Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 347
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 68
பாகம் - 68
விஜயலதா மயங்கி விழ அது தெரியாத மற்றவர்கள் அவளை ஒரு புது விதமான விலங்கு என்று நினைத்து முதலில் கயிறு கொண்டு கட்டி வைத்து பிறகு தண்ணீர் தெளிக்கலாம் என்று நினைத்து அருகில் சென்று பார்க்கும் போது தான் அது ஒரு பெண் என்று தெரிந்தது.
அங்கே இருந்த ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து ஊற்றி பார்க்க அது இந்த வீட்டுச் சின்ன மருமகள் என்று தெரிந்தது. அப்போது தான் நாம் வேற ஒரு புது மாதிரியான விலங்கு என்று அடித்து விட்டோமே அதில் இந்தப் பெண் செத்து விட்டதோ? என்று இப்போது அவர்களுக்குப் பயமானது.
அருகில் சென்றவர்கள் எதுவுமே செய்யாமல் இருக்கவும் தான் வீட்டில் உள்ள மற்றவர்கள் அங்கே சென்றனர். ஏம்ப்பா சுத்தியிலும் நின்று என்ன வேடிக்கை வேண்டிக் கிடக்கிறது. தூக்கி கொண்டு போய் பள்ளத்தில் வீசிட்டு வாங்க என்று கூறியபடியே வானதி வரவும்.
அப்போது தான் கொஞ்சமாக மயக்கம் தெளிந்து விஜயலதா கண்ணை விழித்துப் பார்க்கவும் தான் மாடசாமிக்கு மூச்சே வந்தது. ஆம் அதுவரைக்கும் கொலை கேசில் உள்ளே சென்று விடுவோம் என்று பயந்து கொண்டு இருந்தாரே.
வானதி குரல் கேட்டு கண்விழித்த விஜயலதா அடிப்பாவி என்னைக் கொண்டு போய் பள்ளத்தில் போடச் சொல்கிறாளே இவள் தங்கச்சி ஊரில் இல்லாத விலங்கு என்று சொல்கிறா இவள் பள்ளத்தில் போடச் சொல்கிறா?
ஆமா நாம அந்தக் கிழவி அறை வாசலில் தானே எண்ணெய் ஊற்றி விட்டு வந்தோம். இல்லை நானே மறந்து அந்த எண்ணெய் மீது கால் வைத்து விட்டேனா?
அருகில் வந்து பார்த்த வானதி அய்யோ இதென்ன லதா நீ இங்கே எப்படி வந்து விழுந்து இருக்கிறாய்? அதுவும் இப்படி பூரா உன் மேல் மாவா இருக்கிறது. உன்னைப் பார்த்தா காமெடியாக இருக்கிறது.
அதெப்படி எப்போது பார்த்தாலும் மாட்டுக் கொட்டகையிலேயே இருக்கிறாய்? அந்த வேலை உனக்கு ரொம்ப பிடிக்குதா? ஆனாலும் லதா உன்னை இந்தக் கோலத்தில் பார்க்க இப்போது மாமா இங்கே இல்லை.
ஏன் வானதி என்னாலே எழுந்து கொள்ள முடியலை ஒரு கை கொடுத்தா நானும் எழுந்து கொள்வேனே என்று லதா வாய்விட்டே கேட்க.
அவளின் உள்நோக்கம் புரிந்த வானதி உனக்கு கை கொடுத்து தூக்கினாள் நானும் தலை குப்புற கீழே விழுக வேண்டியது தான் என்று நினைத்தவள்.
அண்ணே அந்தக் கம்பைக் கொடுங்கள் அதைப் பிடித்துக் கொண்டு எழுந்து கொள்ளட்டும் என்று புதுசா ஒரு ஐடியா கொடுத்தாள்.
ஆமாம் பாப்பா நீங்க இதைப் பிடித்து எழுந்து கொள்ளுங்களேன். என்று கம்பை நீட்டிய மாடசாமியை முறைத்தவள். சரி இவனாவது இரக்கப்பட்டு கொடுக்கிறானே முதலில் போய் நல்லா சோப்பு போட்டு குளிக்க வேண்டும் என்று எப்படியோ குச்சியைப் பிடித்து எழுந்தவளால் கால் ஊன்றவே முடியாத அளவுக்கு வலித்தது.
ஒரு கால் தாங்கி இடுப்பை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அவள் நடந்து செல்வதைப் பார்க்கவே வானதிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
வனிதா புதுசா ஒரு விலங்கு என்று சொன்னாயே நீ அது இந்த வீட்டில் சுற்றிக் கொண்டு இருக்கும் பழைய விலங்கு தாண்டி என்று அவளின் தலையில் கொட்டியவள். உன்னால் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் பயந்து விட்டோம். கடைசியில் பார்த்தால் சரியான வடிவேலு ப்ரண்ட்ஸ் படத்தில் காமெடி சீன் இருக்குமே அது போல் தான் ஆகிவிட்டது என்று சிரித்து சிரித்து விக்கல் வந்து விட்டது.
