• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
337
நீ உடல் நான் நிழல்
பாகம் -58


விஜய் லதா கீழே விழுகவும் சுற்றி இருந்த குழந்தைகள் சிரித்து விட்டனர். அவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டு எழுந்த விஜய லதா ரவிக்குமாரிடம், ஏங்க இப்படி இழுக்கறீங்க பாருங்க நான் கீழ விழுந்துட்டேன் இது உங்களுக்கே நியாயமா?

ஏய் நீ தான் கால் வரமாட்டேங்குது அடுத்த அடி எடுத்து வைக்க முடியல அப்படின்னு சொன்னாய் அதனால இழுத்தேன். அதுக்கு வந்து இப்படி கீழ் விழுவேனு நான் என்ன கனவா கண்டேன்.

போற வழியில் வாசலில் நின்னுட்டு நீதான் காமெடி பண்ணிட்டு இருக்க, அது உனக்கு பெருசா தெரியல சின்ன குழந்தைங்க கூட உன்னைப் பார்த்து சிரிக்கிற மாதிரி நீ நடந்துக்கிற விஜயலதா.

எதுக்கு? இத்தனை அவசரமா எல்லாரும் கோவிலுக்குள் இருக்கும் போது நீ வெளியில் வந்த உன்னால பொறுத்துக்க முடியல என் தம்பிக்கு நிச்சயம் நடக்கிறத உன்னால ஏத்துக்க முடியல அதனால் நீ வெளியில் வந்த வெளியில் வந்ததும் இல்லாம உன்னை கவனிக்கணும் எல்லாரும் உன்னை என்னன்னு விசாரிக்கணும் அப்படிங்கிறது மனசுல வச்சுட்டு ஒரு இடத்திலேயே அசையாமல் நின்னுட்டு இருக்கே, நீ என்ன பெரிய இவளா கோயில் பாக்கேன் நீ பண்ற சேட்டைக்கெல்லாம் அவ்வளவு அவமானமா இருக்குது. என் தம்பி கல்யாணம் தடங்கள் செய்ய நீ யாருடி நீ வீட்டுக்கு வா உனக்கு இருக்குது.

என்ன பண்ணுவது என்று யோசித்த நிழல் இங்கேயே சண்டை போட ஆரம்பிச்சிடுவாங்க போல இருக்குது இது நல்லதுக்கு இல்லையே !?

ஏதாவது செய்யணுமே நம்ம டார்லிங் வேற உள்ள உக்காந்து இருக்குது வெளியில் வந்தால் இங்கு நடக்கிறது பார்த்து பயந்துட்டானா? என்ன செய்யறது சரி நாமளும் பந்தி நடக்கிற இடத்துக்கு போவோம் நம்மனால சாப்பிடவே முடியாது அப்படியே போய் சாப்பிடற இடத்துல விஜய லதா பக்கத்துல உக்காந்துக்கோணும்.

விஜயலதா இலையின் முன் உட்கார்ந்து ஸ்வீட்டை எடுத்து வாயில் கொண்டு போகும் சமயம் அது காணாமல் போய்விட்டது.

அவளுக்கு அதிர்ச்சி இது என்னது இலையிலும்ம் காணோம் கையிலயும் இல்ல வாயிலும் இல்லை எங்கு போயிருக்கு ஒரு வேளை பக்கத்துல இருக்குற அவர் எடுத்து இருப்பாரோ? பேசாம ஒரு வேற பக்கம் திரும்பி இருக்கிற நேரத்தில் இன்னொன்றை வாங்கிக் கொள்ளலாமா? இல்ல யாருக்கு தெரியாம இரண்டு பக்க இலையில இருக்குற ஸ்வீட் எடுத்து சாப்பிட்டு போடுவோம் அல்ப்பத் தனமாக யோசித்தாள்.

