Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 351
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 72
பாகம் - 72
பூவிழிக்கு மனசுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அண்ணி நீங்க சூப்பரு எப்படித்தான் நேரம் பார்த்து அம்மா கிட்ட சொன்னீங்களோ??
அடடா என் கொழுந்தியாவிற்கு தான் எத்தனை ஆசை உனக்கு கார்முகிலனைப் பிடிக்குமா?
பூவிழி வெட்கத்தில் முகத்தை மூடவும்.
பார்றா சின்னப் பிள்ளைனு நினைச்சா எல்லாம் காதல் படுத்தும் பாடு என்று சொல்லி சிரித்தவர். வாங்க இரண்டு பேரும் என்று சமையல் அறைக்குள் அழைத்துச் சென்று கடகடவென அவர்களுக்கு ஆளுக்கொரு வேலையைக் கொடுத்துக் கொண்டு மதிய சமையலை செய்து முடித்தார்.
அண்ணி நீங்கள் என்ன இவ்வளவு வேகமாக அதுவும் சுவையா சமைக்கிறீங்க என்று தேனருவி இப்போது நித்யா செய்து வைத்து இருந்த குலோப்சாமூன் எடுத்து முழுங்கிக் கொண்டே இந்த மெதுவடை செம சூப்பர் என்று அதையும் ஒரு பிடி பிடித்தாள்.
தேனருவி மாப்பிள்ளை தனியாக உட்கார்ந்து இருக்கிறார். அவரை
அழைத்துக் கொண்டு போய் வீட்டைசீ சுத்தி காண்பி என்று சொல்லவும்.
என்னது நானா? போங்க அண்ணி எனக்குப் பயமாக இருக்கிறது.
ஆமாமா நீ அவரைக் கண்டு பயப்படுவதை நான் இல்லை யாருமே நம்ப மாட்டாங்க போடி என்று அவளைத் தாட்டி விட்டு விட்டு பூவிழி உனக்கு கார்முகிலனைப் பிடிக்குமா? நான் உன் மனசை அறியாமலே அத்தை கிட்டச் சொல்லி விட்டேன் என்று மறுபடியும் கொஞ்சம் அடி
மனதில் இருக்கும் ஆசையை தெரிந்து கொள்வதற்காக கேட்டார்.
அண்ணி இப்போது தான் என்னிடம் கேட்டீங்க மறுபடியும் கேட்கிறீங்க அது தான் எதுக்கு மறுபடியும் கேட்கிறீங்க.
சும்மா தெரிந்து கொள்ளத்தான். இதோ அவனும் அவனுடைய வருங்காலமும் இருக்கும் போட்டோவை என்று அவரின் செல்லில் இருக்கும் போட்டோவைப் எடுத்துகீ காட்டவும்.
யாருடைய வருங்காலம் அண்ணி ஏதாவது ஜோதிடம் பார்க்கும் வேலை செய்கிறீர்களா? ஆமாம் அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கிறதா?
நீ யாரு டி என்பதைப் போல் பார்த்த நித்யா ஆமா இந்தப் பெண் யார் என்று உனக்குத் தெரியுமா?
பூவிழி பதட்டமாகத்தான் அந்தக் கைப்பேசியை வாங்கிப் பார்த்தாள். அந்தப் போட்டோவையே ஆசை தீரப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
பூவிழி என்ன போட்டோ பார்த்து விட்டு அதுக்குள்ளேயே மூழ்கி விட்டாயா? ஏன் ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கிறதா?
அண்ணி இது எப்படி என் போட்டோவும் அவர் போட்டோவும் அது உங்களுக்கு எப்படி கிடைத்தது.
எப்படியோ? கிடைத்தது.
அண்ணி ப்ளீஸ் சொல்லுங்க இதை நான் என் செல்லுக்கு காஃபி செய்து கொள்கிறேன் என்று அதை தனது செல்போனுக்கே அனுப்பினாள்.
