Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 340
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 59
பாகம் - 59
காத்தவராயன் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு வந்தார். அவர் அமைச்சர் என்பதால் சுற்றிலும் கோசம் போடுவதற்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து இருந்தான்.
முனியப்பன் தலைவர் காரை விட்டு இறங்கியதும் நான் சொல்லும் வாக்கியத்தை அசகு பிசராமல் நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும் என்று டீல் பேசி வைத்து இருந்தான்.
அதே போல் அமைச்சர் காரில் இருந்து இறங்கியதும் முனியப்பன் அனைவருக்கும் சிக்னல் காண்பித்துக் கொண்டு ஆறுவிரல் ஆண்டவர் வாழ்க
என்று கோஷம் போட அனைவரும் அவ்வாறே சொன்னார்கள்.
அங்கே வந்த நிழல் டேய் இவன் கெட்ட கேட்டுக்கு இவனுக்கு வாழ்க கோஷம் போடும் முனியப்பா இனி உனக்கு சனியப்பா என்று அவன் வாயைத் திறந்து கோஷம் போடும் போது பச்சை மிளகாய் அரைத்த பொடியை அவன் வாயில் போட்டு விட்டு வேடிக்கை பார்த்தது.
ஆறுவிரல் சொன்னவன் அடுத்து அலறது என்று சொல்ல அவன் அழைத்து வந்தவர்கள் அனைவரும் ஆறுவிரல் அலறது என்று கோஷம் போட ஆரம்பித்தனர்.
அமைச்சர் காத்தவராயனின் பாதுகாப்பிற்கு வந்த போலீசார் முதல் பத்திரிகையாளர் அனைவரும் சிரித்து விட்டனர்.
அதை உடனடியாக டெலிகாஸ்ட் செய்து விட்டனர். அமைச்சர் மமதையில் இதை கவனிக்க வில்லை. அவர் மகன் இறந்ததால் கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய முடியாது என்பதால் வெளியே நின்று தான் சாமி கும்பிட்டு கொண்டு இருந்தார்.
நிழல் அவரின் காதுக்கு அருகில் சென்று அடேய் ஆறுவிரல் உன் எல்லையை விட்டு இங்கே வந்து விட்டாய். உன் பையன் அவனாக சாகவில்லை நான் தான் அவனைக் கொல்ல வேண்டும் என்றே குளத்தில் தள்ளி விட்டேன் என்று கூறிவிட்டு அங்கே இருந்த நெருப்பை கொஞ்சம் எடுத்து அமைச்சர் மேலே வீசியது.
இது என்ன தன் பக்கத்தில் யாருமே இல்லை என்று காத்தவராயன் நினைக்க அவரைச் சுற்றி பூரா புகையாக தெரிந்தது.
காக்கிச்சட்டை எல்லாம் எங்கேயா இருக்கிறீங்க என்னை யாரோ வெடிகுண்டு போட்டு கொல்லப் பார்க்கிறாங்க. என்று அவர் கத்தி அழைக்கவும்.
டேய் மச்சான் நீ எதுக்கு இப்போது இந்தக் கத்து கத்துகிறாய்? நீ ஒரு அமைச்சர் என்பதை மறந்து விட்டு பொது இடம் என்று பார்க்காமல் பைத்தியம் மாதிரி கத்துகிறாய்? சுற்றிலும் பாருடா வெண்ணெய் சாம்பிராணி புகை தான் இருக்குது.
வெடிகுண்டு எல்லாம் உனக்கு எதுக்குடா உனக்கு எல்லாம் ஊசிப் பட்டாசே அதிகம் டவுசர் வாயா? என்று நிழல் சரி காமெடி செய்து ஆறுவிரல் அலறது என்பதை உண்மையாக்கும் விதமாக அவரின் இருபக்க செவியிலும் நின்று மாற்றி மாற்றி சிரித்தது.
அதில் காத்தவராயன் தன்னை மறந்த நிலையில் டேய் யார்டா தைரியம் இல்லாத பொட்டை என் முன்னால் முகத்தை காண்பிக்காமல் சவுண்ட் மட்டும் கொடுத்து உதால் விடுவது என்று இப்போது கத்திக் கத்தி பேசினார்.
முனியப்பன் அப்போதும் பச்சை மிளகாய் தூள் வாயில் விழுந்து வெந்து போய் இருந்தாலும் அய்யோ தலைவரே நான் வேண்டும் என்று சொல்லவில்லை. எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. என்று பம்மிக் கொண்டு இருந்தான்.
ஆறுவிரல் காத்தவராயா உனக்கு என் முகத்தைப் பார்க்க அத்தனை ஆசையா? என்று இப்போது பெண் குரலில் தேன் ஒழுக பேசியது நிழல்.
ஆமா நீ யார்?
நான் நிழலா என்று குரல் மட்டும் வந்தது.
இது என்ன பெயர் வித்தியாசமா இருக்கிறது.
ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லையா? நாதாரி..
