Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 289
- Thread Author
- #1
உடல் நான் நிழல்
பாகம் - 29
பாகம் - 29
தேவ் ஆனந்த் மற்றும் தேனருவி இருவரையும் பேசிக் கொள்ளச் சொன்னார்கள்.
தேனருவி மாடியில் இருக்கும் தனது அறைக்குச் சென்றாள். அவளின் பின்னாலே தேவ் ஆனந்த் சென்றான்.
அவன் நேற்று தான் வந்தான். ஆனால் அது கீழே இருக்கும் அறை இன்று காலையில் தான்
யசோதா அவளுடைய திங்ஸ் எல்லாம் மேலே இருக்கும் அறைக்கு மாற்றி இருந்தார்.
இனி எப்படி இருந்தாலும் திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளை வந்து தங்குவார். புதுசா திருமணம் ஆனவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும்.
பூவிழியும் பருவ வயது பெண் தான் அவள் மனதில் தவறான எந்த எண்ணமும் படிந்து விடக் கூடாது என்று தான் இத்தனை நாட்கள் இருவரின் அறைகளும் அருகருகே இருந்தது.
மேலே அவளின் அறைக்குள் செல்லும் முன் அந்த வீட்டின் மேல் மாடியில் நான்கு பெரிய அறைகள் இருக்கிறது அதில் ஒரு அறை எப்போதும் பூட்டியே தான் இருக்கும். மற்ற மூன்று அறைகள்
ஒன்று தேனருவிக்கு மற்ற இரண்டு அறைகள் விருந்தினர் வந்தால் தங்குவதற்கு என்று இருக்கிறது.
சுற்றிலும் அறைகள் நடுவில் மிகப் பெரிய ஹால் அதில் சோபாவும் பெரிய ஊஞ்சல் ஒன்றும் இருக்கும். ஒவ்வொரு அறைக்கும் தனியாக பால்கனி இருக்கிறது.
தேனருவி ஹாலில் நிற்காமல் தனது அறைக்குள் தான் சென்றாள். ஏனெனில் வந்ததிலிருந்து தன்னையே வெறுக்க வெறுக்கப் பார்க்கும் வனிதா தான் வீட்டைச் சுற்றி பார்க்கிறேன் என்று மேல் மாடியின் படியின் ஓரமாக நின்று கொண்டு இருந்தாள்.
இங்கே இருந்து வெளியே பார்த்தால் அழகாக இருக்கிறது என்று பூவிழியிடம் சொன்னாலும்
கண் என்னவோ? தேவ் ஆனந்த் தேனருவி இருவரையும் தான் நோட்டம் விட்டது.
ஹனிபால்ஸ் என்று அவளின் பின்னால் வந்தவன் தேனருவி தலையைக் குனிந்து இருக்க அவளின் நாடியைப் பிடித்து நிமிர வைத்தான்.
அழகா இருக்கிறாய் டி அப்படியே இப்பவே அள்ளிட்டு போய் விடலாம் போல் இருக்கிறது. இந்த சேலையில் தேவதை மாதிரி இருக்கிறாய்.
நீங்களும் தான் அழகா இருக்கிறீங்க. ஆமா நீங்க காதலித்த விடயம் உங்கள் வீட்டிற்குத் தெரியுமா??
இல்லை இது அரேஞ்சுடு மேரேஜ் போல் தான் அப்படி தான் தெரியும்.
இல்லை உங்கள் வீட்டில் இருந்து வந்த பெண் நாம் என்ன பேசப் போகிறோம் என்று நம் இருவரையுமே மாடிப் படியில் நின்று கொண்டு பார்க்கிறாள். அது தான் அறைக்குள் அழைத்து வந்தேன்.
என்னடி சொல்கிறாய்? ஒட்டுக் கேட்கிறாளா? அவளை என்று பல்லைக் கடித்தான். அவனுக்கு அவமானமாக இருந்தது. தனது வீட்டில் அத்தனை தூரம் சொல்லி அழைத்து வந்தும் இத்தனை கீழ்த்தரமாக நடந்து கொள்பவர்களை திட்டவும் முடியவில்லை.
தனது அண்ணா வருந்துவாரோ? இவரகளால் அண்ணா தம்பிக்குள் பிரச்சினை வந்து விடக் கூடாது என்று தான் அவனுக்கு கவலையாக இருந்தது.
எத்தனை ஆசையாக தன்னவளைக் காண வந்தான். அது அத்தனையும் வனிதா செயலாள் வடிந்து கோபமாக மாறியது.
வாத்தி மாம்ஸ் அதை விடுங்கள் எப்போது என்னைக் திருமணம் செய்வீர்களோ? என்று இருக்கிறது என்று அவரிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.
ஏண்டி பொண்டாட்டி அவ்வளவு அவசரமா? கல்யாணத்திற்கு..
ஆமாங்க படிப்பு முடிந்து விடும்ல. அது தான் வாத்தி மாம்ஸ் உங்களுக்கு சேவை செய்யலாம் என்று தான்.
