• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
293
நீ உடல் நான் நிழல்
பாகம் - 30


தேவ் ஆனந்த் தேனருவி இருவரும் கீழே வந்து விட என்ன தேவ் மேற்கொண்டு பேசி விடலாமா? உனக்கு பெண்ணைப் பிடித்து இருக்கிறதா?

அம்மா எனக்கு தேனருவியைப் பிடித்து இருக்கிறது. என்று அவளைப் பார்த்துக் கொண்டு சொல்ல.

அம்மாடி மருமகளே இங்கே வா என் மகனை உனக்குப் பிடித்து இருக்கிறதா?

ம்ம்ம் என்று தலையைக் குனிந்து கொண்டு சொன்னாள். அவளுக்கு வெட்கமாம். தேனருவி
வாயைத் திறந்து சொல்மா? என் பையன் முகத்தைப் பார் என்று அவர் கூற.

தேவ் ஆனந்த் அவள் தன்னைப் பார்க்கட்டும் என்று தான் காத்திருந்தான். அவளும் தனது மாமியார் பேச்சைத் தட்டாமல் பார்த்து வைக்க.

இப்போது சொல்மா பிடித்து இருக்கிறதா?

பிடித்து இருக்கிறதுங்க அத்தை என்று கூறினாள். பிறகு கல்லூரியில் அத்தனை பெண்களின் கனவு நாயகன் அவன் அத்தனை பெண்கள் இருந்தும் என் மேல் காதலில் விழுந்தவன் அல்லவா? எனக்கு பிடிக்காமல் போய் விடுமா?

கண்ணப்பன் தான் அப்புறம் என்ன பத்திரிகை அடிப்பது மண்டபம் பார்ப்பது என்று அடுத்த வேலையைப் பார்க்கலாம்.

பெரிய மாமா அவசரப்படாதீர்கள். இந்த வீட்டில் ஏதோ இருக்கிறது.

எல்லோரும் குரல் வந்த திசையைப் பார்த்தனர். வனிதா தான் முகம் முழுவதும் வீங்கிக் கொண்டு வந்து நின்றாள்.

நீ யா? ஆமா எதுக்கு அப்படிச் சொன்னாய்?

மாமா அரண்மனை மாதிரி வீடு இருந்தாலே கூடவே பேய் இருக்கும் இங்கே நான் கண்கூடாகப் பார்த்தேன்.

கிருஷ்ணவேணி உடனே நீயே ஒரு பைத்தியம் அது தெரிந்து இங்கே அழைத்து வந்தோம் பாரு
நேற்று டி. வியில் அரண்மனை பேய் படம் பார்த்ததிலிருந்து அக்கா தங்கச்சி எல்லாம் இது போல் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

நீ சொல்வதற்காக எல்லாம் திருமணத்தை நிறுத்த முடியாது. சிவா ரவி நீங்கள் இரண்டு பேரும்
குமாரசாமி அவரையும் அழைத்துக் கொண்டு போய் மண்டபம் புக் செய்து விட்டு வாருங்கள் இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் என்ன தேவ் ஆனந்த் உனக்கு சரியா வருமா? இல்லை அதற்கு முன்பே வைத்துக் கொள்ளலாமா?

இரண்டு பேர் ஜாதகமும் பார்த்ததில் இந்தத் தேதிகள் ஒத்து வருகிறது. இதில் இருப்பதில் பெண்ணுக்கு சௌரியப்படும் நாள் எது என்று சொன்னால் அதே தேதியில் மண்டபம் புக் செய்து விடலாம் என்று கிருஷ்ணவேணி ஒரு பேப்பரை யசோதாவிடம் கொடுத்தார்.

தேனருவியை கண் சாடையில் அழைத்தவர். இந்தா தேனுமா பார்த்துச் சொல் என்று அவளிடம் கொடுக்க அவளும் ஒரு தேதியைச் சொல்லி விட பிறகு என்ன மண்டபம் புக் செய்ய சென்று விட்டனர்.


