Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 316
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 42
பாகம் - 42
தேவ் ஆனந்த் தேனருவியை நான் பத்திரமாக கொண்டு வந்து விட்டு விடுகிறேன் அத்தை என்று கூறவும்.
மாப்பிள்ளை அழைக்கும் போது அனுப்பாமல் இருந்தால் நல்லா இருக்காது.
தேனு நீ போய் தாவணி பாவடை மாற்றி விட்டு வா என்று கூறியவர். கமலா அண்ணி வீட்டிற்கு இங்கே செய்த பலகாரம் கொடுத்து அனுப்ப பாத்திரம் எடுத்து அதைப் போட்டவர் தேனருவி யிடம் கொடுத்து விட்டு
இருவரையும் பார்க்க எங்கே தன் கண்ணே பட்டு விடும் போல் இருந்தது.
அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் பூவிழி அவள் அறைக்குள் சென்று விட்டாள். யசோதா இரவு டிபன் செய்யச் சென்று விட்டார்.
நிழல் தேனருவியைத் தேடி வீட்டிற்கு வந்தது. அப்போது தான் அவள் மாப்பிள்ளை கூட காரில் அமர்ந்து வெளியே செல்வதைப் பார்த்து அங்கேயே நின்று கொண்டது.
நேற்றிலிருந்து இவளுக்காக நான் எத்தனை வேலை செய்து இருக்கிறேன். ஆனால் இவள் என்னைக் கண்டுக்கவே இல்லை.
சரி நாம் இப்போது வூட்டுக்குள்ளே போவோம் என்று உள்ளே சென்றது. உள்ளே போகும் போது அடடா என்ன வாசனை மூக்கைப் பிளக்குது என்று சமையல் அறையை எட்டிப் பார்த்தது.
போண்டா அதன் கண்ணுக்குத் தெரிந்தது. யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டு தன் கையை நீட்டியது. போண்டா குண்டாவைத் திறந்து ஒரு போண்டா எடுத்து வாயில் போட்டு ருசித்து விட்டு அடுத்து இருந்த கேரட் அல்வா எடுத்து ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு இப்போது தேனருவி அறைக்குச் செல்லாமல் பூவிழி அறைக்குள் சென்றது.
நான் அன்றைக்கு ஊஞ்சல் ஆடும் போது சன்னலில் நின்று பார்த்து கத்தினாலே நாம் அவளுக்கு கொஞ்சம் பிலிம் காட்டுவோம். அதுவும் இல்லாமல் தேனருவியை பயம் காட்டுகிறாளே இவளும் என் வழித்தோன்றல் தானே என்று அவளுடைய அறைக்குள் வந்து பார்க்க அவள் டேப் ரிக்கார்டில் பாட்டு போட்டுக் கொண்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருந்தாள்.
பார்த்தா அப்பராணி மாதிரி இருந்து கொண்டு என்ன இந்த ஆட்டம் போடுகிறா.
போடு போடு அப்படி போடு அந்தப் பாட்டு தான் பாடிக் கொண்டு இருந்தது.
அட நாமளும் கொஞ்சம் ஆடிப்பார்க்கலாம் என்று தான் நினைத்தது நிழல் அது அவள் கண்ணாடி முன் ஆடிக் கொண்டு இருந்தாள்.
நிழல் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டு ஆடிக் கொண்டு இருந்தது.
பூவிழி ஆடும் மும்முரத்தில் கண்ணாடியை கவனிக்கவில்லை. ஆனால் மூச்சு வாங்க நின்றவள் கண்ணாடியை ஏத்தேச்சையாகப் பார்க்க கரும்புகை மட்டும் தெரிந்தது.
அச்சோ இது என்ன கண்ணாடி முன் என் உருவம் தெரிவதற்கு முன் கரும்புகை மாதிரி இருக்கிறது. ஒரு வேளை வெளியே இருந்து தான் வருகிறதோ? அம்மா கழிதட்டுக்கு தீய் வைக்கிறதோ? என்று தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அதனால் சன்னல் அருகில் போய் நின்று பார்த்தாள்.
இது என்ன வெளியே புகை வரவில்லை என்று அவள் திரும்பி கண்ணாடியைப் பார்க்கும் போது அது சுத்தமாக இருந்தது. நமக்குத் தான் இத்தனை நேரம் ஆடிய ஆட்டத்தில் கண் இருட்டி விட்டதோ? என்று நினைத்து விட்டாள்.
இவ எப்படி இந்த ஆட்டம் போட்டும் ஸ்டெடியா நிற்கிறா? நமக்கு தான் கிர்னு சுத்துது.. இத்தனை வருஷமா இருந்த நிழல் இப்போது உதிர வைத்து விடுவா போலையே??
அவளுடைய ப்ராக்ஜெட் பேப்பர் எல்லாம் இப்போது காத்தில பறந்தது.
