• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
353
நீ உடல் நான் நிழல்
பாகம் - 74


அன்றைய பொழுதில் மதுரையில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இப்போது அனைவரும் பூவரசன்கோட்டைக்கு கிளம்பினர்.

அதற்கு முன்னதாக கார்முகிலன் குடும்பத்தாருக்கும் தேனருவி தேவானந்த் திருமண பத்திரிக்கை கொடுத்தனர் தப்பா நினைச்சுக்காதீங்க இவ்வளவு தூரம் வந்துட்டு உங்க வீட்டுக்கு வந்து கொடுக்காம சபரி வீட்டிலேயே கொடுக்கிறேன்னு.

அதனால என்னங்க நீங்க சொன்னதே போதுமா நாங்க அதெல்லாம் வந்துருவோம் எப்படி இருந்தாலும் நீங்க போய் கலந்தாலோசித்துட்டு சொல்லுங்கோ தேவானந்த் கல்யாணத்தன்னைக்கு நாம இவங்களுக்கு நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம் .

சரிங்களா சம்மந்தி நீங்க உங்க பெரிய சம்மதி கிட்ட கேட்டு முடிவு சொன்னீங்கன்னா கார்முகிலனுக்கும் பூவிழி ரெண்டு பேருக்கும் நிச்சயம் செய்து விடலாம்.

ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க நாங்களும் ரொம்ப வருஷமா பையனுக்கு பொண்ணு தேடிட்டு இருந்தோம் நல்ல குடும்பத்தில் நல்ல புள்ள கிடைச்சிருச்சு அதுவும் சபரிக்கு சொந்தக்காரர் சபரிநாதனோட தங்கச்சியை போச்சு எங்களுக்கு ரொம்ப சந்தோசம் என்றும் மலர்விழி சொல்லவும் அனைவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.

அங்க இருந்து நித்தியாவை அழைத்துக் கொண்டு நகை கடை துணி கடை திருமணத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்கிக் கொண்டு நித்யா சபரி வீட்டில் விட்டுவிட்டு அனைவரும் பூவரசன் கோட்டையை நோக்கி வந்தனர்.

இவர்களை இறக்கி விட்டு விட்டு தேவ ஆனந்த் கிளம்பி சென்று விட்டான் .

வாங்க மாப்பிள்ளை சாப்பிட்டு போலாம் .

இல்லைங்க அத்தை எனக்கு வேலை இருக்குது நிறைய நகை எல்லாம் வாங்கிட்டு வர்றதுனால அடுத்துவிங்களோ கால் டாக்ஸி நம்பி விட முடியாது.

அதனால தான் அம்மா அப்பா சொன்னாங்க நானும் வந்துட்டேன் போய் அங்க இருக்குற வேலை பாக்கிறேங்க..ஒரு வாரம் ஆச்சு காலேஜுக்கு போய் பார்க்கவே இல்லை சரி வருகிறேன் என்று விடை பெற்று சென்றான்.

இப்படியே நாட்கள் கடக்க அனைத்து சொந்தங்களையும் அழைப்பு முடிந்தது திருமண மண்டபத்திற்கு செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு தாய்மாமன் வீட்டில் இருந்து சீர் கொண்டு வந்தாங்க தேன் அருவி வீட்டுக்கு மகாராஜா தாய்மாமன் சீர் செய்வதால் தன்னோட தங்கச்சிகள் எல்லாம் கூப்பிட்டு குடும்பத்தோட வந்துட்டாரு.

யசோதா அம்மா சொன்னாங்க மக்களே வாங்கல பூவிழிக்கும் கல்யாணம் முடிவாயிருச்சு நீங்க இதுக்கு எப்படி முன்னால் இருந்து செய்யறீங்களோ? அவங்க கல்யாணத்துக்கு நீங்க எல்லாரும் வந்து சீரும் சிறப்புமா செஞ்சு குடுக்கணும், சரியா இன்னைக்கே வந்துட்டீங்க கல்யாணத்துக்கு இப்போதே இருந்து கல்யாணம் முடிஞ்சுதா நீங்க எல்லாரும் போகணும் என்று சொல்றாங்க.

