• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
335
நீ உடல் நான் நிழல்
பாகம் - 54


தேனருவி பூவிழியையும் அழைத்துக் கொண்டு போகலாம் என்று தேவ் ஆனந்த் சொன்னான்.

இல்லைங்க அவளுக்கு இன்றைக்கு தேர்வு இருக்கிறதுங்க மாமா சார்.

சரி உன் பேக் எடுத்துக் கொண்டு வா என்று தேவ் ஆனந்த் கூறவும்.
இப்போது நான் போய் பேக் எடுத்துக் கொண்டு வந்தால் அனைவரும் தவறாகப் பேசுவார்கள்.

ஹேய் பொண்டாட்டி எதுக்குடி இப்படி பயந்து சாகுகிறாய்?

தேவ் ஆனந்த் அப்படி சொல்லியதும் தேனருவி இங்கே வேறு யாராவது இருக்கிறார்களா? என்று தான் பார்த்தாள்.

அவளின் செய்கை அவனுக்கு சிரிப்பு வந்தாலும். அவள் முன்பு சிரித்தால் தொலைத்து விடுவாள் என்பதால் அமைதியாக இப்போ எதுக்குடி இப்படி பேந்தப் பேந்த விழிக்கிறாய்?

வா போகலாம் என்று அழைக்கும் போது பூவிழி தேனுக்கா இந்தா உன் பேக்.. ஏய் நீ எக்ஸாம் எழுதவில்லையா?
அக்கா இன்றைக்கு டெஸ்ட் இல்லை. அது அடுத்த வாரம் போஸ்ட் பான்ட் ஆகி விட்டது.

சரி வாங்க போகலாம் என்று இருவரையும் அழைத்துக் கொண்டு தேவ் ஆனந்த் தனது கார் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

பிரின்ஸ்பால் கோபால் சாரிடம் தேவ் ஆனந்த் நேற்றே சொல்லி விட்டான். தேனருவியைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றும். அவள் எனக்கு மாமா பெண் தான் என்றும் இது வீட்டில் அரேன்ஜ் செய்தது. அதனால் தேனருவியை யாரும் தவறாகப் பேசி விடக் கூடாது. இன்னும் மூன்று மாதங்கள் தான் இருக்கிறது. அதனால் அவள் இனி வீட்டில் இருந்து கொள்வாள். தேர்வுக்கு மட்டும் தான் வருவாள் என்று ஏற்கனவே அவரிடம் சொல்லி இருந்தான்.

தேனருவி பின்னால் போய் அமர்ந்து கொண்டாள். அதற்கு தேவ் ஆனந்த் முறைத்தாலும் பூவிழியும் இருப்பதால் கண்ணாடியை சரி செய்து வைத்தான் அவளைப் பார்ப்பதற்கு வசதியாக.

அதற்குள் அங்கே வந்த நிழல் அடடே கொஞ்சம் மிஸ் ஆகிப் போச்சே தேனருவி போய் விட்டால் அப்புறம் என்ன இன்றைக்கு கல்லூரியில் ஒரே குஜால் மஜால் தான் முதலில் எங்கே ஆரம்பிக்கலாம் என்று யோசித்த நிழல் எதிர்க்க வந்தாங்க மீரா மேம்.

ஆடு தானாக வந்து சிக்கும் போது நாம் எதுக்கு யோசிக்க வேண்டும் என்று இப்போது மீரா மேம் பின்னாலே போச்சு அவுங்க இப்போது தான் வகுப்பறையில் இருந்து டெஸ்ட் வைத்த பேப்பர்களை எடுத்துக் கொண்டு வந்தார்.

மீரா உன் மேல் ஊத்தப் போகிறேன் ஜீரா என்று மரத்தின் அடியில் நின்று இருந்தவர் மீது பிசுபிசு வென்று எதுவோ கொட்டியது.

அடடா காக்கா நீ செய்தாயே ஜோக்கா நான் செய்ய வேண்டியதை நீயே செய்து விட்டாய். அதனால் நான் உனக்கு கேண்டீன்ல இருந்து வடை சுட்டுட்டு வந்து கொடுக்கிறேன்.

காக்கா சொன்னது நீயே நிழல் எப்படி வடை சுடுவாய் என்று கேட்டது.

அதெல்லாம் உனக்கு எதுக்கு கவலை நான் உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன் என்று கூறிவிட்டு இப்போது மீரா மேம் கையில் இருந்த விடைத்தாள் அனைத்தும் ஒவ்வொன்றாகப் பறந்தது. மேலே பறக்கும் பலூன் போல் பறப்பதைப் பார்த்து அந்த மேம் பயந்து கொண்டு நின்று இருந்தாங்க இது என்ன நேற்றிலிருந்து எதுவுமே சரி இல்லை.

யாராவது நம் மேல் சூனியம் ஏவி விட்டார்களோ?

ஆமா நீயே சூனியக்காரி மாதிரி தான் இருக்கிறாய்? இதில் உனக்கு யாராவது சூனியம் வைப்பார்களா? என்று நிழல் சொல்லியது.

