• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
320
நீ உடல் நான் நிழல்
பாகம் -46


விஜயலதா மோட்டார் போட சென்ற போது மின்சாரம் தடைபட்டு விட்டது. இருட்டில் பயந்தவள் தலையைத் தூக்கிப் பார்க்க அங்கே வைக்கோல் போர் மேல் ஒரு உருவம் கையை ஆட்டிக் கொண்டு இருந்தது.

ஆளுக்கொரு திசையில் இருப்பதால் ஒருவரைப் பார்த்து ஒருவர் பயந்து கொண்டு நின்றனர்.

விஜயலதாவிற்குப் பேச்சே வரவில்லை.. பயத்தில் பயந்து நடுங்கி அங்கேயே மயங்கிச் சரிந்தாள்.

இவர்கள் விடிய விடிய வெளியே இருக்க அதிகாலையில் எழுந்து வந்த கருப்பையா மாட்டுத்தொழுவத்தில் வந்து சாணி அள்ளும் போது தான் அங்கே இந்த வீட்டிச் சம்மந்தி அம்மா ஏன் இங்கே தூங்குகிறாங்க.. என்ற சந்தேகத்தில் தலையை நிமிர்த்தி வைக்கோல் போரில் பார்க்க அங்கே நின்ற வாக்கில் தூங்கிக் கொண்டு இருந்தவரைப் பார்த்து.

இவுங்க எல்லாம் அரண்மனைக்குள் தூங்காமல் இங்கே என்ன செய்கிறார்கள். சரி பெரிய இடத்தில் எது வேண்டும் நடக்கலாம் என்று கிணற்றடிக்கு மோட்டார் போடுவதற்கு சென்று பார்த்தா அங்கே விஜயலதா மயங்கிக் கிடந்தார்.

இதென்ன ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொருவரும் படுத்து இருக்கிறார்கள். இனித் தாமத்திக்காது பெரிய ஐயாவிடம் சொல்லி விட வேண்டும்.

அம்மா என்று கிருஷ்ணவேணி அவர்களை அழைக்கவும். முதலில் வானதி தான் வந்து எட்டிப் பார்த்தவள்.

வெளியே கருப்பையா நிற்கவும்.

ஏனுங்க ஐயா பால் கறக்கலையுங்களா? அத்தை எதுக்கு கூப்பிடுகிறீர்கள். மாடு ஏதாவது கன்றுக்குட்டி போட்டு இருக்குதா?

அதெல்லாம் இல்லைங்க அம்முனி அது மாட்டு தொழுவதிலும் வைக்கோல் போரில் கிணற்றடியிலும் மூன்று பேர் இருக்கிறார்கள். அது தானுங்க பெரியம்மா விடம் சொல்லலாம் வந்தேன்.

திருட வந்தவங்களா? இருக்குமோ? வீட்டிற்குள் வராமல் எதுக்கு வெளியே ஆளுக்கொரு இடத்தில் படுத்து தூங்குவாங்க. எதற்கும் அத்தையை எழுப்புவோம் என்று உள்ளே சென்றாள். முதலில் தன் கணவனை எழுப்பினாள்.

என்னங்க வெளியே திருடர்கள் வந்து இருக்கிறார்கள். சீக்கிரம் எழுந்து வாங்க கருப்பையா வந்து சொன்னார்.

என்னடி காலங்காத்தால. ஒரு பஞ்சாயத்து இல்லாமல் எழுந்து நிம்மதியா அன்றாடம் வேலையைப் பார்க்க முடியுதா? என்று சலிப்பாக சிவக்குமார் எழவும்.

நான் என்ன பொய்யா? சொல்கிறேன். கருப்பையா அண்ணா தான் வந்து சொன்னார். நேற்று விஜயலதா தான் காலையில் எழுந்ததும் எல்லாரையும் பீதி கிளப்பி விட்டாங்க நான் இல்லை அதை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

சரி சரி கோவித்துக் கொள்ளாதே அதிரா ஆதியா இரண்டு பேரும் எழுந்து கொள்வாங்க வா போகலாம் என்று தன் முகத்தை அலம்பியவன் வானதியோடு வெளியே வந்தான்.