அம்மா நாங்க போயிட்டு ரிசப்ஷன் வர்றாங்கோ.

ஏம்மா இப்படி சொல்றீங்க இருங்களேன் நாங்க மூணு பேரும் மட்டும் தான் இருக்கிறோம்.

அதில்லம்மா எங்களுக்கு மத்த வேலை எல்லாம் இருக்குது. நான் கண்டிப்பா ரிசப்ஷனுக்கு வந்துருவோம் .தேவ் ஆனந்த் அண்ண்வாச்சே நாங்க இல்லாமையா திருமணம் நடக்க போகுது செமையா என்ஜாய் பண்ண போறோம். என்று கூறி விட்டு அன்று காலை டிபன் மட்டும் சாப்பிட்டுவிட்டு அனைவரும் கிளம்பி சென்றனர்.

பிறகு தேவ் ஆனந்த் தேனருவிக்கு ஃபோனில் அழைத்து இருந்தான். அவனோடு பேசி முடித்துவிட்டு போனை வைத்தவள்.

இந்த நிழலா எங்க போய் தொலைஞ்சதுன்னே தெரியல ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்குது .கண்ணுக்கு சிக்குவனா நிக்குது பாரு ஏய் நிழல் இங்கே வா என்று தனது கபோர்டு பார்த்து தேன் அருவி சொல்லவும்.

உள்ளேன் அம்மா என்று வந்து நின்றது .நான் உனக்கு அம்மாவா? நான் என்ன காலேஜ் ப்ரொபசர் நீ உன் பெயர் கூப்பிட்டது அட்டனன்ஸ் சொல்ற மாதிரி வந்து சொல்றே.

ஆமா நீ என்னயிந்தாலும் உனக்கு வாத்தியாருக்கும் திருமணம் ஆகப் போகுது அப்புறம் நீ கூப்பிட்டா நான் இப்படித்தான் சொல்லணும்.

நிழல் நீயும் கூட வர வர ரொம்ப காமெடி பண்ண ஆரம்பிச்சிட்ட பாரு வந்துவங்க உன்னைத்த பேசிட்டு இருக்காங்க. நல்லா கூடி நின்று என்னை யாருமே கண்டுக்க மாட்டேங்குறாங்க.

வரவர இந்த ரைட்டர்ஜி பண்றதே சரியில்லை .உனக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துட்டு என்னை தூக்கி டம்மி பீஸ் மாதிரி வச்சுட்டாங்க .

ஏன் நீ இத்தனை நாள் பண்ணனுத பத்தாத நான் கொஞ்ச நாளாவது என்ற பெயர் இந்த மாதிரி ஆக்கிவிட்டறனே..

இங்க பாரு அதெல்லாம் இருக்கட்டும் நீ போன உன் பழி வாங்குற சோலி எல்லா இதோட முடிச்சுட்டு இனி நீ என் கூடத்தான் சுத்திட்டு இருக்கணும்.

என்னது ?உன் கூட நான் எதுக்கு சுத்துற அதுக்கு தான் வாத்தியார் வந்துட்டாருல.. அவர் கூட சேர்ந்து சுத்து..

அட அவர் இல்லாத நேரத்தில் நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும் அங்க பூரா தேனீ கொடுக்கு சுத்திட்டு இருக்கு நான் என்ன பண்ணுவ சிங்கிளா சிங்கிளா போய் என்னால அங்கன சிங்கி அடிக்க முடியாது.

நீ என்ன பண்ற நீ உடல் நான் நிழலுன்னு சொன்னே இல்ல அது தகுந்த மாற நீ என் பக்கத்தில் என்ற நிழலா பின்னால வந்துட்டு இருக்கனும்.

அட எனக்கு இப்பத்தான் கல்லறை தோட்டத்துல ஒரு போஸ்ட் கிடைச்சது அதை கூட நீ அங்க என்ற வேலை செய்ய போகவிட மாட்டேங்குறியே.

