• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
293
நீ உடல் நான் நிழல்
பாகம் -32

விஜயலதா ரவிக்குமாரிடம் நம் வீட்டில் அரண்மனை பேய் இருக்கிறது.

ஆமா இருக்கிறது. அதுக்கு இப்போது என்ன?

ஏங்க உங்களுக்கு தெரிந்து இருந்துமா? அதை விரட்டி அடிக்காமல் இருக்கிறீர்கள்.

விரட்டி விட எனக்கும் ஆசை தான் உனக்கு விருப்பமா?

என்னங்க நீங்க பேயை விரட்டி விடுவதற்கு என்னிடம் அனுமதி கேட்கிறீர்கள். நான் என்னங்க சொல்லப் போகிறேன். நாளைக்கே விரட்டி விடலாம்.

நாளை வரை எதுக்குடி இப்போதே விரட்டி விடலாம்.

மந்திரவாதி இல்லையே நாளைக்கு நீங்கள் அவரை அழைத்து வாங்க நம் வீட்டில் பூஜை வைத்து எல்லாம் முறையா? செய்யலாம் இல்லை என்றால் திரும்பவும் வந்து விடும்.

மந்திரவாதி எல்லாம் வேண்டியதில்லை. உன் பெட்டியில் துணியை பேக் செய்து இந்த வீட்டிலிருந்து நடையைக் கட்டுங்கள் அக்காளும் தங்கையும்.

என்னங்க சொல்றீங்க நான் எதுக்கு வீட்டை விட்டு போகவேண்டும்.

நீ தாண்டி பேய் பிசாசு எல்லாம் புதுசா எங்கே இருந்து உனக்கு பேய் பிசாசு எல்லாம் வந்து விடப் போகிறது.

சும்மா தமாசுக்குத் தானே சொன்னீர்கள்.

எது தமாசு..?? வீட்டிற்குள் வந்ததும் வராதுமா ?? நீ தாண்டி பேய் இருக்கிறது என்று சொன்னாய்? அது தான் எனக்குத் தெரிந்த பேய் நீ தாண்டி.. என்று ரவிக்குமார் சொல்லி விட்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.

தனக்கு இருக்கும் கோபத்தில் அவளை அடித்தாலும் அடித்து விடுவோம் என்று பேசியதோடு விட்டுச் சென்று விட்டான்.

சுனைனா தான் அக்கா மாமா என்ன உன்னைப் பேய் என்று சொல்லி விட்டு போகிறார். எப்படா ஏதாவது சாக்கு கிடைக்கும் உன்னை வெளியே வீட்டை விட்டு துரத்தி விட்டு விடலாம் என்று காத்திருப்பார் போலவே.

உனக்கு என்ன போக்கிடம் இல்லையா? வா நம் அம்மா வீட்டிற்கு சென்று விடலாம் என்று விஜயலதா கையைப் பிடித்து இழுத்தாள்.

ஏண்டி நான் உன்னை எப்படி இந்த வீட்டிற்குள் கொண்டு வரலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். நீ என்னை வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று அழைக்கிறாய்?

அப்பன் வூட்டில் போய் வாழாவெட்டியாய் உட்கார்ந்து கொண்டு ஊர் வாயில் விழுக வேண்டும் என்று நீ நினைக்கிறாயா??

அதெல்லாம் அவரை எப்படி வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தெரியும்.

இவர்கள் எல்லாரும் பெண் பார்க்கப் போனார்கள். அங்கே என்ன? நடந்தது என்று தெரியவில்லை. வானதி கிட்டத்தட்ட கேட்டு தெரிந்து கொள்வோம் என்று வானதியின் முன் போய் நின்றதிற்கு அவளோ? விஜயலதாவைக் கண்டு கொள்ளாதவாறு அவளின் அறைக்குள் சென்று விட்டாள்.

