Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 340
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம்-60
பாகம்-60
நிழல் கொஞ்சம் சத்தம் குறைவா பாடு எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கிறேன். என்று தேனருவி நிழலை சத்தம் போட.
தேனருவி எனக்கு ரைட்டர் ஜி பாட்டு எழுதிக் கொடுத்து இருக்கிறார்.
உன்னையும் அந்த ரைட்டர் ஜி சும்மாவே கையில் பிடிக்க முடியாது இதில் உங்க ரெண்டு பேருக்கும் பாட்டு ஒன்று தான் போ அங்குட்டு என்று சத்தம் போட.
எப்படியோ இரவும் வந்தது. நிழல் அழகான பெண் போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்தவராயனை கொத்தவரங்காயாக மாற்றச் சென்றது.
நாதாரி நாதா நான் வந்து விட்டேன். என்று ஆறுவிரல் முன் திரும்பி நின்ற நிழலா வெள்ளிமணி கொலுசு போல் சின்னச் சின்ன சிரிப்பைக் கொடுத்தது.
நிழலா என் கண்மணியே இத்தனை நாளா எங்கே இருந்தாய்?
கோபால் நான் உங்கள் நினைவிலே தான் இருந்தேன் கோபால்..
என் பெயர் கோபால் இல்லை காத்தவராயன் என்று மீசையை முறுக்கி விட..
என்னது கொத்தவராங்காயா? எனக்கு அந்தக் காயே பிடிக்காது. எனக்கு உங்களை கோபால் என்று அழைக்கத்தான் பிடிக்குது கோபால் நான் உங்களை அப்படி அழைப்பது பிடிக்கவில்லையா?
கோபால் ம்க்க்க் என்று நிழலா சினுங்கவும்..
நீ என்னை எப்படி அழைத்தாலும் தேன் போல் இனிக்கிறது என் சொப்பன சுந்தரி..
நாதாரி நாதா சொப்பன சுந்தரியா? என்னை இதற்கு முன்னால் சொப்பனத்தில் பார்த்து இருக்கிறீங்களா??
ஆமாம் நிழலா நான் தினமும் உன் கூட கூடி ஆடிப் பாடுவேன்.
( அடேய் ஆறுவிரல் அலறது நீ வாயைக் கொடுத்து வம்பில் மாட்டப் போகிறாய்? நிழலா எப்படி உண்மையான உருவத்தில் நீ தினமும் டூயட் பாடி கூடி ஆடி
டேய் அமைச்சரு நிழல் கூட டூயட் பாடும் நீ தான் இன்றைக்கு ஹைலைட்.. மீசையாவா முறுக்குகிறாய்? நிழலா என்ன ப்ளான் வைத்து இருக்கிறதோ)
அப்படீனா அமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்ய மாட்டீங்க அப்படித்தானே.
சேவையா? நான் எதுக்கு செய்யனும். அவுங்க எல்லாம் காசு வாங்கிட்டுத் தானே ஓட்டுப் போட்டாங்க.
கோபால் உன் பையன் இறந்து பதினாறு நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் நிழலா அழகி கூட குளுகுளு அறையில் குல்லாசம் என்று பத்திரிக்கையில் செய்தி வந்து விடாதா?
அதுக்குத் தானே உன்னை இங்கு யாருக்கும் தெரியாமல் வரச் சொன்னேன் டார்லிங்.
என் அருகில் வா நிழலா உன் அழகு முகத்தை காண்பிக்காமல் முகத்தில் எதற்கு திரை போட்டு இருக்கிறாய்??
அடச் சோமாறிப் பயலா அந்த திரையை விலக்கினால் உன் முகரை இழுத்துக்குமே என்று யோசித்த நிழலா.
ஆமா கோபால் வந்ததிலிருந்து சாப்பிட எதுவுமே கொடுக்காமல் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறாய்??
அவ்வளவு பசியா? வா நிழலா முதலில் உனக்குப் பிடித்த சாப்பாடு சாப்பிடு பிறகு நாம் இருவரும் விடிய விடிய அய்யோ சொல்லும் போதே என் உடம்பு ஜிகிர்தாண்டா குடித்த மாதிரி இருக்கிறதே.
கோபாலூ கோபாலூ என் முழு உருவமில்லா உருவத்தைப் பார்த்தேனு வைச்சுக்க நீ வாழ்நாளில் எந்தப் பொம்பளை கிட்டக் கூடப் போகமாட்டாய்?
அது தான் நீ என் கூடவே இருப்பாய் நான் எதுக்கு வேறு ஒருத்தி தேடிப் போகிறேன்.
கோபால் உன் கூடவே மூன்று பேர் இருப்பாங்களே அவுங்க எங்கே காணம்.
அவுங்களை எதுக்கு கேட்கிறாய்? நீ எனக்கு மட்டும் தான் நான் யாருக்கும் உன்னைக் கொடுக்க மாட்டேன்.
