• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
334
நீ உடல் நான் நிழல்
பாகம் -55


தேவ் ஆனந்த் அலைபேசிக்கு அழைப்பு வரவும் அவர்கள் இருவரையும் சேலை எடுக்கச் சொல்லி விட்டு கொஞ்சம் நகர்ந்து நின்று அழைப்பை ஏற்று
சொல்லுங்க கார்முகிலன்.

அண்ணா நீங்கள் மாலில் இருக்கிறீர்களா? உங்கள் கார் இங்கே இருக்கிறது. அது தான் நீங்கள் இங்கே இருந்தால் நானும் வருவதற்கு .

டேய் அடங்குடா உன்னை இங்கே வரச் சொன்னதே நான் தான் அது மனசலாயி அதனால் ஓவரா பில்டப் கொடுக்காமல் இயல்பா வருகிற மாதிரி வாடா.

சரிங்க பாஸ்.

டேய் நான் என்ன கொள்ளக் கூட்டத்தின் தலைவனா?

இல்லைங்க சகலை இப்போ ஓகே வாங்க அண்ணா..

நீ இப்படியே பேசிட்டு பேளடு போட்டாய் என்று வை நான் உனக்கு பூவிழியை மணமுடித்து வைக்க யோசிக்க வேண்டி வரும்.

அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள் அண்ணா ஒரு கன்னிப் பையனின் காதல் நிராசை ஆகி விடும். அந்தப் பாவத்தை நீங்க ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறியவனது குரல் மிக அருகில் கேட்கவும் போனை உடனே அனைத்தவன்
இயல்பாக பேசுபவர்கள் போல் தேனருவி பூவிழி முன்பு நடந்து கொண்டார்கள்.

தேனருவி முதலில் கார்முகிலனைப் பார்த்து விட்டாள். அடியே பூவிழி உன் ஆளு வந்துட்டாண்டி நீ ஏதாவது அவனுக்கு மெசேஜ் செய்தாயா?

ஏன் தேனுக்கா நான் உன் கூடத் தான் இருந்தேன்.

ஆமால்ல நீ அவனை வில்லன் சார் என்று சொல்லி சொல்லியே
கவுத்துட்டுயா? இது எல்லாம் முதலிலேயே டிரையல் பார்த்துக் கொண்டு கடைசியில் என்னிடம் வந்து டிராமா போட்டாயா?

தேனருவி நாம் அந்தப் பக்கம் போய் எடுக்கலாம் என தேவ் ஆனந்த் அழைக்கவும்.

தேனருவி உடனே பூவிழி அவளும் நம் கூடவே வரட்டும் என்று கூறிட. நீங்கள் போய் பாருங்க தேனுக்கா நான் இங்கே இருப்பவைகளைப் பார்க்கிறேன்.

கார்முகிலனுக்கு மனதில் காத்தாடி பறந்தது.

(அச்சோ நீங்கள் ரைட்டர் ஜி யை திட்டுவது எனக்கு கேட்கிறது. ஐ மீன் நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், இன்பச் சாரல் அதாவது தென்றல் அடித்தது..

நீங்கள் சொல்வதில் ஏதாவது லாஜிக் இருக்கா மேடம்..

ஹி ஹி ஹி ஹி அது அந்த நிழல் கூட ரௌண்டிங் அடித்து நம் மூளையும் கொஞ்சமே கொஞ்சமா தேய்ந்து போச்சு.)

பிளவர் ஐ நல்லா இருக்கிறாயா? நீ என்னமோ? ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கிறாயா? நான் வேண்டும் என்றால் உனக்கு உதவி செய்யட்டுமா?

வில்லன் சார் அப்படியே என்னிடம் எதுக்கு நூல் விடுகிறீங்க.. நீங்க இங்கே எதுக்கு வந்தீங்களோ? அதை மட்டும் பாருங்கள் என்று கூறியவள் அந்தப் பக்கம் திரும்பி சிரித்துக் கொண்டு இருந்தாள்.

பூவிழி என்ன சொன்னாய்? வில்லன் சாரா என்னடி பெயர் வைத்து இருக்கிறாய்? என்னைப் பார்த்தா அப்படியே அதர்வா மாதிரி இருக்கிறேன் என்று பக்கத்து வீட்டு ஆண்ட்டி சொன்னாங்க நீ என்ன என்னை வில்லன் சார் சொல்லி விட்டாய்? இரு இங்கே வேலை செய்பவர்களைக் கேட்கலாம் நான் வில்லன் மாதிரி இருக்கிறேனா?

சிஸ்டர் என்று அவர் மற்றவர்களை அழைக்கும் முன் அவனின் வாயைப் பொத்தியவள். நீங்கள் வில்லனாக இருந்தாலும் ஹீரோவாக இருந்தாலும் எனக்கு என்ன வந்துச்சு. ஆளை விடுங்க சார் என்று இப்போது தனது வேலையை தீவிரமாக செய்து கொண்டு இருந்தாள்.

