Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 330
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 51
பாகம் - 51
சுகுமாரன் தேனருவியைத் தன் கரத்தால் தாங்கிப் பிடித்தவன் அவளைத் தன் கையனைவில் வைத்து இருப்பது போல் தான் பார்க்கும் மற்றவர்களுக்கு தெரியும். தேவ் ஆனந்த் இந்த காட்சியைப் பார்த்தவனுக்கு தேனருவி மேல் தான் கோபம் வந்தது. இருந்தாலும் சுற்றிலும் அத்தனை பேர் நிற்கின்றனர். இவள் எதுவும் பேசாமல் கண்ணை மூடி நின்று இருந்தாள்.
தேனருவியைத் துரத்தி வந்த மலர்க்கொடி தான் ஹேய் தேனு நீ கீழே விழுகவில்லை முதலில் கண்ணைத் திறடி எருமை உன் ஆளு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குது. உன்னை ஒருத்தன் அனைத்துப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் முதலில் அவன் கையைத் தட்டி விடுடி என்று அவளின் காதுக்குள் முனங்கி விட.
அதில் அதிர்ந்து விழித்த தேனருவி தன்னைப் பிடித்து இருந்த சுகுமாரனை கன்னத்தில் விட்டால் ஒரு அரை டேய் எதுக்குடா என்னைப் பிடித்தாய் நான் கீழே விழுந்து இருந்தால் கூட எனக்கு சந்தோஷம் தான் ஆனால் நீ யாருடா என் கையைப் பிடித்து ச்சை என்று தன் கையை அருகில் இருந்த டம்ளர் தண்ணீர் ஊற்றி கழுவினாள்.
இத்தனை நேரம் அனைத்து இருந்து விட்டு இப்போது சாரைப் பார்த்ததும் என்னைப் பிடிக்காதது போல் நடிக்கிறாயா? நான் பிடித்து இருந்தது அப்போது உனக்குப் பிடித்து இருந்ததா பேபி
டேய் யார் கிட்ட போனாப் போகுதுனு நான் அமைதியா என் வழியில் போகப் பார்த்தாள் என்ன என்னை கேணச் சிறுக்கி என்று நினைத்து விட்டாயா? நீ பெரிய இவனாடா இதோ இந்த மீரா மேம் கால் உள்ளே விட்டு இடறி விடுகிறாங்க. நீ என்னைத் தாங்கிப் பிடிக்கிறாயா?
என்னடா முழிக்கிறாய்? இந்த கண்ணை இரண்டையும் நோண்டி காக்காய்க்கு போட்டுருவேன் போடா.
ஏய் நீ ஒரு பொட்டச்சி நான் ஒரு ஆம்பளை என்னையவே டா போட்டு பேசுகிறாயே உன் நாக்கை இழுத்து வைச்சு அறுத்து வீசிவிடுவேன். இன்னும் ஒரு தடவை சொன்னால் போடி நீ பெரிய பணக்காரனைத் தான் வளைத்து போட்டு இருக்கிறாய்?
ஆமாண்டா டால்டா டப்பா அப்படித்தான் டா போடுவேன்.
ஏய் சும்மா இருடி என்று சில்பா இப்போது வந்து தேனருவியைத் தடுக்க. பேசாமல் வாடி சுற்றிலும் எல்லாரும் உன்னையவே வேடிக்கை பார்க்கிறார்கள்.
தேவ் ஆனந்த் அருகில் வந்தவன் சுதாகரன் வரம்பு மீறிப் பேசுகிறாய்? அவுங்க அனுமதி இல்லாமல் நீ முதலில் அவுங்க கையைப் பிடித்ததே தவறு இதில் வாய்க்கு வந்தது பேசுகிறாய் என்று பொறுமையாகப் பேசியதைக் கேட்டதும் தான் இப்போது தேனருவி தேவ் ஆனந்த் தன் அருகில் தான் இருக்கிறான். என்று உணர்ந்தவள் சில்பாவிடம் இருந்து கையை உருவியவள் மாமா என்ற கேவலோடு ஓடிச் சென்று அவனை அனைத்து இருந்தாள்.
மீரா மேம் என்னது மாமாவா? என்று அதிர்ச்சியோடு தேவ் ஆனந்த்தை பார்த்தாள். சுதாகரனுக்கு இப்போது பயமாக இருந்தது. அந்த நேரத்தில் உடனே அவன் மீரா மேடமைப் பார்க்க அவர்கள் பார்வை பரிமாற்றம் கண்டு கொண்டான் தேவ் ஆனந்த் இரண்டு பேரும் கூட்டுக் களவாணிகள் தானா?
இருக்கட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று இப்போது தேனருவி முதுகை தடவி விட்டவன். சில்பா நீங்கள் வகுப்பிற்கு போங்க என்று சொல்லும் போதே பூவிழிக்கு செய்தி போய் அவளும் வந்து விட்டாள்.
