• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
293
நீ உடல் நான் நிழல்
பாகம் - 27


தேவ் ஆனந்த் தேனருவி கூட போனில் பேசி முடித்தவன் வீட்டிற்கு சென்றான்.

தம்பி எங்கே போயிட்டு வருகிறாய்? என்று கேட்டுக் கொண்டே அவனின் பெரிய அண்ணா சிவக்குமார் வந்தான்.

சும்மா வெளியே போனேன் னா அப்படியே தோட்டம் போய்ட்டு வந்தேன். ஏனுங்க அண்ணா ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டுமா?

ஆமாம் தேவ் நாளைக்கு பொண்ணு பார்க்கப் போவதில் தான் ஒரு மாற்றம்.

அண்ணா என்ன சொல்கிறீர்கள்? அம்மா அப்பாவிற்கு விடயம் தெரிந்து விட்டதா? என்று பதட்டமாக பேசவும்.. அவ்வழியாக சென்ற சுனைனா காதில் இது விழுந்து விட.. அதை ஒட்டுக் கேட்க ஆரம்பித்து விட்டாள்.

இந்தப் பாதகத்தி இருப்பது தெரியாமல் தேவ் ஆனந்த் வாய்விட நான் காதலித்த விடயம் அம்மா அப்பாவிற்கு தெரிந்து விட்டதோ? அதனால் தான் நாளைக்கு பொண்ணு பார்க்க போவதில் ஏதாவது சிக்கல் வந்து விட்டதோ? என்று குழம்பியவன் "என்ன ஆச்சுனா? ஏதாவது ஏடாகூடாமாக ஆகி விட்டதா? எதுவாக இருந்தாலும் நான் அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன். வேறு யார் கழுத்திலும் தாலி கட்ட மாட்டேன்.

தேவ் ரிலாக்ஸ் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று தெரியாமலே நீயாக ஒன்றைப் புரிந்து கொண்டு பேசாதே.. நாளைக்கு பொண்ணு வீட்டிற்கு தான் செல்கிறோம் கோவில் இல்லை என்று தான் சொல்ல வந்தேன்.

ப்பா இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது. ஒரு நிமிடத்தில் மனசே தவிச்சுப் போச்சுனா என்று தன் அண்ணனைக் கட்டிப் பிடித்தான். அப்போது சுனைனா அங்கே மறைந்து நின்று இருப்பதைக் கண்டு கொண்டான்.

அடிப்பாவி எங்கள் வீட்டில் இருந்து கொண்டு நான் பேசுவதையே ஒட்டுக் கேட்கிறாயா? நல்லா கேட்டுக்கோடி என்று மனதில் நினைத்தவன்.. அண்ணா நாம் நாளைக்கே நிச்சயம் செய்து விடாலாமா?

தேவ் ஆனந்த் முகத்தைப் பார்த்து எதுவோ? சரியில்லை அது தான் இவன் இவ்வாறு பேசுகிறான் என்று நினைத்தவர்..

ஆமா தேவ் அம்மா கூட நீ சொல்வது போல் தான் சொன்னார்கள். பெண் பிடித்து விட்டாள் நாம் நாளைக்கு நல்ல நாள் அதனால் பாக்கு வெத்தலை மாற்றிக் கொள்ளலாம் என்று தான் அப்பாவிடமும் என்னிடமும் கூறினார்கள். நான் தான் தேவ் ஆனந்த் முதலில் என்ன சொல்கிறான். என்று கேட்டுத்
தெரிந்து கொண்டு மேற்கொண்டு பேசிக்கலாம் என்று சொல்லி விட்டேன்.

இருவரும் வீட்டிற்குள் வருவதைத் தெரிந்த சுனைனா அங்கே இருக்கும் ஒரு அறைக்குள் புகுந்து கொண்டாள்.

சிறுக்கி மகளே மாட்டினாயா? என்று தேவ் ஆனந்த் அந்தக் கதவை வெளிப்புறமாகத் தாள் போட்டு விட்டு சிரித்துக் கொண்டு அவன் அறைக்குள் சென்று கொண்டான்.

சுனைனா அங்கே இருந்து இப்போது வெளியே செல்லலாம் என்று நினைத்து கதவைத் திறக்க அது வெளிப்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.

