Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 349
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 70
பாகம் - 70
தேனருவி சீக்கிரம் குளித்து ரெடியாகுடி என்று யசோதா சமையலறையில் இருந்து சத்தம் போட்டார்.
அது எல்லாம் காதில் விழுந்து விடுமா அவள் தூக்கத்தில் கூட தேவ் ஆனந்த் தான் கனவில் கூட ஒரு பெரிய காட்டிற்குள் அருவியில் அவளும் அவனும் மட்டும் குளிப்பது போலவும். அதில் தேவ் ஆனந்த் சில்லென்று ஓடும் தண்ணீரை அவள் மேல் ஊற்றி விடுவதும்.
தேனருவி நீயே ஒரு அருவி மாதிரி தான் இருக்கிறாய்? இதில் இந்த அருவியில் நீ குளிக்கும் போது இந்த அருவியில் தேனருவி ஆகி விடும் டி. நாம் வேண்டும் என்றால் இந்த மலையருவியை தேனருவி என்று பெயர் மாத்தி வைத்து விடலாமா?
அவள் எங்கே பேசும் நிலையில் இருந்தால் தேவ் ஆனந்த் அவளோடு குளிக்க இழுத்துச் சென்றதுமே ஆள் ப்ளாட் பின்னே இருக்காதா? தங்கள் வகுப்பில்
அத்தனை பேரும் ஜலக்கீரிடை வளர்த்தார்கள் ஆனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ள தான் எத்தனை தவம் செய்து இருக்க வேண்டும் கனவில் கூட தேவ் ஆனந்த் தான் எந்த நேரத்திலும் அவளுக்கு.
கனவில் இருந்தவளின் போன் அடித்தது. தூக்கத்திலேயே கையை விட்டு துலாவி போனை எடுத்து யார் என்றே பார்க்காமல் ஆன் செய்து காதில் வைத்தவள் பதில் எதுவும் பேசாமல் இருக்கவும்.
ஹனிபால்ஸ் என்று தேவ் ஆனந்த் குரல் கேட்டதும்.
ம்ம்ம் நெசமாலுமே இந்த அருவிக்குப் பெயர் ஹனிபால்ஸ் என்று வைத்து விட்டீங்களா?
ஆமாம் டி என் பொண்டாட்டி.. உனக்கு அதிலென்ன சந்தேகம்.. தேனருவி நீ எனக்கு எப்போதும் ஹனிபால்ஸ் தாண்டி நீ அப்படி தானே என்னிடம் காட்டிலே இருக்கும் என்று முதன்முதலில் சொன்னாய்? அதை மறக்க முடியுமா??
எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க உங்க கூட இப்படி யாருமே இல்லாத இடத்தில் இந்த ஹனிபால்ஸ் அருவியில் குளிக்கிறது செம பீல் தெரியுமா?
ஹனிபால்ஸ் நீ இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?
நான் உங்கள் கை அனைவில் தான் உங்களோடு பால்ஸில் குளித்துக் கொண்டு இருக்கிறேன்.
உண்மையாகவே நாம் சேர்ந்து குளிக்கிறோமா? அது உனக்கு எப்படி தெரியும்.
நான் தான் உங்க கூட நிற்கிறேனே உங்களுக்குத் தெரியவில்லையா??
ம்ம் தெரியுது..
அப்புறம் எதுக்கு கேள்வி கேட்கிறீங்க?
அதுவா சும்மா தெரிந்து கொள்ளலாம் என்று தான். உனக்கு குளிர் அடிக்கவில்லையா? தண்ணீரில் நனையும் போது..
ம்ஹூம்.. அது தான் நீங்கள் இருக்கிறீர்களே பக்கத்தில் அதுவும் கையை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் என் நாபிக்கமலத்தில் உங்கள் விரல் தீண்டும் போது நான் சிலிர்த்து அடங்குகிறேன் உங்கள் கை அனைவில்.
