• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
340
நீ உடல் நான் நிழல்
பாகம் - 61


நிழலா காத்தவராயனிடம் உன் கூட்டாளிகள் மூன்று பேரும் நாளைக்கு இங்கே இருக்க வேண்டும். ஏதாவது விடயம் வெளியே தெரிந்தது. நீ இத்தனை நேரம் நிழல் பேய் கூட கூத்தடித்தது பூராவும் நெட்டில் லீக்காகி லுக்கா வந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்து விட்டு அங்கே இருந்து மறைந்தது.

காத்தவராயன் காத்து போன பலூன் மாதிரி கீழே கிடந்தார். அடிப்பாவமே புதுசா ஒரு கிளி மாட்டி விட்டது என்ற ஆசையில் எப்பவும் நம்ம கூடவே இருக்கிற சின்ன வீடு சிங்காரியை வேற வேண்டாம் என்று சொல்லி விட்டோம்.

நான் நிழல் பேய் கூட டூயட் பாடியது வெளியே தெரிந்தால் நம் அரசியல் வாழ்க்கை போச்சு. அதற்குள் அந்த நிழலை நாம் தீர்த்துக் கட்டி விட வேண்டும்.

கொஞ்சம் உத்து நன்றாக பார்த்து இருந்தால் ஆவது அங்க அடையாளங்கள் என்று சொல்லி நம் பையன்களைத் தேடச் சொல்லலாம்.

அங்கமே இல்லாம அது சொங்கிப் போன நிழலா என்று தெரியாமல் குப்பற அடித்து படுத்துக் கொண்டு கூமுட்டை மண்டையன் திங்கிங் செய்து கொண்டு இருக்க.

தேனருவி அறைக்குள் போன நிழலா ஜங் ஜக் ஜல் என்று வடிவேல் சொல்வது போல் சொல்லிக் கொண்டு குதித்து குதித்து விளையாடியது.

கொஞ்ச நேரம் கழித்து லஜக் பஜக் என்று சொல்லி சொல்லி விளையாடியது. நிழலின் சந்தோசக் குரலில் அப்போது தான் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தாள் தேனருவி.

லூசு காலையில் ஐந்து மணிக்கு வந்து எதுக்கு லஜக் பஜக் மஜக் ஜில் ஜங் ஜக் என்று குதித்துக் கொண்டு இருக்கிறாய்? அதைப் பூரா புளியமரத்திலேயே தொங்கிட்டு வந்து இருக்க வேண்டியது தானே.

தேனருவி நேற்று என்ன நடந்தது என்று தெரிந்தால் நீ இப்படி பேசமாட்டாய்.. அது தான் இத்தனை ஆனந்தம்..

ஆனந்தம் ஆனந்தம் என்று பாட்டுப் பாட.

உன்னைய யாராச்சும் சூப்பர் சிங்கர் இல்லை ஜீ தமிழ் டி. வியில் பாட அழைத்தார்களா? சும்மா பாட்டுப் பாடிக் கொண்டே இருக்கிறாய்??


நிழல் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு நீ ஏன் தேனருவி என்னைய எப்போதும் பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறாய்? என் அருமையே உனக்குத் தெரியவில்லை.

என்னைய கனவுகளின் தோழி ஆதிரா கூப்பிட்டாக..

ஆலாமிட்டாய் அக்கா நித்யா சபரி கூப்பிட்டாக..

இன்னும் நிறைய பேர் கூப்பிட்டாக..

ஏன் இத்தோடு நிறுத்தி விட்டாய். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூப்பிட்டாக.. ரஷ்யா அதிபர் புடின் கூப்பிட்டாக என்று சொல்ல வேண்டியது தானே.

நான் தான் தேனருவியை விட்டு நான் எங்கேயும் வரமாட்டேன் என்று சொல்லி விட்டேன்.

அத்தனை பாசமா? உனக்கு அப்படி இருந்தால் நீ என்னை கிண்டல் செய்வாயா? நிழல்.

அடி ஆத்தி இது என்ன புது கூத்து கிளப்பி விடுகிறாய்? நான் உன்னை கிண்டல் செய்தேன். நீ டீச்சர் கிட்ட சிக்கிக்கிட்டு பேந்தப் பேந்த முழிக்கும் போது உன்னை வந்து காப்பாற்றி காப்பாற்றி என் தேன் ஒழுகும் குரல் கட்டைக் குரல் மாதிரி கரகரனு மாரிப் போச்சு என்று நிழல் தேனருவியிடம் வாதிட.

தேனருவிக்கு பக் என்று ஆனது. அய்யோ நிழலுக்கு கோபம் வந்ததுருச்சு அதனால் நாம் தான் கொஞ்சம் கண்ட்ரோலாக இருக்க வேண்டும்.

நிழலா நீ தான் நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்த புரவலர் என்று வாய்க்கு வந்ததை சொன்னாள் தேனருவி.

நிஜமா நான் புரவலரா தேனருவி அதுக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா?

