Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 335
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் -50
பாகம் -50
பிரின்ஸ்பால் அறைக்கு முன் நின்று உள்ளே பெற அனுமதி வாங்கியவுடன் உள்ளே வந்த மீராவைப் பார்த்து.
சொல்லுங்க மேம் எனி ப்ராளப்பளம்.
எஸ் சார் இதை எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
சொல்ல வந்து விட்டு தயக்கம் எதற்குமா? சொல்லுங்கள்.
தேவ் ஆனந்த் அவ்வறையில் இருப்பதைப் பார்த்து தயங்கியவள் என்ன சொல்வது இவன் எதற்காக இங்கே அமர்ந்து இருக்கிறான். இவனுக்குத் தெரியாமல் செய்யலாம் என்றால் இப்போது சொன்னால் வசமாக மாட்டிக் கொள்வோம்.
தேவ் ஆனந்த் முகத்தை தயக்கமாக பார்க்கவும் அவன் எக்ஸ்கியூஸ் கேட்டுக் கொண்டு அவனது வகுப்பறை நோக்கிச் சென்று விட்டான்.
சரி சொல்லுங்க மீரா மேம் என்று இப்போது பிரின்ஸ்பால் கேட்கவும் சார் தேவ் ஆனந்த் சார் வகுப்பு மாணவி தேனருவி மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதற்காக என்று சொல்லுங்கள். அந்தப் பெண் அப்படி என்ன தவறு செய்தது.
சார் அவள் கேரக்டர் சரியில்லை சார், கல்லூரிக்குள் வந்தால் அவள் வகுப்பறைக்கு போகிறாளோ? இல்லையோ? பாய்ஸ் கூட நின்று அரட்டை தான் சார் அதைத் தட்டிக் கேட்டதிற்கு என்னையே எதிர்த்துப் பேசுகிறாள்.
அதுவும் தரக்குறைவான வார்த்தைகளால்,
இது மட்டும் தானா?
அதை விடப் பெரியது இருக்கிறது சார் அவளுக்கு வந்த கடிதங்கள் என்று சில பேப்பர்களை கொடுத்தவள் நான்
அதைப் பிரித்துப் படித்து விட்டேன். அத்தனை மோசமாக அதில் எழுதி இருக்கிறது என்று மீரா மேம் வேறு ஒரு கையெழுத்தில் எழுதிய கடித ஆதாரங்களை கொடுத்தார்.
தேனருவியைக் குற்றம் சாட்டிய கவரை பிரித்து அந்த தாள்களைப் பார்த்த பிரின்ஸ்பால் அதிர்ந்து விட்டார்.
பார்த்தீங்களா? சார் எத்தனை மோசமானவளாக இருந்தால் இப்படி எழுதி அனுப்பி இருப்பாங்க.. இந்தப் பெண்ணுக்கு இப்போதே டி. சி கொடுத்து ப்ளாக் மார்க் வைத்து விடுங்கள். அப்போது தான் இவளைப் போல் மற்றவர்கள் செய்ய மாட்டார்கள். என்று உண்மை புரியாமல் தேனருவி மேல் தன் வன்மம் நிறைந்த வார்த்தைகளால் பேசினாள்.
அந்தக் காகிதத்தில் எதுவுமே இல்லை என்பதை தான் அவர் அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அது தெரியாமல் மீரா மேம் எந்த அளவுக்கு வார்த்தை விட முடியுமோ? விட்டார்கள்.
என்னங்க மேடம் நீங்கள் சொல்வது போல் ஒன்றுமே இல்லை. சும்மா வேண்டும் என்றே நல்லா படிக்கிற பெண் மேல் எதுக்கு வீண்பழி சுமத்துகிறீர்கள். எனக்கு வேறு வேலை இல்லை என்று நினைத்து விட்டீர்களா?
சார் என்ன சொல்கிறீர்கள் நான் என்ன தவறு செய்தேன். எனக்கு வந்ததைத் தான் நான் உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தேன்.
சரி உங்கள் பேச்சுக்கே வருகிறேன். இந்த கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்தது. தபாலில் வந்ததா? இல்லை கொரியரில் வந்ததா? இல்லை உங்கள் கையில் யார் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
சார் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன பகையா? ஒரு மாணவியின் ஒழுக்க சீர்கேட்டால் மற்றவர்களும் கெட்டு விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதால் தான் நான் தேனருவி மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.
ஆனால் நீங்கள் நான் சொல்வதை நம்பாமல் என்னையே சந்தேகப் படுகிறீர்கள். நீங்கள் வேண்டும் என்றால் நம் கல்லூரியில் ஆடிட்டோரியம் அருகில் இருக்கும் சிசிடிவி செக் செய்து பாருங்கள். இன்று காலையில் கூட தேவ் ஆனந்த் சாரிடம் கல்லூரி என்று பார்க்காமல் நீண்ட நேரம் கல்வி போதிக்கும் இடம் என்று நினைவு இல்லாமல் காதல் பேசிக் கொண்டு இருந்தாள். நான் மட்டும் அல்ல மொத்த கல்லூரியும் பார்த்தாங்க.