தேவ் ஆனந்த் கண்டுகொண்டான். அவனோட ஹனி கனவில் தான் உலாதிக்கொண்டு இருக்கிறாள் என்று.. ஹனி என்று ஹஸ்கி வாய்சில் நான் இப்போது அங்கே வருகிறேன். இரண்டு பேரும் சேர்ந்து ஒன்றாக குளிக்கலாமா?
இப்போதும் இரண்டு பேரும் ஒன்றாகத்தானே குளிக்கிறோம்.
குல்பீ அது கனவுடி என்று எப்படி சொல்வது. அதனால் கொஞ்ச நேரம் கொஞ்சலாம் என்று. பொண்டாட்டி எனக்கு ஒரு முத்தம் கொடுடி.
ம்ஹூம் நான் மாட்டேன் எனக்கு வெட்கமா இருக்கிறது.
நான் அங்கே வந்தேன் உன்னை அப்படியே புரட்டி போட்டு மேலே பாய்ந்து விடுவேன். ஆனால் அத்தை பூவிழி எல்லாம் இருக்கிறார்கள். இன்னும் பத்து நாள் பொறுடி மாமன் உனக்கு பல வித்தைகள் காண்பிக்கிறேன்.
நீங்கள் என்ன சர்க்கஸ் நடத்துகிறீர்களா? வித்தை காண்பிக்க என்று இப்போது சிரித்தாள். அப்படியே கொஞ்ச நேரத்தில் மாமா என்று கொஞ்சிப் பேச ஆரம்பித்து விட்டாள்.
இவ பேசுவதைப் பார்த்தால் பத்து நாட்கள் நம்மை சோதிக்காமல் இருக்க மாட்டாள் போல் இருக்கிறதே.. சரி இனி அவளிடம் விளையாட்டு வேண்டாம் என்று வாத்தி ரூல்ஸ் போட ஆரம்பித்து விட்டார்.
தேனருவி இன்னும் தூங்கிட்டு இருக்கிறாயா? காலையில் எத்தனை மணிக்கு எழுவாய் முதலில் உன் பழக்கத்தை எல்லாம் மாற்ற வேண்டும்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அங்கே இருப்பேன். அதற்குள்ளாக குளித்து ரெடியாக இரு என்று சொல்லவும்.
நான் எல்லாம் குளிச்சாச்சு என்று சொன்னாள்.
எப்போது அது தான் உங்களோடு இப்போது தான் அருவிக்கரையில் குளித்தோம் அதை மறந்து விட்டு என்னை மறுபடியும் குளிக்கச் சொல்லி திட்டுகிறீங்க நீங்க பெரிய படிப்பு படித்து பி. ஹெச் டி வாங்கி இருக்கலாம் அதற்காக சும்மா கையில் குச்சியை வைத்துக் கொண்டு என்னை மிரட்டிக் கொண்டே இருப்பீர்களா? என்று பீர் பாட்டில் பொங்குவது போல் தேனஸ் பொங்கி விட்டது.
இருடி நேரில் வந்தேன் வைச்சுக்கோ அந்த உதடு இரண்டும் தந்தியடிக்கும் அதை அப்படியே பிச்சு திண்றுவேன் என்று மிரட்டவும்.
நீங்க பொய் சொல்கிறீங்க நான் நம்ப மாட்டேன். அப்படியே பேச்ச மாத்தாதீங்க நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை.
நான் பொய் சொல்கிறேன். மேடம் அப்படியே உண்மை விளம்பி என்னா வாய் என் பொண்டாட்டிக்கு தங்கம் எழுந்து கொள்மா நாம் இன்றைக்கு மதுரைக்கு போக வேண்டும் என்று தேவ் ஆனந்த் சொல்லவும் தான் நம் பால்ஸ்க்கு சுயநினைவு வந்தது.
