• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
295
நீ உடல் நான் நிழல்
பாகம் - 34


சுனைனா அனைவரும் தூங்கியதும் நல்லவள் போல் தேவ் ஆனந்த் அறைக்குள் செல்ல வந்தாள்.

தேவ் ஆனந்த் அறை முன்பு நிற்கும் போது ஒரு சுழல் போல் வந்தது. அவள் உடலில் நிழல் உள் வந்தது. அவளை அவ்வறையில் இருந்து வேறு ஒரு வீட்டின் முன் நிறுத்தியது. அங்கே கதவு திறந்து இருக்கவும் சுனைனா அந்த வீட்டில் உள்ளே வந்து கதவை தாழ்பாள் போட்டு விட்டாள்.

தனது ஆசையால் அவள் இப்போது வந்து நின்ற இடம் எது என்று தெரியாமல் வந்து விட்டாள். ஆனால் விடியல் அவளுக்கு என்ன சொல்லக் காத்து இருக்கிறதோ?

விஜயலதா தன் தங்கை தேவ் ஆனந்த் அறைக்கு சென்றதைப் பார்த்தவள். இது என்ன லூசு கதவைத் தாழ்பாள் போடாமல் சென்று இருக்கிறாள். எது செய்தாலும் சரியாக தவறைச் செய்ய வேண்டும் என்று நினைத்து தேவ் ஆனந்த் அறைக்குள் தன் கணவன் தான் இருக்கிறான் என்று தெரியாமல் வெளிப் பக்கமாக கதவைத் தாழ் போட்டு விட்டு சென்று விட்டாள்.

ரவிக்குமார் கதவைத் திறந்து கொண்டு வரட்டும் என்று தூங்குபவன் போல் பசாங்கு செய்து கொண்டு இருந்தான். ஆனால் அவன் அறியாதது அல்லவா? சுனைனா வேறு அறைக்குள் புகுந்து விட்டாள் என்று தெரியாமல் அவளுக்காகத் தான் காத்து இருந்தான்.

சுனைனா சென்று நின்றது. வேலை ஆட்கள் தங்கி இருக்கும் கோட்டர்ஸ் தான் அதுவும் சுரேஷ் இருக்கும் அறைக்குள் தான் இப்போது உள்ளே சென்று இருந்தாள்.

சுரேஷ் லேட்டாக வீட்டிற்கு வந்தவன். உடல் அலுப்பாக இருந்ததால் ப்ரிட்ஜ் லிருந்து பீர் எடுத்து குடித்து விட்டு படுத்து இருந்தான். அவன் வீட்டிற்கு யார் வரப் போகிறார்கள் என்று தான் அன்று தாழ்பாள் போடாமல் படுத்து இருந்தான். நல்லா தோட்டத்துக் காற்று குளுகுளு என்று வீசிக் கொண்டு இருக்க
லேசாக சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.

சுனைனா வின் மனதில் இருக்கும் ஆசையில் இப்போது அவன் அருகில் சென்று படுத்துக் கொண்டு அவனைக் கட்டிப் பிடித்தாள்.

பெண் என்பதே மறந்து விட்டது போல் அவள் தேவ் ஆனந்த் என்று நினைத்துக் கொண்டு சுரேஷ் அருகில் படுத்துக் கொண்டு அவள் மென் பாகங்கள் அவன் மேல் வைத்து அழுத்தினாள்.

ஏற்கனவே சிறிது போதையில் இருந்தவனுக்கு இவளின் செய்கை அவனை வேற்று ஒரு உலகத்தில் இழுத்துச் சென்றது.

எப்படியாவது தேவ் ஆனந்த் உணர்ச்சி தூண்டி விட்டு நம்மை அவனுக்கு கொடுத்து இந்த மிகப் பெரிய அரண்மனை வீட்டில் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைவிலேயே இருந்தவளுக்கு இருளில் தேவ் ஆனந்த் சுரேஷ்க்கும் வித்யாசம் தெரியவில்லை.

விஜயலதா சும்மா ஆடைகளை மட்டும் கிழித்துக் கொண்டு அவ்வறையில் இருந்து வெளியே வந்து நீ சத்தம் போடுவதில் அனைவரின் முன்பும் மானம் போய் விடும் என்று உனக்குத் திருமணம் செய்து விடுவார்கள் என்று தான் திட்டமிட்டு கொடுத்தாள்.

ஆனால் சுனைனா பெரிய வீரதீரச் செயல் செய்வது போல் தான் இப்போது ஒரு பெண் எதைத் திருமணம் ஆகாமல் இழக்கக் கூடாதோ? அதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சுரேஷ் இதழோடு இதழ் பதித்து இருந்தாள்.

இதழ் போர் நடக்கும் போதே ஆடைகளைக் களைந்து விட்டனர் இருவரும். அடுத்து கட்டம் இரு உடலும் பின்னிப் பினைந்தது. பாம்புகள் போல்.. உணர்ச்சி உச்சத்தில் இரவு நீள வேண்டும் என்று தான் நினைத்து இருந்தனரோ??

