• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
332
நீ உடல் நான் நிழல்
பாகம் - 52


தேவ் ஆனந்த் கே. கே. வி குரூப்பின் ஒன் ஆப் தி சி. இ. ஓ என்று தெரிந்ததும் அவர்கள் தான் இந்தக் கல்லூரியை வாங்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும் வெகு விரைவில் கல்லூரியில் இருக்கும் பேராசியர்களுக்குப் பரவியது.

மீரா மேடம் தேவ் ஆனந்த் கூட காலையில் வாக்குவாதம் செய்ததும். தேனருவி அவருடைய மாமா பெண் என்று தெரிந்த பின் தான் அவளுக்கு அதிகமாக உதறல் எடுத்தது. இந்தக் கல்லூரியில் கிடைக்கும் சம்பளம் போல் மற்ற கல்லூரியில் கிடைக்காது.

சுதாகரன் அவனுக்கு நாம் டிகிரி கம்ப்ளீட் செய்தால் தான் கேம்பஸில் செலக்ட் ஆக முடியும் என்று தெரியும். இந்த மீரா மேடம் சொன்னாங்க என்று தேனருவி மேல் கைவைத்தது தவறு என்று காலதாமதமாக உணர்ந்தான்.

( அடேய் உங்கள் இரண்டு பேருக்கும் நிழல் தரை லோக்கலுக்கு வேலை செய்யக் காத்து இருக்கிறது.)

சுதாகரன் கல்லூரியில் பாதியில் உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு அவனது வீட்டிற்கு சென்றான். வண்டியில் செல்லும் போது அவனுக்கு லேசாக வயிறு வலிக்க ஆரம்பித்தது. ஒரு வேளை பயத்தில் வயத்தை கலக்குகிறது என்று நினைத்து மனதை கொஞ்சம் தெளிவுபடுத்த ஒரு பேக்கரியில் நிறுத்தி டீக்குடித்து செல்லலாம் என்று நினைத்து வண்டியை நிறுத்தினால் வண்டியில் பிரேக் பிடித்தாலும் வண்டி நிற்கவே இல்லை.

இது என்ன காலையில் நன்றாகத் தானே இருந்தது. இப்போது என்ன ஆச்சு. ஐயோ வண்டி என் கண்ட்ரோலில் இல்லையே நான் என்ன செய்வேன். ஐயோ எதிர்க்க பெரிய பெரிய லாரியா வருதே சுதாகரா உனக்கு சங்கு தான் என்று அவனே புலம்பி விட்டு பயத்தில் கை கால்கள் நடுங்க வண்டியில் இருந்து குதித்து விடலாம் என்று நினைத்து கீழே சாக்கடையில் விழுந்து விட்டான்.

சுதாகரன் கீழே விழுந்ததும் வண்டியும் கீழே விழுந்து ஆப் ஆகி விட்டது.

ச்சை என்ன கப் அடிக்கிறது என்று முகத்தை சுழித்தவாறு எழுந்து நின்றான். கொஞ்ச நேரத்தில் அவன் உடல் முழுவதும் அவனுக்கு அரிக்க ஆரம்பித்தது.

ஐயோ இது என்ன வம்பா போச்சு இப்போது இப்படியே போனா நாய் துரத்தும் எல்லாரும் பைத்தியம் என்று சொல்வார்களே என்று நினைத்தவன் முதலில் வண்டியை எடுத்து ஓரமாக நிறுத்தியவன். அருகில் இருந்த வீட்டின் கதவைத் தட்டினான்.

அந்த வீட்டின் கதவு திறந்தது. ஆனால் யாருமே இல்லை இது என்னது ஏதாவது பேய் வீடா இருக்குமோ? என்று உடனே வெளியே திரும்பிப் பார்க்க இப்போது கதவு அடைத்து இருந்தது.

உள்ளே இருந்து ஒரு குரல் மட்டும் வந்தது. நானே வருவேன். என்னைத் தருவேன். உன்னை எடுப்பேன் என்று அந்தக் குரல் அடங்கியதும் பயங்கர சிரிப்பு சத்தம் கேட்டது. அது அடங்கியதும் ஒரு பெண் நடந்து வரும் கொலுசியின் ஒலி கேட்டது.

சுதாகரன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு யார் நீங்க எனக்கு ஒரு உதவி வேண்டும் அது தான் இங்கே வந்தேன். வேண்டும் என்றே பயப்படுத்தாதீர்கள். நீங்கள் எனக்கு கொஞ்சம் தண்ணீர் மட்டும் கொடுங்கள் நான் என் மேல் இருக்கும் கழிவு நீரைக் கழுவிக் கொண்டு போய் விடுகிறேன்.

அது மட்டும் போதுமா? நான் வேண்டாமா? என் வெண்டைப் பிஞ்சு விரல்கள் உன் நெஞ்சில் கோலம் போட வேண்டாமா? என் வாழைத்தண்டு கால்களை நீ தீண்ட வேண்டாமா? நான் பிறந்து வளர்ந்து செழித்து நிற்கும் கன்னி என் மேனி தொட்டு விளையாட உனக்கு ஆசையில்லையா? என்று தேன் போன்ற குரல் வர.

