• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
336
நீ உடல் நான் நிழல் - 57


விடியல் அழகானது காலையில் தேன் அருவி மணப்பெண் போல் ரெடியாகினாள்.

பத்திரிக்கை வைத்து கும்பிட்டு விட்டு அப்படியே உப்பு வாங்கி மாற்றப் போகிறார்கள்.

தேவ் ஆனந்த் குடும்பம் அங்கே இருந்து அவர்களது இல்லத்திலிருந்து கிளம்பினார்கள்.

தேனருவி வீட்டிலும் தரகர் மற்றும் அவரது மனைவி கமலா இருவரும் ஒரு காரில் கிளம்பி வந்தார்கள் .

முதலிலேயே தேவ ஆனந்த் வந்தவன் அவர்களது குடும்பத்தாரோடு காத்திருந்தார்கள்.

அங்காள பரமேஸ்வரி கோயிலில் தான் நிச்சயதாம்பூலம் உப்பு மாற்றுதல் நடைபெறுகிறது.

மாப்பிள்ளை வீட்டார் சார்பில் அவர்களது உறவினர்கள் அனைவரும் வந்தனர் .

அவர்கள் தான் செய்முறை செய்யப் போகிறார்கள் . அனைவரும் இன்றைய நிச்சயதாம்பூல நிகழ்ச்சி முக்கியமாக கலந்து கொள்ள இருக்கின்றனர் .

தேனருவியின் பெரியப்பா மருமகளான நித்தியாவும் அவரின் கணவர் சபரியும் தேனருவி குடும்பத்தார் சார்பில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் வந்துவிட இப்போது அனைவரும் முதலில் சாமி தரிசனம் முடித்து அங்கேயே பெரிய சமுக்காளம் விரித்து அதில் மற்றவர்கள் அமர்ந்து கொள்ள கிருஷ்ணவேணி அம்மா பரவாயில்லை எனக்கு பெண் பிள்ளைகள் இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.

இதுக்குத்தான் சித்தப்பன் பிள்ளைகளை இருக்கணும்னு சொல்றது கூட பிறந்த தங்கச்சி போல கலந்து கொள்றது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது என்று சொன்னார்.

சம்மபந்திமா என்று யசோதா அழைக்க..

சொல்லுங்க.. இவர்கள் யாரும் அவர்களை பற்றி தான் சொல்ல வந்தேன். என் அக்கா மருமகள் நித்தியா இதோ சபரி தான் என்னோட வயிற்றில் தான் பொறக்கல ஆனாலும் எனக்கு அவன் மகன் என்று இவங்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

சின்ன அக்கா மருமகள் என்று மற்ற அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

யசோதா எல்லாரும் வாங்க இங்க உட்கார்ந்து இருந்த என்ன பண்றது நல்ல நேரம் முடிகிறதுக்குள்ள தேனருவியைச் சபைக்கு அழைச்சிட்டு வாங்க கொழு ந்தியா அண்ணி மாருகோங்க எல்லாரும் போயி அவளுக்கு சந்தன குங்குமம் பூ வைத்து சீர் செய்யலாம் என்று சொன்னார்.

நாளும் நல நாளா இருக்குது உங்க உரிமை விட்டுக் கொடுக்காமல் மனசு நிறைக்க செய்யுங்கள் என்றார்.

பொண்ணுக்கு ஜோடியாக மாப்பிள்ளையும் உட்காரச் சொல்லுங்க அம்மா நாங்களும் நலங்கு வைக்கிறோம் பேசாமல் இன்றைக்கு இப்போது நிச்சயம் செய்து விட்டால் என்ன சம்பந்திமா அதுதான் நெருங்கின சொந்தமெல்லாம் இருக்கிறார்களே.

நீங்க என்ன சொல்றீங்களோ அதுதான் சம்பந்திமா நாங்க எதுக்கும் தடை சொல்ல போவதில்லை.