அப்படி என்ன வேலையா? அதுதான் வேறு வேறு என்று அனைத்து சேலைகளையும் கலைத்துப் பார்ப்பது.

தேனருவி மாமா சார் எனக்கு இந்த புடவை எடுக்குவது பற்றி எதுவும் தெரியாது அதனால் நீங்களே உங்களுக்கு பிடித்தது போல் எடுத்துக் கொடுங்கள் என்று கூறிவிட்டு அங்கே இருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

அவளின் நிறத்திற்கு ஏற்ப இரண்டு சேலைகளை தேவ் ஆனந்த் செலக்ட் செய்து வைத்தான் ஒன்று கரும்பச்சை மற்றொன்று பேபி பிங்க் இரண்டும் செம அழகாக இருந்தது.

அவள் மேல் வைத்து கட்டிக் காண்பித்தனர் அங்கே வேலை செய்பவர்கள். அழகாக இருப்பதை பார்த்தவன் அவை இரண்டையும் பில் பே செய்து வாங்கி விட்டு இப்போது பூவிழி இருக்கும் இடத்திற்கு வந்து என்ன எஞுத்தாச்சா பூவிழி போகலாமா?

நான் இன்னும் எதையும் எடுக்கவே இல்லை.

இந்தாங்க மேம் நீங்க செலக்ட் செய்து வைத்தது என்று பில் போட்டு இருந்த கவரைக் கொடுத்தனர்.

ஆவென கார்முகிலனைத் தான் பார்த்தாள். அவன் கண்ணை மூடித் திறக்கவும்.

பூவிழியையே பார்த்துக் கொண்டு இருந்த தேனருவி என்னமா கண்ணிலேயே பேசிக் கொள்கிறார்கள். சரி பிக்கப் என்று இப்போது தேவ் ஆனந்த் பார்க்கவும்.

அவனோ மேலே இருக்கும் டியூப் லைட் காண்பித்து நீ அது மாதிரி என்று குறும்பு சொன்னான். அதில் தனது கோழிக் குண்டு கண்கள் இனண்டையும் வைத்து
முறைத்துப் பார்த்தாள்.

உடனே மலை ஏறி விடாதே டி என்னால் இனி உனக்கு செரகு அடிக்க முடியாது.

அப்படீனா எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் என்று கேட்க வா என்று அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கித் தந்தான். வயிறு நிரம்பும் அளவு சாப்பிட்டவள் இப்போது தன்னையே பார்க்கும் தேவ் ஆனந்த் பார்த்து மாமா ஏன் என்னையவே பார்க்கிறீங்க என்று தான் கேட்டாள்.

உன் வாயைச் சுற்றி இத்தனை அப்பி வைத்து இருக்கிறாய்? அது தான் இந்த சின்னப் பிள்ளையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய?

அவள் முறைக்க அது எல்லாம் நானும் பெரிய பெண் தான் என்று அவள் பேச.. சரி சரி வா என்று இப்போது கார்டு செலக்ட் செய்ய அழைத்துச் சென்றான்.

ஆமா இது எதுக்கு இப்போது செலக்ட் செய்ய வேண்டும். அது தான் ஏற்கனவே அவ்வளவு பத்திரிகை இருக்கிறதே.

இது நாம் இருவரும் சேர்ந்து கல்லூரியில் கொடுப்பதிற்கு தான் ஹனி சரி வா என்று பூவிழி என்று அனைவரும் தேவையான திங்ஸ் வாங்கி விட்டு இப்போது வீடு வந்து சேர்ந்தனர்.

தேவ் ஆனந்த் வீட்டிற்குள் வரும் போதே அத்தை என்று அழைத்துக் கொண்டு தான் வந்தான். கமலா அம்மா இங்கே தான் இருந்தார்கள்.

வாங்க மாப்பிள்ளை நான் கூட இவர்கள் இருவரையும் இப்போது கடைக்கு அழைத்துச் செல்லலாம் என்று தான் கமலா அண்ணியை வரச் சொன்னேன். பரவாயில்லை எனக்கு ஒரு வேலை மிச்சம்.

சரிங்க அத்தை நான் நாளைக்கு காலையில் உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல வருகிறேன் என்று அவர்களிடம் கூறிவிட்டு சென்றான்.

தேனருவி அவளுக்கு எடுத்த துணிகளை காண்பித்தாள். ஏய் பூவிழி உன்னுடையதை காண்பி டி நான் அங்கே நன்றாகவே பார்க்கவில்லை.

இதோ நானே பார்க்கவில்லை என்று வாய் தவறி சொல்லவந்தவள் சுதாரித்துக் கொண்டு இப்போது அந்தப் பார்சலை பிரித்துக் காண்பித்தாள்.

தாவணி பாவடை தான் இருந்தது. மஞ்சள் நிறத்தில் பாவாடை தாவணி சிவப்பு நிறத்தில் அத்தனை அழகாக இருந்தது.