அடுத்து மேற்கொண்டு என்ன படிக்கிறாய்? என்று குண்டைத் தூக்கிப் போட்டான்.
நான் படிக்க மாட்டேன். நீங்களே பார்த்தீங்களே எனக்கு எக்ஜாம் பியர் இருக்கிறது.
அதுக்கு?
போதுங்க கல்யாண பத்திரிகையில் போடுவதற்கு ஒரு டிகிரி அவ்வளவு தான் முடியும். என்னால் இதுக்கு மேல் படிக்க முடியாது.
வாத்தி மேல் லவ்ஸ் வந்து விட்டது. என்னங்க வாத்தி மாம்ஸ் நீங்கள் ஏன் நம் விவசாயம் சார்ந்த தொழில் பார்க்காமல் இந்த வேலைக்கு போனீங்க.
அவ அவன் பொண்ணு பார்க்க போற இடத்தில் அப்படியே கண்ணில் காதல் பார்வை வீசி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவான். இங்கே தலைகீழா இருக்கிறது.
ஏண்டி இதை இப்போது தான் கேட்க வேண்டுமா? மாமன் கோபத்தில் இருக்கிறானே அவனுக்கு கோபத்தை குறைக்க ஏதாவது கன்னத்தில் கொஞ்சம் இச்சு தருவோம் என்று இல்லாமல் நீ பாட்டிற்கு நூத்துக் கிழவி கணக்கா பேசிட்டு இருக்கிறாய்?
தேனருவி அதெல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம் தாங்க இப்போது எல்லாம் எதுவுமே கிடைக்காது என்று சொல்லிக் கொண்டு கதவைத் திறக்கப் போனாள்.
அப்போது தான் அங்கே இருந்து கொலுசு ஒளி சத்தமாக கேட்டது அங்கே இருந்து யாரோ? ஓடுவது போல் இருந்தது.
தேனருவிக்கு மனதில் திக் என்று ஆனது. இது என்ன தன் வீட்டில் தனக்குப் பேசுவதற்கு கூட உரிமை இல்லையா? இது யார்? இப்படி அநாகரிகமா நடந்து கொள்வது என்று கதவைத் திறக்கப் போனவள் வேண்டும் என்றே கதவை கொஞ்சம் திறந்து வைத்துக் கொண்டு தேவ் ஆனந்த் கன்னத்தில் எக்கி ஒரு முத்தம் வைத்தாள்.
நல்லா பார்த்து வெந்து சாகட்டும் என்று தான் அங்கே இன்னமும் அந்தப் பெண் இருப்பதைப் பார்த்தவள்.
வேண்டும் என்றே விடுங்க எனக்கு வெட்கமா இருக்கிறது. இது எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு தான் என்று கூறிக் கொண்டு கதவை சாத்தி உள்பக்கமாக நின்று கொண்டாள்.
ஹனிபால்ஸ் என்னடி ஏதோ எதோ சொல்கிறாய்? மண்டை குழம்பி விட்டதா?
உஷ் என்று வாய் மேல் விரலை வைத்து தடுத்தாள். அப்போது அவர்கள் இருவரும் இருக்கும் அறைக் கதவு தட்டப்பட்டது.
தேனருவி கதவைத் திறந்ததும் வெளியே வனிதா தான் நின்று கொண்டு இருந்தாள். உங்களைக்
கீழே வரச் சொன்னார்கள். இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். எப்படி தான் பொண்ணு பார்க்க வந்த இடத்தில் கூட எதைக் காட்டி பணக்கார மாப்பிள்ளை கரெக்ட் செய்கிறார்களோ? என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சொன்னாள்.
தேவ் ஆனந்த் நாங்கள் என்ன செய்தோம் என்று உனக்கு எல்லாம் விளக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எல்லாரும் உன்னைப் போல் இருக்க மாட்டார்கள்.
உனக்கு எத்தனை தைரியம் இருந்தால் அவளைப் பார்த்து இப்படி பேசுவாய்? என்று கோபத்தோடு பேச.
அது தான் இத்தனை நேரமும் எதையோ? காட்டி உங்களை மயக்கி விட்டாள். அது தான் நேற்று வரை நான் உங்கள் காதலி இன்று பெரிய இடம் என்று இவளா? இது கொஞ்சம் கூட நல்லா இல்லை மாமா.. நீயும் ஒரு பெண் தானே என் வாழ்க்கையில் ஏன் குறுக்கே வருகிறாய்?
மாமா நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் வாயைத் திறந்து சொல்லுங்கள். நேற்று நாம் இருவரும் சேர்ந்து தான் ஊர் சுற்றினோம் நாளைக்கு பெண் பார்க்கப் போகிறோம். அதனால் நேற்றே என்னை நீங்கள் எடுத்துக் கொண்டீர்களே மாமா அப்போ என் வாழ்க்கை நிர்க்கதி தானா? என்று கள்ள அழுகாச்சு அழுதுகொண்டு தேனருவியைத் தான் பார்த்தாள்.