மீரா மேம் இது என்ன காக்கா பேசுகிறது. பேசாமல் இதை ரீல்ஸ் எடுத்துப் போட்டு பேமஸ் ஆகி விடலாம் என்று நினைத்தவளை.

ஆமா உன் மூஞ்சியை நீ ரீல்ஸ் எடுத்துப் போட்டு பாரு அப்புறம் வானத்திலிருந்து எரி நட்சத்திரம் உன் மேலே நேரா வந்து விழுகும்.

ஏன் காக்கா நீ இப்படி கருப்பா இருக்கும் போது இத்தனை லொள்ளு பேசுகிறாய்? நான் எவ்வளவு சிவப்பாக இருக்கிறேன் என்று மீரா மேம் மனதில் நினைக்க.

ஆமா மா உன்னை மாதிரி தான் நிறையப் பேர் சுவற்றில் பூச வேண்டிய பெயிண்ட் எடுத்து முகத்தில் அப்பிக் கொள்கிறாங்க மழை வந்தால் நரியின் சாயம் வெளுத்தது போல் உங்கள் சாயம் வெளித்தா உங்களையே உங்களுக்கு அடையாளம் தெரியாது.

கோசலை மேடம் அந்த வழியாக வந்தவர்கள் மீரா மேம் இங்கே என்ன தனியாக நின்று யார் கூடப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். என்ற யோசனையில் அருகில் வந்தார்கள்.

கோசலை மேடம் வருவதைப் பார்த்து கொசுவலை மேடம் வந்துட்டாங்க இவுங்க இரண்டு பேருக்கும் போர் மூட்டி விடலாம் என்று இப்போது நினைத்த நிழல் இருவரின் அருகில் சென்று நின்றது.

என்ன மீரா மேம் இங்கே நின்று கொண்டு மேலே மரத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே ஏன் குரங்கு ஏதாவது இருக்கிறதா?

கோசலை மேம் இப்போது எதுக்கு என்னை குரங்கு என்று சொல்கிறீர்கள். நீங்கள் தான் செனைப் பன்றி மாதிரி இருக்கிறீர்கள்.

நீங்கள் என்ன இவ்வளவு கேவலமாகப் பேசுகிறீர்கள். வயதிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூட உங்களுக்கு தோன்ற வில்லையா?

ஆமா நீ என்னை குரங்கு என்பாய். நான் அதைக் கேட்டு கொண்டு பேசாமல் வாயைப் பொத்திக் கொண்டு செல்ல வேண்டுமா?

மீரா உனக்கு காது கேட்கவில்லையா? ஏன் இப்படி தரக்குறைவாகப் பேசுகிறீர்கள். காலையில் நன்றாகத் தானே இருந்தீர்கள்.

அதற்குள் ஆபீஸில் இருந்து பியூன் வரவும் நாராயணசாமி இவுங்களுக்கு எதுவோ? ஆகி விட்டது. அது தான் நான் ஏன் இங்கே நின்று இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவுங்களுக்கு புரியவே இல்லை. சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள்.

நடுத்தெரு நாராயணசாமி வந்து விட்டார். இதுங்களே மொத்திட்டு கிடக்கட்டும் என்று இப்போது நிழல் கிரவுண்ட்டிற்கு சென்றது.

மாணவர்கள் எல்லாரும் பஸ்கி எடுத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தனர்.

சுதாகரன் அங்கே விளையாண்டு கொண்டு இருந்ததைப் பார்த்து விட்டது நிழல் அடேய் மச்சி நீ இங்கே தான் விளையாண்டு கொண்டு இருக்கிறாயா? உன்னை பஜ்ஜி மாதிரி மொக்கி விடுகிறேன் பார் என்று அவனின் அருகில் சென்று நின்று கொண்டது.

புட் பால் விளையாண்டு கொண்டு இருந்தவன் காலால் பந்தை உதைத்து நெட் உள்ளே போடும் போது அந்தப் பந்தை வெளியே வந்து விழுந்தது.

ஐ ஜாலி இது போல் நாம் இது வரை விளையாடியதே இல்லை. தேனருவி நல்லா அவள் நோட்டில் எழுத்து வேலை வாங்கியே செத்து ஆவியா நிழலா சுத்துகிற என்னையே சக்கை மாதிரி புளிந்து விட்டால் நமக்கு நல்லா எனர்ஜி கிடைக்கும் இன்று நிறைய சந்தோசமாக இருக்கிறானே. நேற்று சாக்கடையில் விழுந்து எழுந்து இன்று கல்லூரி வந்து விட்டானே.

சுதாகரன் உன் பக்கத்தில் வந்தாலே பன்றி வாசம் தான் அடிக்கிறது என்று கவின் சொல்ல டேய் ஏண்டா அதை நியாபகப் படுத்துகிறீர்கள்.

டேய் அப்படீனா நீ தினமும் பன்றி மேய்க்கிறாயா? அது தான் இத்தனை வாசனை திரவியங்கள் போட்டு வருகிறாயா? அதையும் மீறி பன்றி வாசம் அடிக்கிறது.

