• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
352
நீ உடல் நான் நிழல்
பாகம் -73


நிழலா பேய்கள் சிரித்ததில் அந்தக் கட்டிடமே அதிர்ந்தது. ஆறு விரல் ஆண்டவரே உண்மையில் நிறைய ஆவி இருக்குதா? இத்தனை சத்தம் கேட்குது என்று சிலிக்கான் சொல்லவும்.

அது தெரிது இல்லடா உங்க பவர் வச்சு அந்த நிழல்கள் எல்லாம் வெளியில முடிக்கு விடு நான் உனக்கு பெரிய அமௌன்ட் செட்டில் பண்றேன்.

நிஜமாவா? சொல்றீங்க? ஆண்டவரே நீங்க கொடுக்கிறதுல தான் நான் ஏகப்பட்ட டீலிங் எல்லாம் பைசல் பண்ணனும்.

அப்படியா நீ முதல் அதை வெரட்டி விடு அப்புறம் நீ பைசல் பண்றியா உன்னை நான் பைசல் பண்றேனா பார்க்கலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டு தன் சகாக்களோடு அங்கே அமர்ந்து கொண்டார்.

சிலிக்கான் தான் கொண்டு வந்திருந்த எலும்புக்கூடுகளை மண்டை ஓடுகளை எடுத்து தன்னை சுற்றி வைத்துக் கொண்டான். அவன் வைக்க ஒவ்வொரு மண்டையோடும் கையும் காலும் அவனைச் சுற்றி பறக்க ஆரம்பித்தது மண்டையோடுகள் சிரிக்க ஆரம்பித்து விட்டது.

அவனுக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியில் தைரியமாக இருப்பவன் போல் ஐயோ எல்லாம் சேர்ந்து ரவுண்டு கட்டி அடிக்குதுங்களே !!

நான் சூனியம் பண்றேனா? அது பண்ணுதானு புரியாத பாஷையில் எனக்கு தெரியாது நிறைய உளறி திருந்தேனே கடைசில வசமா வந்து நிஜ பேய் கிட்டேவே சிக்கி விட்டேன். இந்த ஆறு விரல் ஆண்டவர் நிறைய செய்வார் நம்மளுக்கு என்று வந்தால் கடைசியில் நம்ம உயிருக்கே உத்தரவாதம் இல்லாம போயிரும் போல இருக்கு.

அப்போது நிழல் வந்து அவன் காதில் அருகில் சிலிக்கான் அது என்ன டா ஆறு விரல ஆண்டவர் என்கிற அவனை ஆண்டவனாடா சரியான பொறம்போக்கு முடிச்சவிக்கி ஊழல் பண்ணி சொத்து சேர்த்துட்டு இருக்கிறான்.

அவன் முதல் ஆம்பளையே இல்லை தெரியுமா? உனக்கு அவன் எல்லாம் அலி ஆயிட்டான்.

என்னது அமைச்சர் ஆம்பளை இல்லையா ?

என்ன போய் செக் பண்ணி பாருடா நான் சொல்வது பொய் என்றால் போய் அமைச்சர் செக் பண்ணி பாருங்க இருக்கிற நாலு பேருக்கும் ஆம்பளை இல்ல.

இப்படி சொல்லுது இந்த நிழலு நீ சொல்வது நிஜமா ஆம்பளை இல்லன்னா அப்புறம் என்னது ஆம்பளையும் இல்ல பொம்பளையும் இல்ல அது வேற மீசை எல்லாம் இருக்குது அது இன்னும் கொஞ்சம் நாளில் மறைஞ்சிடும்.

நீ சொல்றது நான் எப்படி நம்பறது வேணும்னா இப்பவே செக் பண்ணி காமிக்கிட்டா?

