• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
293
நீ உடல் நான் நிழல்
பாகம் - 33


விஜயலதா தன் தங்கை சுனைனா கூட போட்ட திட்டம் ரவிக்குமார் கேட்டு விட்டான்.

அடிப்பாவி உங்கள் ஆசைக்கு என் தம்பி வாழ்க்கை பழாவதா? இருடி அக்கா தங்கச்சி இரண்டு பேரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுகிறேன்.

தேவ் ஆனந்த் தனது அறையில் தேனருவி கூடத் தான் போன் பேசிக் கொண்டு இருந்தான். எல்லாம் காதல் பயிர் தான் வளர்த்தான்.

ரவிக்குமார் தேவ் ஆனந்த் அறைக்குள் வந்ததும்.. அவளை லைனில் காத்திருக்கச் சொல்லி விட்டு.. அண்ணா ஏதாவது பேச வேண்டுமா? அதிரா விடம் சொல்லி இருந்தால் நான் வந்து இருப்பேன் தானே..

ஏண்டா தேவ் ஆனந்த் என் தம்பி அறைக்குள் நான் வரக்கூடாதா?

அதிலெல்லாம் ஒன்றும் இல்லை. உங்களுக்கு இல்லாத உரிமையா?

அது தம்பி எனக்கு ஒரு உதவி செய்கிறாயா?

இத்தனை நாட்கள் தன்னிடம் எதுவுமே கேட்காத தன் அண்ணன் இன்று வந்து உதவி கேட்கிறார். நாமும் தட்டிக் களிக்காமல் செய்து தர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு. சொல்லுங்கள் அண்ணா நான் என்ன உதவி செய்ய வேண்டும்.

அதில்லை தம்பி டவுனில் ஒரு வேலை எனக்கு ரொம்ப டயர்டாக
இருக்கிறது. அது ஒரு நாளில் முடியாது, இன்று நாளை இரண்டு நாட்கள் ஆவது ஆகும் நீ அங்கே சென்று வருகிறாயா? எனக்கு உடல் அசதியாக இருக்கிறது அது தான் அப்புறம் இன்னும் ஒரு விடயம் நான் உன் அறையில் படுத்துக் கொள்கிறேன். அங்கே அக்காளும் தங்கையும் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள் அது தான் நான் இன்று இரவு மட்டும் இங்கே தங்கிக் கொள்கிறேன் தேவ்.

அண்ணா நீங்கள் சொன்னால் நான் செய்யப் போகிறேன். அதற்கு விளக்கம் எல்லாம் வேண்டாம். தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் உடல் அசௌகரியம் எனாறால் சொல்லுங்கள் மருத்துவமனை சென்று வரலாம்.

இல்லை தேவ் இப்போது தான் மாத்திரை போட்டு வந்தேன். ரெஸ்ட் எடுத்தால் சரியாகி விடும்.

அப்புறம் நீ வெளியே செல்வது யாருக்கும் தெரிய வேண்டாம். அப்படியே யாராவது போன் செய்தால் தோட்டத்தில் இருக்கிறேன். வந்து விடுவேன் என்று மட்டும் சொல் நீ டவுனுக்குப் போவது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறினான்.

சொல்லப் போனால் டவுனுக்குப் போய் தான் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்று இல்லை. இங்கு இருந்தே முடித்து விடலாம் உப்புச் சப்பு இல்லாத விடயம் தான்.. தன் மனைவி மற்றும் சுனைனா திட்டத்தில் தன் தம்பி வாழ்க்கை கேள்விக் குறி ஆகி விடக் கூடாது என்று தான் நினைத்தான். இதனால் தன் கண்ணியம் கலங்கமாகி விடும் என்பதை அளியாமல் இல்லை.

அதற்கும் தக்கப் பதிலடி ஏதாவது ஐடியா செய்ய வேண்டும் என்று தான் முதலில் தம்பியை வெளியே அனுப்ப ஒரு வேலையைக் கொடுத்து அனுப்பி விட்டான். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்கினான்.

நிழல் இருக்கும் போது என்ன கவலை என்று நாம் யோசிக்கிறோம். அதாவது தேனருவி தேவ் ஆனந்த் கூட போனில் பேசும் போது இந்த உரையாடல் அனைத்தும் அவன் கால் கட்ட செய்யாத காரணத்தால் கேட்டுக் கொண்டாள்.

தேனருவி நிழலிடம் சொல்லி விட்டாள். தேவ் ஆனந்த் மேல் தப்பான பழிச் சொல் விழுகக் கூடாது என்று நினைக்கும் தன் பெரிய மாமா ரவிக்குமார் அவரின் நற்பெயர் கெட்டு விடாமல் அங்கே நீ தான் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டாள்.