மாமா அக்கா ஏன் அழுகிறாள் என்று தேவ் ஆனந்த் அருகில் வந்து கேட்டாள். தேனுக்கா என்னாச்சு கீழே விழுந்து விட்டாயா? வலிக்கிறதா? வா என்று தன்னோடு அனைத்துக் கொண்டவள் அவளை அங்கே இருக்கும் டேபிளில் அமர வைத்தவள் சில்பா அக்கா ஒரு டீ வாங்கிட்டு வாங்க என்று கூற முதலில் நீ எதுக்கு அழுகிறாய்?
என் பிரண்ட்ஸ் வந்து சொன்னாங்க உங்க அக்கா செமயா சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறாங்க என்று பார்க்க வந்தேன். நீ என்னடா என்றால் அழுதுகொண்டு இருக்கிறாய்? நீ எல்லாம் யார் பேயவே விரட்டி விடுபவள் என்று இப்போது பூவிழி தேனருவியை சிரிக்க வைக்கும் பொருட்டு பேச
அவளை முறைத்துப் பார்த்தவள்.
நான் ஒன்றும் அந்த அண்டா வாயனைப் பார்த்து பயந்து அழுகவில்லை எனக்கு ரொம்ப லோன்லியா இருந்தது. அது தான் மாமாவைப் பார்த்ததும் அழுகை வந்து விட்டது.
எப்படியோ ஐஸ்கீரிம் சாப்பிடுவதற்கு ஆசைப்பட்டு விட்டாய். அப்புறம் என்ன எஞ்சாமி தான் போக்கா என்று கூறி எப்படியோ தேனருவியைச் சிரிக்க வைத்த பின் தான் வகுப்பிற்குச் சென்றாள் பூவிழி.
தேனருவி உன் தங்கச்சி கூட உனக்கு நல்ல பாண்டிங் டி நீ அழுகவும் எப்படி துடித்து விட்டாள். இப்போது காணானையும் கோணானையும் பேசி உன்னை சிரிக்க வைத்து விட்டாள்.
தேவ் ஆனந்த் தனது அண்ணன் ரவிக்குமாருக்கு போனில் அழைத்தான்.
தேவ் ஆனந்த் சொல்லு தம்பி இந்நேரத்திற்கு அழைத்திருக்கிறாய்? ஏதாவது அவசரமா?
அண்ணா ஆமாம் எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. அதைச் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
அப்படி என்ன ஆசை வந்து விட்டது. என் தம்பிக்கு என்று ரவிக்குமார் கேட்கவும். அண்ணா சிவா அண்ணா எங்கே இருக்கிறாங்க இருவரும் ஒரே இடத்தில் தான் இருக்கிறீர்களா?
ஆமாம் தேவ் இரண்டு பேரும் சேர்ந்து தான் இருக்கிறோம். நீ பேசுவதை இருவரும் தான் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். ஏன் தேவ் உனக்கு உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?
அண்ணா பதட்டம் படாதீர்கள். நான் நன்றாகத் தான் இருக்கிறேன்.
சரி சொல் தம்பி நீ எதையோ? சொல்ல வருகிறாய்?
அண்ணா நான் வேலைக்குப் போகிற கல்லூரியை நாம் வாங்கிக் கொள்ளலாமா?
தேவ் ஆனந்த் நீ ஆசைப்பட்டு கேட்கிறாய். நாங்கள் மறுத்துப் பேசுவோமா? நாங்கள் தான் ஏற்கனவே உன்னிடம் கேட்டோம் அந்தக் கல்லூரியின் முதல்வர் விற்பனை செய்யப் பார்க்கிறார். நாமே வாங்கலாம் என்று கேட்டோம். நீ தான் அப்போது வேண்டாம் என்று சொன்னாய்.
இப்போதாவது வாங்க ஒத்துக் கொண்டாயே சரி தம்பி அவர் எனக்கு நெருங்கிய நண்பர் தான்
நான் பேசிக் கொள்கிறேன்.
அண்ணா அப்புறம் பத்திரிகை அடித்து வந்து விட்டதா?
அது எல்லாம் அடித்து வந்து விட்டது நாளைக்கு குலதெய்வக் கோவிலுக்கு வைத்து விட்டு பிறகு அனைவருக்கும் கொடுக்கலாம் என்று அம்மா சொன்னாங்க.
சரிங்க அண்ணா வைக்கிறேன் என்று போனை அனைத்து விட்டு இப்போது பிரின்ஸ்பால் அறைக்கு சென்றான்.
இனித் தாமதிப்பது தவறு என்று சார் நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.
சொல்லுங்க தேவ் ஆனந்த் அதற்கு எதுக்கு தயங்குகிறீங்க நானும் உங்கள் குடும்பத்தில் ஒருத்தர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
சார் எனக்குத் திருமணம் முடிவாகி இருக்கிறது.
வாவ் வாழ்த்துகள் மகிழ்ச்சி என்று தேவ் ஆனந்த் கையைப் பிடித்து குலுக்குகிறார்.
ஆமா பொண்ணு எந்த ஊர் என்ன படிக்கிறாங்களா? இல்லை உங்களைப் போல் லெக்சரா என்று கேட்கவும்.