உன் தலை எழுத்தை யாராலும் மாற்ற முடியாது. என்று நினைத்த நிழலா.. சரி இது என்ன உன் கையில் ஒரு குட்டிச்சாத்தான் தொங்குகிறது.
நிழலா அது என் அதிர்ஷ்டம் தெரியுமா? நாங்க வம்சம் வம்சமாக கையில் ஆறுவிரலோடு தான் பிறப்போம்.
கோபால் உங்க பரம்பரை சொத்தா இது.
நிழலா நீ எதுக்கு இப்போது பேசிக் கொண்டு இருக்கிறாய்?
நாம் அப்படி இப்படி இருக்கலாமே..
தீச்சட்டித் தலையன் அதில் சுத்தி இதுல சுத்தி அதிலேயே வந்து நிற்கிறான்.
கோபால் உனக்கு நான் பாட்டுப் பாடி காண்பிக்கிறேன். நான் காலையில் இருந்து பாட்டு பாடி பயிற்சி எடுத்து வந்து உள்ளேன்.
சரி பாடு நிழலா..
ஏக் தோக் தீன்..
அய்யோ நிழலா தமிழ் பாட்டு பாடு..
காவாலா காவாலா
எனக்கு இந்தப் பாடல் எல்லாம் தெரியாது.
மல்லிப்பூ வைச்சு வைச்சு வாடுதே..
ஆமாண்டா கோபால் என் தலையில் முடியே இல்லை இதில மல்லிகைப் பூவை ஆணி அடித்து தான் வைக்க வேண்டும்.
அந்த வெள்ளிநிலா என்று கொத்தவரங்காய் சாரி சாரி காத்தவராயன் பாட.
நான் எப்படா வெள்ளிநிலா என்று சொன்னேன் அமாவாசை மாதிரி தான் இருப்பேண்டி..
நிழலா என்று கோபால் அதன் சேலையை பிடித்தான் அவ்வளவு தான் காத்தவராயன் கையில் சாக்கடித்தது.
உடனே நிழலா மின்சாரக் கண்ணா என் மன்னா ஆசை ஓசை கேளாய் என்று பாட..
நிழலின் பல்செட் கழண்டு கீழே விழுந்து விட்டது.
அச்சோ கல்லறைத் தோட்டத்தில் ஊழல் அதிகமாகிப் போய் விட்டது. 108 வயசு கிழவியின் பல்செட் எடுத்துக் கொடுத்து விட்டானுக.. அது இப்போது எப்போது பார்த்தாலும் கழண்டு விழுகவே பார்க்கிறது.
கோபால் நிறைய உல்லாசபானம் அருந்தி இருந்ததால் அவருக்கு இப்போது நிழலா வேண்டும் என்று பீலிங் வர ஆரம்பித்து விட்டது.
நிழலா என்கிட்ட வா என்று கட்டிப் பிடித்தார். என்னடி உடம்பு இல்லையே ஒரே எலும்பா குத்துவது போல் இருக்கிறது.
அட நாதாரி நாதா ஒரு எலும்பு இல்லைடா நிறைய பிணத்தோட எலும்பு எப்படியோ? நாய் வாயில் இருந்ததை எல்லாம் ஒட்டவைச்சு நான் சேலையைப் போர்த்தி வந்தா இவன் ஒரே வெறியில் எல்லா எலும்பையும் உடைத்து விட்டால். வாடகைக்கு எடுத்து வந்து விட்டது. அதுவும் நாளைக்கு ஏதோ படத்தில் சூட்டிங் இருக்கிறது என்று மைனா சொன்னாலே .
இவன் கட்டிப் பிடிப்பதைப் பார்த்தாலே தெரியுது பல நாள் பட்டினி கிடந்த பன்னி மாதிரி.
கோபால் நாம் இரண்டு பேரும் விடிய விடிய பேசிக் கொண்டு இருக்கலாம்.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.. நீ பேச வேண்டும்..
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்.. உறவாட வேண்டும்.. ம் ம் ம்..
பன்னாடை எதைப் பாடினாலும் உறவாடுவதிலேயே குறியா இருக்கிறான்.
சரிடா உனக்கு என் ஆட்டத்தைக் காண்பிக்கிறேன் என மணி பனிரெண்டு ஆனதும் நிழலா காத்தவராயனைப் பார்த்தது.
நிழலா வா என்று அழைத்தவன் முன்னால் போய் தலையை குத்தி நின்று கொண்டது.
நிழலா உன் முகத்தை காண்பி என்று காத்தவராயன் முழுப்போதையில் நிழலுக்கு வாய் இருக்கும் என்று நினைத்து அருகில் வந்து அதன் இதழோடு இதழ் வைத்தான். அவ்வளவு தான் பல் செட்டுக்கு நடுவில் காத்தவராயன் உதடு மாட்டிக் கொண்டது கொத்து புரோட்டா போட்டு விட்டது நிழலா.
காத்தவராயனுக்கு கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிந்தது. இவ என்ன இவ்வளவு வெறி பிடித்து இருக்கிறாள். என் உதடு நாளைக்கு கட்சி மீட்டிங் வேறு இருக்கிறது. அதுவும் கவர்னர் மாளிகை வேறு போகவேண்டும்.