என்னுங்க உங்களுக்கு சம்மதமா சம்பந்தி அம்மா யசோதா அவங்க சொல்றாங்களே இன்னைக்கு பண்ணிக்கலாம் எங்களுக்கு எந்த தடங்கலும் இல்லை அப்படின்னு தம்பி அப்பா எங்கே இங்கே கூப்பிட்டு வா சிவகுமார் ரவிக்குமார் உங்க எல்லாத்துக்கும் சந்தோசமா!.

அம்மா எனக்கு அப்பவே மனசுல பதிஞ்சு போச்சு அதுதான் அவங்களும் சொல்லுகிறார்கள் இன்னைக்கு நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்.

எல்லாரும் போய் தட்டுகள் எல்லாம் எடுத்து ஒத்தையில் வருவது போல சபையில் வையுங்க.

அம்மா நான் எதுக்கும் இருக்கட்டுமே என்று தான் தட்டமெல்லாம் டெக்கரேஷன் செய்து கொண்டு வந்தேன்.

பரவால்ல ராசாத்தி நல்லவேளை அதுக்கு ஒரு நேரமாகவே ஆகுமோ என்று நான் தவித்துக் கொண்டிருந்தேன்.

அம்மா தேவானந்த் இருவரையும் தினமும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். நாம் எல்லோரும் இருக்கிறீர்கள் இன்னும் வர வேண்டியது சொந்தங்கள் வரக்காணம் ஒருவருக்கு ஒருவர் பேசியவாறு அலங்கரிக்கப்பட்ட தட்டுகளை எடுத்து வைக்க.

வானதி எளிதில் அவர்களோடு ஒன்றி விட விஜயலதா வாய்க்குள் முனங்கி கொண்டிருக்க

சுனைனா அவள் ஓரமாக நின்றுவிட்டால் வனிதா தேவானந்த் தேனருவியை வெறுக்க வெறுக்க பார்த்துக் கொண்டிருந்தால்.

விஜய் லதா அருகில் சென்ற மற்ற உறவினர்கள் நீ என்ன ஒதுங்கி நின்னுட்டு இருக்கிறே நீயும் என்னென்னமோ செஞ்சு தான் பார்த்தாய் ஆனால் எதுவுமே நடக்கல அதுக்காக ஒதுங்கி நின்னுட்டு இருக்காத அது கடவுளா அமைச்சு வச்சது அவனுக்கு அந்த புள்ள தான் இருக்கும்போது நீ ஒதுங்கி நின்னுட்டு இருந்தேனா நல்லாவா இருக்கும் .

அது இதெல்லாம் உன்னோட உரிமை அதனால போயி வீட்டுக்கு மூத்த மருமகளா என்ன செய்யணும் அதை செய்யுமா என்று உறவுக்கார பெண்மணி ஒருவர் சொன்னார்.

சபையில் இரண்டு சேர்கள் போடப்பட்டு அதில் ஒரு பட்டுச் சேலையை விரிக்கப்பட்டு இருந்தது அதில் முதலில் தேவ் ஆனந்த் வந்து அமரவும் சிறிது நேரத்திலேயே தேனருவியையும் அழைத்துக் கொண்டு வந்தனர் இருவரும் சபைக்கு வணக்கம் வைத்துவிட்டு அமர்ந்தனர்.

யசோதா கமலா நீ நீங்க போய் முதல்ல தேன் அருவிக்கு சந்தனம் வைத்து விடுங்கள் என்று சொல்லவும்.

யசோதாவின் உறவுக்கார பெண்மணி ஒருவர் நீ என்ன தெரிஞ்சு தான் பேசுறியா? அவளே ஒரு குழந்தையும் கூட பெத்துக்க முடியாம வாழ்க்கையில தோற்று போய் நிற்கிறாள்.

நீ அவள போய் உன்றபுள்ள கல்யாணமாகி குடித்தனமா குழந்தையும் இருக்க வேண்டாமா? அவள போய் முதல்ல ஆசீர்வாதம் பண்ணச் சொல்ற நீ இந்தல வா முதல்ல அதெல்லாம் நிறைஞ்சு வாழ்றவங்க செய்யணும் என்று நாக்கில் நரம்பில்லாமல் கமலம்மாவை சத்தம் போடவும்.