நீ அப்படி என்ன உனக்கு பெரிய வேலை கிடைச்சது .பின்ன நான் நல்லா எப்போ அப்பவே ராணி..

என்னது கோனியா?

ஏன் உனக்கு காது கேட்காதா? அது தான் போன் போன் பேசிட்டு இருக்காதேன்னு சொல்றது . இப்பவே உனக்கு காது கேட்க மாட்டேங்குது.

அதெல்லாம் கேக்குது சொல்லு உனக்கு அங்கே என்ன போஸ்ட் கொடுத்தாலும் நீ எப்படி என்னோட அடிமையா இருந்துட்டு அங்க ஒரு போஸ்ட் வகிக்கலாம். இது ரொம்ப தப்பு.

நிழலு அம்மா தாயே மகாராணி அது ஒன்னும் பெரிய போஸ்டல் இல்ல உனக்கு அடிமையாக இருக்கிறது.

சொல்லு சொல்லு நீ முதல்ல என்ன போஸ்ட் உனக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லு.

சாயிஞ்சு நிக்கிற கரண்ட் கம்பத்துல புடிச்சு தொங்கணும் போஸ்ட் தான் கொடுத்திருக்கிறேன்.

உனக்கு என்ன கையா இருக்குது நீ தொங்குவதற்கு.. அது தெரியுது இல்ல.. அப்புறம் எல்லாத்துக்கும் துணி எடுத்தாங்களோ உனக்கு எல்லாம் வகை வகையை கலர் கலரா துணி எடுத்தீங்களா? உன்னோட நிழலா தான் நான் எனக்கு ஒரு காஞ்சிபுரம் ஒரு விவாகப் பட்டெடுத்து கொடுக்கிறது .ஒரு சாமுத்திரிக்கப்பட்ட எடுத்துக் கொடுக்கிறது. நீ மட்டும் மேட்சுக்கு மேட்ச்சா டிசைன் டிசைனா பிளவுஸ் எல்லாம் என்னமோ அது பேரு ஆரி ஒர்க் எல்லாம் செஞ்சுட்டே.

எனக்கு ஏதாவது செஞ்சாயா?

உன்கிட்ட கை காலும் இல்லை நீ எதைப் போட்டாலும் கருப்பாதான் இருப்பே. முதல்ல நான் ஆரம்பத்தில் உன்கிட்ட என்ன சொன்னேன் சந்தூர் சோப்பு போட்டு குளி என்று சொன்னேன் ல நீ ஒன்னும் அதைவே ஃபாலோ பண்ணாம இந்த உளுத்துப்போன சோப்பு போட்டு குளிச்சிட்டு நீ வந்தாலே வேற வேற மாதிரி கப் அடிக்குது.

என்ன தேன் அருவி என்னை ரொம்ப நீ மட்டம் தட்டுறியா? நான் இங்கு உன்னை எல்லாம் மட்டம் தட்டுல அப்புறம் என்ன உன் ஒட்டியானத்தை எனக்கு கொடுக்கிறியா? உனக்கே இடுப்பே இல்ல என் ஒட்டியாணம் எதுக்கு?

நான் எங்கேயோ போடுவேன் நீ மட்டும் வகை வகையா போடுவியா?

நிழலு நீயே ஆவிய சுத்திட்டு இருக்க உனக்கு நகை எதுக்கு திருடனுகள் அப்புறம் உன்னை ஏமாத்தி திருடிட்டு போயிருவாங்க.

ஆமா நீ தான் பெரிய போலீஸ் சி ஐ டி வைத்து கண்டுபிடித்து கொடு. எப்படி எல்லாம் மெயின்டன் பண்ற உன் நிச்சயம் தான் கோயில் குள்ள நடந்தது. அதனால என்னால வர முடியாம வெளியில நான் டகால்ட்டி அடிச்சிட்டு இருந்தேன்.

கல்யாணத்துக்கு நானும் வருவேனே மண்டபத்தில் வந்து டிசைன் டிசைனா அங்க இருக்குறத வச்சு எல்லாத்தையும் பாப்பனையே நான் தான் வீடியோ எடுக்குவேன்.