சிவக்குமார் அறைக்குள் இருந்து வெளியே வந்தவன். ஆமா இந்நேரத்திற்கு எங்கே போனாய் எதுக்குடி சிரிக்கிறாய்?
எல்லாம் லதா அக்கா செய்து வைத்த வேலை தான்.
அவுங்க இந்த நேரத்தில் தூங்காமல் அப்படி என்ன செய்தாங்க. மறுபடியும் ஏதாவது வில்லங்கத்தை இழுத்து விடப் பார்க்கிறார்களா?
அதிலெல்லாம் இல்லை என்று விஜயலதா பருத்திக் கொட்டை புண்ணாக்கில் ஊறி நின்று கொண்டு மக்காச்சோள மாவு பூராவும் மேலே சிந்தி இரண்டு கையையும் கீழே ஊன்றி நின்றதைப் பார்த்து நம்ம வனிதா தான் பயத்தில் கத்திட்டு இருந்தா. அப்புறம் மாடசாமி அண்ணா அது கடித்து விட்டாள் என்ன செய்வது என்று தடியால் அடித்து விட்டார்கள். பிறகு தான் தெரிந்தது. அது உங்க தம்பி பொண்டாட்டி என்று சிரித்தவள், அது தான் அவுங்க தங்கச்சி சுனைனா கல்யாணமாகி அவுங்க மாமியார் வீட்டிற்கு போயாச்சு. ஆனாலும் இவுங்க அடங்க மாட்டீங்கிறாங்க.
வானதி நீயும் தானே முதலில் தேவ் ஆனந்த் எப்படியாவது உன் தங்கச்சிக்கு திருமணம் செய்து விட வேண்டும் என்று என்கூட சண்டை எல்லாம் போட்டாயே. இப்போது என்னவோ அவுங்களை மட்டும் குற்றம் சொல்கிறாய்?
நான் ஒன்றும் அவுங்களை மாதிரி கீழ்த்தரமான வேலை எல்லாம் எப்பவும் செய்ய மாட்டேன். எப்போ நீங்க என்னை வேண்டும் என்றால் ஒதுக்கி வைத்து விட்டு என் தங்கையைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னீங்களோ? அப்போதே நான் அவளுக்கு உதவுவதை நிறுத்தி விட்டேன்.
ஏய் நான் உன்னை மிரட்டுவதற்குத் தாண்டி அப்படிச் சொன்னேன். அப்படிச் சொல்லி விட்டு நான் எத்தனை தூரம் வருந்தினேன் என்று எனக்குத் தான் தெரியும். சாரி டி.. என்று வானதியை அனைத்து தோளோடு கை போட்டு அறைக்கு அழைத்துச் சென்றான்.
வானதி நானும் நீயும் இந்த பிரச்சனையை மறந்து நம் வாழ்க்கையை வாழ்வோம் என்று அவனோடு அவள் ஒன்றினாள்.
தன்னை ஒதுக்கி வைக்கிறேன் என்று சொன்ன கணவன் இப்போது ஆசையில் கட்டி அனைக்கவும் தான் வானதிக்கு எல்லை யில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.
ஒவ்வொரு வீட்டிலும் பெண்களை கொடுமை படுத்துவதை நினைத்து பயந்தவள் தன்னவனின் நெஞ்சிலே தலை வைத்து தன்னவனையே பார்த்தாள்.
என்னங்க என்னை மன்னித்து விடுங்கள் இனிமேல் உங்களுக்கு தலைக்குனிவை நான் என்றைக்கும் கொடுக்க மாட்டேன்.
நமக்கு இரண்டு பெண்கள் தான் இருக்கிறார்கள். பையன் வேண்டும் தானே நாம் நம் வேலையை அதாவது அதற்கான பிராசஸ் ஆரம்பிக்கலாமா?
போங்க அதிரா ஆதிரா எழுந்து விடுவாங்க என்று வானதி சொல்லவும்.
அவுங்க எல்லாம் அப்பா அம்மா கூடச் சென்று படுத்து விட்டார்கள். வாடி மை பொண்டாட்டி என்று இருவரும் கூடலில் திளைத்தார்கள்.
விஜயலதா எப்படி குளித்து விட்டு நொண்டி நொண்டி தனது அறைக்குள் வந்தால் நல்ல வேளை அவர் வீட்டில் இல்லை. இல்லாட்டி நான் செய்த வேலைக்கு வீட்டை விட்டு வெளியே துரத்தி இருப்பார்.
நிழலா தன் சகாக்களோடு இப்போது வனிதா அறைக்குள் சென்றது. நீ தான் என்னிடம் தப்பித்துக் கொண்டு இருக்கிறாய்? இன்றைக்கு சரியான பாடம் இருக்கிறது.
டேய் அப்சரண்டிங்களா? நான் சொல்லும் இடத்தில் போய் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வேலையைச் செய்யுங்கள் என்று நிழலா அவர்களை நாலு சன்னல் இருக்கும் இடத்திற்கு செல்ல வைத்து விட்டது.