எனக்கு எந்தப் புடலைங்காயும் தெரியாது நிழலு நீ உன் பழிவாங்கும் பட்ஜெட்டில் உதவ என்னையும் கூட்டிப் போகாமல் நீ மட்டும் போய் நல்லா எஞ்சாய் செய்து கொண்டு வந்து என்னைய கடுப்பேத்துகிறாய் காலையில் என் தூக்கத்தை கெடுத்து.

நான் கடுப்பேத்துகிறேனா? உன்னை எதுக்கு நான் கூட்டிப் போக வேண்டும் தேனருவி. உன் வாத்திக்கு என்று சொல்லிய நிழலைப் பார்த்து முறைத்த தேனருவி நான் எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுவேன். ஆனால் நீ அவரை மரியாதை இல்லாமல் பேசினாய் அப்படியே உன் குரல்வளையை கடித்து துப்பி விடுவேன்.

ஹா ஹா ஹா ஹா எனக்கு குரல்வளை எங்கே இருக்கிறது தேனருவி நான் சொல்ல வந்ததை முழுசாக கேள் அவருக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையக் கூடாது உன் விடயத்தில். காத்தவராயன் எந்த மாதிரியான கேடி என்று தெரிந்த பின்னால் உன்னைக் அழைத்துச் செல்லவில்லை என்று உனக்கு
எதுக்கு இத்தனை கோபம் வருகிறது.

காலைக்கனவில் காதல் கொண்டேன் என்று டூயட் பாடு வாத்தியார் மாப்பிள்ளை கூட அதை விட்டு இப்படி காலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு
என்னைக் கேள்வி கேட்காதே.

நிழலு நீ ரொம்ப நல்லவங்க தெரியுமா? எனக்கு ஒரு உதவி செய்கிறாயா?

இது என்னது பாப்பா ரொம்ப பம்முகிறது. எதையாவது செய்யச் சொல்லுவாளோ?

நிழலா நீ எப்படியாவது நான் இன்னும் இரண்டு மாதம் கல்லூரி செல்வதற்கு அனுமதி வாங்கித் தருகிறாயா?

ஏன் நீ தான் இப்போது கல்லூரிக்குப் போய்க் கொண்டு தானே இருக்கிறாய்?

அதில்லை அவரு என்னைய கல்லூரிக்கு வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்.

அவர் என்ன சொல்கிறாரோ அதை நீ பின்பற்று தேனருவி அவர் உன்னைய வேறு எங்காவது அழைத்துச் செல்வாரோ என்னவோ? அது தெரியாமல் நீ போய் மற்றவர்கள் முன்பு மூக்குடைத்துக் கொள்ளாதே என்று நிழல் கூறிக் கொண்டு இருக்கும் போதே தேவ் ஆனந்த் கிட்ட இருந்து போன் வந்தது.

நிழலா பார் சொல்லி வாய்மூடவில்லை அதற்குள் அழைத்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே இப்போது அழைப்பை ஏற்று காதில் வைத்ததும் தான் தாமதம்.

ஹாய் பொண்டாட்டி எழுந்திட்டாயாடா இல்லை நான் தான் போன் செய்து எழுப்பி விட்டு விட்டேனா??

அது தான் எழுப்பி விட்டாச்சே நான் இனி என்ன தான் நான் நேரத்திலேயே எழுந்து குளித்து மும்முரமாக படித்துக் கொண்டு இருக்கிறேன் என்று உங்களிடம் சொன்னால் நம்பவா போறீங்க அது தான் இல்லை.

அது நீ உன் கையில் போன் இருக்கும் போதே வாயைத் திறந்து கொட்டாவி விட்டாய் பார் அதிலேயே தெரிந்து விட்டது மை டார்லுமா.

நீங்க வாத்தியார் என்பதை அவ்வப்போது மறந்து விடுகிறேன் மாம்ஸ்.

மறக்காத மாதிரி ஏதாவது கொடுத்து விட்டாப் போச்சு. என்ன உனக்கு ஓகேவா என்று தேவ் ஆனந்த் கேட்கவும்.

மாம்ஸ் மறுபடியும் ஏதாவது டெஸ்ட் வைத்து விடாதீங்க நானே நீங்க கல்லூரி வரவேண்டாம் என்று சொன்னதும் மனக்கவலையில் தான் காலையில் இருந்து தூங்கியே எழாமல் இருந்தேன்.

வாத்தி மாம்ஸ் நான் இன்னும் இரண்டு மாதம் தானே கல்லூரிக்கு வரனேங்களே கொஞ்சம் மனசு இறங்கி வரம் கொடு ராசா.

ஹனிபால்ஸ் அதென்ன மன்மதராசா பாட்டு நியாபகம் வந்து விட்டதா அம்முனிக்கு காலையிலே..

இல்லைங்க மாம்ஸ் வீட்டில் இருந்தா ரொம்ப போர் அடிக்கும் அதுவும் யசோ என்னைய சமைச்சுப் பழகச் சொல்லி டார்ச்சர் செய்வாங்க தெரியுமா?

அது தானே ஹனி உனக்கு சாப்பிட மட்டும் தானே பிடிக்கும் சமைக்கச் சொன்னா தப்பு தானே.