சம்பந்தி இந்த இனிப்பு அருமையா இருக்கிறது. என்ன புதுவகையாக இருக்கிறது.

ஆமாங்க அண்ணி இதுக்குப் பேர் செவன் கப் .

அது என்ன செவன் கப் கொஞ்சம் சொல்லுங்களேன். நாங்களும் கேட்டுக் கொள்கிறோம்.

கடலை மாவு -1 கப்
துருவிய தேங்காய்-1 கப்
காய்ச்சி ஆறவைத்த பால்-1 கப்
நெய் உருக்கியது-1 கப்
சர்க்கரை 3 கப்..

இது தாங்க செவன் கப்..

பால் கடலைமாவு தேங்காய் சர்க்கரை இவை அனைத்தும் ஒன்றாகக் கலந்து கொண்டு வாணலியில் கொஞ்சம் நெய் ஊற்றி கிட்டே இடை இடையே நெய் ஊற்றி கொண்டு அடிப்பிடிக்காமல் தீயை சிம்மில் வைத்து கிண்டி தெவண்டு வரும் போது நாம் தேங்காய் பர்ப்பி செய்வது போல் நெய் தடவிய தட்டில் இதை ஊற்றி கொஞ்சம் ஆறியதும் நமக்கு வேண்டிய வடிவில் கட் செய்து சாப்பிடலாம்.

சூப்பருங்க நீங்கள் சொல்வதைக் கேட்கும் போதே மறுபடியும் சாப்பிட தோன்றுகிறது.

சாப்பிடுங்கள் சம்பந்தி என்று மறுபடியும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வந்து வைத்தார்.

அதிரா ஆதியா இருவரும் சித்தி உன் முகம் இப்படி ஆகி விட்டது. ஆமா இது என்ன இவ்வளவு பெரிசா பூச்சாண்டி மூஞ்சி மாதிரி ஆகி விட்டது என்று அவளின் வீங்கிய உதட்டின் மீது அடித்து கேட்டனர்.

வானதிக்கு கூட அவளின் முகத்தைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது. இருந்தும் இருக்கும் இடம் கருதி தனது சிரிப்பை வாய்க்குள் முழுங்கி இது என்னடி கோலம் முகத்தைக் கொண்டு போய் எங்கே இடித்துவைத்தாய்?

அக்கா நான் மேலே நின்று கொண்டு இருந்தேனா? அப்போது தான் எனக்கு இது போல் ஆகி விட்டது அது தான் இந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் யாருமே நம்பவில்லை பார் என் மூஞ்சி பூராவும் குழவி கடித்து விட்டது.

பூவிழி ஐய்யோ அக்கா நான் தானே சொன்னேன் மொட்டை மாடியில் இருக்கும் போதே நீங்கள் தான் நான் சொல்வதைக் காதில் வாங்காமல் அந்த இடத்தில் நிறைய நேரம் நின்று கொண்டு இருந்தீர்கள்.

யசோதா உடனே என்னாச்சு பூவிழி அம்மா வேப்பமரத்து காத்து நல்லா இருக்கிறது என்று அங்கே நின்று கொண்டு இருந்தார்கள். மேலே தேன் கூடு கட்டி இருந்தது. அதைப் பார்க்காமல் அந்தக் கிளையைப் பிடித்து ஆட்டிக் கொண்டு இருந்து இருப்பார்களாக இருக்கும். நான் குட்டிப் பையன் அழுததால் கீழே வந்து விட்டேன்.

அக்கா இருங்கள் இதற்கு ஒரு வைத்தியம் இருக்கிறது. என்று சின்ன வெங்காயம் எடுக்க சமையல் அறைக்குள் சென்றாள் பூவிழி.

வனிதா நினைத்து விட்டாள் பூவிழி ஐஸ் கட்டி தான் எடுத்து வருவாள் என்று கூலாக அமர்ந்து இருந்தாள்.

உள்ளே சென்ற பூவிழி சின்ன வெங்காயம் ஒரு பத்து எடுத்து தோலை உரித்து இரண்டாக கட் செய்து கொண்டு வந்தாள்.