நீ இங்கேயே இருடி நான் போய் பார்க்கிறேன்.

"என்னங்க எனக்குப் பயமாக இருக்கிறது." திருடர்கள் மூன்று பேர் நீங்கள் ஒருத்தர் என்ன செய்வீங்க இருங்கள் சின்ன மாமாவையும் தேவ் ஆனந்த் இருவரையும் வரச் சொல்கிறேன்.

அவுங்கள ஏன் எழுப்புகிறாய்? அது தான் கருப்பையா இருக்கிறார் என்று தனது கையிலியை மடித்துக் கட்டியவன் கையில் ஒரு பெரிய தடியை எடுத்துக் கொண்டு அண்ணா எங்கே திருடர்கள் மூன்று பேர் இருக்கிறாங்க சொன்னீங்களாம் அது தான் நான் கம்பு எடுத்துக் கொண்டு வந்தேன்.

தம்பி திருடர்கள் இல்லை என்று சொல்லவும்.. சிவக்குமார் திரும்பி வானதியை முறைக்கவும்.

அண்ணா நீங்கள் தான் சொன்னீர்கள் மூன்று இடத்தில் மூன்று பேர் என்று அது தான் எல்லாரும் வீட்டிற்குள் இருக்கும் போது வெளியே திருடர்கள் தான் இருப்பாங்க என்று தான் இவரை அழைத்து வந்தேன்.

அம்முனி அது சின்னவரின் மாமனார் மாமியார் அப்புறம் சின்ன அம்முனி தானுங்க அங்கே இருப்பது என்று சொல்லிக் கொண்டே கருப்பையா பின் மண்டையைச் சொரிந்தார்.

அதானே நானும் நேற்று இரவு பார்க்கும் போது அவர்கள் நால்வரும் ஒரு அறைக்குள் போவதைப் பார்த்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்தில் சுனைனா அவள் அறைக்குள் போய் தூங்கி விட்டாள்.

சிவக்குமார் தன் மனைவி வானதியை முறைத்தான். நீ அவர்கள் பேசுவதை நடந்து கொள்வதை எதற்காக மோப்பம் பிடிக்கிறாய்? என்பதை சுட்டிக் காட்டும் விதமாக பார்வை இருந்தது.

சரி வாங்க பார்க்கலாம் என்று மூவரும் மூவரையும் தேடிச் சென்றனர்.

முதலில் மாட்டுத்தொழுவத்தில் படுத்து இருந்த சுனைனா அம்மா கமலத்தை எழுப்பினார்கள்.

வானதி நீ பக்கத்தில் போய் எழுப்பி விடு என்று சிவக்குமார் சொல்லவும் சரிங்க என்று தலையாட்டியவள் அம்மா என்று அழைக்க அவரிடம் அசைவு தெரிந்தது.

மறுபடியும் அம்மா என்று அழைக்க ஏன்? லதா உன்னை தண்ணீர் எடுத்து விடு என்று சொன்னால் கிணறு தோண்டுவதற்கு போய் விட்டாயா? நானும் எத்தனை
நேரம் இந்தக் கொசுக்கடியில் உட்கார்ந்து இருப்பது. உனக்கு அறிவே இல்லை உங்கப்பனையும் காணம் காலையில் சுனைனா திருமணம் உங்கள் வீட்டு ஆட்கள் எழும் முன் தண்ணீர் ஊற்றி இதைக் கழுவி விடலாம் என்று தானே உன் பேச்சைக் கேட்டு நானும் இங்கே அமர்ந்து இருந்தேன் என்று கண்ணைத் திறக்காமலே சொன்னார்.

அம்மா எழுந்து கொள்ளுங்கள் நான் வானதி என்று கூற.

ஏண்டி பேர் வைத்த எனக்குத் தெரியாதா? நீ உன் பெயரை எதுக்கு இப்போது உன் ஓரகத்தி பெயராக மாற்றிச் சொல்கிறாய்?