எக்ஸ்கியூஸ் மீ சார் என்று தேவ் ஆனந்த் பர்மிசன் கேட்க.
எஸ் கம்மின் என்று பிரின்ஸ்பால் உள்ளே வரச் சொன்னார்.
சார் இவுங்க சொல்வது மிகவும் தவறு நான் இத்தனை நாட்கள் அந்த வகுப்பின் பொறுப்பாசிராக இருந்து உள்ளேன். என் வகுப்பில் இருக்கும் மாணவ மாணவியர் அனைவரும் வெரி குட் டிசிப்ளின் தான். ஆனால் மீரா மேம் அவர்களுக்கு தேனருவி மேல் ஏன் இத்தனை காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. இப்போது தான் கல்லூரியில் படிக்கும் பெண் என்பதைக் கூட உணராமல் அந்தப் பெண்ணை வகுப்பறையில் எத்தனை கீழ்த்தரமாக அவளின் மனதைக் காயப்படுத்தும் விதமாக பேசி இருக்கிறாங்க தெரியுங்களா??
நீங்களே இதைப் பாருங்கள் சார் என்று தன் மொபைலில் இணைக்கப்பட்டு இருந்த சிசிடிவி புட்டேஜ் காண்பித்தான்.
அதை வாங்கிப் பார்த்த பிரின்ஸ்பால் அதை அங்கே இருக்கும் கணனி மானிட்டரில்
கனெக்ட் செய்து விட்டார்.
அதில் மீரா மேம் எத்தனை கீழ்த்தரமாக வகுப்பு அறையில் நடந்து கொண்டதையும் அத்தனை மாணக்கர்களை விடுத்து தேனருவியை மட்டும் நடுநாயகமாக வைத்து கேலி பேசியதும் இருக்க.. பிரின்ஸ்பால் சாருக்கு அதைப் பார்க்கப் பார்க்க மிதமிஞ்சிய கோபம் வந்து விட்டது.
நீங்கள் போதிக்கும் இடத்தில் இருந்து கொண்டு இவ்வளவு கீழ்த்தரமாகவா? நடந்து கொள்வீர்கள். நல்லா படிக்கிற பெண் மேல் அபாண்டமாக பழி போடுகிறீங்க மிஸ் இது தவறு என்று உங்களுக்கு ஏன் தெரியவில்லை.
தேனருவி எப்போதும் வகுப்புக்கு வெளியில் தான் நின்று கொண்டு இருப்பாள் சார். நான் சொல்வதை மட்டும் நீங்கள் நம்பமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இதோ தேவ் ஆனந்த் சார் கோசலை மேடம் என்று அந்த டிபார்ட்மெண்ட் வரும் அனைத்து ப்ரொப்பசரும் அவளை வெளியே தான் நிற்க வைத்து இருக்கிறார்கள்.
வகுப்பு நடக்கும் போது ஒழுங்கீனமாக இருந்ததால் தான் வெளியே வந்து நின்று இருப்பாள்.
வகுப்பை விட்டு அனுப்பி வைப்பது ஒரு அரைமணி நேரம் தான் ஆனால் நீங்கள் அவளின் கேரக்டர் பற்றி எப்படி தவறாக நீங்களே அவளைப் பற்றி கேவலமாக கையெழுத்து மாற்றி எழுதி விட்டு உங்களிடம் கொடுத்தாங்க என்று சொல்கிறீங்களே மேடம்.
அது எப்படி தபால் வந்து இருந்தால் நீங்கள் தான் தேனருவி வகுப்பு டீச்சர் என்று தபால் கொண்டு வருபவர்களுக்குத் தெரியுமா? உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கு.
இல்லை அப்படி தபாலில் வந்து இருந்தால் கூட அஞ்சலக முத்திரை இருக்குமே மேம். அவர்கள் பியூனிடம் தான் கொடுப்பார்கள் அலுவலகம் வந்து சேரும். பிறகு சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் ஒப்படைக்கப் படும் இது தான் வழக்கம். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இது போல் ஒரு கடிதம் நீங்களே உருவகப் படுத்தி எழுதியது போல் இருக்கிறது.
தேவ் ஆனந்த் சார் நீங்கள் வேண்டும் என்றே என் மேல் பழி போடுகிறீங்க.. நான் உங்களிடம் ஒன்றும் புகார் அளிக்கவில்லை. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்று கோபமாக மொழிய..
மீரா மேம் வார்த்தை விடாதீங்க அவர் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்.