தேவ் ஆனந்த் உடனே சார் என் மாமா பெண் தான். அவுங்க நம் காலேஜ் தான் படிக்கிறாங்க படிப்பு முடிந்ததும் திருமணம் தான் என்று சொல்லவும்.
அந்த லக்கி பர்சன் யார்? என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
தேனருவி தான் சார்.. முறையா பத்திரிக்கை வைத்து தான் அனைவரிடமும் சொல்ல வேண்டும் என்று இருந்தேன். ஆனால் நான் தேனருவி கூட சாதரணமாக பேசினாலே அவளைக் தவறாகப் பேசுகிறார்கள். அது தான் உங்களிடம் சொல்கிறேன்.
காலையில் இருந்து மீரா மேடம்
தேனருவியை மிகவும் டார்ச்சர் செய்கிறாங்க இப்போது கேண்டீனில் நடந்த களேபரத்தைச் சொல்லவும் பிரின்ஸ்பால் கோபம் வந்தாலும் தேவ் ஆனந்த் எனக்குமே கோபம் வரத்தான் செய்கிறது.
கல்லூரி விற்பதற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இதை ஒரு ஸ்ஸ்யூ ஆக்க வேண்டாம் என்று தான் நான் யோசிக்கிறேன். கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் கல்லூரி இடம் மாறியதும் அவுங்க மேல் ஏக்சன் எடுக்கலாம்.
அப்போது நிறையக் கார்கள் கல்லூரிக்குள் வந்தது. பியூன் அவசரமாக வந்து சார் சேர்மன் வந்து இருக்கிறார். கூடவே நிறையப் பேர் வந்து இருக்கிறார்கள்.
அவர்களை வெல்கம் பண்ண இப்போது அலுவலகத்தை விட்டு வெளியே வரவும்.. அங்கே இருந்தவர்களைப் பார்த்து தேவ் ஆனந்த் நான் சொன்னேன் அல்லவா? கல்லூரி வேறு ஒருவரின் கைக்கு மாறுகிறது என்று வந்து இருப்பவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு இது ஒரு பிஸ்னெஸ் தான் போல பார்த்தாலே தெரிகிறது பெரிய இடம் போலவே.
சேர்மன் சோமசுந்தரம் தேவ் ஆனந்த் தோளில் கை போட்டு எப்படி இருக்கிறாய் மேன்?
நல்லா இருக்கிறேன் அண்ணா.
பிரின்ஸ்பாலுக்கு இது என்ன தேவ் ஆனந்த் தோளில் கை போட்டு பேசுகிறார் ஒரு வேளை தெரிந்தவராக இருக்கலாம் என்று நினைத்து இருக்க அடுத்து சோமசுந்தரம் சொன்ன பதிலில்
ஆடிப்போய் விட்டார்.
நான் நினைத்தேன் படிப்பை முடித்து வந்ததும் நேராக என்னை வந்து பார்ப்பாய் என்று நினைத்தேன். ஆனால் பார் உன் அண்ணா வந்து இப்போது தான் சொன்னாங்க நாங்களே கல்லூரியை வாங்கிக் கொள்கிறோம்.
அப்போது தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. அமைச்சர் காத்தவராயன் தான் என்னிடம் இந்த கல்லூரியைப் மிரட்டி பிடுங்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறான். எனக்கு இப்போது முடிவதில்லை அது தான் என் மனைவியின் ஆசையால் உருவான கல்லூரி ஒரு அரசியல் வாதியிடம் கொடுக்க விரும்பாமல் தான் இத்தனை நாட்கள் காத்து இருந்தேன். இப்போது தான் சிவா, ரவி இரண்டு பேரும் சொன்னாங்க அது தான் வக்கில் ஆடிட்டர் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு வந்தாச்சு என்று சோமசுந்தரம் இப்போது தேவ் ஆனந்த் கிட்ட சொல்லும் போது தான் தேவ் ஆனந்த் எத்தனை உசரம் என்று பிரின்ஸ்பால் மிரட்சியோடு பார்த்தார்.
தேவ் ஆனந்த் இந்த கல்லூரி வாங்கும் அளவுக்கு பணக்காரர்களா? ஆனால் எத்தனை சிம்பளா வந்து கல்லூரியில் பேராசியராக பணியாற்றினார்.
கோபால் சார் என்னங்க அப்படி பார்க்கிறீங்க நம் கல்லூரி தேவ் ஆனந்த் K. K. V. Groups தான் வாங்குகிறாங்க..
ஆபிசில் இருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தேவ் ஆனந்த் கே. கே. வி குருப்ஸ் முதலாளிகளுள் ஒருவரா? இப்போது இந்த மொத்த கல்லூரியையும் இவருடையதா?
இந்த விடயம் கல்லூரி முழுக்கப் பரவியது மீரா மேடம் பயத்தின் உச்சியில் இருந்தாள். இப்போது
அவன் மிகப் பெரிய பணக்காரன் அது தெரியாமல் காலையில் அவனை அவமானப்படுத்தி பேசியதை நினைத்து வருந்தியவள் தேனருவியைச் சீண்டியதை நினைத்து ஈரக்குலையே நடுங்கியது.
தொடரும்...