சிவக்குமார் வானதி யைப் பார்த்து நீ எழுந்து வா என்று அழைத்தவன். மோட்டார் போடும் இடத்திற்கு சென்றனர்.

அக்கா என எழுப்ப அசைவே இல்லை. அதன் பிறகு தான் தண்ணீர் அவள் முகத்தில் தெளித்து எழுப்பவும்.

அம்மா பே...பே...மா என்று தன் முன்னால் நிற்பது யார் என்று தெரியாமல் பயத்தில் வாய் தந்தியடிக்க தன் தந்தை தான் என்று தெரியாமலே பே ... பே என்று வைக்கோல் போரைக் காண்பிக்க.

விஜயலதா கை போன திசையில் பார்த்த மூவருக்கும் சிரிப்பு பயங்கரமாக வந்தது. இது என்ன தம்பி மாமனார் அங்கே நின்று கொண்டு என்ன செய்கிறார்.

அதற்குள் ஒவ்வெருவராக எழுந்து வரவும் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு நீங்கி வெளிச்சம் வரவும் ஏம்பா பெரியவனே அங்கே என்னப்பா செய்கிறீங்க கிணற்று அடியில் இங்கே வாங்க இன்றைக்கு திருமணத்தை வைத்து விட்டு இன்னும் ரெடியாகாமல் வானதி அப்படி என்ன வேடிக்கை அங்கே என்று கிருஷ்ணவேணி சத்தம் போட.

அத்தை நானே உங்களை வந்து எழுப்பலாம் என்று இருந்தேன். நாங்க சும்மா வேடிக்கை பார்க்கவில்லை என்று கருப்பையா வந்து சொன்னதில் இருந்து கமலா அம்மாவும் விஜயலதா சொன்னதையும் சொன்னவள்.

வைக்கோல் போரில் நின்று கொண்டு இருக்கும் பரமசிவம் அப்பாவையும் சொல்ல.

என்னடா விடிஞ்சதும் எந்த ஏழரையும் காணமே என்று நினைத்தேன்.

அதற்குள் வீட்டிற்கு முன்புறம் இருந்து வேகமாக வந்த வேலைக்கார அம்மா பெரிம்மா வாசலில் பூரா அலங்கோலமா இருக்கிறதுங்க மா.

கருப்பையா என்று கிருஷ்ணவேணி அழைக்க.

அம்மா சொல்லுங்க.

என்ன தான் ஆச்சு வானதி ஒரு கதை சொல்கிறாள். இதே வாசல் தெளிச்சு கோலம் போடப் போன வள்ளி வந்து என்னமோ சொல்கிறாள். இத்தனை நாட்கள் இப்படி ஒரு நாளும் நடக்கலை.

சரிப்பா தேங்காய் ஒரு நூறு காய் உரித்து வை நம்ம குலதெய்வம் கோவிலுக்கு கொண்டு போக வேண்டும்.

அவர் சரிங்கம்மா என்று சென்றவர் கொஞ்ச நேரத்தில் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்.

அம்மா அம்மா தேங்காய் எல்லாம் உரித்து வைத்து இருக்கிறதுமா? எப்படிங்க மலை மாதிரி குவித்து வைத்திருந்த அத்தனை தேங்காய் பூராவும் உரிச்சு வைச்சு இருக்கிறது. நான் தான் உரிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். சந்தைக்கு கொண்டு போவதற்கு ஆனால் என் வேலை மிச்சம் ஆகி விட்டது.

என்னப்பா கருப்பையா ஏதாவது குட்டிச் சாத்தான் வந்து உரிச்சு வைச்சிருக்குமோ? கமலம்மா தனது சந்தேகத்தை போட்டு உடைக்க.

அத்தை எனக்கு என்னமோ? லதா அவங்க அம்மா அப்பா மூவருக்கும் இந்த வேலைக்கும் ஏதோ? ஒரு தொடர்பு இருக்குமோ? என்று சந்தேகமா இருக்குங்க அத்தை.