நிழலா என் உதடை விடுடி நான் உனக்கு நிறைய வித்தைகள் சொல்லித் தருகிறேன். என்னை இப்போது விடு என்று போராடியவனைப் பார்த்து நிழலா அதுக்குள்ளாயா? நான் உன்னை கொத்தவரங்காயாக மாற்றி வருகிறேன் என்று என்னுடைய பேன்ஸ் ஜெஜெ விடம் வாக்கு கொடுத்து வந்து இருக்கிறேன்.
நிழலா உன் உடலில் எலும்பு துருத்திக் கொண்டு இருக்கிறது. இனி மேல் நீ நல்லா தேனும் பாலும் சாப்பிட்டு உடலை தேற்ற வேண்டும்.
இருடா பனங்கொட்டை மாதிரி தலையில் சொட்டை மட்டும் இந்த அமாவாசை இரவிலும் மின்னுது உனக்கு ஜலசா கிலசா வேண்டுமா? இப்போது என் சுயத்தை முழுவதும் பார் என்று நிழலா தனது எலும்பு உடலை அவன் அருகில் நிறுத்தி நின்று கொண்டது.
கோபால் கோபால் கண்ணைத் திறந்து பாருங்க நம் ஜென்மம் ஜென்மமா தொடர்ந்த காதல் நிறைவேறி விடும்.
காத்தவராயன் நிழலாவைப் பார்த்து பயத்தில் தலைக்கு ஏறிய போதையும் சடாரென இறங்கியது. அய்யோ பேய் என்று அலறியடித்து கீழே விழுந்தான்.
நிழலா சத்தமாக சிரித்தது. நான் தான் நிழல் உன் உடல்பசியால் என் முன்ஜென்மப் பகையை தீர்க்கத் தான் நிழலாக சுற்றிக் கொண்டு இருந்தேன்.
நீ.. நீ.. என்ன சொல்கிறாய்?? என்று பயத்தில் காத்தவராயன் வாய் தந்தியடிக்க,
கோபால் கோபால் நீ எதுக்கு என்னைப் பார்த்து பயப்படுகிறாய்? நீயும் நானும் தான் தினமும் காலைக் கனவில் காதல் கொண்டோம் என்று நீ தானே கொஞ்ச நேரத்திற்கு முன்பு சொன்னாய்? என்று தனது பல்செட் அதிர சிரித்தது.
நான் சும்மா சொன்னேன்.. நீ வேண்டும் என்று தானே எலும்பு கூடு போல் ஆடை அணிந்து கொண்டு வந்து என்னைப் பயப்படுத்தப் பார்க்கிறாய்? நீ எதிர்க்கட்சியா? அது தான் என்மீது பழிபோட இப்படி வேசம் போட்டு வந்தாயா??
டேய் மச்சான் நான் எலும்புக்கூடு இல்லாத நிழல்டா உன்னைப் ஒரே நாளில் எல்லாம் போட்டுத் தாக்கக் கூடாது.. கொஞ்ச நாட்கள் வெச்சு செய்ய வேண்டும்,
நிழலா என்னைக் கொல்லாமல் விட்டு விடு நான் உனக்கு கமிஷன் தருகிறேன்.
அரசியல் வாதி நீ என்பது சரியாகத் தான் இருக்கிறது. நிழலுக்கே கமிஷன் தருகிறேன் சொல்கிறாய்?
உனக்கு நான் தண்டனை தருகிறேன் இங்கே வா என்று நிழலா அழைக்கவும்.
காத்தவராயன் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு அருகில் வரவும்.. ஆமா உனக்கு எதுக்கு மீசை என்று அந்த மீசையை வெடுக்கென்று ஒரு பக்கத்தில் இருந்து இழுத்தது.
மீசை கையோடு வந்தது. அடச்சீ ஒட்டு மீசையா?
நாதாரி ஓட்டு வாங்குவதற்கு வேண்டி ஒட்டு மீசைவைத்துக் கொண்டு அதைத் தான் முறுக்கிக் கொண்டே இருக்கிறாயா??
சரி இப்போது உன் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடவேண்டும்.
காத்தவராயன் தோப்புக் கரணம் போடும் போது அவரின் தொந்தி கீழே நிலத்தில் முட்டிக்கொண்டது. அப்போது நிலமே அதிர்ந்தது.
டேய் கொத்தவரங்காய் நாளைக்கு உன் கூட்டாளிகள் அனைவரும் இங்கே இருக்க வேண்டும். எங்கேயாவது நீ உண்மை தெரிஞ்சு போச்சு என்று ஓடிப்போனாலோ இல்லை ஏதாவது வெளியே லீக் ஆச்சு நீ இத்தனை நேரம் பேய் என்று தெரியாமல் கசமுசா செய்தாய் தானே அதெல்லாம் நெட்டில் லீக்கா லுக்கா வரும்.. வரட்டா..
தொடரும்..