ஆமா நாம் இரண்டு பேரும் ஒன்றாக இருக்கிறோம். உங்கள் குரல் மட்டும் கேட்கிறது உங்களை என் பக்கத்தில் காணோமே நீங்கள் அதுக்குள்ளே
எங்கே போனீங்க என்று அழுதுவிடுபவள் பேசவும்.
அடியே லூசு நான் எங்கள் வீட்டில் இருக்கிறேன். இன்னும் நம் இருவருக்கும் திருமணம் நடக்கப் பதினைந்து நாட்கள் இருக்கிறது.
நீங்கள் பொய் சொல்கிறீங்க இப்போது தானே என் இடுப்பை பிடித்துக் கொண்டு சில்மிஷம் செய்து கொண்டு இருந்தீர்கள். ஒரு கல்லூரிக்கு பேராசிரியராக இருந்து கொண்டு இத்தனை பொய் பேசுகிறீங்க அதுவும் விட்டவிடியாள..
அம்முனிக்கு அதெல்லாம் தெரியுது ஆனால் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பது தான் தெரியவில்லையா??
அப்போது தான் யசோதாவும் வந்து அவளின் அறையில் வந்து அடியே தேனு உன்னை எத்தனை நேரமா எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். எருமை மேல் மழை பெய்தது போல் காது ஓட்டையில் கூட ஏறாமல் படுத்துக் கொண்டு இருக்கிறாயா? என்று வசைபாட.
என்ன? அம்மா குரல் கேட்கிறது. அப்படீனா வாத்தி மாம்ஸ் எங்கே காணம் ஒரு வேளை அம்மா வந்ததைப் பார்த்து கட்டில் அடியில் இல்லை கபோர்டில் போய் ஒளிந்து இருக்கிறாரோ?
எப்படியோ? அம்மாவை சமாளித்து அனுப்பி விட வேண்டும் என்று.. அம்மா ஏம்மா இப்படி என்னைத் திட்டுகிறாய்? நான் இன்னும் பதினைந்து நாட்கள் தானே இங்கே இருப்பேன். அதனால் நம் வீட்டில் இருக்கும் வரைக்கும் உன் பாசமான பெண்ணைத் திட்டாதேமா எனக்கு அழுகை வருகிறது. நானே உங்களையும் பூவிழியையும் பிரிகிறதை நினைத்து இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டே இருந்தேன். இப்போது தான் தூங்கினேன். அதற்குள் நீ எழுப்பி விட்டாய்? போ மா நீ என்று தேனருவி வாய் ஓயாமல் பேசவும்.
ஆமாண்டி நீ விடியற்காலையில் தான் தூங்கினாய் என்று சொல்லாதே உன் வாயில் ஜலவாய் ஒழுகி இருப்பதிலே தெரிகிறது. நீ விடிய விடிய கும்பகர்ணனின் வாரிசாய் தூங்கி இருப்பாய் என்று இன்று மதுரை போக வேண்டும். மாப்பிள்ளை இன்னும் அரை மணிநேரத்தில் வந்து விடுவார். ஒழுக்கமா எழுந்து குளித்து ரெடியாகு மணி இப்பவே ஏழு ஆகி விட்டது என்று சொல்லிக் கொண்டு கதவை சாத்திச் செனாறார்.
தேனருவி எழுந்தவள் போனைக் காதில் வைத்துக் கொண்டே எங்கம்மா போய் விட்டாங்க வெளியே வாங்க மாம்ஸ் என்று கட்டில் அடியில் குனிந்து பார்த்தாள்.
என்ன காணவில்லை என்று அவளாகவே சொல்லிக் கொண்டு
இப்போது கபோர்டு திறந்து பார்த்தாள் இதென்ன எங்கேயும் காணவில்லை. குரல் மட்டும் வருகிறது. இந்த வாத்தி மாம்ஸ் ஏதாவது லேகியம் ஏதாவது முழுங்கி உடல் மறைந்து விட்டதோ? அது தான் குரல் மட்டும் கேட்குதோ என்று போனைக் கையில் வைத்துக் கொண்டே துலாவவும்.
