• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
295
நீ உடல் நான் நிழல்
பாகம் - 35


விஜயலதா தனது தங்கை தேவ் ஆனந்த் அறையில் தான் இருக்கிறாள். அவன் என் தங்கையின் வாழ்க்கையை வீண் செய்து விட்டான். வேறு ஒரு பெண் பார்த்து நிச்சயம் செய்து விட்டு என் தங்கச்சி சுனைனா கூட குடும்பம் நடத்துகிறான். இதைக் கேட்க நாதியில்லை என்று நடுக் கூடத்தில் நின்று கூப்பாடு போட..

கிருஷ்ணவேணிக்கு கோபம் வந்து விட்டது. ஏய் எதுக்கு காலையில் எழுந்ததும் இப்படி இந்த வீட்டு மானத்தை வாங்குகிறாய்? இதுவும் அக்காளும் தங்கச்சியும் சேர்ந்து போட்ட திட்டமா?

நான் சொல்வது பொய் என்றால் வாங்க போய் பார்க்கலாம் என்று அனைவரையும் அழைத்து வந்தாள். அனைவரும் வந்து பார்க்க தேவ் ஆனந்த் அறைக்கு கதவு வெளியே தாழ்ப்பாள் போடப் பட்டு இருந்தது.

இதோ நல்லாவே தெரிகிறது விஜயலதா உண்மையைச் சொல் நீயும் சுனைனா இரண்டு பேரும் சேர்ந்து திட்டம் போட்டு என் பையன் வாழ்க்கையை கெடுக்க நினைத்துத் தானே இது போல் செய்து இருக்கிறாய்?

சாற்றி இருக்கும் கதவு எப்படி வெளியே தாழ்ப்பாள் போட்டு இருக்கும். நீ தான் உன் தங்கச்சியை உள்ளே அனுப்பி வெளியே தாழ்ப்பாள் போட்டாயோ? இந்த வீட்டில் இருந்து கொண்டு இங்கேயே சதி செய்கிறாயே?

என்று திட்டிக் கொண்டு இருக்கும் போதே விஜயலதா கதவைத் திறந்து உள்ளே சென்று பார்க்கும் போது அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் அங்கே தனது கணவன் ரவிக்குமார் பெட்டில் படுத்து இருப்பதைப் பார்த்து ஒரு நிமிடத்தில் வாழ்க்கையே இரண்டு போய் விட்டது. கடைசியில் நம் தங்கச்சி என் வாழ்க்கைக்கே சக்களத்தியாக வந்து விட்டாளே என நினைத்தவள்.

வேகவேகமாக குளியலறை சென்று பார்த்தாள் சுனைனா எங்கேயாவது இருக்கிறாளா? அங்கேயும் இல்லை உடனே பால்கனி சென்று பார்த்தாள் அங்கேயும் இல்லை என்றதும் வந்து கட்டிலின் கீழே குனிந்து பார்த்தாள்.

கிருஷ்ணவேணி உடனே என்ன மருமகளே யாரைத் தேடுகிறாய்? இதோ கட்டிலில் உன் புருசன் தான் இருக்கிறான். நீ என்னமோ? குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டாய்? உன் தங்கச்சியை என் மகன் சின்ன மகன் கெடுத்து விட்டான். நீங்கள் முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறீர்கள் என்று இப்போது உன் வாயைத் திறந்து சொல் என் மகன் மீது வேண்டும் என்று தானே பழி போட்டாய்.

அத்தை நீங்கள் இன்னும் என்னைத் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஒரு விடயம் பாருங்கள் என் தங்கயையும் காணம். உங்கள் சின்ன மகனையும் காணம் இரண்டு பேரும் இங்கேயே இல்லையே ஒரு வேளை இரண்டு பேரும் ஊரை விட்டு ஓடிப் போய் இருப்பார்கள்.

ரவிக்குமார் எழுந்து விட்டான். தனது அம்மா அப்பா பெரிய அண்ணா என்று அனைவரும் நிற்பதைப் பார்த்து ஏம்மா என்னாச்சு என்று தான் கேட்டான்.

ரவி நீ இங்கு இருக்கிறாய்? தேவ் எங்கே போய் விட்டான். இவள் என்னமோ? அவள் தங்கச்சியை கூட்டிக் கொண்டு ஓடி விட்டான் என்று கதை அளக்கிறாள்.

விஜயலதா வை முறைத்துப் பார்த்தவன். ஏம்மா இவளே ஒரு பையத்தியகாரி இவள் சொல்வதை எல்லாம் நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். அது தான்மா எனக்கு ஆச்சரியம் !!

ஆமா தேவ் எங்கே கண்ணு அதை முதலில் சொல்.

தேவ் மதுரைக்கு போய் இருக்கிறான். நான் தான் போக வேண்டியது. ஆனால் எனக்கு மிகவும் டயர்டாக இருந்ததால் அவனை அனுப்பி வைத்தேன். இன்று சாயங்காலம் தான் வருவான் மா.

