• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
355
நீ உடல் நான் நிழல்
பாகம் - 76

தேனருவி இன்னும் கனவு என்று நினைச்சுட்டு இருக்கியா? நான் உன் முன்னால நிக்கிறேன், என்று தேவானந்த் சொல்லவும்.

அப்போதுதான் தேனருவி தேவானந்த் தன்னருகில் உள்ளான் என்பதை உணர்ந்து கொண்டாள். எப்போதும் ஒரு முழி முழிப்பால் அது போலவே விழித்து வைத்தாள். அடடா நிழலா நம்ம காதில் சொல்லிட்டு போச்சு அதை மறந்துட்டு இப்படி மீசை புடிச்சி இழுத்து தப்பு பண்ணிட்டோமே இப்ப என்ன பண்றது.

ஹாய் என்னடி பொண்டாட்டி மறுபடியும் டூயட் போயிட்டியா? என்று தேவ ஆனந்த் அவளின் கன்னத்தை பிடித்து இழுக்கவும் அவளுக்கு வெட்கமாக போய்விட்டது.

எனக்கு உங்கள் ஞாபகமாவே இருக்கு அதனால அப்படி நடந்துட்டேன் நான் கனவனு நினைத்துவிட்டேன்.

நெஜமா சரி கனவுல என்னென்னமோ பண்ற நேர்ல வந்திருக்கிறேன் நீ பண்ணு பார்க்கலாம்.

எனக்கு வெக்கமா இருக்குது.

வெட்கப்படுற மூஞ்சியா இது பாருங்க? சரி வா உள்ள போலாம் நான் வந்ததை பூவிழி பார்த்துவிட்டால் ஆமா அவ கிட்ட இருந்து எதுக்கு இப்படி தலைதெறிக்க வெளியில் ஓடிவந்த .

ஆமாம் ல நான் வாயில வெச்சி இருந்தேன் இல்ல பால் கொழுக்கட்டை அதைற்காணம் நமக்கு சாப்பிட உணர்வே இல்லை .என்று தேவிகா சொல்லவும்.

அப்படியா? எங்க போச்சு உங்க வாயிலிருந்து இதோ இதானு பாரு அப்படின்னு அவனுடைய வாயை திறந்து காமிக்கிறான். அவள் வாயில் இருந்தது இப்போது அவன் வாயில் என்னடி மேஜிக் எல்லாம் பண்ற .

"போங்க நீங்க ரொம்ப மோசம். "

மோசமான என்னடி பண்ணிட்டேன். உன்னைய?

நீங்கதான் என்ற வாயிலிருந்து உங்க வாய்க்கு வர வச்சிட்டீங்க?

அது எப்படி டி வரும் நானும் கை எடுக்கல நீயும் கையெடுத்து கொடுக்கல அப்புறம் எப்படி வந்தது? எப்படி? வந்தது என்று இன்னொருக்கா பண்ணி பார்த்தரலாமா?

போங்க வெளியில இருக்கிறோம் மாமா இது ஒன்னும் நம்ம பெட் ரூம் இல்ல..

இப்போது தான் ஞாபகமே வந்ததா பரவாயில்லையே!!!விவரமாக இருக்கிறே..

நான் எப்பவுமே விவரம் தான் அது எனக்கே தெரியுமாச்சே..உன்னோட வெவரம் எந்த லெவல் இருக்கும் என்கிறது உன்னோட கிளாஸ் வாத்தியார் நானு எனக்கு தெரியாதா? சரி வா, என்று இருவரும் உள்ளே செல்கின்றனர்.

பூவிழி உள்ளே சென்று சொன்னதால் இப்போது கமலா யசோதா இருவரும் சமையலறையில் இருந்து வெளியே வந்து வாங்க மாப்பிள்ளை என்று வரவேற்கின்றனர்.

அத்தை நாளைக்கு அப்படியே மண்டபத்துக்கு போகணும் இல்ல அதனால தேனோட பட்டு சேரி ஜுவல்லஸ் அங்க இருந்தது அதை கொண்டு வந்து கொடுக்கலாம்.

சரிங்க மாப்பிள்ளை எப்படி இருந்தாலும் பொழுதோட மெஹந்தி பங்க்ஷன் அப்போது வந்திருப்பீங்களே அப்ப கொண்டு வந்து இருக்கலாம் அங்கேயும் வேலை இருக்கும் இல்ல என்று சொல்லவும்.

பூவிழி உடனே ஏம்மா உனக்கு தெரியலையா? அவர் இது ஒரு சாக்கு நம் அக்காவை பாக்காம ஒரு நாள் இருக்க முடியல தேடிவந்துட்டாரு என்று பூவிழி சொல்லவும்.