அண்ணி நீங்கள் சொல்லவே இல்லை. அது நான் அன்று தேனருவிக்கு நிச்சயம் செய்யும் போது கோவிலில் உன்னையும் கார்முகிலன் இருவரையுமீ தனித்தனியாக எடுத்தப் போட்டோவைத் தான் நான் எடிட் செய்து இது போல் வைத்து உள்ளேன். ஏன் அழகா இல்லையா?
அண்ணி செமயா இருக்கிறதுங்க. நிழலைப் பார்த்து ஏன் ஏங்கிட்டு இருக்கிறாய்? இன்னும் கொஞ்ச நேரத்தில் நிஜமே வந்து விடுவான்.
அண்ணி முகிலன் வருவாரா? என்று பூவிழி கேட்கவும்.
தெரியலை வந்தால் தான் தெரியும்.. உன்னிடம் போன் இருக்கிறது தானே கேட்டு பாரு அத்தனை ஆசை மனதில் வைத்துக் கொண்டு தயக்கமென்ன கொழுந்தியா?
போங்க அண்ணி ரொம்ப கிண்டல் செய்கிறீங்க நீங்க.
உன் கூட விளையாடமல் யார் கூட விளையாடுவது என்று நித்யா சொல்லவும்.
அப்போது வெளியே கார் வரும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அண்ணி அண்ணா வந்து விட்டாங்க என்று பூவிழி சொல்லி விட்டு இப்போது தனது பெரியம்மா பையனிடம் ஓடினாள்.
அண்ணா நல்லா இருக்கிறீர்களா? இப்போது தான் அண்ணி சொன்னாங்க உங்க அண்ணா வந்து விடுவாங்க என்று..
பூவு உன் அண்ணி அது மட்டும் தான் சொன்னாங்களா? என்று இப்போது அவர் நித்யாவைப் பார்க்கிறார்.
நித்யா கண்ணாலே சைகை காண்பிக்கவும்.. அதைப் புரிந்து கொண்டவர். சித்தி எனக்கு மிகவும் தெரிந்த குடும்பம் தான் விஸ்வநாதன் குடும்பம் அவுங்க மனைவி பெயர் மலர்விழி அவுங்க பையனுக்கு ரொம்ப நாளா பெண் தேடிக் கொண்டு இருக்கிறாங்க.
என்னிடம் ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்க என்று சொன்னார். நமக்கு உடனே நம் பூவிழி தான் நினைவுக்கு வந்தா அது தான் அவளைச் சொன்னேன்.
இப்போது நான் கம்பெனியில் இருக்கும் போது நித்யா எனக்கு அழைத்துச் சொன்னா அது தான் நான் அவர்களை வரச் சொல்லி இருக்கிறேன். இன்றைக்கு பார்க்கலாம். பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்து விட்டது என்றால் மேற்கொண்டு பேசலாம்.
கண்ணு நீ எதுக்கு என்னிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறாய்? நீ யாரு என் அக்கா பையன் என் பையன் மாதிரி தான் உன் தங்கச்சிகளுக்கு நல்ல இடம் என்று உனக்கு பிடித்தது என்றால் பார்த்து செஞ்சு போடலாம்.
சரிங்க சித்தி அவுங்க நம் வீட்டிற்கு வெளியே தான் காரில் காத்திருக்கிறார்கள். நான் அவுங்களுக்கு அழைத்துச் சொல்கிறேன் இப்போது வந்து விடுவார்கள்.
எதுக்கு வெளியே நிற்கிறாங்க உடனே வரச் சொல்லு சபரி என்று யசோதா சொல்லவும். சரிங்க சித்தி என்று இப்போது சபரிநாதன் வெளியே சென்று தனது நண்பர் குடும்பமான விஸ்வநாதன் தம்பதிகள் அவர்களை உள்ளே அழைத்து வந்தார்.
நித்யா அவர்களை வாங்க வாங்க என்று அழைத்து உள்ளே அமர வைத்தார். தேவ் ஆனந்த் அவர்களுக்கு வணக்கம் வைக்க உள்ளே வந்த கார்முகிலன் அண்ணா என்று அவனிடம் கை கொடுக்க.
யசோதா கமலம் இருவரும் வந்து இருப்போருக்கு வணக்கம் வைக்க.. சபரிநாதன் இது என் சித்தி இவுங்க இருப்பது பூவரசங்கோட்டை இவர் தான் முதல் பொண்ணுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை தேவ் ஆனந்த்.
