Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 332
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 53
பாகம் - 53
தேவ் ஆனந்த் வரவேற்க அனைவரும் நின்று இருக்க.. அங்கு இருக்கும் பேரறிஞர்கள் மற்றும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேவ் ஆனந்த் கே. வி குரூப் சி. இ. ஓ. என்று தெரியும். தேனருவி மற்றும் மற்ற மாணவ மாணவிகளுக்குத் தெரியாது தேவ் ஆனந்த் தான் என்று அதனால் புது எம் டியை வரவேற்க அவளும் நின்று இருந்தாள்.
அப்போது தேவ் ஆனந்த் கார் உள்ளே வந்தது. நேற்றைய தினத்தைப் போலவே இன்றும் கோட் சூட்டில் தான் வந்து இருந்தான்.
தேனருவிக்குத் தான் நான் சொல்லியும் இத்தனை அழகா ஹீரோ மாதிரி வருகிறாரே என்று விழிகள் சுருக்கிப் பார்த்தாள்.
அவளைத் தூரத்திலேயே பார்த்து விட்டான். தேனருவியின் சிறு பிள்ளைத் தனமான செயலில் சிரிப்பு வந்தாலும் அதை மனதிற்குள் மறைத்தவன் சுற்றிலும் தன்னை வரவேற்க நின்று இருப்பவர்களைப் பார்த்து இது எதுக்கு சார் நான் என்ன இன்றைக்குத் தான் முதல் நாள் கல்லூரிக்கு வருகிறேனா?
அது உங்கள் பெருந்தன்மை சார் ஆனால் நாங்கள் உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
தேவ் ஆனந்த் சிரித்துக் கொண்டு இப்போது அனைவரிடமும் வாழ்த்தைப் பெற்றுக் கொள்வதைப் பார்த்து தேனருவி என்ன? புது எம் டி தேவ் ஆனந்த் தானா? அடப்பாவி மாமா சார் நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று அவள் அவனைப் பார்த்து நின்று கொண்டு இருக்க.
அவள் அருகில் வந்தவன் ஹனிபால்ஸ் மௌத் க்ளோஸ் பண்ணு இல்லாட்டி உன் வாயில் ஜொள்ளு பால்ஸ் தான் ஒழுகும் என்று சிரிக்காமல் அதே நேரம் யாருக்கும் தெரியாமல் காதுக்கருகில் சொல்லி விட்டு போய் விட்டான்.
இத்தனை நாட்கள் தங்களது வகுப்பு ஆசிரியர் மற்றும் சக பணியாளராக இருந்தவர் இன்று கல்லூரி முதல்வர் என்பதால் அவனிடம் இயல்பாக பேசியவர்கள் கூட அருகில் வருவதற்கு பயப்பட்டனர்.
மீட்டிங் ஹாலுக்கு வந்தவன் அனைவருக்கும் வணக்கம்.
இந்தக் கல்லூரியை வாங்குவது என்பது எங்கள் குடும்பத்தில் நீண்ட நாட்களாக முடிவு எடுத்து வைத்து இருந்தனர். நான் ஒப்புதல் அளிக்க தான் தாமதம் ஆகி விட்டது. சில கசப்பான சம்பவங்கள் நடந்ததால் தான் இறுதியாக நேற்றே இந்த கல்லூரி வாங்கி விட்டோம்.
இத்தனை நாட்களாக கோபால் சார் தான் பிரின்ஸ்பால் அது இனியும் தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
என்னைக் கண்டு விலகிச் செல்லாமல் அனைவரும் எப்போதும் போல் இயல்பாக இருங்கள். நானும் இயல்பாக இருப்பேன். இன்று முதல் உறுதியான முடிவு எடுங்கள் உங்களால் கல்லூரிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது என்றால் அதற்கு காரணமாக இருப்பது ஆசிரியராக இருந்தாலும் நோ எக்ஸ் கியூஸ், கல்லூரி என்பது பொழுது போக்கும் இடமில்லை. நன்றாகப் படித்து கேம்பசில் நல்ல வேலை வாய்ப்பைப் பெற்று உங்கள் எதிர் காலத்திற்கு தேவையான வளத்தை பெற்றுக்கொள்ள நல்ல இடம். அதைப் பயன்படுத்தி கொள்ளுங்கள். என்று நீண்ட உரையை பேசி முடித்தவன். இப்போது அனைவரிடமும் நன்றியைத் தெரிவித்து உரையை முடித்தான்.
அனைவரும் கலைந்து சென்றும் இந்த ஹனிபால்ஸ் நேற்று இரவு போன் பேசும் போது சொல்லவே இல்லை. நேற்று பகலிலேயே இவர்கள் கல்லூரியை வாங்கி இருக்கின்றனர். எனக்குத் தான் தெரியவில்லை.
இவளுக இரண்டு பேருக்கும் தெரிந்தால் காரித் துப்பி விடுவார்கள்.