தேனருவிக்குத் தான் இவள் எண்ணம் பற்றி நிழல் அனைத்தும் சொல்லி விட்டதால் வனிதா கதை சொல்வது போல் அப்புறம் என்று தான் நின்று கொண்டு இருந்தாள்.
தேவ் ஆனந்த் இவள் கூறிய பொய்யை எங்கே தேனருவி தவறாக புரிந்து கொள்வாளோ?
என்று அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
தேனருவியோ? கூலாக சரி சொல்லி முடித்து விட்டாய் என்றால் வழியை விடு என்று சொல்ல இப்போது விழிப்பது வனிதாவாகி விட்டது.
நான் இத்தனை தூரம் எங்களுக்குள்ளே எல்லாம் நடந்து முடிந்து விட்டது என்று கூறுகிறேன். நான் சொல்வது பொய்யாக இருந்தால் தேவ் மாமா ஏன் அமைதியாக இருக்கிறார். இதிலேயே உனக்குப் புரியவில்லையா?
நீ தான் ஆம்பளைக்கு அலையறவள் ஆயிற்றே உனக்கு எப்படி புரியும். இரு நான் போய் அங்கே உன் அம்மாவிடம் சொல்கிறேன் என்று கிளம்பியவளை பிடித்து நிறுத்திய தேனருவி விட்டாள் பாருங்க ஒரு அரை காதில் ங்கொய் என்று சத்தம் தான் வந்தது வனிதாவிற்கு.
ஏய் என்னையே கை நீட்டி அடிக்கிறாயா? எங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்பே உனக்கு இத்தனை திமிறா? இதையே வைத்து உங்கள் கல்யாணத்தை நிறுத்துகிறேன். பாருடி என்று சவால் விட்டாள்.
தேவ் ஆனந்த் கோபம் பயங்கரமாக வந்தது. அவளைக் கொன்று போடும் அளவுக்கு.. ஆனால் வனிதாவை அடிப்பதற்காக தொடுவதற்கு கூட அவனுக்கு விருப்பமில்லை. அவளை அசூசையாக ஒரு பார்வை பார்த்தவன் தேனருவியை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.
வனிதா பேசியதை அனைத்தும் கேட்ட நிழல் அடியே என்னமா புளுகிறாள். மனிதர்கள் பேய் பிடித்து விட்டது. பிசாசு பிடித்து விட்டது என்று பொய் தான் சொல்கிறார்கள். ஒவ்வொருத்தியும் தான் பேயாட்டம் ஆடுகிறார்கள்.
வனிதா அவளின் கன்னத்தை பிடித்துக் கொண்டு அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தாள்.
நேற்று தன் அக்கா வானதி உன் வாழ்க்கைக்கு உதவி செய்து என் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடும் அதனால் நீ என்னமோ? செய்து கொள் என்னை விட்டு விடு வனிதா என்று கூறியதில் இருந்து தான் எதையாவது சொல்லி பொண்ணுகிட்ட இவனைப் பிடிக்கவில்லை என்று கூற வைத்து விட்டாள். வேறு வழி இல்லாமல் என்னையே திருமணம் செய்து கொள்ளும் நிலைமை உருவாகி விடும் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டாள்.
இனி நிழல் அவளை என்ன பாடுபடுத்தப் போகிறதோ? தெரியவில்லை? ?
அவள் முன்னால் வந்த நிழல் அவளைச் சப்பு சப்பு என்று அரைந்து தள்ளியது. அவளுக்கு முதலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இரண்டு கன்னமும் எரிந்தது. அதோடு நிறைய குழவிகள் அவளின் முகத்தில் கடித்தது.
வனிதாவின் முகம் பயங்கர வலி எடுக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் பொய் சொன்ன வாய் தான் அதிக கடி வாங்கி கொஞ்ச நேரத்தில் வீங்கி விட்டது. உதடுகள் இரண்டும் வீங்கி தொங்கி விட்டது.
அப்போதும் அடங்காமல் எப்படியோ? இது ஒரு அபசகுணம் என்று கூறி இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று தான் கீழே சென்றாள்.
அவளின் முகத்தைப் பார்த்து அதிரா ஆதியா இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள் சித்தி உன்னைப் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருகிறது.
உன் உதடு என்ன இவ்வளவு பெரிசா இருக்கிறது என்று தான் கேட்டு அதில் ஒரு அடி வைத்து இருந்தார்கள் சிறுமிகள் இருவரும். அதில் வலியில் கத்தியவளைப் பார்த்து வானதி என்னது உன் முகம் பூராவும் இப்படி இருக்கிறது என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.
அக்கா நான் அங்கே மேலே நின்று கொண்டு இருந்தேனா? அப்போது..
பூவிழி உடனே அக்கா உங்களை குழவி தான் கடித்து இருக்கிறது என்று கூறியவள் உடனே இதுக்கு வைத்தியம் பார்த்து விட வேண்டும் என்றே சமையல் அறைக்குள் புகுந்து சின்ன வெங்காயம் எடுத்து வந்தாள்..
தொடரும்...