தேடல் நிறகாமல் விடியும் வரை விளையாட்டு தொடர்ந்தது. இருவரும் நீண்ட நேரம் உடல் வலிக்க யுத்தம் செய்ததால் ஓய்ந்து ஒரு போர்வைக்குள் உறங்கி விட்டனர்.

இது தெரியாத விஜயலதா தனது தங்கையை காணவில்லை நேற்று இரவு தேவ் ஆனந்த் அறையில் தான் நின்று பேசிக் கொண்டு இருந்தாள். அதற்கு பிறகு அவள் அறைக்குச் சென்று இருப்பாள் என்று தான் நான் நினைத்தேன்.

இப்போது அவளைப் பார்க்க அவள் அறைக்குச் சென்று பார்த்தாள் அவளைக் காணவில்லை அப்படி என்றால் தேவ் ஆனந்த் தான் என் தங்கையை எதுவோ?? செய்து விட்டான். வாங்க எல்லாரும் இப்போது குட்டு வெளிப்பட்டு விடும் என்று விஜயலதா காலையில் எழுந்ததும் ஆரம்பித்து விட்டாள் பிரசங்கத்தை.

அவள் தான் வெளியே தாழ்ப்பாள் போட்டு வைத்து விட்டு சென்றதால் அனைவரும் வந்து பார்த்து விட்டு இங்கே பாரு விஜயலதா நீ சொன்னாய் என்று தான் இங்கே வந்து பார்த்தால் கதவு வெளியே தாழ்பாள் போட்டு இருக்கிறது.

ஒரு வேளை அக்காளும் தங்கையும் சேர்ந்து தான் ப்ளாண் போட்டு விட்டு தேவ் ஆனந்த் வாழ்க்கையை நாசம் செய்ய நினைத்தீர்கள என்று மட்டும் எனக்குத் தெரிந்தது. நீயும் உன் அம்மா வீட்டிற்கு பெட்டியைக் கட்டி விட வேண்டும் என்று கராறாக பேசினார் கிருஷ்ணவேணி.

அத்தை முதலில் அறைக்குள் என்ன நடக்கிறது என்று தெரிந்த பிறகு நீ சொல்லுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியவள் இப்போது கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் புகுந்ததும் அதிர்ந்து போய் விட்டாள்.

தன் கணவன் தான் தலைக்கு ஒரு கை கொடுத்து படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தான்.

அச்சோ நான் தான் அறை மாறி வந்து விட்டேனோ? எங்கள் அறைக்கு மறுபடியும் வந்து விட்டோமோ என்று தலையைச் சொரிந்தாள்.

சுற்றிலும் பார்தாதாள். இது தேவ் ஆனந்த் அறை தான் அப்படி என்றால் என் கணவன் தான் இங்கே இருக்கிறார் என்று தெரியாமல் சுனைனா இந்த அறைக்குள் வந்தாலே என் வாழ்க்கை சக்களத்தியாக வந்து விடுவாளோ?

இருவருக்கும் இடையே எல்லாம் நடந்து முடிந்து விட்டதா? அது தான் உடல் சோர்வில் தூங்குகிறாரோ?

சுனைனா எங்கே சென்றால் தெரியவில்லையே?? ஒரு வேளை அவள் குளியலறையில் உள்ளே இருப்பாளோ?? என்று அங்கே ஓடிப் பார்த்தாள். அங்கே இல்லை ஒரு வேளை பால்கனியில் இருப்பாளோ? அங்கே சென்று பார்த்தாலும் வெறும் பால்கனி தான் அவளை பார்த்து அளித்தது.

அச்சோ எப்படி அவள் வெளியே சென்று இருப்பாள். ஒரு வேளை பால்கனியில் இருந்து கீழே குதித்துச் சென்று இருப்பாளோ? என்ற யோசனையான அவள் முகத்தைப் பார்த்து கிருஷ்ணவேணி சந்தேகமே இல்லை நீயும் உன் தங்கச்சி இருவரும் சேர்ந்து தான் ஏதோ திட்டம் தீட்டி இருக்கிறீர்கள் என்று அவர் சத்தம் போட அவரின் சத்தத்தில் ரவிக்குமார் எழுந்து அமர்ந்தான்.

அம்மா இது என்ன எல்லாரும் காலையிலேயே ஒன்றாக வந்து இருக்கிறீர்கள். என்னாச்சு??

ஆமா தேவ் ஆனந்த் அறையில் நீ எதுக்குடா கண்ணா தூங்குகிறாய்??

அம்மா எங்கே என் அறையில் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை அது தான் இங்கே தேவ் அறை சும்மா தான் இருந்தது. அது தான் நான் இங்கே தூங்குகிறேன்.

நீ இங்கே தூங்குவது இருக்கட்டும் தேவ் எங்கே அவனைக் காணவில்லை.