தேவ ஆனந்துக்கு கோபம் வந்துவிட்டது. உடனே சபையிலிருந்து எழுந்தவன் இங்க பாருங்கம்மா தேவையில்லாம அவங்க மனச காயப்படுத்தாதீர்கள் ஏன் அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு உங்களுக்கு தெரியுமா ?நானே அவங்களோட பையன் தான்.

என்னப்பா கதை பேசுறியா? யார் யாரோட பையன் நீதான் ஜமீன் வீட்டு வாரிசு என்ன எனக்கு தெரியாது நினைச்சுட்டியா ? என்ன கிருஷ்ணவேணி உன் பையன் என்ன தத்து கொடுத்துட்டியா? என்று பேச்சை வளர்த்து அவரது மனதில் இருந்த வன்மத்தை கொட்டினார்.

அவர் அப்படி பேசவும் கமலம்மா உடனே தம்பி விடு சாமி அவங்க உண்மை தானே சொல்றாங்க தப்பு ஒன்னும் இல்லையே !நானே யோசித்து இருக்கோணும் அத மொத மொதல்ல போயி நான் ஆசீர்வாதம் பண்றது அதுக்கு தகுதியில்லாதவ அப்படின்னு நானே ஒதுங்கி இருந்து இருக்கணும் ஆனா நாம வளர்த்த பொண்ணுதானே அப்படிங்கற ஒரு ஆசையில நானும் வந்துட்டேன் எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. இந்த அம்மா பேசினதுல எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை. தொடர்ச்சியா நிகழ்ச்சி நடக்கட்டும் என்னால எந்த சங்கடமும் யாருக்கும் வேண்டாம் என்று கமலம்மாள் சொல்லிக்கொண்டு அந்த மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

கிருஷ்ணவேணி அம்மா நீங்க எதுக்கு யாரோ என்னமோ சொல்றாங்கன்னு அதை மனசுல வச்சுட்டு என் குழந்தைகள் ஆசிர்வாதம் பண்ணாம வர்றீங்க. நீங்கதான் முதல் ஆசிர்வாதம் பண்ணனும்.

மனசு தாங்க முக்கியம் நீங்க அவங்க சொல்றத பெருசா தப்பா எடுத்துக்காதீங்க அந்த காலத்தில் மனிசங்க அவங்களுக்கு ஒன்னும் புரியவில்லை.

எதுவும் தெளிவா நீங்க ஒரு குழந்தை மட்டும் பெற்று இருந்தால் அந்த மரியாதை கிடைக்கும் எல்லா நினைச்சு மனதை குழப்பிக்காதீங்க என் மகனே சொல்றானே நான் அவங்களோட பையன்னு நாங்க என்ன தடுத்துறவா போறோம்.

எனக்கு உண்மையாலுமே சந்தோசமா இருக்குது அவன் வாயற மனசு அறிஞ்சு சொல்றேன்னா அவன் உங்க மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான்.

இதுல எனக்கு எந்த பொறாமையும் இல்லை வாங்க நீங்கதான் முதல்ல வைக்கிறீங்க .அதுக்கு பின்னால மத்தவங்க வைக்கட்டும் என்று கிருஷ்ணவேணி கமலா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து அவர் வைத்த பின்பு பிறகு கிருஷ்ணவேணி அம்மா வச்சாங்க.

பின்னர் அனைவரும் முறைமைக்காரர்கள் இருவருக்குமே விபூதி சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு ஆசிர்வதித்துச் சென்றனர்.

தேனருவி இப்போதுதான் நம்ம நிழல் உள்ள வர முடியாமல் போச்சு இப்படி ஒரு பிரச்சனை நடக்குதுன்னா எவ்வளவு ஈசியா அதையே சால்வ் பண்ணி வச்சுருவான். அவனை என்ன பண்ணிட்டு இருக்க தெரியலையே நிழல் அதனை நினைத்துக் கொண்டு தேன் அருவி இருந்தால் .