மற்றொன்று லெஹன்ஹா இருந்தது கோல்டன் கலரில் இருந்தது. அம்மா டயர்டாக இருக்கிறது என்று தேனருவி அவளின் அறைக்குள் சென்றாள்.

உள்ளே சென்றதும் மின்விசிறியை அதிக வேகத்தில் வைத்து விட்டாள். அது தான் நிழலின் இருப்பிடம் அது படுத்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருந்தது.

தேனருவி மின் விசிறியைப் போட்டு விட்டதும் அது வேகமாக சுற்றியது. சுற்றிய வேகத்தில் நிழல் வந்து அவளின் பெட்டில் பொத்து என்று கீழே விழுந்தது.

அதில் காண்டானா தேனருவி ஏய் லூசு உனக்கு அறிவு என்பதே இல்லை. கொஞ்சமாவது புத்தி இருந்தா வந்து இப்படி பயக்க வைப்பாயா?

எது நீ பயக்கிறவளா? அதை நான் நம்பினால் கூட இந்தக் கதையைப் படிக்கிறவங்க நம்ப மாட்டாங்க வர வர நான் நிழலா இல்லை நீ நிழலா என்று தான் எனக்குத் தெரியவில்லை.

நான் கல்லூரித் தோட்டத்தில் எத்தனை கெத்தாக சுற்றிக் கொண்டு இருந்தேன் தெரியுமா?

என் பவர் என்ன வென்று தெரியாமல் கேவலமாக நீ பேசுகிறாய்? உனக்கு ஆபத்து வந்தால் நான் தான் உன்னைக் தக்க சமயத்தில் வந்து காப்பாற்றுகிறேன். ஆனால் உனக்குத் தான் அது மனசில் பதியவே மாட்டேங்குது.

அதுக்காக உன்னை என் கூடவே வைத்துக் கொண்டு சுற்ற வேண்டுமா? போ எனக்குத் தூக்கம் வருகிறது.

தேவ் ஆனந்த் வீட்டில் விஜயலதா அன்று இரவு என்ன நடந்து இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இப்போது சிசிடிவி புட்டேஜ் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இரவு அப்படி என்ன தான் நடந்து இருக்கும் எப்படி மூன்று பேரும் மூன்று திசையில் இருந்தோம். அதைத் தெரிந்து கொள்ளாமல் இன்று தூங்கப் போவதில்லை.

முதலில் ஒரு நிழல் தான் தெரிந்தது. பிறகு மிக அருகில் ஒரு மண்டையோடு தான் வந்தது. அதைப் பார்த்து மிரண்டவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் அதை ஜூம் செய்து பார்த்தாள். அவளின் முகம் தான் அதில் தெரிந்தது.

இது என்ன இது என் முகம் தான் அப்படீனா எனக்குள் ஏதாவது தீய சக்தி புகுந்து விட்டாதா?

நான் என்ன அவ்வளவு நல்லவளா? அய்யோ ஒரு ஆவி உள்ளே வரும் என்று முன்பே தெரிந்து இருந்தால் நான் நல்லா மேக்கப் போட்டு இருந்து இருப்பேனே. கொஞ்சம் அழகாகவாவது தெரிந்து இருப்பேன்.

இது என்ன பாட்டுச் சத்தம் கேட்கிறது என்று அந்தக் காட்சியை உற்றுப் பார்த்தாள். இது என்ன ரொம்ப தூரத்தில் இருந்து கேட்கிறது. அப்படீனா
யாரோ வேண்டும் என்று தான் இது போல் செய்து இருக்கிறாங்க என்று அவள் கண்டுபிடிக்க அந்தப் பாட்டு கொஞ்சம் கொஞ்சமாக மிக அருகில் கேட்டது.

பயத்தை தனக்குள்ளேயே வைத்து விட்டு இப்போது மீண்டும் பார்த்தாள். தொடர்ந்து ஒரு நிழல் தான் இருப்பது தெரிந்தது. இது என்ன நிழல் மட்டும் தான் தெரிகிறது. உருவம் தெரியவில்லை. அது தெரிந்தால் தானே இது யார் செய்த வேலை என்று தெரியும்.

தனது தந்தை அந்த மரத்தின் மீது இருந்து கீழே விடுவதைப் பார்த்தவள். அவரின் நிலையைப் பார்த்து சிரிப்பு வந்தது. இருந்தாலும் இன்றைக்கு இது போதும் என்று இப்போது அந்த இடத்தில் இருந்து எழுந்தவள் தனது அறைக்குள் சென்றாள்.

தனக்குப் பின்னால் யாரோ நடந்து வருவது போல் இருப்பது போல் இருக்கத் திரும்பிப் பார்த்தாள். வானத்திற்கும் பூமிக்கும் எதுவோ? நிற்பது போல்
இருந்தது.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top