சரி ஸ்வீட் ஒரு ஸ்வீட் போயிடுச்சு இன்னொரு ஸ்வீட் எடுத்து சாப்பிடுவோம் .அவள் எதை எடுத்து சாப்பிட வாய் அருகில் கொண்டு வந்தாலும் அது காணாமல் போய்க்கொண்டே இருந்தது .அதில் அவள் பயந்து கொண்டே பக்கத்தில் அமர்ந்திருக்கும் தனது கணவனை தனது இடது கையால்
தொட்டு என்னங்க.

ஏண்டி சாப்பிடும் போதும் கூட அடங்க மாட்டியா இப்ப என்ன குற்றம் சொல்ல ஆரம்பிக்க போறே.

ஏங்க நீங்களே பாத்தீங்களா கொஞ்ச நேரத்துக்கு முன்னால இலை நிறைய இருந்தது ஆனா இப்ப பார்த்தா ஒண்ணுமே இல்லை.

நீ தான் மொடா முழுங்குற மாதிரி முழுங்கினீயே அப்புறம் எப்படி இலையில் இருக்கு எல்லாம் காலியாத்தான் இருக்கும். ஏன் ஒன்னும் பசி அடங்கலியா வேணும்னா வாங்கி சாப்பிடு என்னை எதுக்கு சொரண்டிட்டு இருக்கிறாய்.

நான் என்ன பேயா வைக்கிறதுக்கு முன்னால் எடுத்து பூரா சாப்பிடுவதற்கு.

இன்னைக்கு தாண்டி நீ யாருங்கறது உன் வாயாலயே சொல்லி இருக்கிற ஆனால் சாப்பிடற நேரத்துல இப்படி காமெடி பண்ணிட்டு இருக்குற நீ உன்ன நெனச்சா எனக்கு சிரிப்பு தான் வருது. இன்னும் பசித்தால் எதுனா வாங்கி சாப்பிடு அதுக்கெல்லாம் உன்னை யார் சொல்லிக் காமிக்க மாட்டாங்க.

அப்போ நீங்க கூட நான் சொல்றத நம்ப மாட்டீங்க நான் முதல்ல என்ன சொல்ல வர்றேன்னாவது புரிஞ்சிட்டு கேளுங்க.

ஏண்டி இத்தனை நேரத்தில் தான் ஏதாவது ஏழரையை இழுத்துட்டே இருந்த இப்ப சாப்பிடும் போது கூட நிம்மதியா சாப்பிட விட மாட்டேன் நொய் நொய்னு பேசிட்டு இருக்குறே.

இப்ப என்ன உனக்கு எல்லாம் இலை நிறைய எல்லாம் வைக்கிற அத்தனையும் நீ சாப்பிடற சாப்பிடாம ஒரு பருக்கை நீ வெச்சிருந்தாலோ சும்மா விட மாட்டேன். இருடி என்று கூறிக்கொண்டு அங்கு பரிமாறு ப வரை அழைத்து இருக்கிற எல்லா ஐட்டத்தையும் கொண்டு வந்து இந்த இலையில்
வைப்பா.

விஜயலதா இலையில் அனைத்து வகை உணவுகளும் பரிமாறப்பட்டது. இப்போது நிழல் அந்த இடத்திலிருந்து எதிர்க்க வந்து நின்று கொண்டது. பரிமாறுபவரின் உடலில் உள்ளே சென்று விஜயலதா இலையில் குறைய குறைய வைத்துக் கொண்டே இருந்தது. இப்போது அதை சாப்பிட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தான் ரவிக்குமார். என்னமோ? பெருசா சொன்ன நான் எதுவுமே சாப்பிடல எனக்கு அவ்வளவு பசிக்குது எழுந்திருச்சு பாரு பேசிக்கிறேன். என்னை நிம்மதியா சாப்பிட விடாமல்
செய்து விட்டு..இது பூரா சாப்பிடாம நீ எந்திரிச்சு வெளியில் வரக்கூடாது என்று கூறிவிட்டு அவன் கை கழுவ சென்றான்.

அந்தப் பந்தி முடிந்து அடுத்த பந்தியும் தொடங்கிவிட்டது. ஆனால் விஜய் லதா இலையில் வைக்கப்பட்ட உணவு அப்படியேதான் இருந்தது.