சரிப்பா என்று கூறிவிட்டு கிருஷ்ணவேணி அம்மா அனைவரும் கலைந்து சென்றனர்.

ரவிக்குமார் நீ எல்லாம் பொம்பளை தானா? எதுக்குடி. என் தம்பி வாழ்க்கையை கெடுக்கப் பார்க்கிறாய்?

நான் கதவைத் தாழிடாமல் தான் தூங்கிக் கொண்டு இருந்தேன். பிறகு சிறிது நேரத்தில் கதவை யாரோ? சாற்றும் சத்தம் கேட்டது. அது நீ தானா? அத்தனை திருட்டு தனம்.. ஏண்டி என் வீட்டில் இருந்து கொண்டு என் தம்பிக்கு எதிராக இத்தனை தையரியமாக
நீ சதி செய்கிறாய்?

ஏங்க நீங்களும் என்னைப் புரிந்து கொள்ளாமல் இப்படி அவதூறாக
பேசுகிறீர்கள். உங்க தம்பி தான் என் தங்கச்சியை அழைத்துச் சென்று இருக்க வேண்டும் அவளைக் காணம்.. என்று நீலிக் கண்ணீர் வடித்தாள்.

ஏய் வாயை மூடுடி நீயும் உன் தங்கச்சியும் பேசுவதை நான் கேட்டேன். அப்போதே அவன் வெளியே சென்று விட்டான். இல்லையேல் நீ அவன் வாழ்க்கையை வீணாக்கி இருப்பாய்.

உன்னை அடிக்க கூட நான் தொடப் போவது இல்லை டி.. இதே வீட்டில் இருந்தாலும் என் பக்கத்தில் படுக்கும் தகுதியை நீ இழந்து விட்டாய். என்று கூறிவிட்டு அவன் பார்த்த பார்வையில் அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

ரவிக்குமார் தேவ் ஆனந்த் அறையைப் பூட்டி தன் கையில் சாவியை எடுத்துக் கொண்டு இப்போது அவனது அறைக்குச் சென்றான். காலைக் கடன்களை முடித்து குளித்து விட்டு கீழே வரும் போது, சமையல்கார தமயந்தி அக்கா தான் தன் அம்மாவிடம் எதுவோ? கலகத்தோடு சொல்லிக் கொண்டு இருந்தார்.

தம்பி ரவி எங்கே விஜயலதா அவளை வரச் சொல் என்று கிருஷ்ணவேணி அம்மா சத்தம் போடுவதைக் காதில் வாங்கிக் கொண்டே விஜயலதா அவரிடம் வந்து எதுக்குங்க அத்தை என் பேரை சொல்லி ஏலம் போடுகிறீங்க.

என்ன உங்க சின்ன மகனும் சுனைனா இருவரும் மாலையும் கழுத்துமா வந்து வெளியே நிற்கிறாங்களா? அது தான் ஆராத்தி எடுக்க வேண்டும் என்று என்னை அழைக்கிறீர்களா??

ஏண்டி உன் மனசு இவ்வளவு கேவலமா யோசிக்கிறது. பேச்சும் இவளும் பாரு. என்று ரவி எகிறிக் கொண்டு வர.

தம்பி நீ பேசாமல் இரு நான் பேசிக் கொள்கிறேன். என்று தன் மகனை அமைதியாக இருக்கச் சொன்னவர்.

இங்கே பாரு உன் தங்கச்சி அந்த சுரேஷ் தங்கி இருக்கும் வீட்டிற்குள் தான் இருக்கிறாள்.

என்னங்க அத்தை சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதீர்கள். நான் சொல்கிறேன் அவள் தேவ் ஆனந்த் கூடத் தான் இருப்பாள்.

ஆமா இரண்டு பேரும் சேர்ந்து திட்டம் போட்டீர்களாச்சே அதனால் நீங்கள் அப்படியே நடக்கும் என்று எதிர் பார்த்து இருப்பீங்க.. ஆனால் எங்கள் குலதெய்வம் கருப்பணசாமி துணையில் நீங்க விரிச்ச வலையில் உங்களுக்கே திரும்பி விட்டது.

தமயந்தி சரி இவ நேரில் பார்த்தால் தான் நம்புவா வா பெரியவனையும் வானதி நீயும் வா உங்க அப்பாவையும் வரச் சொல் என்று கூறிவிட்டு அவர் முன்னால் சென்றார்.

வீட்டில் வேலை செய்பவர்கள் தங்குவதற்கு கட்டி இருக்கும் அந்தப் பகுதிக்கு சென்றவர்கள் சுரேஷ் தங்கி இருக்கும் வீடு மற்ற வீடுகளை விட கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

அவனின் வீட்டுக்கதவைத் தட்டினார்கள். ஆனால் வெகுநேரமாகியும் கதவைத் திறக்க வில்லை.