என்ன திமிர் இவளுக்கு நான் அவளுடைய ஓரகத்தி தானே நான் வரவில்லை எனக்கு விசயம் தெரிந்து கொள்ள இருக்கும். அதைத் தெரிந்து கொள்ள வந்தால் ரொம்ப தான் பிகு செய்கிறாள்.

ஏதாவது செய்தி தெரிய வேண்டும் என்றால் என்னிடம் தானே வந்து நின்றாக வேண்டும். அப்போது நான் யார் என்று காண்பிக்கிறேன்.

இவ கிடக்கிறாள் குடைக்காதுக்காரி இவளுடைய தங்கச்சி எங்கே அந்தக் குட்டக் கத்திரிக்காய். அவளுக்கு இவளுடைய விவரம் பத்தாது அப்படியே கொஞ்சம் அவளைப் புகழ்ந்து பேசுவது போல் லைட்டா சுருள் சுத்தி விட்டா அது நம்பி விட்டு பூராவும் உளறி வைத்து விடுவாள்.

நேற்று தோட்டத்தில் பறித்து வந்த பச்சை மாங்காய் நல்லா உப்பு மிளகாய் தூள் போட்டு எடுத்துக் கொண்டு வனிதா என்று கூவிக் கொண்டே அவள் தங்கி இருந்த அறைக்குள் சென்றாள் விஜயலதா.

இது என்ன இந்த வனிதா படுத்துக் கொண்டு இருக்கிறாள். விருந்து பலமோ? நாம் தான் போகலையே பஜ்ஜி இனிப்பு என்று ஒரு கட்டு போலவே அது தான் இந்த நேரத்தில் தூக்கமோ? என்று அவளின் அருகில் சென்று வனிதா முகத்தைப் பார்த்தவள் அதிர்ந்து போய் அய்யோ இது என்ன பேய் இங்கே இவள் துணி போட்டு படுத்து இருக்கிறது.

நம் கண் தான் சரியாகத் தெரியவில்லையோ? என்று கண்ணை நன்கு தேய்த்து விட்டு பார்த்தாலும் அதே முகம் தான் இருந்தது.

எதற்கும் எழுப்புவோம் என்று வனிதா அம்மாடி வனிதா உனக்குப் பிடித்த வடுமாங்காய் உப்பு மிளகாய் தூள் போட்டு எடுத்து வந்து இருக்கிறேன் எழுந்து வா சாப்பிடு என்று அழைத்தாள்.

விஜயலதா அக்கா வந்து இருக்கிறார்கள் நாம் நம் முகத்தை எப்படி அவர்களிடம் காண்பிப்பது என்று தயங்கியவள் பிறகு ஒரு மனதாக எழுந்து அமர்ந்தவள். தனது முகத்தை குனிந்து வைத்துக் கொண்டாள்.

இது என்னடி கூத்தா இருக்குது காலையில் மினுக்கிட்டு கிளம்பிப் போனாளே இப்போது மொகரையை மூடிக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறாள். அது தான் நம் கை நல்லாத் தானே இருக்கிறது. அந்தத் தாவணியை தூக்கிப் போட்டு பார்த்து விடுவோம் என்று வனிதா முகத்தைப் பார்த்தவள் ஒரு நொடி பயத்தில் உச்சாந்தலை மயிர் சில்லிட்டு விட்டது.

உடனே இவளுக்கு கால் இருக்கிறதா? என்று தான் பார்த்தாள் விஜயலதா.

அக்கா என்ன செய்கிறார்கள் எதுக்கு பாவாடையை தூக்கிப் பார்க்கிறீர்கள். முகத்தில் மட்டும் தான் காயம் காலில் எதுவுமில்லை என்று வனிதா கூறினாள்.

எங்கே போய் விழுந்து இப்படி முகம் பூரா வீங்கி இருக்கிறது.

அக்கா நான் அங்கே வழுக்கி விழுந்து விட்டேன் என்று பொய் கூறினாள் வனிதா.