தேவானந்த் வெக்கமாக போய்விட்டது. இதை இப்படியா? கோர்த்துவிடுவாய் இது சின்ன புள்ள நினைச்சா நம்மளுக்கு நம் ஆளைத் தான் மாத்தனும் வெவரம் பத்தாது. நாம நிறைய லெசன் எடுக்கணும்.

னா கார்முகில் உன்னோட ஆளு பயங்கரமா இருக்குறாள். நீங்க மட்டும் தான் வந்தீங்களா? மாமா,

அப்புறம் யார் வருனமுனு எதிர்பார்க்கிற பூவிழி என்று இப்போது தேனருவி கேள்வி எழுப்பினால்,

இல்ல அவரோட ஃப்ரெண்டும் வராரா என்னமோ நெனச்சேன்.

நேரடியாவே கேட்டு போக வேண்டியது தானே கார்முகிலன் வரலையா? அப்படின்னு எதுக்கு இப்படி சுத்தி வளச்சு மூக்கை தொடர என்று தேன் அருவி வாய் அடிக்கவும்.

ரெண்டு பேருமே கொஞ்சமாவது அடக்கமாக இருக்கிறீர்களா? காலையிலிருந்து இப்படியே ரெண்டு பேர் சண்டை கட்டிட்டு இருக்கீங்க. தேனருவி அவ சாப்பிடுவதை நீ புடுங்கிட்டு வரணுமா ஏண்டி ரெண்டு பேர் சண்டை கட்டிட்டு இருக்கீங்க? அப்புறம் பிரியும் போது கஷ்டமா இருக்கும்.

எதுக்கு? பிரியராங்க..

இல்ல தம்பி கல்யாணம் ஆயிட்டா ஆளுக்கு ஒரு பக்கம் போயிருவாங்க அப்புறம் இதே நெனச்சுட்டு அப்புறம் கஷ்டமா இருக்கும்ல அதைத்தான் சொல்ல வந்தேன்.

அதெல்லாம் ஒன்னும் ரொம்ப தூரம் எல்லாம் இல்லை இங்கே அங்கிருந்து இங்க ரெண்டு கிலோமீட்டர் தானுங்க அப்புறம் இங்க இருந்து மதுரை வேணா துரமா இருக்குது.

தேனருவி நெனச்ச நேரம் வந்து உங்களை பாத்துக்கலாம் ஒன்னும் ரொம்ப தூரம் எல்லாம் இல்ல இல்ல நினைச்சா போய் பார்த்துக்கொள்வது நல்லதான் இருக்குது. வெளிநாட்டுக்கா போறீங்க.

அதுதான் சரிங்க மாப்பிள்ளை உட்காருங்க உங்களுக்கும் பால் கொழுக்கட்டை எடுத்துட்டு வருகிறேன் சாப்பிடுவீங்கள மாப்பிள்ளை.

செம டேஸ்ட்ங்க அத்தை என்று தேவ் ஆனந்த் உளறி விட,

நீங்க இப்பதான் வீட்டுக்குள்ளே வர்றீங்க பால் கொழுக்கட்டை சாப்பிட்ட மாதிரி சொல்றீங்க.

இல்லைங்க வீட்டுக்குள்ள வந்ததுமே மணந்ததுங்களா? அதை வச்சு சொன்னேன். அருவியை பார்த்தான் தேவானந்த் சொல்லிட்டா உன் வாய்க்குள் இருந்து என்ற வாய்க்கு வந்துருச்சுன்னு.

அவளோ முறைத்தாள். அதேபோல் கமலா உள்ளே சென்றவர் தேவானந்துக்கும் பால் கொழுக்கட்டை எடுத்து வந்து கொடுத்தார். அதை சாப்பிட்டுவிட்டு சரிங்க தான் நான் போயிட்டு பொழுதோட வர்றேன். சரி மாப்ள தேனருவியிடம் கண்களால் விடை பெற்று சென்றான்.

தேனருவி நின்னுட்டு இருக்காம மளமளவென வேலை செய் போ துணிகளை எடுத்து உள்ள வச்சுட்டு , இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் வந்துருவாங்க. மாலை நேரம் நெருங்க நெருங்க ஒவ்வொருத்தராக வந்தாங்க வாங்க எல்லாம் ஏன் இவ்வளவு நேரம் என்று யசோதா அனைவரையும் வரவேற்றார்.