ஒருத்தரும் இல்லாத வீட்டில் வந்து கதவைத் தட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். சும்மா வேண்டும் என்று கதை கட்டுகிறீர்கள் தானே அத்தை ஆனாலும் உங்களுக்கு இத்தனை வன்மம் ஆகாது என்று விஜயலதா பேசவும்.,

அவளின் கன்னம் தகதகவென்று எரிந்தது. நானும் பேசாமல் இருந்தால் எங்கம்மாவை எதிர்த்து பேசிக் கொண்டு இருக்கிறாய்? அவ்வளவு நல்லவள் நீ.. உன் புத்தி போலவே எல்லாரும் இருக்க மாட்டார்கள்.

ரவி நீ பேசாமல் இரு எதுக்கு அவளை அடிக்கிறாய்? அவளுக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். சுரேஷ் செல்லுக்கு அழைத்து பாரு.. என்று சொல்லவும்.

அம்மா நான் அப்போ இருந்து அழைக்கிறேன் மா அவன் எடுக்கவே இல்லை. நீங்கள் சொல்மா கதவை உடைத்து விடலாமா??

இவர்கள் இங்கே பேசிக் கொண்டு இருக்கும் போது கதவைத் திறந்து கொண்டது. தாழ்ப்பாள் நன்றாகப் போடவில்லை அதனால் தான் இத்தனை நேரத் தட்டலுக்கு கதவு திறந்து கொண்டது என்று அனைவரும் நினைத்து இருக்க ஆனால் நிழல் தான் அந்தக் கதவின் நாதங்கியை நகர்த்தி விட்டது.

கதவு தடார் என்று திறந்து விட உள்ளே சென்றவர்கள் அனைவரும் திகைத்து போய் அதிர்ச்சியாகி விட்டனர்.

சுரேஷ் சுனைனா இருவரும் ஒரே கட்டிலில் கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தனர்.

அடக் கருமமே இவர்கள் கூத்து எத்தனை நாளாக தொடருதோ.. தெரியலையே.. உள்ளே என்ற நிலையில் இருக்கிறார்களோ? எப்படி அவர்களை எழுப்புவது அவர்களாக எழுந்து வரட்டும் என்று அங்கேயே அமர்ந்து விட்டார்கள் கூடத்தில் இருக்கும் சோபாவில் அனைவரும்.

அவர்கள் உடை அணிந்து இருக்கிறார்களா? என்று தெரியாமல் ஆனால் இருவரும் ஒரே போர்வையில் கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்குவதைப் பார்த்து சங்கோஜமாக உணர்ந்தனர்.

விஜயலதாவிற்கு இது எப்படி சாத்தியம் ஆயிற்று. அவள் தேவ் ஆனந்த் அறைக்குச் சென்றாலே நான் பார்த்தேனே. பிறகு எப்படி இவள் வீட்டைத் திறந்து கொண்டு இங்கே இவன் வீட்டிற்குள் வந்து விடிய விடிய இவன் கூட ஒரே கட்டிலில் இப்படி கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்குகிறாளே இவளை இந்த நிலைமையிலா பார்க்க வேண்டும்.

எனக்கு முதலிலேயே தெரிந்து இருந்தாள். இந்தக் கழுதையை யாருக்கும் தெரியாமல் நான் அழைத்துச் சென்று இருப்பேனே இப்போது என்ன செய்வது? அப்பா அம்மாவிடம் நான் என்ன பதில் சொல்வேன். அவள் வாழ்க்கை இப்படியா? வேலைக்கு இருப்பவன் கூட கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்குகிறாளே என்று இவள் மனதில் கணக்குப் போட்டுக் கொண்டு இருந்தாள்.

என்னம்மா மருமகளே இப்பாவது நாங்கள் எதுவும் செய்ய வில்லை என்று நம்புகிறாயா? உனக்கு எத்தனை அதிர்ச்சியாக. இருக்கிறதோ? அதே அளவு தான் எங்களுக்கும் இருக்கிறது. சரியா? ஒருத்தர் மேல் எப்போதும் பழி போடுவதே சுலபம் ஆனால் எது உண்மை என்று தெரிய வரும் போது அதை எதிர் கொள்வது கொஞ்சம் என்ன நிறையவே கஷ்டமாகத் தான் இருக்கும்.

அத்தை என்ன நேரம் பார்த்து பழி தீர்த்துக் கொள்கிறீர்களா? என் மனசு என்ன பாடுபடுகிறது என்று எனக்குத் தான் தெரியும் என்று விஜயலதா கூறவும்.

உங்க கூட எல்லாம் மனுசன் பேசுவானா? என்று ரவிக்குமார் அம்மா அவ சாக்கடை நீங்கள் அவளிடம் எதுக்கு தேவை இல்லாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லி விட்டு..

டேய் சுரேஷ் என்று அவனை கத்தி அழைக்கவும் தான் இருக்கும் எழுந்தனர்.

எழுந்ததும் ஏய் நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று இருவரும் ஒருவரைப் ஒருவர் பார்த்துக் கத்திக் கொண்டனர்.



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top