பூவிழிக்கு இது எப்படி பைல் தானே இருந்தது. வெளியே எப்படி ஒரு ஒரு பேப்பரா பறக்குது என்று பார்த்தாள். அது ஒவ்வொரு தாளாக பறக்கவும்
எட்டி எட்டி பிடித்துக் கொண்டு இருந்தாள்.
அதைக் கொஞ்ச நேரம் எல்லாம் களைத்து விட்டு விட்டு இப்போது அவளுடைய கபோர்ட் திறந்தது. நிழல் அதற்குள் இரகசியம் வைத்து இருக்கிறாள். பூவிழி
அது இன்றைக்கு தான் அக்கா தேனருவி வாங்கிய பேனா அதை இவள் ஆட்டைய போட்டு வைத்து இருந்தாள்.
அந்த கபோர்ட் நிறைய தேனுக்காவிடம் சுட்டது பூராவும் இருந்தது. தேனருவி நிழல் தான் எடுத்துச் சென்று விட்டது என்று அதைத் திட்டிக் கொண்டு இருந்தாள்.
நிழல் கூட அதற்கு எனக்கு எதுக்கு நான் எடுத்துக் கொண்டு போகிறேன் கேட்டதிற்கு உனக்கு இத்தனை நாட்கள் உன்னுடைய லவ்வருக்கு வாங்கிக் கொடுக்க காசு இல்லாமல் காஞ்சுபோன மிளகாய் மாதிரி வத்திக் கிடந்தாய்? இப்போது நல்லா என் கூட சேர்ந்து கேண்டீன் வந்து அந்த மாஸ்டர் மண்டையன் ஏமாந்து இருக்கிற நேரம் ப்ரூட்டி ஜூஸ் குடிச்சு நீ கொழுத்த பன்னி மாதிரி ஆகி விட்டாய்?
கொஞ்சம் கூட நம் முன்னால் இருப்பது நிழல் பேய் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் எத்தனை திட்டு திட்டினால் கடைசியில் பார்த்தா ஒரு களவாணியை கூடவே வச்சிட்டு நம்மள திருட்டுப் புள்ள ஆக்கி விட்டாளே.
கபோர்ட் அருகில் வந்த பூவிழி இது எதுக்கு திறந்து இருக்கிறது என்று அதன் கதவை படீல் என்று சாத்தினாள். நூல் இழையில் தப்பியது நிழல் இல்லை என்றால் பூவிழி அதுக்கு சங்கு ஊதி இருப்பாள்.
அய்யே அய்யோ நான் மனுசனாவே இல்லையே எப்படி நமக்கு சங்கு ஊத முடியும் நான் தான் இவங்க யார் கண்ணுக்கும் தெரிய மாட்டேனே.
தேனருவி என்று நினைவு வந்ததும் தான் அட அவ வெளியே போனாலே நாம் அங்கேயே போவோம். இந்த அரைவேக்காடு கூட இருந்தால் நம் மூளை மழுங்கி விடும் என்று போகும் போக்கில் பூவிழி யை ஒரு சுத்து சுத்தி விட்டு சென்று விட்டது.
பூவிழி அவளின் அறைக்குள் சுற்றிக் கொண்டு இருந்தவள் அப்படியே சமையல் அறை வரைக்கும் சுற்றிக் கொண்டு வந்தாள்.
( ஐயோ சிரிப்பை அடக்கவே முடியவில்லை ஹா ஹா ஹா)
யசோதா அங்கே தான் நின்று கொண்டு இருந்தார். இவளைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
அடியே தலை சுத்தி கீழே விழுந்து விடாதே டி உனக்கு இந்த விளையாட்டு இன்னமும் நிற்கவில்லையா??
எல்லாம் ஒரு ஜாலி தான் யசோ இங்கே பார் பாவாடை எப்படி அழகா விரிகிறது என்று சுற்றிக் கொண்டு வந்தவள்.. அவளாக நிற்க வேண்டும் என்று நினைத்தாலும் தன் கால் நிற்க மாட்டீங்குது என்று யசோ என்னைக் கொஞ்சம் பிடித்து நிப்பாட்டு என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.
உன்னைப் பார்த்தால் சுழல் காற்று அடிப்பது போல் இருக்கிறது.
யசோ இப்போ மட்டும் நீ பக்கத்தில் வரலை நான் உன்னிடம் வந்து விடுவேன்.
பூவிழி நீ மட்டும் வெளியே போய் விடாதே காற்று பலமாக வீசினால் அதில் பறந்து சென்று விடுவாய்!!
யசோ என்னைக் அப்படியே கொஞ்சம் சோபா அருகில் கொண்டு போய் விடு எனக்கு தலையே சுற்றுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தவள்.
அப்போது நிழல் வந்து நடு மண்டையில் ஒரு தட்டுத் தட்டியது பிறகு தான் சுற்றுவதை நிறுத்தினாள்.