நட்பு குடும்பத்தார் எல்லாருமே குடும்பத்தோட வந்துட்டாங்க என்ன யசோதா அன்னைக்கே சொல்லிவிட்டு இருந்தாங்க இன்னைக்கு மெஹந்தி பங்க்ஷன் வந்தா கல்யாணம் முடிஞ்சுது எல்லாரும் போவோனும் என்று சொன்னேன்.

அதனால எல்லா குடும்பத்தோட வந்துட்டாங்க எல்லாரையும் வரவேற்று இனிப்பு கொடுத்தாங்க. இன்னுமா நாங்க என்ன எல்லாம் ஓரம்பரக்காரங்களா ?நாங்கள் இந்த வீட்டு பொண்ணுக என்று அனைவரும் சொல்லி சிரித்தனர்.

சந்தோஷமா இருங்கோ ஆளுக்கு ஒரு ரூம்ல கொண்டு போய் துணி வெச்சிட்டு வாங்கோ மருதாணி வைக்கிறது வராங்களா மாப்பிள்ளை எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாரு எல்லாரும் கைல டிசைன் டிசைனா வச்சுக்கோங்க எங்களுக்கெல்லாம் என்ன வயசான காலத்துல சின்ன பிள்ளைக்கு நீங்கதான் நல்லா வச்சுக்கோங்க தேனருவி வா முதல்ல உனக்கு தான் என்று நாங்க எல்லாருமே உனக்கு அநேகம் எங்க எல்லாத்துக்கும் நீ ஒரே அண்ணி என்று.

நித்தியாசபரியைத் தவிர மத்தவிங்க எல்லாம் சொன்னாங்க ஏன்னா நித்யா சபரீத தேனருவிக்கு அண்ணன் மனைவி அதனால நாங்க எல்லாம் உனக்கு கொழுந்தியா.. நாத்தனார் எல்லாரும்.

நீ ஒருத்தி தான் அதனால எங்கள் எல்லாத்தையும் நீ சமாளிக்கவும் என்று அனைவரும் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேவானந்த் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் வந்தனர் .

கிருஷ்ணவேணி அம்மா கண்ணுகளா? எல்லாம் இங்கேயே வந்துட்டீங்களா ?அங்க வந்து இருக்கலாம் இல்ல .சரி இங்க பங்க்ஷன் முடிச்சுட்டு போகும்போது மாப்பிள்ளை வீட்டுக்கு வந்துரனும்.

இங்கிருந்து மண்டபத்துக்கு போகும்போது மண்டபத்துல வேணா போயி எல்லோ ஆனந்த் கூட பிறந்த பிள்ளைகள் எல்லாம் வந்துரும்.

அம்மா ரொம்ப சந்தோசமா நீங்க இப்படி சொன்னதே மகிழ்ச்சி. இங்கே இருந்தா எல்லாரும் வர போறாங்க இன்னைக்கு நைட்டு முடிஞ்சா நாளைக்கு காலையில் மண்டபத்துக்கு போறது தானே சொல்லுங்க அதுக்குள்ள அங்க வராட்டியும் நாங்க இங்கேயே இருக்கிறோம்.

நம்ம வீடு தானே பூவரசன் கோட்டை தேவகோட்டை 2 கிலோ மீட்டர் தான் கல்யாணத்து முடிச்சுட்டு பொண்ணு மாப்பிள்ளை அழைப்புக்கு வரும்போது நாங்க வந்துவிடுவோம்.

சரி சரி எல்லாரும் வாங்க போய் உட்காருங்க அதிரா, ஆதியா, அபிநவ் எல்லாம் வாங்க குட்டீஸ்க்குலா என்ற எடுத்துக் கொண்டனர் வனிதா வானதி சுனைனா விஜய் லதா அனைவரும் வந்திருந்தாங்க முதல்ல போய் தேனருவி பாத்தாங்க .

வனிதாக்கு தேனருவி பார்க்க பார்க்க அவ்வளவு பொறாமையா இருந்தது. நான் இருக்க வேண்டிய இடத்துல நீ உட்கார்ந்து கொண்டு இருக்கிறே இன்னும் எனக்கு என்ன உன்ற கழுத்துல அவன் கற்ற தாலியற வரைக்கும் எனக்கு நேரம் இருக்குது பாக்கலாம் டி என்று மனதில் கருவிக்கொண்டு நின்று இருந்தால்.

நிழல் அவளின் கெட்ட எண்ணத்தை தெரிந்து கொண்டது.

பார்க்கலாமா டி என்னத்த பாக்கலாம் டி நீயா நானா பாத்திரலாம் இன்னும் காமெடி பீஸ் பண்ணனும்னு நினைக்கிறேன்.