அதெப்படி நீ வழுக்கி விழுந்தால் இடுப்பு எலும்பு தான் முறிந்து இருக்க வேண்டும். முகம் எப்படி இப்படி வீங்கி இருக்கும்.

ஒரு வேளை தேவ் ஆனந்த் நல்லா சாத்தி விட்டானா? அச்சே கேட்க வந்ததை மறந்து விட்டு இவளின் புராணம் கேட்டுக் கொண்டு இருக்கிறேனே. இவள் ஒழிந்தால் நமக்கு நல்லது தானே என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே சரி பொண்ணு பார்க்க எப்படி இருந்தாள் என்ன உன்னை விட அழகா என்று அவளின் புகழ் பாட.

அது தான் போட்டோவில் பார்த்தீங்க தானே எதுவுமே தெரியாத மாதிரி கேட்கிறீங்க அக்கா..

அதில்லைடி போட்டோவில் மேக்கப் போட்டு எடிட் செய்து வெள்ளை வெளேர்னு போட்டு இருப்பாங்க வீட்டில் பார்த்தால் கரிச்சட்டி மாதிரி இருப்பாங்க அது தான் கேட்டேன். நீ எதையும் மனதில் வைக்காமல் சொல். நான் எதுக்கு கேட்கிறேன் என்றால் என் தங்கச்சி தானே நீயும் அது தான் நீ சுனைனா இருவரும் ஒன்று தான் அவளுக்காக நீ தேவ் ஆனந்த் விட்டுக் கொடுக்க மாட்டாயா ?

வனிதா உடனே அவள் தங்கச்சி என்று சொன்னதும் உள்ளம் பூரிப்படைந்து கடைசியில் சொன்ன வார்த்தையில் விஜயலதாவை முறைத்துப் பார்த்தவள். இனி மேல் நான் சொல்வதைக் கேட்டு இந்தக் அக்காவிற்கு அட்டாக் வராமல் இருந்தால் அது பெரிய விடயம் தான் என்று நினைத்தவள்.

அக்கா நீங்கள் நினைப்பது போல் எல்லாம் இல்லை. அந்தப் பொண்ணு அத்தனை அழகாக இருந்தாள். இதே போல் ஒரு அரண்மனை வீடு தான் அதுவும் அங்கே இன்று நிச்சயம் செய்து விட்டு தான் வந்தார்கள். மண்டபம் புக் செய்தாச்சு பத்திரிகை அடிக்க கொடுக்கச் சென்று உள்ளார்கள்.

நாளைக்கு ஜவுளி எடுக்கப் போகிறார்கள் என்று சொன்னதும்.

என்னடி வேண்டும் என்று என்னிடம் பொய் சொல்கிறாயா? நீயும் உன் அக்காவும் சேர்ந்து இரகசியமா ஏதாவது திட்டம் போட்டு என் தங்கச்சி சுனைனா வாழ்க்கையைத் தட்டிப் பறிக்கலாம் என்று திட்டம் இருந்தா அதை முதலில் அழித்துக் கொள்ளுங்கள். நான் அந்த தேவ் ஆனந்த் என்ன செய்கிறேன் பார் என்று கூறியவள் அங்கே இருந்து சென்று விட்டாள்.

தேவ் ஆனந்த் அறைக்குள் தன் தங்கையை அனுப்பி அவன் அவளைக் கெடுத்து விட்டான் என்று நாடகமாடினாள் வேறு வழி இல்லாமல் சுனைனா கழுத்தில் தான் தாலி கட்ட வைத்து விடலாம். பிறகு வனிதா வானதி இவர்கள் இருவரின் குடுமை என் கையில் எனக்கு சேவகம் செய்ய வைத்து விடலாம் என்று நினைத்துப் பார்க்கவே இத்தனை குதூகலமாக இருக்கிறது. நேரில் நடந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த விஜயலதா செயலில் காட்டி நாம் யார் என்று நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தவள்.

