழி இருவரும் இன்றைக்கு முழுவதும் கண்ணிலே மின்னலே ரேஞ்சில் தான் இருந்தனர். அவர்களும் கை கழுவிவிட்டு இப்போது அனைவரின் கையையும் ஒன்றாக விரித்து வைத்து இருக்க அனைவரின் கைகளும் அழகாக சிவந்து இருந்தது.
அவுங்க அவுங்க கணவனிடம் கொண்டு சென்று காண்பித்து மகிழ்ந்தனர்.
தொடரும்...