அனைவரும் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதை நம்ம நிழலும் இல்லையே என்று தேன் அருவி மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அவளது மனசாட்சி வந்து நிழல் இங்கே வந்தாலும் போட்டோ எடுக்க முடியாது மற்றவர்களுக்கு தெரியாது உனக்கு மட்டும் தான் தெரியும் பிலிமில் ஏதோ ஒரு வெள்ளையாக ஒரு உருவம் இருப்பது போல தெரியும் அது வேண்டாம் மற்றவர்களுக்கு தெரியாமலேயே இருக்கட்டும் என்று அவளது மனசாட்சி அவளிடம் கூறியது.

அனைவரும் ஒன்று கூடி இருந்த நேரத்தில் தேவ் ஆனந்த் தேனருவி இருவரின் திருமண பத்திரிக்கை வாசிக்கப்பட்டது பத்திரிக்கை வாசிக்கப்பட்டதும் உப்பு மாற்றிக் கொள்ளப்பட்டது.

அதற்குப் பிறகு தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். தேனருவி தேவனாந்த் இருவரும் இப்போது இந்த உலகத்தில் இல்லை இருவரும் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கே என்று கேட்டு விடாதீங்க நீங்களே ஒரு இடம் சூஸ் செய்து கொள்ளுங்கள் இது ரைட்டர் ரைட்டர்ஜியின் மைண்ட் வாய்ஸ்.

வெளியே வாயில் முனங்கிக் கொண்டு வந்த விஜய லதா பசி உயிர் போகுது முதல்ல நம்ம செருப்பு தொட்டுட்டு வெளியில் ஓடி விடுவோம் என்று வெளியே வந்து செருப்பை தொட அந்த செருப்பு அவளது காலில் மாட்டியதும் எடுத்து அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை.

ஏனென்றால் செருப்பு நிலத்தோடு ஒட்டிக்கொண்டு இருந்தது.

பப்ளக்காம் இருந்ததை பார்க்காமல் அது மேல் கால் வைத்து விட்டேனோ? எல்லோரும் நம்மை விட்டுப் போய்விடுவார்கள் என்று ஏற்கனவே பசிக்கிறது. நான் அதனால் பந்திக்கு முந்திக்கலாம் என்று வந்தால் இது வேற மாதிரி இருக்கிறது. பெரிய சோதனையா போச்சு சோறு முக்கியம் என்று வந்து சோதனையா போச்சு நம்ம கூட பொறந்தது நம்மள கண்டு கொள்ளாது.

பாரு அது வயிற்றை நிரப்பிக் கொள்ளத்தான் திரிகிறார்கள். இங்கு ஒருத்தி அசையாமல் நிற்கிறாள் என்று கவலைப்படுகிறார்களா? கிருஷ்ணவேணி அருகில் வந்தவர் விஜயலதா ஏன் இங்கேயே நிற்கிறாய் சாப்பிட வந்தவர்களுக்கு கூடமாட உதவி செய்யலாம் தானே? நம்ம வீட்டு விசேஷம் தானே நீ பாட்டுக்கு ஒரு இடத்தில் வந்து ஒதுங்கி நின்று இருக்கிறாய் இது என்ன நல்லாவா இருக்கிறது.

நான் வந்து மற்றவர்களுக்கு சோறு போடுகிறேன். என் வயிற்றுக்கு காந்து போய் கொஞ்ச நேரத்தில் கருவாடு ஆகிவிடும் போலிருக்கிறது . போகலாம் வா என்று இப்போது ரவிக்குமாறு அழைக்கவும் நீங்கள் வேற நானே கால் எடுக்க முடியாமல் நின்று கொண்டிருக்கிறேன். நீ என்ன புதைகுழியிலேயா விழுந்து இருக்கிறாய் முடியவில்லை என்று சொல்வதற்கு என்று கையைப் பிடித்து இழுக்கவும், சடார் என கீழே விழுந்தால் விஜயலதா நிழலுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top