கிழிச்ச நீ நீயே ஒண்ணுமே தெரியாது உனக்கு அப்புறம் எப்படி வீடியோ எடுப்பாய்.

நான் அதுக்கெல்லாம் ட்ரெய்னிங் எடுத்துட்டு வந்து இருக்கிறேன்.

எங்கேயோ எடுத்த அது ஒரு பெரிய கதை பாப்பா நீ வேணா நான் உன்னை வாயில் சொல்லாட்டியும் என்ற நெஞ்ச ஓப்பன் பண்ற இந்த ஸ்கிரீன்ல பாத்துக்கோ?

அப்படி என்ன அப்பாடக்கர் வேலை எல்லாம் நீ செஞ்ச என்னை டேமேஜ் பண்ணலை என்றால் உனக்கு தூக்கம் வராதே தேனருவி.

நான் எவ்வளவு பெரிய வேலை பண்ணிட்டு வந்து இருக்கேன் தெரியுமா? காத்தவராயன் 6 விரல் பெரிய பனிஷ்மென்ட் கொடுத்துட்டு வந்துட்டேன்.

இனி முழுக்க நான் ஒன்றும் கூடவே இருக்க போறேன் .அந்த வீட்டில் இருக்கிறவர்களை ஆட்டி படைக்க வேண்டியது என் வேலை நீ வந்து அங்க ஜாலியா என்ஜாய் பண்ணு.

சரி அப்படியே சமையல் ரூம்ல போனேன்னா எங்க அம்மா ஏதாவது செஞ்சு வச்சு இருக்கும் போய் எடுத்துட்டு வா.

இது உனக்காக அநியாயமா இல்ல நான் அடிமை அதுக்காக சமையல் ரூம்குள்ள போய் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரச் சொல்றாய். நான் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு தெரியுமா?

எனக்கு ஏதாவது நீ கண்ணுல காமிச்சிருப்பியா நீ மட்டும் உங்க அண்ணி வீட்ல போயி குலாப் ஜாமு மெதுவடை இப்படி எல்லாம் சாப்பிடுற என்னை நீ நெனச்சு பாத்தியா?

ஆமா உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் நான் தான் உன்னோட நிழல் ஆச்சே நீ எங்க போனாலும் என்னோட ஒரு பர்சன்டேஜ் ஆவது உன் பின்னால சுத்திட்டு இருக்கும்.

சரி சரி நானே உனக்கு நைட்டு குல்பி ஐஸ் காரன் வருவான்ல அப்ப வாங்கி தரேன்.

அடப்பாவி நீ குல்பி சாப்பிடணும்னு ஆசைப்படறே அதுக்காக என்ன வாங்கி கொடுக்கிறேன் சொல்றேன் பாரு அதுதான் நம்பவே முடியல.

சரி சரி என்னோட முதலாளி நீ எஜமானி நீ உன் வயிறு நம்பணும்ல போய் எடுத்துட்டு வர என்று சமையல் அறைக்கு சென்றது அங்கே யசோதா வேலையாக இருக்க அவர் கவனிக்கவில்லை.

நிழல் அங்கு இருந்து குலாப் ஜாமுன் டப்பாவை தூக்கிக் கொண்டு சென்று விட்டது.

பூவிழி வந்தவள் அம்மா இங்கிருந்து குலோப்ஜாம் எங்கம்மா?

பாருடி அங்கதான் இருக்கு இல்ல தேனருவி எடுத்துட்டு போய் இருப்பாள். எனக்கு ஒண்ணுமே சாப்பிட கூட கொடுக்க மாட்டேங்கிறா இவ சாப்பிட்டு விடுகிறாள்.

ஆரம்பிச்சிடாதீங்க ரெண்டு பேரு அடுத்த சண்டைய போங்க இன்னும் ரெண்டு மூணு நாலு அந்த வீட்டுக்கு போய்விடுவாள் அப்புறம் என்ன? உங்க ரெண்டு பேருக்கு சண்ட வேண்டி கிடக்குது.



தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top