கே. வி குரூப்ஸ் கேள்விப்பட்டு இருப்பீர்களே அது இவுங்களோடது தான் தேவகோட்டை ஜமீன்தார் என்று சொல்லவும் விஸ்வநாதனுக்குத் தான் ஒரு மாதிரியாக ஆகி விட்டது.
பெரிய ஜமீன்தார் பையனுக்கு முதல் பெண் கொடுக்கிறார்கள். நம் பையனுக்கு சின்னப் பெண் கொடுப்பார்களா?
அவர் தயக்கத்தைப் போக்கும் வகையில் தேவ் ஆனந்த் பேச ஆரம்பித்தான். எனக்கு கார்முகிலனை முதலிலேயே தெரியும். நானே அத்தையிடம்
பூவிழிக்கும் மாப்பிள்ளையாக பூவிழியைப் பார்க்கலாம் என்று சொல்லலாம் நினைத்து இருந்தேன். அதற்குள் அக்கா அத்தையிடம் சொல்லி விட்டார்கள்.
பூவிழியிடம் பழச்சாறு கொடுத்து அனைவருக்கும் கொடுக்கச் சொன்னாங்க நித்யா அண்ணி..
வீட்டில் இருந்து வரும் போது தாவணி பாவாடையில் வந்தவளை இப்போது நித்யா தன்னிடம் இருக்கும் ஒரு சாப்ட் சில்க் பட்டுச்சேரியை பூவிழிக்கு கட்டி விட்டு இருந்தாங்க.
அரக்கு கலரில் தேவதையாக வந்து நின்றாள் பூவிழி.. கார்முகிலன் பார்வை அவளையே மொய்த்தது. அவனுடைய அப்பா அம்மா இருவருக்கும் பொண்ணு ரொம்பப் பிடித்து விட்டது.
கார்முகிலன் முகத்தைப் பார்த்தே பையன் சிலை மாதிரி ஆகி விட்டான். அவனுக்கும் பிடித்து விட்டது என்று இப்போது பெரியவர்களுக்கு ரொம்ப சந்தோசமாகப் போய் விட்டது.
கார்முகிலன் இப்போது பூவிழி கூடக் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்லி விட்டான்.
தேனருவி தான் இதற்கு முன்னால் பேசாதது போல் தான் நடந்து கொள்கிறாரே யப்பா செம்ம நடிப்புடா என்று இப்போது தேவ் ஆனந்த் பார்க்க.
அவனோ இவள் பார்ப்பாள் என்று தெரிந்ததால் அவளைப் பார்த்து கண் அடித்து வாடி நாமும் கொஞ்சம் தனியாகப் பேசலாம் என்று அவனின் இதழைத் தொட்டுக் காண்பித்தான். அப்புறம் அவளுக்கு காலையில் அறைக்குள் நடந்தது நினைவுக்கு வந்து விட்டது.
சரிங்க சம்மந்தி ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. திருமணம் எப்போது செய்யலாம்.
ஒரு மூன்று மாசம் போகட்டுங்களே.. ஏன் என்றால் அடுத்த வாரம் பெரிய பொண்ணுக்குத் திருமணம் அது முடித்து விட்டு தான் சின்னவளுக்கும் செய்யலாம் என்று நினைக்கிறேன்.
இன்றைக்கு நான் சில பொருட்கள் தான் வாங்க வந்தோமீ. வந்த பிறகு தான் மருமகள் சொன்னாப்படி அதனாலீ நான் இன்னமும் பெரிய சம்மந்தி அவர்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை.
இத்தனை நாட்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்தேன். இனிமேல் சம்மந்தி குடும்பத்தாரிடம் எதுவாக இருந்தாலும் கேட்டு விட்டு தான் முடிவு சொல்லோனும். அது தானுங்க மரியாதை.
அப்படீன்னா எங்கள் பையனுக்கு உங்கள் பொண்ணை அவுங்க சம்மதிக்கவில்லை என்றால் கொடுக்க மாட்டீங்களா? என்று மலர்விழி கேட்கவும்.