சரி பண்ணிக்காமி அமைச்சர் காத்தவராயன் சிலிக்கான் பார்த்து என்னடா தன்னப் போல என்னவோ பேசிட்டு இருக்க சத்தமா எங்களுக்கு புரியிற மாதிரி பேசு நீ இல்ல போர்ஜரி பண்ண வந்து இருக்கியா? நீ நெஜமாலுமே மந்திரவாதி தானே..

நீங்க எல்லாம் யாரு ஒரிஜினல் அமைச்சர்களா இல்ல ஒரிஜினல் ஆம்பளைங்களா எனக்கு என்னவோ உங்கள எல்லாம் பார்த்தா வித்யாசமா தெரியுது நீங்க எங்க ஆறு விரல் ஆண்டவரே நீங்களும் ஆம்பளைய இல்லையா?

டேய் வந்த வேலை என்னவோ அதை விட்டுட்டு என்னடா தப்பு தப்பா உளறிட்டு இருக்கிற வந்தேன்னு வச்சுக்கோ அப்படியே கடிச்சு துப்பிருவேன்.

ரொம்ப நாளா கறி திங்காம இருந்திருப்பார் ஒருவேளை தெரு நாயா இருக்குமோ? தெருநாய்களும் நிறைய சுத்திட்டு இருக்குது .

தெரு நாய் உருவத்தில் வந்திருக்குதோ? சரி ஒரு வேலை பேய் எல்லாம் அமைச்சர் உருவத்தில் வந்திருக்குதோ? அதுதான் கடிக்கிறேன் கோடிக்கிறேன் சொல்கிறதே தெரியாம வந்து சிக்கிட்டேனே என்று தன்னுடைய அசிஸ்டன்ட் மறிக்கான் என்னடா நீ தான் கூப்பிட்டு வந்த என்ன ஆனா இங்கேயும் இப்படி பொலம்ப வைச்சு விட்டுட்டாயே நான் வீடுவீடாய் போய் ஏதாவது சொல்லி காசு வாங்கி வயித்தைக் கழுவிட்டு இருந்தான்டா பெரிய பார்ட்டி மாட்டி இருக்குதுன்னு கூப்பிட்டு வந்திங்கனை சிக்க வச்சு விட்டுட்டியேடா அந்த ஆளுகளை பாரு வேடிக்கை பார்க்கிறானுங்க.

இங்கேயே நம்ம வைத்திருக்கிற எலும்பு கூடு நாம சொல்றத கேக்காம சுத்தி சுத்தி சிரிக்குதடா இப்ப நான் மந்திரவாதியா யாரு மந்திரவாதி ஒன்னுமே தெரியலையே.

அங்கே இருந்த அமைச்சர் காத்தவராயன் டேய் ஒழுக்கமா இங்க இருக்கிற பேய்கள் எல்லாம் முடுக்கி விடு இல்லாட்டி நீயும் பேயா மாற்றிடுவேன். நானும் போன போது நீ பண்றதுல வேடிக்கை பார்த்து இருந்தால் அதெல்லாம் எதுக்குடா சுத்தி முன்னே சுத்தி பறந்துட்டு இருக்குது.

அது எனக்கு தெரிஞ்சா அப்புறம் என்னங்க நீங்க சொன்னீங்க நிறைய பணம் கொடுப்பீங்கன்னு வந்தா ஆனா பேய் என்னை விட ரொம்ப சக்தி வாய்ந்ததுங்கோ?

அதை எப்படிடா அது உன்ன விட சத்தி வாய்ந்ததுன்னு உனக்கு தெரிஞ்சது.

அது எங்க காதுக்குள் வந்து சொல்லுதுங்கோ நீங்க எல்லாம் என்னமோ மாதிரி இருக்கீங்களா ?

என்னடா பேசிட்டு இருக்குற நீ என்னமோ நேரில் பார்த்த மாதிரி பேசுற நீ .

என்ன காமிங்க சாமி நேரில் பாத்துக்குறேன். சந்தேகம் வருதா அப்போது இருடா உன்னை வந்து பேசுகிறேன் .என்று எழுந்து வரும்போது அவர் வேட்டி கழண்டுவிட்டது.

