Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 354
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 75
பாகம் - 75
கார்முகிலன் பூவிழிக்கு அழைத்து இருந்தான். அவனின் அழைப்பை ஏற்றவள் தனது அறைக்குள் சென்றவள்.
மாமா என்ற அவளின் அழைப்பில்.. அவனுக்குள் என்ன எல்லாமோ? தோன்றியது.
இது என்ன ஒரு சத்தமும் காணம் ஒரு வேளை போன் கட்டாகி விட்டதோ? என்று போனை எடுத்தவள் பார்க்க அது உயிர்ப்புடன் தான் இருந்தது.
முகில் லைனில் இருக்கிறீர்களா? என்று மறுபடியும் கேட்க.. இப்போது அவனும் சுயத்திற்கு வந்தவன் பூவிழி நீ முதலில் என்னை எப்படி அழைத்தாய் அது போல் சொல்லே அது கேட்கும் போதே ஒரு கிக் பீலாகுதுடி.
நான் உங்களை எப்படி அழைத்தேன், ம் என்று தலையைத் தட்டிக் கொண்டு யோசனையோடு பார்க்க.
அதெல்லாம் தெரிந்து கொண்டே நடிக்காத பாப்பா என்று அவளைப் பார்த்து அவன் கண்ணடிக்க , போங்க நீங்க ரொம்ப மோசம் என்று அவள் கண்ணாடியைப் பார்த்து பேச.
அவனுக்குத் தான் குழப்பமானது. பூவிழி நீ கால் கட் செய் நான் வீடியோ கால் வருகிறேன்.
என்னது இத்தனை நேரம் வீடியோ கால் இல்லையா? அப்படினா நாம் தான் கண்ணாடியில் அவர் தெரிவது போல் கற்பனை செய்து கொண்டோமா? நல்லவேளை நாம் பேசியது அவருக்கு கேட்டு இருக்காது.
இப்போது வந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்.. அவனின் முகத்தையே பார்த்து இருந்தாள்.
விழி இப்போது சொல் இன்னும் ஒரு தடவை மாமா என்று இனிமேல் நீ அப்படித்தான் என்னை அழைக்க வேண்டும் என்று சொல்லவும்.
போங்க எனக்கு வெட்கமா இருக்கிறது என்று சொன்னவளைப் பார்த்து.,
அச்சோ வெட்கம் எல்லாம் படாதே அப்புறம் மாமாக்கு இருக்கிற ஆசையில் அங்கே வந்தேன் வைச்சுக்க உனக்கு தான் சேதாரம் என்று உதடு குவித்தான்.
இன்றைக்கு மெஹந்தி பங்சன் இருக்கிறது. நீங்களும் வருகிறீர்களா?
அங்கே வருவதற்கு தான் கிளம்பியாச்சு வருகிறோம் என்று சொல்லி விட்டு போனை வைத்தான். காலையில் எழுந்ததும் போன் பேசி முடித்தவள். இப்போது குளித்து விட்டு தேனருவி அறைக்குத் தான் சென்றாள்.
ஆனா தேனருவி நல்லா குப்புற படுத்து தூங்கிக்கொண்டு இருந்தா கல்யாணம் இவளுக்கு பத்து மணிக்கு மேல வந்துருவாங்க பங்க்ஷன் வைக்கிறதுக்கு இவ இப்படி தூங்கிட்டு இருக்கா?
தேனுகா எந்திரி இப்படி தூங்கிட்டு இருக்க எந்திரிச்சு குளிச்சு ரெடி ஆகு இன்னமும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்துருவாங்க. நீ இப்படி தூங்கிட்டு இருந்தா உங்க தலை காய வேண்டாமா?
தலகாய்வதற்கும் மெஹந்திக்கும் என்னடி சம்பந்தம் இருக்குது போ அதெல்லாம் எந்திரிச்சுக்வேன்.
அப்ப நினைவாத்தான் படுத்துட்டு இருக்கியா?