சுதாகரன் அதை எதையும் காதில் வாங்காமல் பந்து நெட்டில் விழுக வைக்கப் போராடினான். ஆனால் குறுக்கே நிற்கும் நிழல் அதை உள்ளே விழுக விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தது.

டேய் பந்து போகவே மாட்டீங்கிறது. நெட் முன்னால் எதுவோ இருக்கிறது என்று அதை தட்டி விடும் நோக்கில் வேகமாக சென்றான்.

நிழல் ஒதுங்கி நின்று கொண்டது இப்போது ஓடி வந்தவன் நேராக நெட் உள்ளே சென்று விழுந்தான்.


அங்கே இருந்தவர்கள் அனைவரும் கொல் என்று சிரித்தனர். ஐயோ செம நோஸ்கட் ஆகி விட்டதே என்று நினைத்தவன். சரி என்று எழுந்து அவன் நடந்து வந்ததைப் பார்த்தவர்கள் சிரித்து விட்டனர்.

டேய் சுதாகரன் இது எதுக்குடா வாத்து மாதிரி நடந்து வருகிறாய் ? ஒழுக்கமாக நடந்து வாடா கேள்ர்ஸ் எல்லாரும் பார்க்கிறாங்க என்று சொன்னார்கள். அதை எல்லாம் அவன் எங்கே காதில் வாங்கினான் அவன் வாத்து போல் நடக்கவும் அங்கே சில்பா மற்றும் மலர்விழி இருவரும் அவன் நடப்பதை தங்கள் செல் பேசியில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டனர்.

இந்த லூசுகளுக்கு விளையாட்டு காட்டி நான் லூசாகி விடுவேன் போல் இருக்கிறது. என்று பேசிய நிழல் இன்றைக்கு ஏதோ புது வாத்தி வந்து இருக்கிறாரே அவரையும் சுத்திப் பார்க்கலாம் என்று அருகில் சென்று..

சுத்திச் சுத்தி வந்தீங்க சுட்டும் விழியால் சுட்டீக என்று பாட்டுப் பாடிக் கொண்டு ஆடியது. அவர் அருகில் சென்றதும். சரவணன் என்ற பெயரில் இருக்கும் கயவனைக் கண்டு கொண்டது.

காத்தவராயன் ஆளாடா நீ இரு என்கிட்ட இருந்து நீ எப்படி தப்பித்துக் கொள்கிறாய்? என்று நானும் பார்க்கிறேன் என்ற நிழல் இங்கே வேவு பார்க்க வந்தாயா?

நான் தான் இந்தக் கல்லூரியை காக்கும் முனிடா என்ற நிழல் இப்போது அந்த ஆறு விரல் அல்ப பிறவிகளை கருவறுக்கத் தான் நான் இந்தப் பிறவி எடுத்த
நட்சித்திர மச்சம் கொண்ட ஜாதகி தேனருவி. அவளுக்கு தீங்கு செய்யட்டும் அவுங்க நான்கு பேருக்கும் இங்கேயே நரகத்தைக் காட்டுகிறேன்.

தேனருவி பூவிழி இருவரையும் அழைத்துக் கொண்டு பட்டு செக்க்ஷன் வந்தனர். ஒவ்வொரு சீலைக்கும் ஒரு ப்ளவுஸ் தனா?

மாமா எனக்கு துணி எல்லாம் வேண்டாம். ஆனால் நாளைக்கு நான் சுடிதார் போட்டு வரட்டும்ங்களா?

உனக்கு பிடித்ததைப் போட்டு வா என்று கூறியவன். தனது அழைபேசியை எடுத்து காதில் வைத்து, சொல்லுங்க கார்முகிலன் நான் இங்கே பக்கத்தில் தான் ஒரு ஜோலியாக வந்தேன். அது தான் உங்கள் கார் இங்கே உள்ளே வருவதைப் பார்த்து தான் நான் இங்கே தான் திரும்பவும் வந்து விட்டேன்.

இப்போது உங்களுக்கு என்ன பிரச்சனை எதுக்காக நீங்கள் பூவிழி மேல் ஏதாவது ஒரு க்ரஸ் ஆகி வந்துவிட்டீர்கள். அவளிடம் என்ன சொல்லி தப்பிப்பது.

அண்ணா ஏதாவது ஐடியா கொடுங்கள் அண்ணா? பூவிழிக்கும் என் மேல் ல்தகாசைஆ இருக்கிறதுங்க. ஒரு காதல் பறவையைப் பிரித்து வைக்க மாட்டீர்கள் தானே.

டேய் உனக்கு இருந்தாலும் இத்தனை குசும்பு கூடாது.

உன்னையப் போன் செய்து வரச் சொன்னதே நான் தான் நாளையே நீ என்னை கூப்பிடவில்லை சகலை என்று என் மார்பில் வந்து தஞ்சம் புகுந்து கொண்டால் நான் என் மனைவிடம் சிக்கி சின்னா பின்னமாகி விட வேண்டும்.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top