நிழலுக்கு அப்பாடா நல்ல வேளை இந்த ரைட்டர் ஜி திகில் என்று போட்டு எல்லாரையும் பயப்பட வைக்கும் என்று பார்த்தால் பக்கத்தில் நகைச்சுவை என்று போட்டு பேய் நிழல் பயம் எல்லாரையும் விட்டு போய் விட்டது. எப்படியோ? நமக்கு சீன் இல்லாமல் ஓரம் தள்ளி விடுவாங்க நினைச்சேன்.
வெச்சுப் புட்டாகடா என்று கெக்கப் பிக்கே என்று சிரித்தது.

அடச்சீ உன் வாயை மூடு உனக்கு வேலை கொடுத்தது நான் நீ அந்த
ரைட்டரை பாராட்டு விழா எடுத்தது போதும். நீ எனக்கு மட்டும் தான் அடிமை ஓகே என்று தேனருவி கட்டளை இடுவது போல் சொல்ல..

நிழல் நான் சிரிச்சு டயலாக் பேசுனால் மட்டும் இவளுக்குப் பிடிக்காதே.. நான் பேசுவது இவளுக்கு மட்டும் தான் கேட்கும் நான் வேறு யாரிடம் தான் பேசுவது என்று நிழல் யோசித்தது.

நிழலு நீ ஒன்றும் மனுசி கிடையாது. உனக்கு ஆசை ஏன் எந்த உணர்வும் இருக்கக் கூடாது. நீ இத்தனை நாள் அடைஞ்சு கிடந்த புத்தகத்தில் இருந்து உனக்கு விடுதலை கொடுத்து இருக்கிறேன் நான் நீ எனக்குத் தான் சாமரம் வீச வேண்டும்.

உத்தரவு மகாராணி என்ற நிழல் சென்றது. தேவ் ஆனந்த் வீட்டிற்கு. . வீட்டிற்குள் செல்லும் போது தேனருவி வீட்டிற்கு வந்து தேன் பூச்சி கடித்து மூஞ்சி வீங்கி வந்த வனிதாவின் அறைக்குள் தான் சென்றது. அதற்கு அவளை இன்னமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பரபரத்தது.

நிழல் உடனே ஒரு வேலை செய்தது. அதாவது மப்பூட்டான் தலையை தன் மாயாசாலத்தால் கொண்டு வந்து அவள் முகம் பூராவும் தேய்த்து விட்டது.

இந்தச் செடியின் தலை லேசா கையில் பட்டாலே கை பயங்கரமாக பிய்க்கும் அதை தேய்த்து விட்டு அங்கே இருந்த பேனில் போய் கொஞ்ச நேரம் தொங்கிக் கொண்டு இருந்தது.

வனிதா தன் முகத்தில் அரிப்பு தாங்க முடியாமல் சொரிந்து பார்த்தால் ஏற்கனவே பூதக் குட்டி போல் இருந்தவளுக்கு அதிக அரிப்பைக் கொடுக்க குளியலறை சென்றவள் தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவ போச்சு அதிகமாக எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டது.

தேவ் ஆனந்த் தேனருவி வாழ்க்கையில் வரவா நினைத்தாய்.. இது கொஞ்சம் தான் உனக்கு இன்னும் இருக்கிறது என்று நிழல் அங்கிருந்து சென்று நேராக விஜயலதா இருக்கும் இடத்தில் சென்று நின்று கொண்டது.

அவள் தானே திட்டம் போட்டது. இவள என்ன செய்யலாம் என்று நினைத்த நிழலுக்கு லட்டு போல் ஒரு ஐடியா கிடைத்தது.

அவளை மேற்கொண்டு பேசவிடாமல் அவளது வாய்க்குள் இருந்து வார்த்தைகள் வராத மாதிரி செய்து விட்டது. அவள் வாய் தான் அசைது ஆனால் பேச்சு வரவில்லை ஆனால் அவள் பேசுவது அவள் காதிற்கு கேட்கிறது. அருகில் இருக்கும் தங்கச்சி சுனைனா காதிற்கு கேட்க வில்லை.

இவ என்ன லூசா நான் இத்தனை நேரம் பேசுகிறேன். திருப்பி ஏதாவது பதில் பேசாமல் என் வாயைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

இந்தப் பைத்தியத்தை அவன் தலையில் கட்டி விட்டு நாம் இந்த வீட்டின் அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்று நினைத்து என் வாழ்க்கையை கூட பணயம் வைத்தால் இவள் லூசு மாதிரி பார்க்கிறாளே என்று அவளின் தலையில் ஒரு அடி கொடுக்க.

சுனைனா கோவத்தில் அக்கா நீ பெரியவளா இருக்கலாம் அதற்காக அடித்துக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்காதே. எனக்கு வெறுப்பா இருக்கிறது. ஏதோ தேவ் ஆனந்த் கட்டிக் கொண்டு ஜாலியாக இந்த வீட்டில் இருக்கலாம் என்று தான் நான் அமைதியாக இருக்கிறேன். அதை நீ சதாகமாக நினைத்து என் மேல் உன் கோபத்தை காட்டாதே.