ஆமாண்டி நானே இன்னும் ரெண்டு நாள் தான் அப்புறம் இந்த பெட்ல படுக்க முடியாதுன்னு பீல் பண்ணிட்டு இருக்கிறேன். காலையில் நூத்துக் கிழவியாட்டம் வந்து பிளேடு போடுகிறாய்?
இந்த ஓவரா சீன் போடுற வேலை எல்லாம் நிறுத்திட்டு எந்திரி.
உனக்கு என்னடி இன்னும் மூணு மாசம் இருக்குது .ஜாலி, நீ மட்டும் ஜாலியா யசோதா செய்யறது பூரா சாப்பிட்டு சுத்திட்டு இருக்க போறே.
என்னது? நீ வரவே மாட்டியா கல்யாணம் முடிஞ்சு போனா இங்க வர மாட்டியா இல்ல வராமல் அப்படி எல்லாம் ஒன்னும் அடச்சி வைக்கிற பேமிலி இல்ல.
நீ வா அதனால இந்த நொண்டிக்ஷாக் சொல்றத நிறுத்திட்டு கொஞ்சம் எந்திரி பார்க்கலாம்.
நான் நீயும் டாம் அண்ட் ஜெர்ரி சண்டை போட்டாலும் ஒன்னு ரெண்டு நாள் தானே சண்டை போடுவோம்.
அப்புறம் நான் எல்லாம் உனக்கு கண்ணுக்கே தெரிய மாட்டேன்.
ஏன் அப்படி சொல்ற? ஆமா வாத்தி உன்னை அங்கே இங்கே நகர விட்டுவாறா? புது சொந்தம் வரப்போகுது ஒரே கொண்டாட்டம் தான் உனக்கு .
நீ மட்டும் என்ன எனக்கு தெரியாதடி அது உனக்கு ஆள் செட் ஆயிருச்சு இல்ல எல்லாரும் இருக்கும் போதே அன்றைக்கு அண்ணி வீட்டில் உன்னைக் கடத்திட்டுப் போறார்.
நான் எதிர்பார்க்கவே இல்லை. இது மாதிரி சீன் எல்லாம்.
தேனு நீயும் தானே உனக்கு வாத்தி சேலை கட்டி விட்டாரு.. அப்புறம் இதழோடு இதழ் வைச்சாரு இதெல்லாம் நீ பண்ணலாம் ஆனால் உன் தங்கச்சி தனியாப் பேசியதிற்கு உனக்குப் புகையுதா? என்று மனசாட்சி சொல்லவும்.
அது அப்படித்தான் என்று அதை முடிக்கி விட்டாள். யசோதா குரல் கேட்கும் முன் குளிக்கச் சென்று விட்டாள்.
பொழுதோட தான் மெஹந்தி பங்சன் இப்போதே டார்ச்சர் செய்கிறாங்க என்று வாய்க்குள் முனங்கிக் கொண்டே இருந்தாள்.
ஒவ்வெருவராக வர ஆரம்பித்தனர். கமலா அண்ணி நான் தான் இங்கேயே இருக்கச் சொன்னேன். அதற்குள் எதுக்கு வீட்டிற்கு போனீங்க.. எங்கே என் அண்ணா இன்றைக்கு வந்தாச்சு இனி கண்ணாலம் முடிஞ்சு ஒரு வாரம் கழித்து தான் போகவேண்டும் என்று யசோதா
சொல்லவும்.
ஆமா நான் போகிறேன் வெளி ஊருக்கு இந்த பக்கம் திரும்பி அந்தப் பக்கம் போன உன் பிறப்பு வீடு இதில் என்ன யசோதா ஞாயம் பேசிறே என்று சிரித்துக் கொண்டே சொல்லவும்.
அது தான் நானும் சொல்கிறேன் அங்கே போய் என்ன பலகாரம் செய்யப் போகிறீங்க அதையே செய்யுங்க.
ஆமா தேனு எங்கே எழுந்து விட்டாளா? அவளை எழுப்பி விடுவதற்குத் தான் பூவிழி போய் இருக்கிறா?
பூவிழி எழுப்பி விட்டதிற்கு எந்திரிக்காமல் நான் இன்னும் இரண்டு நாளில் வேறு வீடு போய் விடுவேன் என்று அழுது கொண்டு படுத்து இருக்கிறாள்.