தேனு உனக்கு ஏற்கனவே தெரியுமா? இனி கல்லூரியே உன்னுடைது எங்கள் கூட பேசுவியாடி என்று அவளிடம் கேட்க.
பார்த்தீங்களா? நீங்க தாண்டி என்னையே ஒதுக்கி வைத்து பேசுகிறீர்கள். நான் அதுபோல ஒரு கேரக்டர் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இருந்தும் என்னைத் தவறாக நினைத்து விட்டீர்களே என்று கூறிவிட்டு வகுப்பு அறையை நோக்கிச் சென்று விட்டாள்.
எங்கே அவர்கள் முன் நின்று மேலும் அவர்கள் ஏதாவது கேட்டு பதில் சொல்லும் முன் அழுது விடுவோமோ? என்று பயந்து தான் அவள் வகுப்பறைக்குள் சென்று அமைதியாக அமர்ந்து விட்டாள்.
ஏண்டி எருமை சில்பா இப்படி அவளிடம் கேட்டாய்? இப்போது பார் அவள் கோபித்துக் கொண்டு போய் விட்டாள். அவளுக்கு தெரிந்து இருக்கும் பட்சத்தில் நம்மிடம் சொல்லி இருப்பாள். இது வரை நம்மிடம் ஏதாவது மறைத்து இருக்கிறாளா?
சாருக்கும் அவளுக்கும் திருமண முடிவாகி இருந்ததையே நம்மிடம் மறைக்காதவள் இப்போது தான் இந்த விடயத்தை நம்மிடம் இருந்து மறைக்கப் போகிறாளா? கொஞ்சம் யோசித்துப் பேசி இருக்க வேண்டும்.
சரி விடுடி மலர் வா போகலாம். அவளை சமாதானம் செய்யலாம். அவள் நேற்று நடந்ததையும் சேர்த்து குழப்பிக் கொள்வாள்.
சில்பா மலர் இருவரும் தேனருவியின் இரு பக்கங்களிலும் சென்று அமர்ந்தனர். தேனருவி இவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் வேறு ஒரு புக் எடுத்து வைத்து படித்துக் கொண்டு இருந்தாள்.
சில்பா மலர்விழி இருவரும் இவளை நெருக்கி அமர்ந்து கொண்டு பாடத்தில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் பாடத்தின் நடுவில் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
உங்களுக்கு என்னடி பிரச்சினை என்று இப்போது சத்தமாக கேட்கவும் வகுப்பில் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
அவளின் அதீத சத்தத்தில் சில்பா மலர் விழி இருவரும் நகர்ந்து அமர்ந்து விட்டனர்.
தேனருவிக்கு ஏனோ மனதுக்கு வருத்தமாக இருந்தது. தேவ் ஆனந்த் தன்னிடம் சொல்லாமல் இருந்ததிற்கு தனது தோழிகள் மேல் நான் ஏன் இத்தனை கோபப் படவேண்டும். எல்லாம் என்னால் தான் என்று அவளை அறியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தாள்.
தோழிகள் இருவரும் இப்போது தேனருவி அருகில் வந்து அமர்ந்தனர்.
சில்பா எனக்கு ரொம்ப பசிக்கிறது. என்று கூறிய மலர்விழி நானும் டிபன் கொண்டு வரவில்லை. நீயும் கொண்டு வரவில்லை ரொம்ப பசிக்கிறது என்று கூறியவள்.
தேனு நீ என்னடி கொண்டு வந்து இருக்கிறாய்? என்று அவளது பேக்கில் கைவைத்து டிபன் பாக்ஸை வெளியே எடுத்தனர்.
தக்காளி சாப்பாடா தேனு அது தான் கமுக்கமாக எங்களுக்கு கொடுக்காமல் சாப்பிட ஆசைப்பட்டு எங்களோடு சண்டை போட்டாயா?
சில்பா எருமை எனக்கும் கொஞ்சம் வை என்று மலர்விழி அவளிடம் வாதிட இரண்டு பேரும் டிபன் பாக்ஸில் இருந்தவைகளை போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர்.
தேனருவிக்கு கோபம் வந்து விட்டது. நானும் பார்த்துட்டு இருக்கிறேன். ரொம்பத் துள்ளலாக இருக்கிறீர்கள். நம்ம மூன்று பேர்க்குள்ளும் இது வரைக்கும் பிரிவு என்பது இல்லை. ஆனால் எனக்கு இன்று ஒரு பயம் வந்து விட்டது.
நானும் உங்கள் கூடத்தான் பகல் முழுவதும் இருந்தேன். அதுவும் நேற்று நான் இருந்த நிலையில் எதையும் பற்றி யோசிக்கவில்லை. எருமைகளா?
மனசைக் காயப்படுத்தி விட்டு வந்து இப்போது சமாதானம் செய்கிறீர்களா?