அக்கா கண்ணை மட்டும் மூடிக் கொள்ளுங்கள் என்று கூறிய பூவிழி பெரிய அக்கா நீங்கள் வந்து இதை இந்த அக்காவின் முகத்தில் கடி பட்ட இடங்களில் வைத்து தேய்த்தால் தேன் பூச்சியின் முள் ( கொடுக்கு) வெளியே வந்து விட்டாலே பாதி வலி போய் விடும் என்று கூறினாள்.

அதிரா ஆதியா நீங்க இரண்டு பேரும் வாங்க உங்கள் சித்தி கையை பிடித்துக் கொள்ளுங்கள் அவுங்க அசையாமல் இருக்க வேண்டும். நான் அவுங்க தலையைப் பிடித்துக் கொள்கிறேன்.

வனிதா ஐஸ் ஒத்தடம் வைப்பதிற்கு எதற்கு இத்தனை பேரைக் கூப்பிடுகிறாள். சரியான லூசுக் குடும்பமாக இருக்கிறது.

அதிரா ஆதியா இரண்டு பேரும் அப்படியே சித்தி கையை அழுத்தி விடுங்கள் என்று சொன்னால் அவள் உதடு வீங்கி இருப்பதால் அவர்களுக்கு அவள் என்ன சொன்னால் என்பது புரியவில்லை. ஆனாலும் சித்தி கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

வானதி சின்ன வெங்காயம் எடுத்து அவளின் உதட்டில் வைத்து தேய்த்தாள். அப்போது தானே அந்த முள் வரும் என்று வேகமாகத் தேய்க்க வனிதாவிற்கு அப்போது தான் தெரிந்தது. வெங்காயம் தந்த எரிச்சல் ஒரு பக்கம்.. அதை விட அந்தக் குழவி கடித்த இடத்தில் அவள் கை கொண்டு அழுத்தி தேய்த்ததில் இப்போது ரத்தம் வர ஆரம்பித்து விட்டது.

வனிதாவால் தலையையும் அசைக்க முடியவில்லை கையையும் கொண்டு தடுக்க முடியவில்லை. உதடு முடிந்தது. என்று கன்னம் முடிந்து இப்போது கண் இமையில் வைத்து தேய்த்தாள்.

அக்கா வெங்காயம் போதுமா இன்னும் வேண்டுமா? நான் அம்மாவை எடுத்து வரச் சொல்கிறேன் என்று பூவிழி கேட்க..

இருடா இன்னும் நாலு வெங்காயம் இருக்கிறது. அதை தேய்த்து விட்டு சொல்கிறேன்.

என்னது இன்னும் நாலு வெங்காயம் முடிந்தால் மறுபடியும் ஆரம்பித்து விடுவார்கள் என்று மயக்கம் வந்தது போல் நடித்தால் விட்டு விடுவார்கள் என்று வனிதா மயக்கம் வந்தவள் போல் கீழே மயங்கி சரிந்தாள்.

அக்கா இது என்ன இந்த அக்கா மயக்கம் போட்டு விட்டாங்க என்று பூவிழி சொல்ல.. பரவாயில்லை விடுமா நீ போய் இன்னும் கொஞ்சம் வெங்காயம் உரித்து வா நான் இருக்கும் வெங்காயத்தை அவள் முகத்தில் தேய்க்கிறேன் என்று அவளின் முகத்தில் கடி பட்ட இடம் அனைத்தும் தேய்த்து எடுத்தார்கள்.

அம்மா சித்தி முகத்தில் இந்த தண்ணீர் தெளித்து விடுங்கள் என்று அதிரா கொண்டு வந்து கொடுத்தாள். அது மாட்டுக் கோமயம் தான் அது தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து அதிரா கொடுக்க.