அப்படி எல்லாம் நான் சொல்லவரவில்லைங்க அண்ணி அது தான் சபரிநாதன் சொன்ன பின்னால் தட்டிக் கழிக்கும் எண்ணமில்லை.. திருமணம் செய்யத் தான் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்.
திருமணத் தேதி குறிக்கும் போது அவர்களும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தான் சொல்ல வந்தேன்.
சரிங்க சம்மந்தி நான் கூடப் பயந்து விட்டேன்.
கார்முகிலன் தேவ் ஆனந்த் தங்கள் ஜோடிகளோடு அவர்கள் பேச்சில் கலந்து கொண்டனர்.
நிழலா பேய் தன் சகாக்களுடன் இப்போது அமைச்சர் காத்தவராயன் வீட்டில் தான் சுற்றிக் கொண்டு இருந்தது.
என்ன? நம்ம நாட்டாமை பேய் எதுக்கு இவர்களுக்குத் தான் ஆசிட் ஆப்ரேஷன் செய்து விட்டாச்சு மறுபடியும் இங்கே அழைத்து வந்து இருக்குது.
அடடா புதுசா வந்த பேய்கள் நச்சரிக்காமல் கொஞ்ச நேரம் அமைதியாக இருங்களேன்.
நிழல்கள் வைத்து இந்தப் பங்களாவில் ஏதோ சாகசம் செய்ய வந்து இருக்கிறோம்.
ஆமா அப்படி என்ன சாகசம் செய்வது. விவசாயிகள் சாகுபடி செய்வதை இந்த அரசியல்வாதிகள் எதையும் அதற்கான விலையை நிர்ணயம் செய்து வாங்குவதில்லை என்று நிழல்கள் ஒரு டாப்பிக் பேச.
அமைதியாக இருந்தீங்கனா தப்பித்தீங்க இல்லாட்டி நாட்டாமை தன் பவரை உங்க மேலே விட்டது என்றால் ஆளுக்கொரு மூலைக்குப் போய் விடுவீங்க.
டேய் அங்கே பாருடா நிழல் உலக தாதா வருகிறான் என்று ஒரு நிழல் சவுண்ட் விட.. இப்போது காத்வராயன் ஆவிகளிடம் பேசும் ஒரு மந்திரவாதியை அழைத்து வந்தான்.
டேய் அங்கே பாருடா கொசுவர்த்தி மண்டையன் வருகிறான்.
ஆமாண்டா நம்ம கல்லறைத் தோட்டத்தில் லேப்ல் வைத்து இருந்து எவும்புக்கூடு முதலில் வாடகைக்கு எடுத்துட்டுப் போனாங்களே பரதேசி அவுங்க தானேடா இதுவரைக்கும் ஒரு தேவனை கூட கட்டவே இல்லை.
சிலிக்கான் தானே அவன் பேர் எத்தனை சடை பின்னிப் போட்டு இருக்கிறான்.
அவனின் சடையில் தூரி விளையாண்டது அப்ரண்டீஸ் நிழல்கள்.
சிலிக்கான் உடனே அமைச்சரே நிறைய காத்துக் கருப்பு இருக்குது. கொஞ்சம் செலவாகுமே பரவாயில்லையா?
அவர் முறைக்கவும். இப்போது சிலிக்கான் ஆவிகளிடம் பேசும் மொழியை..
னைனை னை க்கும் பக்கும் ச்சுக்கும் சக்கும் கிக்கும் எக்கும் பக்கும் மக்கும் சுக்கும் நைநை நொய் நெய் என்று வாயில் வந்ததை உளறவும், அங்கே நிறைய இருந்த நிழல் பேய்கள் சிரிக்கும் சத்தம் அந்தக் கட்டிடமே அதிர்ந்தது.
உண்மையில் சிலிக்கான் சக்தி வாய்ந்த மந்திரவாதி என்று காத்தவராயன் நினைத்து இருக்க ஆனால் உண்மையில் அவன் பேசியதைக் கேட்டு தான் நிழல்கள் சிரித்தது.
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
தொடரும்...