பிரின்ஸ்பால் சொன்னதைக் கேட்டவள் அமைதி காக்க என்னமா சந்தைக் கடை என்று நினைத்தீர்களா? ரவுடிசம் போல் நடந்து கொள்கிறீர்கள். அப்படி என்ன தான் அந்தப் பெண் தவறு செய்து இருந்தாலும் நீங்கள் இங்கே தான் அழைத்து வந்து இருக்கவேண்டுமே தவிர அந்தப் பெண்ணுக்கு மட்டும் அத்தனை எழுதி வரச் சொன்னது எதற்காக
இது எல்லாம் போல் தான் இத்தனை நாட்கள் நீங்கள் நடந்து கொண்டீர்களா? இது என்ன கல்லூரியா ? ஸ்கூலா
இன்போசிசன்ஸ் கொடுப்பது போல் ஒருவருக்கு மட்டுமே எழுதச் சொல்வது.. உங்களுக்கு இது முதல் தடவை என்பதால் வார்னிங் செய்து விடுகிறேன்.
இதே போல் தொடர்ந்தால் உங்கள் வேலையை விட்டு அனுப்பவும் தயங்க மாட்டேன்.
அப்புறம் தேவ் ஆனந்த் சார் வெறும் ப்ரொபசர் மட்டும் அல்ல அவர் வைஸ் பிரின்ஸ்பால் அதனால் அவர் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும்.
பிரின்ஸ்பால் இந்த பதில் சொல்லியதும் மீரா மேம் பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நான் வசமாக மாட்டிக் கொண்டேன்.
இத்தனை நேரம் இல்லாத பொய் சொல்லியவள் தன் கைப்பட எழுதிய பொய்க்கடிதம் அனைத்தும் இப்போது அதில் இருந்தவைகள் அழிந்து வெறும் வெள்ளைத்தாள்களாக இருந்தது. அது இருந்தால் ஆவது இதில் இருந்து தப்பித்து இருக்கலாம். ஆனால் இப்போது அது எப்படி மறைந்தது என்றும் தெரியவில்லை.
யூ கேன் கோ என்று சொல்லியும் நகராமல் இருந்த மீராவை பிரின்ஸ்பால் மேஜையை தட்டியதும் சுயத்திற்கு வந்தவள்
அங்கே இருந்து சென்றாள்.
இத்தனை களேபரத்திலும் தேனருவி செம கூலா கேண்டினில் இருந்து வாசனை துளைக்கும் மெதுவடையை
மொக்கச்சாமி வா மா மின்னல் என்று சொல்வது போல் அடுக்கிக் கொண்டு இருந்தாள். அவள் உடலுக்குள் போன நிழல் அவள் கேண்டீன் வந்ததைப் பார்த்து பல மெதுவடைகளை உள்ளே இறக்கிய பின்பே பெரிய ஏப்பம் விட்டு வெளியே சென்றது.
தேனு இது என்னடி உன் வயிற்றில் ஏதாவது பூதம் உள்ளே புகுந்து விட்டதா தெரியவில்லையே இத்தனை
மெதுவடை உள்ளே போச்சு இப்போது ஊரைத் தூக்குவது போல் ஏப்பம் விடுகிறாய்? பார்த்து அந்த வடை எல்லாம் வெளியே வந்து விழுந்து விடப் போகிறது என்று சில்பா கால் வார..
நக்கலு டி உனக்கு கொஞ்சமாச்சும் உயிர்த்தோழி விழி பிதுங்கி நிற்கிறாளே அவளுக்கு ஏதாவது உதவி செய்வோம் என்று இல்லாமல் த்தூ என்று முகத்தைச் சுழிக்கிறாயா? எருமை என்று மலர்க்கொடியை முதுகில் நாலுசாத்து அடித்து விட்டாள்.
அடியே எருமை உனக்குத் தீனி வாங்கிக் கொடுத்தவளே நான் தான் அந்த விஸ்வாசம் கூட இல்லை என்று தேனருவியைத் துரத்திக் கொண்டு வந்தாள்.
தேனருவி மலர்க்கொடி கையில் சிக்காமல் ஓடினாள். இவள் ஓடி வரும் போது அருகில் இருந்த டேபிளில் அமர்ந்து இருந்த மீரா மேம் தேனருவியின் காலுக்கு குறுக்கே கால் வைத்து இடற..
தேனருவி ஓடிவந்தவள் தடுமாறிக் கீழே விழுகப் போனாள். அவளை ஒரு வலுவான கரம் கீழே விழுகாமல் தாங்கிப் பிடித்தது.
அந்தக் கரம் தேவ் ஆனந்த் இல்லை. சுகுமாரன் நீண்ட நாட்களாக தேனருவி மேல் அவனுக்கு ஒரு கண் இருக்கிறது. அவன் மீரா மேம் பேச்சைக் கேட்டுக் கொண்டு தேவ் ஆனந்த் வரும் நேரம் அவள் நிலைதடுமாறி விழுவதை தான் தனக்குச் சாதகமாக அவளைத் தன் மேல் தாங்கிப் பிடித்து இணைபிரியாத காதலில் திளைத்து நிற்பது போன்ற போசில் நின்று இருந்தான்.
அனல் கக்கும் விழியோடு தேவ் ஆனந்த் வந்தான் இனி என்ன நடக்கும்.. காத்திருங்கள் அடுத்த பதிவில்..
தொடரும்...