நிழலா மட்டும் வனிதா படுத்திருக்கும் பெட் அருகில் சென்று அவள் படுக்கை விரிப்பை மட்டும் வெளியே எடுத்து அதை அவளுக்கு மேல் அந்தரத்தில் பறப்பது போல் வைத்து விட்டு அவளின் காதருகில் சென்று பாப்பா கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருடா நான் உன் அம்மா வந்து இருக்கிறேன்.
அவள் கனவு என்று நினைத்துக் கொண்டு இடது புறம் திரும்பிப் படுக்க அங்கேயும் முகத்திற்கு நேராக நின்று கொண்டு அவளின் காதுக்குள் மயிலறகை விட்டு விளையாடியது.
இப்போது விழியை விரித்து பார்த்தவள் பயத்தில் கத்திட்டு மயக்கம் போடுவது போல் ஏக்ட் விடும் போது தான் தெரிந்தது. நாலு சன்னலும் ஒன்றோடு ஒன்று திறந்து திறந்து மூடுவதைப் பார்த்தவள் அய்யோ இது என்ன நான் தூங்கும் முன் தான் எல்லா சன்னல் கதவுகளையும் அடைத்து இருந்தேன். இது எப்படி மறுபடியும் திறந்து இருக்கும்.
எழுந்தவளால் அந்தக் கட்டிலில் இருந்து நகர முடியவில்லை ஆமா அப்போது தான் பார்க்கிறாள் அவளுக்கு மேலே படுக்கை விரிப்பு அந்திரத்தில் ஒரு மந்திரவாதி போல் நின்ற நிலையில் உள்ளே ஒரு உருவம் இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.
கதவைப் பார்த்தாள் உட்பக்கமாக தாழிட்டது அப்படியே இருந்தது. அப்படீனா இது யாராக இருக்கும். ஒரு வேளை யார் நீ? படத்தில் வருவது போல் பேயாக இருக்குமோ? என்று பயத்தில் நடுங்கிக் கொண்டு ஆமா நீங்க யார்? எதுக்கு என்னைய பயப்படுத்திப் பார்க்கிறீர்கள்.
அடியே பாதகத்தி என்னைய உனக்கு யார் என்று தெரியலையா? நான் உன் அப்பத்தா தான் ரொம்ப தூரத்தில் இருந்து மேலே இருந்து விண்வெளிப் பயணம் வந்தவர்கள் செயற்கோளைப் பிடித்து தொங்கிக் கொண்டு வந்ததில் எனக்கு நாக்கு வெளியே நட்டுக்குச்சு அது தான் நம்ம பேத்தி இங்கன தான இருக்கிறாள் என்று ஆசையா வந்தா? நீ ஏன் வந்தாய் என்று கேட்கிறாயே என்று அவளின் அப்பத்தாவைப் போலவே நீட்டி முழக்கியது.
ஏய் கிழவி வந்ததே வந்தாய் கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்து இருந்தால் நான் உன்னை வைத்தே என் வாழ்க்கை துணையை சுலபமாக அடைந்து இருப்பேன். இப்போது கைக்கு எட்டாமல் வாய்க்கும் எட்டாமல் போய் விட்டது.
அடியே பாதகத்தி என்னைய வைத்தே என் தேனருவி வாழ்க்கையை சீரழிக்கப் பார்க்கிறாள். முதலில் இந்த வீட்டில் இருக்கும் கழிசடைகளை ஒவ்வொருத்தராக வெளியேற்றம் செய்ய வேண்டும். அப்போது தான் தேனருவி இந்த வீட்டில் வந்தா நிம்மதியாக வாழ முடியும்.
இப்போது அந்தப் படுக்கை விரிப்பு வனிதாவின் காலை வந்து வாரி விட்டது. ஏய் என்னைய விடு கிழவி என்னுடைய காலில் எதுக்கு இதை கட்டுகிறாய்? நான் உன்னைத் தெரியாத மாதிரி கடந்து இருக்க வேண்டும்.
பேயாக மாறியும் நீ மாறவே இல்லை என்று வனிதா சொல்லவும். ஆமாம் டி நான் கூடப் பேய் தான் ஆனால் நீ எல்லாம் கொல்லுவாய் பிசாசு அதை விட இரத்தக் காட்டேரி உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்கிறாய்.
மற்ற நிழல்கள் எல்லாம் இப்போது நிழலா கூடச் சேர்ந்து வனிதா வின் ஒரு காலில் மட்டும் துணியைக் கட்டி விட்டு அவளை இழுத்து ஊஞ்சல் போல் தலைகீழாக வைத்து அவளது காலில் ஏறி விளையாடியது.
அவளுக்குத் தெரியவில்லை தன்னைச் சுற்றி ஐந்து நிழல் இருக்கிறது என்று ஆனால் அவைகளோ? லாலி லாலி லாலி லாலி என்று பெரிய பாடிகர்கள் போல் பாடப் ஆரம்பித்து விளையாடி விட்டு அவளை மீண்டும் அதே படுக்கையில் படுக்க வைத்து விட்டு சென்றது.
தொடரும்..