இது என்ன கலரே மஞ்சளாக இருக்கிறது. ஒரு வேளை மூலிகைத் தண்ணீர் தான் போல் இருக்கிறது. இதில் முகத்தை கழுவி விட்டாள். அவளுக்கு குணமாகி விடும் என்று அந்தப் பாட்டிலை திறந்த வானதி தனது தங்கை முகத்தில் அதைத் தெளித்து முகம் முழுவதும் கழுவி விட்டாள்.

வனிதாவிற்கு முகத்தில் பட்டதும் எரிய ஆரம்பித்து விட்டது. ச்சை இது என்ன மாட்டு மூத்திரமா
இருக்குமோ? இந்த நாறு நாறுகின்றது.

வனிதா மூலிகைத் தண்ணீர் டி வாயைக் கொஞ்சம் திற என்று அவளும் இளநீர் தான் ஊற்று கிறார்கள் என்று தவிச்ச வாயைத் திறந்தாள்.

கொஞ்ச நேரம் முன்பு அனைவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். இளநீர் பற்றி ஒரு வேளை எனக்கு மயக்கம் வந்தது போல் நடித்தது. எத்தனை நல்லது. அது தான் எனர்ஜியாக இருப்பதற்கு குடிப்பதிற்கு கொடுக்கிறார்கள் என்று நினைத்து ஆசையாக வாயைத் திறந்தாள்.

வானதி கோமயம் அவளின் வாயில் ஊற்றி விட இது என்ன இப்படி இருக்கிறது என்று ஒரு வாய் குடித்து விட்டாள் வனிதா?

யசோதா அண்ணி இங்கே கோமயம் பாட்டிலில் பிடித்து வைத்து இருந்தேன். பார்த்தியா என்று கமலா அம்மா கேட்க.

கோமயம் எதற்கு பிடித்து வைத்தாய் கமலா.

அது பக்கத்து வீட்டு காஞ்சனா குழந்தை ஏனோ நலங்கி விட்டது. முகம் கழுவி சாம்பிராணி புகைப் பிடிக்க வேண்டும் என்று கேட்டால் அது தான் இங்கே உன் வீட்டில் தானே பசு கன்று இருக்கிறது அது தான் என்று கூறியவர் இங்கே தான் வைத்து இருந்தேன் என்று தேடிக் கொண்டு இருந்தார்.

அப்போது தான் வானதி அம்மா நீங்கள் தேடுவது இந்த பாட்டிலா என்று கேட்டாள்.

அம்மாடி ஆமாம் இது எப்படி உன் கையில் வந்தது. சரி சரி நான் பாட்டில் நிறைய பிடித்து வைத்து இருந்தேன். அரை பாட்டில் இருக்கிறதா? இதுவே போதும்மா. வேண்டும் என்றால் நான் வேறு பாட்டில் பிடித்துக் கொள்கிறேன் நீ வைத்துக் கொள் என்று கூறினார் பாருங்களேன்.

மயக்கத்தில் இதைக் கேட்டு கொண்டு இருந்த வனிதா எழுந்து ஓடினாள் வயிற்றில் உள்ளே சென்ற கோமயம் வெளியே வாந்தியாக எடுத்து விடுவதற்கு.


தொடரும்..


ஆனால் அவளின் உடலில் இருக்கும் தேனீக்கள் விஷம் கோமயம் குடித்ததால் முறிவாடு
ஆகி இருக்கும்.

எங்கள் ஊரில் குழந்தைகள் சோர்வாக நலங்கி விட்டாள். சிறு கன்றுவின் கோமயம் பிடித்து முகம் கழுவி சாம்பிராணி புகை பிடிப்பார்கள். என் பையன்களுக்கு அவர்களின் ஆத்தா இது போல் செய்ததை நான் பார்த்து இருக்கிறேன்.

இருந்தாலும் எழுதும் போது வனிதா இளநீர் என்று வாயைத் திறப்பதும். வானதி மூலிகைத் தண்ணீர் என்று ஊற்றும் போது நான் சிரித்து விட்டேன். நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்று விமர்சனம் பெட்டியில் சொல்லுங்கள் பட்டூஸ்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top