என்னது.. அச்சோ உங்களுக்கு அப்படி காது கேட்டுதா நாதா என்று நிழல் இப்போது அமைச்சர் கில்சா சல்சா மாதிரி பேசி அவர் ஜொள்ளு விட வைத்தது.
ஆமா உன் குரல் தேன் மாதிரி இருக்கிறது. நீயும் பார்க்க எப்படி இருப்பாய்?
நான் நிழலா புதுசா ஒரு தினுசா இருப்பேன். சுற்றிலும் உங்களைச் சுற்றி நாதாரி நிறைய அனங்கொண்டா வாயன்கள் இருக்கிறாங்க நான் அவுங்க கண்ணுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று ஒரு மூலிகை மருந்து குடித்து இருக்கிறேன்.
சரி இன்றைக்கு இரவு நீ என் ஹெஸ்ட் ஹவுஸ் வருகிறாயா??
நாதாரி உங்களுக்கு என்னை முழுசாப் பார்க்க அவ்வளவு ஆசையா?
ஆமாம் இருக்காதா?
நீங்க என்னைய முழுசாப் பார்த்தா மூர்ச்சையாகி விடுவீங்க.
அத்தனை அழகா நீ நிழலா.
அதைப் பார்க்கத்தானே போறீங்க நாதாரி நாதா.
நீ கண்டிப்பாக வருவாயா? நான் ஆசையாக காத்து இருப்பேன்.
நிழலா சொல்லியது நான் உங்களைப் போல் அரசியல் வாதி இல்லை வருகிறேன் என்று சொல்லி விட்டு வராமல் இருப்பதிற்கு இந்த நாளுக்காக எத்தனை நாட்கள் காத்து இருக்கிறேன்.
என் மேல் அத்தனை ஆசையா?
ஆமாம் ஜென்மம் ஜென்மமாக காத்து இருக்கிறேன்.
என்ன?
அத்தனை ஆழமான காதல் உங்கள் மேல் ஆறுவிரல் மச்சான். என்று அந்த ஆறாவது விரலை ஒரு சுண்டு சுண்டி விட்டது. அமைச்சர் ஜொள்ளு வடித்துக் கொண்டே சென்று விட்டார்.
தேனருவி தேவ் ஆனந்த் இருவரின் வீட்டார்களும் அனைத்து விசேங்களும் முடித்து விட்டு அவரவர்கள் வந்த காரில் இப்போது வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
கார்முகிலனுக்கு பூவிழியை விட்டு விட்டு செல்வதற்கு அத்துனை வருத்தமாக இருந்தது.
விஜயலதா வயிறு புடைக்க நின்று இருந்தாள். அவளின் அருகில் வந்த கிருஷ்ணவேணி ஏன் லதா ஒரு மாதிரி நிற்கிறாய்?
பிரணவ் கொஞ்ச நேரம் நீ வாங்கி வைத்துக் கொள்ளலாம் தானே ரவி வேற வேலை பார்ப்பான்ல.
அம்மா அவளுக்கு எங்கே பையன் நினைப்பு எல்லாம் வரப் போகுது, இன்னமும் தேவ் ஆனந்த் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று தான் யோசித்துக் கொண்டு இருப்பாள்.
தம்பி இனி யார் நினைத்தாலும் தேவ் ஆனந்த் தேனருவி தான் மணமக்கள். இனி உள்ளே புகுந்து யாரும் கும்மியடிக்க முடியாது என்று கிருஷ்ணவேணி சொன்னவர். தம்பி நாளைக்கு ஜவுளி எடுக்க காஞ்சிபுரம் போகலாம் என்று கூறினார்.
அத்தை நிஜமாலுமா சொல்கிறீங்க நானும் வருகிறேன் எனக்கு நான்கு புடவை வேண்டும் என்று இப்போது விஜயலதா தனது மாமியாரிடம் சொன்னால்.
இத்தனை நேரம் ஊமைச் சாமியார் வேடம் போட்டவள் இப்போது சேலை என்று சொன்னதும் வரிந்து கட்டிக் கொண்டு நின்று இருந்தாள்.
வானதிக்கு இப்போது சிரிப்பு வந்தது. இருந்தாலும் அதிரா ஆதிரா இருவரையும் அழைத்துக் கொண்டு காருக்குச் சென்றாள்.
தேனருவி வீட்டிற்குச் சென்றதும் தான் அவளுக்கு நிழல் நியாபகம் வந்தது.
எனக்கு வாய்ச்ச அடிமையே நீ எங்கே இருக்கிறாய் என்று இப்போது அவள் நிழல் எப்போதும் தூங்கும் மின்விசிறியைப் பார்த்து குரல் கொடுக்க.
எஸ் மேடம் நான் இங்கு இருக்கிறேன் என்று கபோர்டு மேலே இருந்து குதித்தது.
இங்கே பாரு நிழல் நீ எதுக்கு என் கூட கோவிலுக்கு வரவில்லை. நான் அங்கே நீ பழிவாங்கத் துடிக்கும் அந்த ஆறுவிரல் காத்தவராயன் வந்து இருந்தான்.