அவளும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள் இலையில் இருப்பது குறையவே இல்லை. இதுக்கு மேல என்னால முடியாது எந்திரிச்சு விடலாம் அப்படின்னு சுற்றியும் தன் கணவனை தேடுகிறாள் .அவன் அங்கே இல்லை என்று தெரிந்ததும் நைசாக எந்திரித்து இலையை மூடி வைத்துவிட்டு ஓடுகிறாள்.

அவளுக்கு நடக்கிறதே கஷ்டமா இருக்குது .ஆனாலும் மெதுவா நடந்து போனா திருப்பி போயி அந்த இலையில் இருக்கிற சாப்பிட வைத்துவிடுவானோ அப்படிங்கிற ஒரு பயத்துல ஓடுகிறாள்.

கையை கழுவி விட்டு ஐஸ்கிரீம் சாப்பிடலாம் அப்படின்னு போய் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுறாள்.

சாப்பிட சாப்பிட அந்த ஐஸ்கிரீம் குறையவே மாட்டேங்குது சரி இதை வந்து நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு போய் வச்சுட்டு நம்ம ரூம்ல உட்கார்ந்து சாப்பிடலாம்னு பிளான் பண்றா.

அடடா அவளோட அறிவுக்கு எங்கேயோ இருக்க வேண்டிய எல்லாரும் சாப்பிட்டு போட்டு அக்காட்டாலும் வீசிட்டு போறாங்க ஆனா நம்ம கிட்ட அமுது சுரபி மாறி வந்துட்டே இருக்குது.

அப்படின்னா நம்ம கையில ஏதோ பவர் வந்துருச்சுன்னு குஷி ஆயிடுரா ஆனா பக்கத்துல நின்னு அவளுக்கு சித்து வேலை காமிச்சிட்டு இருக்கிறது நிழல் அது தெரியாம அல்ப்பத் தனமா இவ ரொம்ப பெரிய மேஜிக் உமன் ஆயிட்டோம் என்று மமதையில் இருக்கிறாள்.

கையில் இருந்த ஐஸ்கிரீம் மீண்டும் மீண்டும் வந்து அவள் சேலையில் விழுந்து விட்டது. அங்கே வந்த கிருஷ்ணவேணி அம்மா நீ என்ன சின்ன புள்ளையா சேலையில் சிந்திட்டுச் சாப்பிடற எனக்கு கேவலமாக இருக்கிறது உன்னை பார்த்தா என்று சொன்ன பிறகுதான் விஜயலதா தானே கீழ குனிந்து பார்த்தாள்.

அவளது புடவை முழுவதும் ஐஸ்கிரீமால் நனைந்து இருந்தது. இன்றைக்கு காலையில் இருந்து ஒன்னு நல்லாவே நடக்கல தாறுமாறா இருக்குதே என்று நினைத்தவள் தன் கையில் இருந்த ஐஸ் கிரீம் கீழே வீசி விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தவள் இப்போது தனது புடவையின் மீது சிந்தியவைகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தாள்.

தேவ் ஆனந்த் தேனருவி பூவிழி கார்முகிலன் மற்ற மீதம் இருந்த சொந்தங்கள் அனைவரும் வந்து சாப்பிட அமர்ந்து கொண்டனர்.

பூவிழி சுவற்றின் ஓரமாக அமர்ந்து கொள்ள கார்முகிலன் அவளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். அடுத்து அடுத்து தேவ் ஆனந்த் தேனருவி அமர்ந்து கொள்ள பூவிழி க்குத் தான் கன்னம் இரண்டும் சிவந்து விட்டது.

அவளின் சிவந்த கன்னத்தை பார்த்த கார்முகிலனுக்கு ஆனந்தமாக இருந்தது. தேவ் ஆனந்த் தான் நாங்கள் குலதெய்வ கோவிலுக்கு போகிறோம் நீங்களும் வாங்க என்று அழைத்து இருந்தான்.