என்னங்க உள்ள பார்த்தா சுடிதார் போட்டு இருக்கீங்க ஆறு விரல் ஆண்டவா மேலே வேட்டி கட்டிட்டு உள்ள ஊரை சுடிதார் போட்டு சுத்திட்டு இருக்கீங்க.

நீங்கெல்லாம் அமைச்சரானு சந்தேகமா இருக்குதுங்க டேய் அந்த செல்போன் எடுடா எல்லாம் போட்டோ எடுத்துக்கலாம்.

நிழலா இப்போது காத்தவராயா நீ என்ன செய்வாயோ? எனக்குத் தெரியாது.. இப்போதே நீ அரசியலில் இருந்து வெளியே வந்து விட வேண்டும். அதே போல தேவ் ஆனந்த் கல்லூரியை வாங்கும் ஆசையை நிறுத்த வேண்டும் இல்லை என்றால்?

என்ன செய்வாய்?? உனக்குத் தைரியம் இருந்தால் என் முன்னால் வந்து பேசு கோழை போல் திரையில் மறைந்து பேசுகிறாயே என்று காத்தவராயன் பெரிய புத்திசாலி மாதிரி பேசவும்.

சரியான கூத்தில் வேடம் கட்டும் கோமாளியா இருப்பான் போலவே இவன் எல்லாம் யார் அரசியலில் எப்படி தான் ஓட்டுப் போட்டு ஜெய்த்தானோ தெரியவில்லை? என்று சிலிக்கான் பேசி விட்டான். வாய் விட்டு.

இப்போது தன் கண்முன்னால் இருக்கும் சிலிக்கான் காத்தவராயனின் கோபத்திற்கு ஆளானான். ஏண்டா நாலு எலும்புத் துண்டை வைத்துக் கொண்டு பொழப்பு நடத்தும் கேப்மாரி நீ எல்லாம் என்னைப்பற்றி கமெண்ட் கொடுக்கிறாயா?

ஐயோ சாமி பாவம் பார்த்து விட்டு விடுங்க நான் உங்களைச் சொல்லவில்லை எதிர்க்கட்சி தலைவரைச் சொன்னேன்.

அது தானே பார்த்தேன் என்று தனது மீசையை முறுக்கி விட இப்போது அவரது மீசை அவரின் கையோடு வந்தது.

டேய் மந்திரத்தின் வேலையெல்லாம் என்னிடமே காட்டுகிறாயா? எப்படி என் மீசை கையோடு வருகிறது.

சிலிக்கான் எப்படி நான் சொன்னேன் தானே உன் ஆறுவிரல் ஆண்டவனை இப்போது அலற விடுகிறேன் பார் என்று அவர் பேசும் போது இப்போது கரகரவென்ற குரல் மாறி கீச்சுக்குரல் பெண் குரல் வரவும்.

காத்தவராயனுக்கு அதிர்ச்சியானது. இது என்ன நம் குரல் வேற மாதிரி கேட்கிறது. அவருடைய உடை ஏற்கனவே மாறி இருந்தது. மீசை கையோடு வந்து இருந்தது. குரலும் மாறி விட சந்தேகத்தில் தன்னைக் குனிந்து பார்த்தார்.

பார்த்தவரின் கண் வெளியே வந்து விடும் அளவிற்கு இருந்தது. அவரது உருவம் முழுவதும் பெண் போல் மாறி இருந்தது. தலை மட்டும் தான் சொட்டை மத்தபடி. அவர் உருவம் மாறி விட்டது.