சரி அது எல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். கருப்பையா நீங்கள் அவங்களை வைக்கோல் போரில் இருந்து கீழே இறக்கி விடுங்கள். பாவம் கால் எல்லாம் மரமரத்து போய் இருக்கும். ரவிக்கு தெரியவேண்டாம் அவன் மனசு கஷ்டப்படும்.

வள்ளி நீ போய் வாசலைப் பூராவும் கூட்டித் தெளித்து கோலம் போடு வானதி நீ முதலில் அவுங்களை குளிக்கச் சொல்லு அப்படியே உன் தங்கச்சி வனிதாவை சுனைனாவை எழுப்பி குளிக்கச் சொல்லி சொல்லு போ அப்படியே நீயும் போய் குளித்து ரெடியாகு நான் காஃபி காலைப் பலகாரம் எல்லாம் சரசுவைச் செய்யச் சொல்லலாம்.

சரிங்க அத்தை.. நான் உள்ளே போகிறேன் என்று உள்ளே சென்றவள் தனது தங்கை வனிதாவை எழுப்பி விட்டவள்.

அக்கா நான் எப்படி திருமணத்திற்கு வருவது.

ஏண்டி உனக்கு என்ன குறைச்சல் அந்த சுனைனா வை குளிக்கச் சொல்லி விட்டு நீ வா இங்கே என்று சொல்லியவள் அதிரா ஆதியா இருவரையும் எழுப்பி
இருவருக்கும் பிரஸில் பேஸ்ட் போட்டுக் கொடுத்தவள்.

அவர்களை குளிக்க வைத்து அவர்களுக்கு பட்டுப்பாவாடை போட்டு விட்டு தலைசீவி விட்டாள்.

வனிதா இங்கே வா உனக்கு ஒன்று சொல்கிறேன் என்று காலையில் நடந்த விடயங்களைச் சொல்லி சிரித்தவள். சரிடி நீயும் போய் குளி நானும் குளித்து ரெடியாகிறேன்.

எல்லாரையும் ஆட்டிப் படைத்த நிழல் இப்போது தேனருவியிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருந்தது.

உனக்கு மனசில் என்ன பெரிய உலக அழகி என்று நினைப்போ? வீடே அடங்கமாட்டீங்கிறாய்? நடு ராத்திரியில் எங்கே உலாப் போனாயா?

ஆமாம் நான் சிலருக்கு டிரெயினிங் கொடுக்கப் போய் இருந்தேன்.

லூசா நீ பேசுவது உன் உருவம் யாருக்கும் தெரியாது. பிறகு எப்படி நீ போய் டிரெயினிங் கொடுத்து அப்படியே எல்லாரும் ஏரோப்ளேன் ஓட்டப் போகிறாங்க.

உன் ஓட்டவாயைத் திறந்து காமிச்சாலே எல்லாரும் பரலோகம் போய் விடுவாங்க. எல்லாருமே என்னைப் போலவே பலசாலி அதாவது தைரிய சாலியாக இருப்பாங்களா?

இதை வெளியே சொல்லி விடாதே தேனருவி உன் தங்கச்சி பூவிழியே இதை நம்ப மாட்டாள். நான் வேண்டும் என்றால் அவளைக் கூப்பிட்டு விடட்டுமா?

வரவர நீ ரொம்ப எதிர்த்துப் பேசுகிறாய்? என்று தேனருவி முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளவும்.

ஆமா உனக்கு எவ்வளவு தைரியம் என்று நீ கதை படிக்கும் வாசகர்களைக் கேட்டுப் பார் என்று சிரித்தது.

அது எல்லாம் கம்பெனி இரகசியம் நீ வெளியே சொல்லக் கூடாது. நீ முதலில் எனக்கு அக்ரிமெண்ட் போட்டுத் தா எனக்கு மட்டும் தான் அடிமையாக
வேலை செய்வேன் என்று பத்து ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்துப் போட்டுத் தா.

அடிப்பாவி எனக்கு கையே இல்லை நீ என்ன என்னை இடியாப்பச் சிக்கலில் மாட்டி விடுகிறாய்? உன்னிடம் வேலை செய்வதற்கு நான் இடியாப்பம் விற்கவே போகலாம்..


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top