இவளின் புலம்பலைக் கேட்டவன். என் செல்லம் எவ்வளவு அறிவாளிப் பொண்டாட்டி தங்கம் டி காலையில் கனவு கண்டு கொண்டே எப்படி நினைவுக்குத் திரும்பியும் கூட இன்னும் போனில் பேசுவதற்கும் நேரில் ஆள் இல்லாததிற்கும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
ஹனி நான் போனில் தாண்டி பேசிட்டு இருக்கிறேன். என்று அவன் சொன்னதும் தான் தேனருவி பதட்டத்தில் கையிலிருந்த போனைத் தவறுதலாக பெட்டில் கீழே போட்டால்.
அப்போது வீடியோ கால் ஆன் ஆகவும்.. சூரை இன்னும் ப்ரஸ் கூடப் பண்ணவில்லையா? நான் குளித்து ரெடியாகி விட்டேன் இன்னும் பத்து நிமிடம் தான் உன் எதிரில் இருப்பேன்.
என்னது அப்படீனா நான் இத்தனை நேரம் கனவில் பேசுவதாக நினைத்து உங்கள் கூடத்தான் பேசிக் கொண்டு இருந்தேனா??
ஆமாண்டி ஹனிபால்ஸ் உன் இடுப்பில் நான் கை வைத்து இருந்தேனா? அது கனவில் நீ சொன்னாயா? மாமாக்கு உன் எலுமிச்சை நிற இடுப்பில் இப்போதே கை வைக்க வேண்டும் போல் இருக்கிறது. அதனால் சீக்கிரம் போய் குளித்து விட்டு தாவணி போட்டு வாடி மை செல்லப் பொண்டாட்டி.
யசோதா தேனு என்று சத்தம் போடுவதைப் பார்த்து இப்போது போனை ஆப் செய்து விட்டு குளிக்கச் சென்றாள். அங்கே போய் ஷவரைத் திறந்து விட்டதும் ஹனிபால்ஸ் நினைவு மறுபடியும் காட்டு அருவியில் குளித்தது அதுவும் தன்னவனோடு அது வந்து சிவக்க வைத்தது.
எப்படியோ குளித்து தாவணி பாவாடை அணிந்தவள் தலைவாரி பின்னலிட்டு வந்தாள்.
அவளின் அறையை விட்டு வெளியே வருவதற்கும் தேவ் ஆனந்த் வரவும் சரியாக இருந்தது.
வாங்க மாப்பிள்ளை என்று வரவேற்றவர். தேனு நீ மாப்பிள்ளைக்கு டிபன் எடுத்து வைடி நான் கமலா அண்ணி வீட்டு வரைக்கும் போய் வருகிறேன்.
அவர்கள் வெளியே சென்றதும். தேவ் ஆனந்த் அவளை அவளின் அறைக்குள் இழுத்துச் சென்றான். அவனுக்கு ஆசையைத் தூண்டி விட்டுட்டாளே ராட்சசி அதனால் ஆசையோடு மென்மையிலும் மென்மையாக இதழ் தேனை உறிஞ்சும் வண்டானான்.
தேனருவிக்கோ கனவில் நடந்ததை நினைத்துச் சிவந்து இருந்தவள். நேரில் நடப்பதில் செவ்வானமாய் முகம் சிவந்து விட்டது. மென்மையான இதழ் ஒட்டுதல் கொடுத்து அவளின் செவியை தனது பற்களால் லேசாக கடித்து விலகியவன் இப்போது நல்ல பையனாக வரவேற்பு அறைக்குள் சென்று விட்டான். பூவிழி இருக்கிறாள். யசோதா எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்குள் வரலாம் அது தான் கொஞ்சமே கொஞ்சமா தேனடைக்குச் சொந்தக்காரன் கொஞ்சம் ருசி பார்த்தான்.
தொடரும்...