தேவ் ஆனந்த் தேனருவி க்கு இனிப்பு ஊட்டி விட வேண்டும் என்று மற்றவர்கள் இயம்ப அவன் கொடுக்க அவளும் அவளுக்கு பிடிக்காத மைசூர்பாகுவை வாங்கிக் கொண்டாள்.

தேவ் ஆனந்த் ஊட்ட அவளின் விரலையும் சேர்ந்து சுவைத்து விட்டான். சுற்றி இருந்தவர்கள் கலாட்டா செய்தனர். அவ்வளவு தான் இனி இவர்கள் எப்போது கனவில் இருந்து வெளியே வந்து மற்றவற்றை சாப்பிடுவது.

பூவிழியின் இலையில் அவள் சாப்பிட்டு வைத்து இருந்த பாதி இனிப்பை இப்போது கார்முகிலன் எடுத்துக் கொண்டான். அவன் இலையில் இருந்ததை அவளுக்கு எடுத்து வைத்து விட்டான்.

இந்த கன்னாமூச்சி விளையாட்டை நிழல் பார்த்து விட்டது. அடடே இங்கே புதுசா ஒரு காதல் பாட்டு ஆரம்பம் ஆகி விட்டதா? பூவிழி முகத்தில் இருந்த சந்தோசத்தைப் பார்த்து உன் காதல் ஜெயிக்க வேண்டும். அது தான் வாத்தியார் இருக்கிறாரே அதெல்லாம் உனக்கு நல்லதே செய்வார்.

குலதெய்வக் கோவில் பொதுவானது. அங்கே அமைச்சர் காத்தவராயன் தன் சகாக்களோடு வருகிறான் என்று அங்கே இருந்தவர்கள் அனைவரும் இப்போது அவனைப் பார்ப்பதற்கு எழுந்து சென்றனர்.

நிழலுக்கு அவனைப் பார்த்ததும் இருடா மவனே உனக்கு இங்கு எத்தனை பிலிம் காட்டுகிறேன் என்று நினைத்துக் கொண்டு அங்கே சென்றது.

ஆறுவிரல் ஆண்டவன் வாழ்க என்று கோஷம் போட்டவனின் வாயினுள் ஒரு பிடி பச்சை மிளகாய் அரைத்து தூள் போட்டு விட்டது நிழல் ஆறு விரல் அலறுது... ஸ் ஸ்.. ஆ... ஆ... அலறுது என்று அவன் கத்தி கோஷம் போட சுற்றி நின்றவர்கள் காசுக்கு வேசம் போட வந்தவர்கள் அதனால் அவன் என்ன சொன்னாலும் அதையவே திரும்பத் திரும்ப சொன்னார்கள்.

முதலில் யாரும் அதை கவனிக்க வில்லை. பிறகு தான் ஆறுவிரல் ஆண்டவன் போய் ஆறுவிரல் அலறுது அலறுது என்று அனைவரும் கோஷம் போடுவதை கவனித்து அவர்களை அடக்குவதற்கு முன்பாக அங்கே இருந்த பத்திரிகையாளர்கள் அதை ஒளிபரப்பி இருந்தனர்.

அங்கே பாதுகாப்பு இருந்த போலீசார் அனைவருக்கும் சிரிப்பு வந்து விட்டது அனைவரும் சிரித்து விட்டனர்.

நிழலின் பார்வையில் இனி ஆறுமுகம் அலறப் போகிறது. கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய முடியாதே மகன் இறந்ததால் அதனால் கோவில் வெளியே நின்று தான் தரிசனம் செய்து கொண்டு இருந்தார்.

அங்கே இருந்து நகர்ந்ததும் நிழல் அந்த காத்தவராயன் அருகில் சென்று நின்று கொண்டு நீ இனி மேல் என்னிடம் இருந்து தப்பிக்கவே முடியாது. உன் பையனைக் கொன்றதே நான் தான் என்று அவனின் காதில் ஓதியது.


தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top