அப்புறம் நான் போய் சத்தம் போடவும் வாய்க்குள்ளேயே முனங்கிக் கொண்டு குளிக்கப் போய் விட்டாள்.
யசோதா நமக்கும் தான் கஷ்டமாக இருக்குது காலையில் எழுந்ததிலிருந்து தூங்கும் வரைக்கும் நம்ம கூட ஏதாவது பேசிட்டே இருப்பா இப்போது வேறு வீடு போகிறா கொஞ்ச நாளைக்கு மனசுக்கு எதுவோ போல் தான் இருக்கும். ஆனாலும் எல்லாப் பொண்ணுகளுக்கும் இது தானே வாழ்க்கை பெண் குலத்திற்கே ஒரு வீட்டில் பிறந்து இன்னொரு வீட்டில் வாழ்வது தானே.
காலையில் இரண்டு பேரும் இப்படி பிடில் வாசிக்காதீங்க காதில் இருந்து இரத்தமே வடியுது என்று பூவிழி வரவும்.
ஆமா நாங்க பேசினால் இளசுகளுக்கு இரத்தம் தான் வரும்.. உனக்குப் பார்த்த மாப்பிள்ளை நல்ல மாதிரி தான் இருக்கிறார். எங்களுக்கு இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது.
அத்தை எங்கள் இரண்டு பேரையும் துரத்தி விடுவதிலேயே குறியாக இருக்கிறீர்களே என்று தேனருவி வந்து இடையில் பேசவும்.
ஆமா எதுக்கு அழுதாயாமா? என்று கமலா கேட்கவும்.
நான் எதுக்கு அழுகிறேன். ஐ யாம் வெரி ஹேப்பி அண்ணாச்சி என்று சொல்லவும்.
அடிப்பாவி ஒரு அரைமணி நேரம் முன்பு கட்டிலில் குப்புறபடுத்துக் கொண்டு ஊளையிட்டுக் கொண்டு இருந்தாய் என்று பூவிழி சொல்லவும்.
இப்போது பூவிழியை முறைத்தவள் அடிக் கழுதை நானே தூக்கத்தில் இருந்தேன். நீ கேள்வி கேட்டதும் தூக்கத்தை ஏன் சொல்ல வேண்டும் என்று துக்கம் என்று சொன்னதிற்கு எருமை எப்படி கோர்த்து விட்டு இருக்குது பார். இருடி நீ எதனால என்னிடம் சிக்குவேல அப்ப இருக்குது என்று வாயில் முனுமுனுத்துக் கொண்டு அவள் உட்கார்ந்து இருக்கும் சமையலறை மேடையில் அமர்ந்தவள்.
பூவிழி உனக்கு இருக்குடி என்று அவள் கையில் வைத்து இருந்த பால் கொழுக்கட்டை யை பிடிங்கிக் கொண்டு எழுந்து ஓடினாள் தேனருவி.
அவளைத் துரத்திக் கொண்டு பூவிழி ஓடினால். தேனருவி பூவிழி இருவரும் பட்டுப்பாவாடை தான் போட்டு இருந்தனர்.
தேனருவி பாவாடை தாவணியும் பூவிழி பாவாடை சட்டையும் அணிந்து இருக்க இரண்டு பேரும் வீட்டிற்குள் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தனர்.
தேவ் ஆனந்த் அப்போது தான் தேனருவி கூட கொஞ்சம் போட்டோ சூட் எடுக்கலாம் என்று காலையில் வந்து இருக்க.
தேனருவிக்குத் தெரியவில்லை அதனால் விரித்து விட்ட கூந்தல் இடுப்புக்கும் கீழே தொங்க தோகை மயில் போல் தான் இருந்தது.
தேவ் ஆனந்த் வருவதைப் பார்த்த பூவிழி தேனருவியைத் துரத்துவதை நிறுத்தி விட்டு சமையலறைக்குள் ஓடிவிட்டாள்.
பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடிய தேனருவி வெளியே சென்று தோட்டத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று சென்றவள் அதற்குள் அவள் வந்து பிடுங்கி விட்டா என்ன செய்வது? என்று ஒரு பால் கொழுக்கட்டையை வாயில் போட்டு அதக்க நினைத்து அதன் சுவையில்லாத கண்ணை மூடிக் கொண்டு சென்றவள் நேராக மோதியது தேவ் ஆனந்த் மேல் தான்.
இவளின் மென்மையில் தன்தேகம் உரசியதும் அவனுக்குள் ஒரு புது உணர்வு.. அவள் இமை திறக்கும் முன் அவளின் இதழுக்குள் இருந்ததை அவன் அதரம் பந்தாடியது அது கூடத் தெரியாமல் தேனருவி அவனின் தொடுதலிலே உணர்ந்தாலும் அவன் எப்படி இங்கே இந்த நேரத்தில் ஒரு வேளை காலைக் கனவில் தான் அன்றைக்கு வந்தான் என போனில் பேசியது போல் இப்போது நினைத்து இருக்க அவள் இப்போது அந்தரத்தில் பறந்தது போல் இருந்தது.
அவளைக் கைலேயேந்தியவன் இப்போது அவள் எப்போதும் அமர்ந்து விளையாடும் ஊஞ்சலில் கொண்டு போய் அமர வைத்து விட்டு அவள் கண்மூடி இருக்க அவளையே பார்த்தவண்ணம் நிற்க.
இமைமூடிய மொக்கு, இப்போது மெதுவாக இமைக் கொடையை கொஞ்சம் நிமிர்த்தி அவனைப் பார்த்தவள். காலையில் இருந்து உங்கள் முகமே நினைவில் இருந்ததால் இப்போது நீங்கள் நேரில் நிற்பது போல் என் மனசுக்குத் தெரியுதுங்க மாமா என்று அவள் சொல்லவும்.
தேவ் ஆனந்த் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் சரி அப்படி என்ன தான் சொல்கிறாள் என்று பார்க்கலாம் என்று அவளையே பார்த்த வண்ணம் இருக்க.
உண்மையில் தேனருவி இது கனவு தான் அவர் நிஜத்தில் இல்லை என்று நினைத்துக் கொண்டு.
வாத்தி மாம்ஸ் இன்னைக்கு போன் செய்ய வில்லை. அது தான் நமக்கு இப்படி தோன்றுகிறது. எனக்குத் தான் பித்து பிடித்து விட்டதோ என்று அவனைப் பார்த்து கேட்கவும்.
அவனுக்கு சிரிப்பு வந்தாலும் கொஞ்ச நேரம் பாப்பாவை கதற விட நினைத்து விட்டு அமைதியாக நின்றவனைப் பார்த்து இந்த மீசை எத்தனை அழகா இருக்கிறது என்று அவனின் மீசையை தொடவும் அவனுக்கு குறுகுறுவென இருந்தது.
இது என்ன நிஜமா இருக்கிறது என்று அவள் சந்தேகத்தோடவே அவனின் வாய் அருகில் அவளது விரலைக் கொண்டு போகவும் விடுவானா? அவளது விரலை பிடித்துக் கொண்டான்.
அவளோ? அதிர்ச்சியில் தன் விழிகளை விரித்துப் பார்த்தால். அச்சோ இது என்ன கற்பனையில் நினைச்சு கை வைச்சா கை வாய்க்குள் போய் விட்டது.
நிழலா தான் காதுக்குள் வந்து ஏய் லூசு முதலாளி உன் வாத்தி தான் வந்து இருக்கிறார். அது தெரியாமல் நீ அவரை என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? என்று சொல்லி விட்டு போய் விட்டது.
என்னடி இப்போவது நான் நிஜமாகத்தான் உன் முன்னால் நிற்கிறேன் என்று உணர்ந்தாயா? என்று தேவ் ஆனந்த் அவள் முன் சொல்லவும் தான் பக்கி இது கனவு இல்லை நிஜம் என்று நினைத்து விட்டாள்.
அப்புறம் வழக்கமாக விழித்து வைப்பாளே அது தான் அரங்கேற்றம்.
தொடரும்..