எப்புட்ரி என்று யசோதா கேட்கவும் அதெல்லாம் எல்லா வித்தையும் உன் மகள் கத்து வெச்சு இருக்கிறேன். மேஜிக் தான் நான் கொஞ்ச நாளாக பழகிக் கொண்டு இருக்கிறேன்.
என்னடி உனக்கு காத்து கருப்பு பிடித்து விட்டதா? சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய்?
நீ எல்லாம் என்னை நம்புவாயா? யசோ நான் எல்லா பவரையும் இந்தக் கையில் தான் வைத்து இருக்கிறேன். என்று ஸ்பைடர் மேன் போல் காண்பித்தாள்.
சரி உன் கையில் தான் பவர் இருக்குது தானே அந்த மேல் இருக்கும் விசிறியை துடைச்சு விடுடி நான் கொஞ்சம் நேரம் படுக்கிறேன்.
கொஞ்சம் அதிகமாக ரீல் சுத்தி விட்டோமே இப்போது யசோ வேலை கொடுத்து விட்டாங்களே சரி நம் கையைச் சோதித்துப் பார்த்து விடலாம் என்று இப்போது கையே உன்னால் இந்த மின்விசிறியை துடைக்க முடியுமா ??
உடனே அவளது கையில் ஒரு கண் வந்து விட்டது. சொல்லுங்க மேடம் நீங்கள் கண்ணை மூடி திறங்கள் அதற்குள் நான் வளர்ந்து போய் துடைத்து விடுவேன்.
இது அனைத்தும் நிஜமாக நடப்பது போல் அவள் கண்ணுக்குத் தெரிந்தாலும் அவள் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள் சோபாவில் தலை கிறுகிறுத்து விழுந்தவள் உளறிக் கொண்டு இருந்தாள்.
பூவிழி முகத்தில் தண்ணீர் தெளித்த யசோதா அடியே எழுந்து கொள்டி மாலை நேரம் தூங்கக் கூடாது என்று எத்தனை நாள் தான் சொல்வது காதில் ஏறவே ஏறாதா??
ஐயோ மழை வருது என்று எழுந்து அமர்ந்தவள். நான் எங்கே இருக்கிறேன். இது யார்? வீடு என்று தான் கேட்டாள்.
உன் மாமியார் வீடு என்று அவள் கன்னத்தில் இடி வைக்க.
ஐயகோ நான் என்ன செய்வேன்.
ஏன்டி உனக்கு என்ன தான் பிரச்சினை முதலில் என்னைய விடுடி.
விட்டால் நீ போய் விடுவாய்?
இரவுக்கு வயிற்றில் ஈரத்துணி கட்டிக் கொண்டு படுத்துக்கோ எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொன்னதும்.
தாய்க்குலம் நீங்கள் சமைத்து வைத்து இருப்பது தான் என் நாசி வரை சும்மா கும்முனு ஏறுதே அதனால் நீங்கள் கொஞ்சம் இங்கே அமருங்கள் என்று தனது தாய் அமர்ந்ததும் அவர் மடியை சிறை பிடித்து விட்டாள்.
அம்மா அக்கா இன்னும் மூன்று மாதம் தான் இருப்பாள். அப்புறம் நீயும் நானும் மட்டும் தான் இருப்போம். அவள் இல்லாமல் கொஞ்ச நேரம் இருப்பதற்கே
என்னமோ மாதிரி இருக்குதே. எப்படி மா நாம் மட்டும் இருப்பது.
தேனு கல்யாணம் முடிஞ்சா அடுத்து ஒரு வருடத்தில் உனக்கு பார்க்க வேண்டும்.
அம்மா நான் உன் கூடவே இருந்து விடுகிறேனே.
எதுக்கு சோறு ஆக்கிப் போட ஆள் இருக்கிறது என்று நல்லா ஏமாற்றி கொண்டு திரிவதற்கா? ஒழுக்கமா படிப்பு முடிந்ததும் உனக்கு இங்கேயே பக்கத்தில் பார்த்து கட்டிக் கொடுத்து விட்டு நான் சிவனேனு இருக்கனும்.
தேவ் ஆனந்த் காரில் இருந்து இறங்குவதற்கு முன் தேனருவி இறங்கி அத்தை என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
ஹனி இருடி நானும் வருகிறேன்.
ஹலோ நீங்கள் என்னை செல்லப் பேர் எல்லாம் வெளியே சொல்லி அழைக்காதீங்க. இது கிராமம். என் அம்மா இங்கே உங்களோட வருவதற்கு முதலில் விட மாட்டார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் விட்டு விட்டார்கள் அது உலக அதிசயம் தெரியுமா?
அம்மா என்று அழைத்துக் கொண்டு அவளுக்கு முன் விரைந்து இருந்தான்.
யாரு? ராசா கண்ணு வா சாமி வூட்டில் எல்லாரும் சௌவுக்கியமா?
நீ மட்டும் தான் வந்தாயா? பிறகு யார் அத்தை என்று கூப்பிட்டது.
தொடரும்..