அவருடைய அல்லக்கைகள் எல்லாம் டேய் செமையா கவர்ச்சியா இருக்கிறாய் என்று இப்போது அவரைத் தான் என் கூடப் பெட் சேர் செய்ய வேண்டும் என்று துரத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அங்கே இருந்த மற்ற நிழல் பேய்களுக்கு இது செமயா இருந்தது. உண்மையில் நிழலா இப்போது மகிழ்ச்சியாக இருந்தது. தான் இத்தனை ஜென்மமாய் நிழலாய் நிம்மதி இல்லாமல் சுத்தியதிற்கு இன்று ஆறுவிரல் ஆண்டவன் என்ற பட்டப் பெயர் வைத்துக் கொண்டு சுற்றியவனை அலற வைத்து விட்டதே.

இந்த ஐடியாவை கொடுத்ததே தேனருவி தான் நிழலாவிற்கு. நிழல் தான் சொல்லி இருந்ததே பல நூற்றாண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்த கொடுமைகளை. அதனால் உன்னை அந்த நிலையில் நாசம் செய்தவர்களை அதே போல் நீயும் மாத்தி விடு எத்தனை பெண்கள் வாழ்க்கையை கெடுத்து இருப்பான்.

இப்போது அவன் எந்த பாலினம் என்று அவனுக்கே தெரியாது. சிலிக்கான் தான் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அடடா நமக்குள் இத்தனை சக்தி இருக்குதா? ஆம்பளைய பொம்பளையா மாற்ற முடியுமா? இது நல்ல பிஸினஸ் ஆக இருக்கும் போலவே.. பேசாமல் இதே தொழிலா செஞ்சா நாமளும் தனியா ஒரு தீவு வாங்கி உல்லாசமா வாழலாம்.

அடப் பிதுக்குளி நிழலா செய்த வேலையை நீ செய்ததா நினைத்து ஏதாவது செய்து போலீஸில் சிக்குனாய் அப்புறம் ஜல்சா வா அதெல்லாம் இல்லை
களிஜா தான் என்று நிழல் அவன் காதுக்குள் சொல்லியது.

மறக்கான் எனக்குள் ஒரு சக்தி வந்து விட்டது. புதுசா ஒரு குரல் என் காதில் கேட்கிறது. அது கண்டிப்பாக நம்ம ஜக்குவான் குரல் தான் இருக்கும் என்று சிலிக்கான் சொல்லும் போது அவனது வாய் திக்கித் திக்கி கோணவாயாக மாறி விட்டது.

என்னடா என் வாய் தனியாக பறந்து போகுது என்று சொல்லும் போது அது ஏரோப்ளேன் போவதற்கு காசு வேண்டும் அது தான் தனியாக பறந்து போகுது என்று ஒரு அப்ரண்டீஸ் சொல்லவும்.

நிழலா தான் தன் நாட்டாமை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நான் இனி தேர்தலில் நிற்கப் போகிறேன் என்று சொல்லி சிரித்தது.

சிலிக்கான் தலையைச் சுற்றி நிறைய பட்டாம்பூச்சிகள் பறந்தது. ஐயோ இது என்ன தெரியாமல் வந்து இந்த இடத்தில் மாட்டிக் கொண்டோம் என்று இப்போது
வந்தவழியே வெளியே ஓடி விட்டான்.

நிழலா எல்லாம் இப்போது குரூப் பாடல் போட்டு விட்டு டான்ஸ் ஆடுகிறது அமைச்சர் காத்தவராயனைப் பார்த்து..

கெட்டப்ப மாத்தி செட்டப்ப மாத்தி வெள்ளி வெள்ளி பீட்டு..

காத்தவராயன் உடனே ஆ... ஆ... ஆ.. ஹ.. ஹ... என்று சில்க் ஸ்மிதா மாதிரி கண்ணை வைத்துக் கொண்டு கவர்ச்சி டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டார்.

அவருக்கு போதை ஏறிபோச்சு என்று பாடிக் கொண்டு ஆடியதில் அவருக்கு தலை சுற்றி கீழே விழுகவும் தூக்குடா இன்றைக்கு விடிய விடிய சிலுக்கியை சிவக்க வைத்து விடலாம் என்று அவருடைய அல்லக்கைகள் அப்ளிக் கொண்டு ஓடி விட்டது..



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top