என்னடி அக்கா என்ற மரியாதை இல்லாமல் கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டுகிறாய்? என்று அவள் திருப்பவும் சுனைனா தலையில் கொட்டி விட..

வலியில் சுனைனா தன் அக்காமண்டையில் நல்ல வலிக்கிற மாதிரி ஒரு கொட்டு வைக்க.. பிறகு நிழலுக்கு நல்ல வேடிக்கையாகிப் போய் விட்டது. இருவரும் நல்லா ஒருவர் மாற்றி ஒருவர் தலைமுடியை பிடித்துக் கொண்டு தோட்டத்தில் உருண்டு கொண்டு இருந்தனர்.

இதைச் சன்னலில் பார்த்த வானிதா தனது செல்போனில்
வீடியோவாக எடுத்து வைத்து விட்டாள். பின்னே அவளிடம் எத்தனை தடவை வாலாட்டி இருக்கிறாள்.

இப்போது விஜயலதா குடுமை வானதி கையில். சிவக்குமார் மிரட்டல் விடுத்ததில் தான் மூத்த மருமகள் என்று உணர்ந்து தேவ் ஆனந்த் திருமண விடயத்தில் தன் தங்கைக்கு உதவவில்லை.

இருவரும் உருண்டு பிரண்டு மூச்சு வாங்கிக் கொண்டு புல் தரையில் இருந்து எழுந்து ஒருவர் முகத்தை ஒருவர் திருப்பிக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டனர்.

வேலைக்காரர்கள் தங்கும் இடத்தில் அனைவரும் குடும்பமாக இருக்க.. ஒருவன் மட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறான். அவன் பெயர் சுரேஷ்.. இங்கு கணக்குப்பிள்ளையாக இருக்கிறான்.

அப்பா அம்மா அனைவரும் தூரமாக ஒரு ஊரில் இருக்கிறார்கள். கிருஷ்ணவேணி அம்மாவின் பள்ளித் தோழியின் மகன் தான். சுரேஷ் பட்டப்படிப்பு ஒரு டிகிரி மட்டும் படித்து விட்டு இங்கே இவர்களுக்கு இருக்கும்
தொழில்களுக்கு கணக்கு வழக்கு மட்டும் பார்த்து வருகிறான்.

இரவுப் பொழுதும் ஆனது. அனைவரும் உணவு உண்டு விட்டு அவரவர் அறைக்குள் அடைந்து கொண்டனர்.

சுனைனா மட்டும் தேவ் ஆனந்த் அறைக்குள் செல்வதற்கு தயாராக இருந்தாள். நேரம் ஆக வேண்டும் அதனால் தான் வீட்டில் இருப்பவர்களுக்குச் சந்தேகம் வராத மாதிரி எப்படி தேவ் ஆனந்த் அறைக்குள் சென்று அவனிடம் தன்னைக் கொடுத்து அவனையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவள் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு இருந்தாள்.

அவள் நினைத்தது போல் நடக்குமா? புதிதாக வேறு ஏதாவது நடக்குமா? இந்த ஒரு இரவில் அவளுக்கு நடப்பது அவளது வாழ்க்கையையே தடம் புரண்டு போவது மட்டும் உறுதி..

ஒருவேளை விஜயலதா தன் வாழ்க்கையில் யானை தானே மண் அள்ளிப் போடுவது போல் போட்டுக் கொள்வாளா? இல்லை
வேறு ஏதாவது புதிய திருப்பங்கள் நடக்குமா?

நிழல் தனக்கு வேலை வந்து விட்டது என்று நினைத்து இப்போது சுனைனா புத்தியில் அவளின் எண்ணத்தை மாற்றி தான் என்ன செய்ய நினைத்ததோ? அதைச் செய்ய ஆய்த்தமாகியது.

தேவ் ஆனந்த் அறைக்குள் செல்ல காத்திருந்தவளை சுற்றி ஒரு காற்று தான் அடித்தது. அவள் நின்று இருந்த இடம் மாறி அவள் இப்போது வேறு ஒரு வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தாள்.

கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்தது. உள்ளே சென்றவள் அறியவில்லை. தெரிந்தே படுகுழியில் விழுகிறோம். என்பதை விடியல் தான் உணர்த்துமோ?

தேவ் ஆனந்த் அறைக்குள் இருந்த ரவிக்குமார் கதவைத் தாளிடாமல் தான் தூங்காமல் படுத்து இருந்தான். எந்த நேரத்திலும் அவள் வருவாள். இன்று அவளுக்கு இருக்கிறது. என் தம்பி மானத்தை கெடுக்க நினைத்தவளை அவளுக்கு தக்க பாடம் புகுத்தி தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்துப் படுத்து இருக்க.

விஜயலதா தன் தங்கை கிளம்பி தேவ் ஆனந்த் அறைக்குச் சென்றதைப் பார்த்தவள். மிகவும் சந்தோசமாக அந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டிச் சென்றாள்.

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top