அதற்குள் விஜயலதா இப்போது தான் புரிகிறது அத்தை தேவ் ஆனந்த் சுனைனா இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார்கள். என்னமோ நான் தான் திட்டம் தீட்டுகிறேன். என்று சொய்னீர்கள். இப்போது தெரிகிறதா? இரண்டு பேரும் எங்கோ ஓடிப் போய் விட்டார்கள் என்று நான் இதைச் சும்மா விட மாட்டேன் என்று நீலிக் கண்ணீர் விட்டாள்.

ரவிக்குமார் என்னமா கதை விடுகிறாள். இவள் இவளுக்கு நாம் சரியான தண்டனை கொடுக்க வேண்டும். இனிமேல் எதையும் யோசிக்க முடியாத அளவுக்கு என்று யோசித்தவன்.

அம்மா அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது போல் இருக்கிறது. தேவ் ஆனந்த் அவனை நான் தான் மதுரைக்கு அனுப்பி வைத்தேன். அவன் நேற்று மதியமே சென்று விட்டான். நாளைக்குத் தான் வருவான் என்று கூறியவன். விஜயலதா முகத்தைத் தான் பார்த்தான். அதில் அவள் முகம் வெளிறி விட்டது.

தேவ் ஆனந்த் அறையில் இல்லை என்று தெரியாமல் தனது தங்கையை அனுப்பி விட்டேனே. ஒரு வேளை இரவு இவருக்கும் அவளுக்குள்ளும் எல்லாம் நடந்து முடிந்ததா? என் கணவனை எப்படி வேறு ஒருத்திக்கு விட்டுக் கொடுப்பேன். என் தங்கையாக இருந்தாலும் என் புருசனை அவளுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டு நான் நடைபிணமாக வாழ்வேனா?

நான் விடிந்தால் வந்து கதவைத திறந்து கொண்டு வருவேன் என்று பால்கனியில் இருந்து குதித்து வெளியே சென்று விட்டாளோ? ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு கள்ளத்தனமான உறவா? என்று தாறுமாறாக இவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போது அனைவரும் அறையை விட்டு சென்று இருக்க.. ரவிக்குமார் அவளின் அருகில் வந்து நின்று கொண்டு அவளின் அதீத சிந்தனை ரசித்தவாறு..

ஏண்டி உனக்கு எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தாள் என் தம்பிக்கு வேறு ஒரு பொண்ணுடன் நிச்சயம் முடிந்து விட்டது தெரிந்தும் அக்காளும் தங்கையும் சேர்ந்து திட்டமிட்டு இரவில் ஒரு ஆண்மகன் தனித்து இருப்பான். உன் தங்கை அவுத்துப் போட்டு நில்லு எந்த ஆம்பளையும் வீழ்ந்து விடுவான் என்று சொல்லிக் கொடுத்து அவளை உள்ளே அனுப்பி வைத்து வெளியே தாழ்ப்பாள் போட்டுச் செல்வாய்??

உன் தங்கை அறைக்குள் இருக்கிறாளா? இல்லையா ? என்று பாரக்காமல் தாழ்ப்பாள் போட்டுச் சென்றதால் தான் இப்போது அவள் இங்கே இல்லை என்று நீ மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

விஜயலதா இவருக்கு எப்படி தெரிந்தது. நாங்கள் இருவரும் பேசியது. இப்போது இவர் என்ன செய்வாரோ? தெரியவில்லை அடித்து இருந்தாள் கூட வாங்கிக் கொள்ளலாம் இப்போது நாம் வேறு இவரைச் சந்தேகக் கண் கொண்டு பார்த்து விட்டோம்.

இப்போது என்னை வீட்டை விட்டு போகச் சொல்லி விடுவாரோ? சுனைனா வாழ்க்கை என்று பார்த்து தன் வாழ்க்கை கேள்விக் குறி ஆகி விடுமோ?

உனக்கு நான் யார் என்று காட்டுகிறேன் டி.. உன்னை எல்லாம் அடிக்க கூட என் கை உன் மேல் படக் கூடாதுடி. இதே வீட்டில் உனக்கு எப்படி எல்லாம் டார்ச்சர் கொடுக்கிறேன் என்று பாருடி..

உன் தங்கச்சி யை இப்பவே நீ பார்சல் செய்து உன் அம்மா வீட்டிற்கு அனுப்பி வை உனக்கு அதற்கு பிறகு வாழ்க்கை கொடுக்கலாமா? இல்லையா? என்று நான் யோசித்துச் சொல்கிறேன்.

இரவில் இருவரும் ஆட்டம் போட்டு விட்டு தாமதமாக உறங்கியும்.. விடிந்ததும் சுரேஷ் தான் முதலில் எழுந்தவன் தனது அருகில் ஒரு பெண் இருப்பதை இருட்டில் பார்த்தவன். மீண்டும் ஒரு ரவுண்ட் அடிக்க ஆசை வந்து விட்டது. பிறகு என்ன ஆட்டம் தான் இருவரும் தூக்கம் தெளிந்து எழுந்து பார்த்தாள் தான் தெரியும்.. ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கும் போது தான் பல முடிச்சுகள் களையும்.

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top