தனது தங்கையைத் தேடினாள். அவள் வெளி தோட்டத்தில் அமர்ந்து இருந்தாள்.

சுனைனா நீ மனசை தளர விடாதே அக்கா உன் வாழ்க்கையில் நல்ல முடிவை எடுத்து வைத்து இருக்கிறேன். உன் ஒத்துழைப்பு தான் முக்கியம் வாழ்க்கை அதுவும் விரும்பியவன் கிடைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் செய்யலாம். நான் சொல்வதைக் கேட்டு அது போல் செய்டி என்று அவளுக்கு எப்படி தேவ் ஆனந்த் அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டு அவன் அசந்து தூங்கும் நேரம் நீ உன் வேலையைக் காட்டி விடுடி,

அக்கா என்ன என் திறமை என்று நின்று கொண்டு இருந்தாள்.

ஏண்டி எத்தனை சினிமாவில் பார்த்து இருப்பாய். நீயே உன் ப்ளவுஸ் கிளித்துக் கொண்டு அவனிடம் ஒட்டிப் படுத்துக் கொள் தலையை எல்லாம் களைந்து உதட்டை நீ கடித்து காயம் செய்து கொள்டி.. எனக்கே இதை உன்னிடம் கூறுவதற்கு ஒரு மாதிரி தான் ஆகிறது. அது தாண்டி நான் சொல்வது புரிகிறதா ?

ஓ அக்கா நீ இப்படி சொல்கிறாயா? இது தப்பில்லையா? என்று கேட்டவளைப் பார்த்து.. உனக்கு தேவ் ஆனந்த் வேண்டுமா? வேண்டாமா?

வேண்டும் அவர் தான் வேண்டும் என்று சொன்னவள் கண்ணில் நான் ரெடி என்பது போல் தான் இருந்தது.

இவர்கள் இருவரும் பேசியதை ரவிக்குமார் கேட்டு விட்டான். அடியே பாதகத்தி நீ இத்தனை கேவலமான புத்தியோடு தான் என்னோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறாயா? இருடி அக்காளையும் தங்கச்சியையும் கூண்டோடு வெளியே விரட்டி விடுகிறேன்.

வந்த சுவடு தெரியாமல் சென்று விட்டான். தனது தம்பி இவர்களின் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று அவனின் அறைக்குள் சென்றான்.

தேவ் ஆனந்த் போன் பேசிக் கொண்டு இருந்தான். தன் அண்ணன் வந்ததைப் பார்த்து போனைக் கட் செய்தவன். அண்ணா ஏன்னா எதாவது விசயமா? பாப்பா கிட்டச் சொல்லி இருந்தாள் நான் வந்து இருப்பேனே.

ஏண்டா நான் உன் அறைக்குள் வந்தது உனக்குப் பிடிக்கவில்லையா?

உங்களுக்கு இல்லாத உரிமையா? என்று சிரித்தவனைப் பார்த்து இன்று ஒரு நாள் எனக்கு இந்த அறையைக் கொடு தம்பி. உனக்கு ஒரு வேலை இருக்கிறது. அது டவுனுக்குத் தான் செல்ல வேண்டும். இரவு தாமதம் ஆகும் அதனால் நீ சென்று இன்று இரவு அங்கே தங்கி விட்டு நீ நாளைக்கு காலையில் வந்தா போதும் என்று தன் அண்ணன் சொல்லும் போது மறுக்க முடியாமல் சரிங்க அண்ணா நான் சென்று வருகிறேன்.

நீ வெளியே செல்வது வீட்டில் யாருக்கும் தெரியவேண்டாம் தம்பி.. அப்படியும் கேட்டால் தோட்டத்திற்கு போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விடு என்று கூறிவிட்டு இன்று இரவு மட்டும் நான் உன் அறையில் படுத்துக் கொள்கிறேன்.


தொடரும்...

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top