ஓஹோ அப்படியா?
ஆமா எனக்கு செம காண்டாகிச்சு அந்த ஆளைப் பார்த்ததும்.
அப்புறம் என்ன செய்தாய்?
சுற்றிலும் போலீஸ் இருந்தாங்களா? அது தான் இன்னொரு நாள் தனியாகப் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டேன்.
தேனருவி நீ யார் கிட்ட பூ சுத்துகிறாய்? நான் தான் அவனை சுத்த விட்டேன் என்று இப்போது நிழல் ஆறுவிரல் அலறது என்ற டயலாக் முதற் கொண்டு.. நிழலா என்று புது முகமாக அவனை சங்கு அறுக்கப் போகிறேன் வரை என்று தேனருவியிடம் சொல்லிய நிழல்
நீ வாத்தியார் கிட்ட போனில் டூயட் பாடு நீ எதுவும் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதே என்று தான் சொல்லியது.
நிழலா லா லா என்று இப்போது தேனருவியைப் பார்த்து பாட்டுப் பாடியது.
ச்சை சகிக்கலை வாயை மூடு நிழல் என்று தேனருவி சொல்லவும்.
அப்படீனா எனக்கு நீ பாட்டு சொல்லிக் கொடு நான் இன்றைக்குப் பாடியே அந்தப் பாட்டல் வாயனை டோட்டலா காலி செய்ய வேண்டும் என்று நிழல் கூறியது..
சரி உனக்கு என்ன பாடல் வேண்டுமோ? நீயே போய் யூடிப்பில் பார்த்து கேட்டு பழகிக் கொள்.
நிஜமா தேனருவி சொல்கிறாய்?
சரி சரி நானே பார்த்துக் கொள்கிறேன்.
முதலில் கட்டிப் புடி கட்டிப் புடி என்று பாடல் கேட்டது. ச்சே இந்த பாடல் நல்லா இல்லை அந்த நாதாரி நாதா வந்து கட்டிப் பிடித்தான் என்றால் என் எலும்பு நொறுங்கி விடும்.. நான் அப்புறம் மறுபடியும் கல்லறைத் தோட்டத்தில் எலும்பு மேட்சிங்கா பொறுக்கி ஒட்ட வைக்க வேண்டும். அதுவும் இப்போது எல்லாம் பெவிகால் நல்லாவே ஒட்ட மாட்டீங்குது. அந்த சேத்தெருமைக்கு எந்த பாடல்
போடலாம் என்று யோசித்து இப்போது.. அடுத்த பாடல் கேட்டது..
இராத்திரி நேரப் பூங்குயில்
இரகசியம் பேசுது யம்மம்மா..
அந்த பாட்டல் வாயனிடம் எந்த இரகசியம் பேசுவது.
நெகஸ்ட் என்று அடுத்தப் பாடல் கேட்டது..
வசீகரா என் நெஞ்சு இனிக்க..
எனக்குத் தான் நெஞ்சே இல்லையே.. நெகஸ்ட்
மேகம் கருக்குது மின்னல் அடிக்குது..
மேகம் கருத்து மின்னல் அடிச்சாலும் நான் நிழலா தான். வேற என்ன உலக அழகியாவா மாறப் போகிறேன். நெகஸ்ட்
நாக்க மூக்க நாக்க மூக்க..
அடடே இந்த பாடல் எல்லாம் நம்ம கிட்டெ இல்லாத ஐட்டம் பற்றியே இருக்கிறது. ஏதாவது பேய் பாடல் பாடுவது மாதிரி இருந்தால் நல்லா இருக்கும்.
ஏம்மா ரைட்டர் ஜி நீயே கவிதை எல்லாம் எழுதுகிறாயே எனக்கு ஒரு பாட்டு எழுதித் தாமா..
சரி நிழலா உனக்கு நான் ஒரு பாடல் எழுதித் தருகிறேன் நீ பாடு சரியா?
நிழலே நிழலே நீ எங்கே இருந்து வந்தாய்?? நான் உன்னைத் தொடர்ந்தே வந்தேன்..
மேடம் பாடல் தப்பா இருக்கிறது.
ஆமாம் நான் என் பெயரை கொஞ்ச நாட்கள் நிழலா என்று மாத்தி வைத்து உள்ளேன்.
அட ஆமாம் லா..
சரி எழுதிக்கோ..
நிழலா நிழலா வானத்து நிலவா நீ.. வந்து விடு என் அருகில் நிழலா நிழலா லா லா லா லா..
ரைட்டர் ஜி எல்லா ரைட்டர் ஜி யும் இந்த பாடல் பாடி என்னைய அவுங்க வீட்டிற்கு கூப்பிடுகிறாங்க நான் ஒவ்வொரு நாள் அவுங்க வீட்டிற்கு போக வேண்டும்.
நிழலா நீ கோபித்துக் கொள்ளாதே நான் உன்னை எங்கேயும் விட மாட்டேன் என் செல்லம் நிழலா நீ என்றாள்.
தொடரும்..