தேனு சாரிடி இனி இது போல் உன்னிடம் பேச மாட்டோம் என்று இருவரும் காதைப் பிடிக்க ஹேய் சில்பா இருவரும் என் காதை எதுக்கு பிடிக்கிறீர்கள். உங்களை என்று இப்போது இருவரின் முதுகில் இரண்டு அடிகளை
அடித்தாள் தேனருவி.
தேனு பாலும் நெய்யுமா கொடுத்து உங்கம்மா உன்னை வளர்த்து வைத்து இருக்கிறார்கள். அது தாண்டி ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இறங்குகிறது.
தேவ் ஆனந்த் வகுப்பு அறைக்குள் வந்து விட இவர்கள் மூவரும் அடித்து விளையாடிக் கொண்டு இருந்ததைப் பார்த்தவன். இது என்ன பாடம் நடக்கும் இடமா? இல்லை சந்தைக் கடையா? என்று சத்தம் போட்டு விட்டு அனைவரிடமும் இனி மேல் நான் எடுத்து வந்த பாடத்தை இனி மேல் சரவணன் சார் தான் இனி எடுப்பார் என்று கூறியதும்
அனைவரின் முகமும் வாடியது.
ஹலோ ஹைஸ் எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது. எனக்கு இத்தனை நாட்கள் ஒத்துழைப்பு கொடுத்ததைப் போல் அவருக்கும் கொடுக்க வேண்டும். நான் இதே கல்லூரியில் தான் இருக்கிறேன். என்னை நீங்கள் அனைவரும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
தேனருவி நீ ஒரு நிமிடம் பிரின்ஸ்பால் அறைக்கு வா என்று கூறியவன் இப்போது அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
வகுப்பறையில் இருக்கும் சில பெண்களுக்கு எப்போது பார்த்தாலும் தேவ் ஆனந்த் சார் அவளையே அழைத்துச் செல்கிறார். ஏன் நாம் இங்கே எத்தனை பேர் இருக்கிறோம் ஒருவரையும் அழைப்பதில்லை. என்ற பொறாமையில் அவர்களுக்குள் முனுமுனுத்தனர்.
சில்பா மலர்விழி இருவருக்கும் தெரியும் என்பதால் அவர்கள் எதுவும் பேசவில்லை.
தேனருவி வாயைத் திறந்து தேவ் ஆனந்திடம் எதுவும் கேட்கவில்லை.
அவனும் அவளிடம் இதைப் பற்றி எதுவும் கேட்காமல் அவளை அழைத்துச் சென்றவன் வா இங்கே என்று அவளை தனது தனியறைக்கு அழைத்துச் சென்றவன். அவளிடம் ஹனிபால்ஸ் நீ நேற்று இருந்த மனநிலையில் நான் இதை உன்னிடம் சொல்லவில்லை. என்னை மன்னித்து விடுடி. உன் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ளாதேடி. பார்க்க சகிக்கவில்லை என்று அவளை வெறுப்பேற்றினான்.
மாமா சார் நான் உங்கள் கூட டூ பேச மாட்டேன் போங்க நீங்கள் எப்போதும் என்னை தனியாக இப்படி வெளியே அழைத்து வருவதால் வகுப்பில் என்னையும் உங்களையும் தவறாகப் பேசுகிறார்கள்.
சரி அதுக்கு என்ன பண்ணலாம்கிற?.
என்னங்க இப்படி பொறுப்பே இல்லாமல் பதில் சொல்கிறீங்க.
அவர்கள் வாயை அடைத்து விடலாமா?
எப்படியுங்க மாம்ஸ் இத்தனை பேர் வாயையும் அடைக்கிறது. என்று சீரியசாக பேசவும் தான் தேனருவி நீ இன்னும் சின்னப் பெண் தான் டி கொஞ்சமாவது திருமணம் ஆவது போல் நடந்து கொள்.
நான் என்ன சொல்கிறேன். நீங்கள் என்ன பொறுப்பே இல்லாமல் பதில் சொல்வதும் இல்லாமல், என்னைச் சின்னப் பெண் என்று சொல்லி விட்டீர்களே அதைத் தான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அதற்கு ஜான்சிராணி என்ன செய்யப் போகிறீங்க?
தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்கினாள்.
இந்தா இதைக் கொடுத்து விடலாமா? ஆனால் என்ன நீ கல்லூரிக்கு இனி வராதே நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போய் விட்டு வந்து
அனைவருக்கும் கொடுத்து விடலாம் சரியா?
ம் ம்..
இப்போது நாம் வெளியே போகலாம் போய் உன் பேக் எடுத்துக் கொண்டு பூவிழியையும் அழைத்துக் கொண்டு போகலாம் சரியா?
இல்லைங்க அவளுக்கு இன்றைக்கு பரீட்சை நடக்கிறது. அதனால் நான் மட்டும் தான் வர முடியும். சரி இப்போது நான் வகுப்பிற்குச் சென்றால் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். நான் என்ன செய்வது? முதலிலேயே சொல்லி இருந்தீர்கள் என்றால் கூட நான் இன்று விடுமுறை எடுத்து இருப்பேன்.
தொடரும்..