சுதாகரன் மனதில் கொஞ்சும் அந்தக் குரலில் கொஞ்சம் அவனுக்குள் வேறு ஒரு ஆசையும் துளிர் விட தான் எதுக்காக வந்தோம் என்பதை மறந்து உள்ளே அடி எடுத்து வைத்தான்.

உள்ளே சென்றவன் திகைத்தான். அங்கே நிறைய பன்றிகள் தான் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஐயோ இது என் அழகான பொண்ணு இருக்கும் என்று வந்தால் ஒரே பன்றிகளா? இருக்கிறது.

இவன் உள்ளே சென்றதும் அந்த பன்றிகள் இவனைச் சூழ்ந்து விட்டது. ஒரு மூலையில் ஒரு பெண் அழகா திரும்பி நின்று கொண்டு இருந்தாள். சுற்றிலும் பன்றிகள் இருப்பது அவன் கண்ணுக்குத் தெரியவில்லை ஆனால் அந்தப் பெண்ணும் லோ கிப் சேலையும் கையில்லாத இரவிக்கையும் அவனுக்குள் என்னமோ? செய்தது.

( டேய் சுதாகரா உனக்கு இப்போது கூட சான்ஸ் இருக்கிறது. ஓடிப்போய் விடு இல்லாட்டி கோவை சரளா மேடம் பன்னிமேய்ச்சுட்டு சிநேகிதனே சிநேகிதனை இரகசிய சிநேகிதனை தான் பாட வேண்டும். அதுவும் கல்லூரி போகாமல் பன்றிகள் தான் மேய்க்க வேண்டும்.)

ஏக்ச்சுளா சுதாகரனும் சாக்கடையில் விழுந்து அதுவே நாற்றமாக இருக்கும் போது அவனுக்கு அங்கே இருக்கும் வாசம் தெரியவில்லை. கண்ணில் பலூன் பறக்க அந்தப் பெண்ணின் அருகில் சென்றவன்.

என்னங்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்று கிறக்கமாக கேட்கவும்.

சில்க் ஸ்மிதா போல் கண்ணிலே கவி பேச அவ்வளவு தான் சுதாகரன் அந்தக் கண்ணால் கவரப்பட்டு அருகில் சென்றான். அவனுக்குத் தெரியாதே அது நிழல் என்பது அப்பெண் உருவத்தை கட்டிப் பிடிக்கப் போனான்.

நிழலுக்கு எலும்பு நொறுங்கி விடும் போல மாப்பிள்ளைக்கு அத்தனை வெறி.

தேனருவியைத் தான் திட்டியது. இவளுக்கு அடிமையா வேலை செய்கிறேன். ஆனால் அவள் ஹார்லிக்ஸ் பூஸ்ட் இது எல்லாம் கொடுப்பதே இல்லை. இந்தப் பன்றி மேய்க்கும் பையன் என்னைய நிழல் என்று கூடத் தெரியாமல் கட்டிப் பிடிக்கிறான். ஹப்பா சரியான சாக்கடை என்று இல்லாத மூக்கைப் பொத்தியது நிழல்.

சுதாகரன் அந்தப் பெண்ணின் இதழ் அருகில் தன் இதழைக் கொண்டு சென்றவன் அப்போது தான் பார்த்தான் அந்தப் பெண்ணுக்கு உதடுகள் இல்லாமல் எலும்பு மட்டும் தெரிந்தது.

அய்யோ இது என்ன எலும்புக்கூடையா கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கிறேன் என்று அவன் யோசிக்கும் போது அந்தப் பெண் உருவம் பெரிய காட்டுப் பன்றியாக மாறியது. அவன் அதனிடம் சிக்காமல் ஓடிக் கொண்டு இருந்தான்.

எந்தப் பக்கம் ஓடினாலும் அதே இடத்திலே தான் நிற்பது போல் இருந்தது. ஒரு வழியாக கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தான்.

அந்த இடத்தை விட்டு வெகு தூரம் வந்தவனுக்கு ச்சை உனக்கு புத்தியே இல்லை ஏதோ பிச்சக்காரி பின்னால் போகிறாயே என்று அவன் மனச் சாட்சி அவனைக் கேலி பேசியது.

பேசாமல் கல்லூரிலேயே இருந்து இருக்கலாம். அப்போது தான் அவனுக்கு காலையில் தேனருவியிடம் தான் தவறாக நடந்து கொண்டது மண்டையில் உரைத்தது.

மீரா மேம் வீட்டிற்கு சென்ற நிழல் அவுங்க வீட்டை சுற்றி சுற்றி வந்தது.

உன்ன விட மாட்டேன் தேனருவிக்கு எத்தனை கெடுதல் நினைக்கிற நீ இப்பதான் ஒருத்தனுக்கு லாடம் கட்டிக்கிட்டு வந்து இருக்கிறேன்.

அப்போது காற்று பலமாக வீசியது மீரா மட்டும் தனியாக வசித்து வருவதால் அவளுக்கு பயமாக இருந்தது .ஜன்னல்கள் காற்றின் விசையில் படீர் என்று அடித்தது.