நீங்களே உங்க மாமியார்கிட்டச் சொல்லுங்க தேனுக்கு படிக்க நிறைய இருக்கும். அதனாலே அவளைத் தொந்தரவு செய்யாதீங்க சொல்லுங்க மாம்ஸ் என்று இப்போது தான் எழுந்து வாயில் பிரஷ் வைத்து பல் தேய்த்துக் கொண்டு தேவ் ஆனந்த் பேசும் போது பதிலுக்கு வு போட்டுக் கொண்டு இருந்தாள்.

சரி தேனருவி குளித்து ரெடியாகி இரு நான் உன்னை வந்து பிக்கப் செய்து கொள்கிறேன். என்று சொன்னது தான் தாமதம் உண்மையாகவா சொல்கிறீங்க
இருங்க நானே என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.

ஸ் ஸ் ஆ.. என்று இப்போது ஆமா வலிக்கிறது. நீங்கள் சொல்வது கனவல்ல உண்மை தான் என்று எனக்கு வலிக்கிறது அதில் தெரிந்து கொண்டேன்.

அவளை நினைத்து சிரித்தவன். பூவிழியையும் ரெடியாகச் சொல் தேனருவி என்று கூறிவிட்டு போனை வைத்து இருந்தான்.

அவள் எதுக்கு என்று இவள் கேட்கும் முன் அவன் இணைப்பு துண்டித்து இருந்தான். பின்னர் தேனருவிக்கு விளக்கம் கொடுப்பது யார்??

கார்முகிலன் பூவிழி மேல் கொண்ட காதலை வளர்ப்பதற்கு தேவ் ஆனந்த் தேனருவி திருமணத்தைப் பயன்படுத்தி கொண்டான். பூவிழிக்கு செமஸ்டர் லீவு விட்டு இருக்கிறார்கள். அடுத்த வாரத்தில் தான் தேர்வு தொடங்குகிறது. அதனால் இன்று அவர்கள் வெளியே கிளம்புவதை சாக்காக வைத்து கார்முகிலன் தேவ் ஆனந்திடம் என்னோட ஆபீஸ் வந்து பார்த்து விட்டு பிறகு போங்க என்று அழைப்பு விடுத்து இருந்தான்.

நிழலா இவர்கள் எல்லாம் ஜோடி போட்டுக் கொண்டு கிளம்புகிறார்கள். நாமும் நம் கல்லறைத் தோட்டத்திற்கு சென்று வரலாம் என்று தான் இப்போது கிளம்பியது.

கல்லறைத் தோட்டத்தில் ஒரே கலவரமாக இருந்தது.

நிழல் சென்றதும். அங்கே இருந்த நாட்டாமை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது. டேய் நிழலா மாறிக்கூட உங்களுக்கு பஞ்சாயத்து செய்யும் கொடுமை இருக்கே நான் என்ன தாண்டா செய்வேன்.

தலைவரே இந்த சைத்தான் கே பச்சைக் என்று ஒரு நிழல் சொல்லவும்.

டேய் ஒன்லி தமிழ் சைத்தான் பொத்தான் இந்த வேலை எல்லாம் என்கிட்ட வைச்சுக்காதே.

அங்கே பார் நம் வைத்து இருக்கும் அந்த வளைவில் கூட எத்தனை அழகா தமிழ் எழுத்துகள் மின்னுது. நீ வடநாட்டில் இருந்து இங்கே வந்து மண்டைய போட்டு விட்டாய். சரி போனாப் போகுதுன்னு நிழல் தானே என்று இடம் கொடுத்தால் நீ எங்களுக்குப் புரியாத பாசையில் பேசி திட்டப் பார்க்கிறாயா?

அதற்குள் இன்னொரு நிழல் வந்து டேய் மச்சான் கூல்டா அவன் ஏதோ கூவத்தில் விழுந்து விட்ட கொழுந்தியாவை தேடி இருக்கிறான். பக்கிப் பய இவனுக்கு நீச்சல் தெரியாதுங்கிறது மறந்து உள்ளே குதித்து விட்டான். அது தான் சோலி முடிந்து இங்கே வந்து வீசிட்டுப் போய்ட்டாங்க.

அதுக்கு இப்ப என்ன இவனுக்கு.

அட மச்சான் இவன் நீச்சல் கத்துக் கொள்ள வேண்டும் என்று வந்ததிலிருந்து ஒரே தொல்லைடா அது மட்டும் இல்லாமல் பொம்பள நிழல் தான் இவனுக்கு நீச்சல் கத்துக் கொடுக்க வேண்டும் என்று இப்படி தான் தையா கையா மையா என்று புரியாத பாசையில் ரிப்பேர் ஆன டேப்பரிக்கார்டு போல் ஒரே பினாத்தலா இருக்கவும். நம்ம மைனா அக்கா இவன் வாயில் கொஞ்சமா நெருப்பு அள்ளிப் போட்டு விட்டா அது தான் இப்போது சைத்தான் கே பச்சா ஹே என்று சொல்கிறான்.

எனக்கு என்னவோ இவன் தான் மும்பையில் பெரிய பாட்ஷாவா இருந்து இருப்பானோ? என்று சந்தேகமா இருக்கிறது.



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top