நமக்கே நான் நிழலா பேய் தானா இல்ல காமெடி பண்ற வடிவேல் தானா?

அம்மா மெஹந்தி போடுற பொம்பளக்கு யாரு இவ வனிதா விஜயலதா கை போய் முதல்ல எங்களுக்கு போட்டு விடுங்க அப்புறம் பொண்ணுக்கும் மெதுவா போடுங்க பொண்ணுக்கு என்ன வேலை இருக்க போகுது என்று விஜயலதா தான் வனிதா இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு போட்டு விட சொன்னாங்க.

சரி போட்டுவிட்டால் போச்சு வாங்கன்னு சொல்லிட

கூப்பிட்டேன் இருடி வந்துட்டீங்களா உக்காருங்க உட்காருங்க அப்படின்னு நிழலா அந்த மெஹந்தி போடுறவனோட உடம்பு குள்ள போயிருச்சு ரெண்டு பேர் கையிலயும் மெஹந்தி போட்டா அது கையில் ஒட்டவே மாட்டேங்குது.

என்னங்க உங்க கையில மருதாணி ஒட்ட மாட்டேங்குது முதல் கையில் இருக்கும் உறையைக் கழட்டுங்க அப்புறம்தான் போட முடியும் .அந்த பெண்மணி பியூட்டி பார்லர் பெண்மணி சொல்ல .


என்னங்க சொல்றீங்க? நாங்க கிளவுஸ் போட்டு இருக்கிறோம். கிளவுஸ் எல்லாம் இல்ல நீங்க அப்படியே போடுங்க ..அப்புறம் பாருமா மெஹந்தி கையில் ஒட்ட மாட்டேங்குது.

இது என்னது எனக்கே டவுட் வர்ற மாதிரி சொல்றீங்க ?இருங்க நீங்க வேனா பாருங்க எங்க கையில் என்ன இருக்குதுன்னு புடிச்சி இழுக்குறாங்க ஏற்கனவே இல்லையே கிளவுஸ் இருந்திருந்தா தான் வெளியில் வந்து இருக்குமே இது என்ன ரோதனையா போச்சு விஜய் லதா வந்த இடத்தில் இப்படித்தான் பிரச்சனை பண்ணிட்டு இருப்பீங்களா? என்று கிருஷ்ணவேணி சத்தம் போடவும்.

அத்தை ஒன்றும் இல்லைங்கோ எங்க கையை ஒன்னும் இல்ல பாருங்க அதெல்லாம் நல்ல எண்ணம் இருக்கிறவங்களுக்கு ஒட்டும், எப்ப பாத்தாலும் அடுத்தவங்கள என்ன வேலை செய்து கேவலப்படுத்தலாம் அப்படின்னு நினைக்கிறாயோ? உனக்கெல்லாம் ஒட்டாது என்று யார் என்று தெரியாத ஒரு பெண்மணி பேசவும்.

ஏன்மா நீ யாரு புதுசா இருக்கிற என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் பார்த்து பேசு நான் அரண்மனையில் இருக்கிற ராஜகுமாரி .

என்னது? ராஜகுமாரியா நீயே ஒரு கேப்மாரி என்று நிழலா அவளின் காதல் சொல்லிவிட்டு தூரமாக நின்று கொண்டது.

பக்கத்தில் இருந்ததோ வனிதா என்ன வனிதா? நீ என்ன எனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு பார்த்தா எனக்கேப் மாறி என்கிற நீதான் ரொம்ப மோசமான புத்தியுடன் சுத்திட்டு இருக்குற நான் அன்னைக்கே சொன்னேன்ல சிசிடி கேமரா பார்க்கும்போது நீதான் அதை மறந்துட்டு என்ன நீ கேப்மாரின்னு சொல்றே.

அக்கா நான் எங்கே உங்களை சொன்னேன்.

ஆமா நீ தான் பக்கத்துல இருக்குற எங்காவது என கேப் மாரின்னு சொன்னது எனக்கு ரொம்ப இரிடேடிங்கா இருக்குது நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்ல

மொள்ளமாரி அப்படிங்கறத வனிதா காதில் சொல்லிவிட்டது நிழல்.

அக்கா நான் உங்களை ஒன்னும் சொல்லல ஆனா நீங்க உங்களுக்கு கேப்மாரின் சொன்னது சொன்னேன்னு சொல்லிட்டு என்னை மொள்ளமாரி சொல்லி இருக்கீங்க நீங்க மட்டும் என்ன இப்படி பேசலாமா? இன்று இரண்டு பேரும் சண்டை கட்டினார்கள்.


தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top