புயல் இருக்குதுன்னு சொல்லவே இல்ல ஆனாலும் ஏன் இப்படி காத்து அடிக்குது. எல்லா பக்கமும் இப்படித்தான் இருக்குதா என்று ஜன்னல் அருகில் சென்று பார்க்கிறாள் அருகில் இருக்கும் மற்ற வீடுகள் அமைதியாக இருக்கிறது. ஜன்னலை சாற்றலாம் என்று நினைக்கும் போது அங்கே ஒரு உருவம் வந்து எட்டிப் பார்க்கிறது.

அதில் பயந்தவள் வேகமாக தனது முகத்தை உள் பக்கமாக இழுக்கிறாள். ஆனால் வெளியே இருந்து ஒரு கை நீண்டு வந்து மீராவின் தலையை ஜன்னல் கம்பிகளுக்கு நடுவில் சிக்க வைக்கிறது.

சத்தம் போட்டு கத்துகிறாள் மீரா ஆனால் நாக்கு தான் வெளியே வருவது போல் இருக்கிறது. சத்தம் வெளியே கேட்கவே இல்லை நிழல் சொல்கிறது நீ செய்ததெல்லாம் உனக்கு திருப்பி இப்ப வருது என்று மீராவை காலை வரை இப்படியே கிட என்று கூறிவிட்டு மறைகிறது.

ஆனால் மீராக்கு எப்படித்தான் தலை அதுக்குள் சிக்கியது என்று தெரியாமலே நின்றிருந்தால். நிழல் பேசுவது யாருக்கும் கேட்காது தேனருவி ஒருவன் ஒருத்தியைத் தவிர,

இங்கெல்லாம் இந்த கூத்து நடத்திட்டு இருக்குது நிழல் ஆனா தேனருவி அங்க ஜாலியா தேவானந்த் கூட பேசிகிட்டு தூங்குகிறாள் அவளுக்கு தெரியாது இன்னமும் தேவானந்த் கல்லூரியை விலைக்கு வாங்கியது.

அவனும் இப்போதே சொல்ல வேண்டாம் என்று வேறு ஏதாவது பேசி அவளை கல்லூரி பத்தி பேசாமல் தூங்க வைத்தான்.

கல்லூரியில் காலையில் இருந்து நடந்ததைத் திரும்ப அவளுக்கு நினைவுகள் வராமல் அவன் வீட்டில் நேற்று இரவு நடந்தவைகளை சொல்லி சிரித்து கொண்டு இருந்தான்.

மாமா சார் நெசமாலுந்தான் சொல்கிறீர்களா? கோமாளி மாதிரி வைக்கோல் போரில் நின்று இருந்தாரா? நல்லவேளை அவர் தலைகீழாக விழுகவில்லை
வடிவேலு ஒரு படத்தில் அவருடைய தலை லவுட்டு ஸ்பீக்கரில் சிக்கி தலைமுடி கூம்பு மாதிரி நின்று இருக்குமே அது போல் ஆகவில்லை என்று சிரித்தவள் எனக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை என்று சிரித்துக் கொண்டு தூங்கினாள்.

மீரா தனது வீட்டில் ஜன்னலுக்கு வெளியே இருந்ததால் அவளுக்கு கடுமையாக கழுத்து வலி ஏற்பட்டது எப்படியோ காலை விடிந்தது.

அப்போ தூக்கத்திலிருந்து எழுபவள் போல் எழுந்தாள் அப்போது நாம் கண்டதெல்லாம் கனவாய் இரவு நடந்ததை நினைத்தவளுக்கு பார்க்கவே பயமாக இருந்தது.

கழுத்து பயங்கரமாக வலித்தது. கழுத்து மட்டும் கொஞ்சம் நீண்டு வந்தது போல் தெரிந்தது. உடனே கண்ணாடியில் சென்று பார்க்கும் போது தான் தெரிந்தது. அவளுக்கு அவள் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தது.

ஒரு இரவில் எப்படி கோரமாக பல் நீட்டிக் கொண்டு மூக்கு விடைத்துக் கொண்டு காதுகள் இரண்டும் நீண்டு கொண்டு கண் இரண்டும் முகத்தில் இருப்பதே தெரியாதது போல் உள்ளே இருந்தது. மறுபடியும் தனது கண்ணைத் தேய்த்து விட்டு இப்போது தனது கண் கழுத்து மூக்கு வாய் என்று ஒவ்வொரு உறுப்புகளாக தொட்டுப் பார்த்தவள் விழிகளைத் திறந்து பார்த்து அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்று பார்த்தாள்.

இரவு நடந்தது எல்லாம் கனவு என்று நினைத்து விட்டாள். சரி கல்லூரிக்கு நேரமாகியதை உணர்ந்து காலை வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

அனைவருக்கும் இன்று புதிய சேர்மன் வரவேற்க மலர்க்கொத்தோடு நிற்க தேனருவியும் அவளும் காத்து இருந்தாள். ஆனால் தேவ் ஆனந்த் வருவதை வரவேற்கத்தான்.. என்று தெரியாமலே.



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top