கதவைத் தட்டிப் பார்த்தால் அங்கே யாரும் இல்லை. அதனால் கதவைத் தட்டி ஓய்ந்தவள் மடிந்து அங்கேயே அமர்ந்து விட்டாள்.

தேனருவி வாசலுக்குச் சென்றாள் கோலம் போடுவதற்கு.. போர்ட்டிற்கோ வாசல் தான் அந்தக் கால அரண்மனை அதனால் அது நீண்டு பெரியதாக இருந்தது. வீட்டிற்கு முன்னால் மட்டும் கோலம் போடுவதற்கு நீர் தெளித்து சுத்தம் செய்தாள்.

வீட்டை எட்டிப் பார்த்தவள் அம்மா தங்கை எல்லாம் உள்ளே இருக்க நிழல் எங்கே இருக்கிறது. தெரியவில்லை சரி என்று கோலம் போட கோலப் பொடியை எடுக்க.. நிழல் அவள் அருகில் வந்து என்னைத் தேடினாயா? என்று கேட்க..

ஆமா நீ ஒரு கோலம் போடுகிறாயா?

எதே நான் கோலம் போடுவதா? எனக்கு மண்டையோடு மட்டும் தான் வரையத் தெரியும் பரவாயில்லையா?

நீ எல்லாம் என்ன நிழலோ? உருப்படியாக ஒரு கோலம் போடத் துப்பில்லை.. பெரிய ராஜகுமாரி என்று பீற்றிக் கொண்டு இருந்தான். எத்தனையோ? வருடமாய் இதில் காத்திருந்தாயாமா?

நீ தினமும் எத்தனை வீடுகளில் கோலம் போடுவதைப் பார்த்து இருப்பாய்?

நீ என்ன புரியாமல் பேசுகிறாய்? கோலம் போட்டு இருந்தால் எங்களால் அந்த வீட்டின் அருகில் கூடப் போக முடியாது. இதில் நான் எங்கே போய் கோலம் போடுவது.

அட இப்படி ஒரு விசயம் என் மண்டையில் உரைக்கவே இல்லையே!! நான் இது தெரியாமல் அன்று பிஞ்சு போன செருப்பு சீவக்கட்டை எல்லாம் எடுத்து என்னைச் சுற்றி எக்ஸ்பிசன் போல் வைத்து இருந்தேனே. சப்பை மேட்டர் ஒரு கோலம் போட்டு இருந்தாலே நீ என் வீட்டிற்குள் வந்து இருக்க மாட்டாயே..

அது மத்த வீட்டிற்குமா? கண்ணு இது நான் பிறந்து வளர்ந்த வீடு அதை உன் மண்டையில் நல்லா பதிய வைச்சுக்கோமா பாப்பா? அப்புறம் நீ சொல்வது மற்ற பேய்களுக்கு தீய சக்திகள் தான் நான் அதற்கு அப்பார்ப்பட்ட சக்தி நிழல் என்று கூறிவிட்டு அவளிடம் நீ கோலம் போடு எனக்கு வேறு ஒரு வேலை வந்து விட்டது என்று கூறிவிட்டு மின்னலாய் மறைந்தது.

தேவ் ஆனந்த் வீட்டிற்குள் தான் வந்தது நிழல் சுனைனா தங்கி இருக்கும் அறைக்குள் வந்தது அவளுக்கு பயம் காட்டுவதற்கு.

அவள் மனதில் தான் இப்போது விசம் இருக்கிறது. தேனருவியை தேவ் ஆனந்த் அம்மா அப்பா புறக்கணிக்க வைக்கு வேண்டும் என்று தான் அவள் ஒட்டுக் கேட்டதை வைத்து தேனருவி ஏற்கனவே தேவ் ஆனந்த் கூடப் பழகியவள் என்று அவளுக்கு இது தான் வேலை பணக்கார பையன்களை வலைவிரித்து பிடிப்பது என்று எசகுபிசகாக அவர்கள் காதில் போட்டு வைக்கத் தான் ப்ளான் வைத்து இருந்தாள்.

நிழலுக்கு எங்கே இருந்தாலும் தேனருவிக்கு ஒரு கெட்ட பெயர் வருவதற்கு அது விடுமா? எப்போது தேனருவி தேவ் ஆனந்த் வீட்டைப் பார்த்து வர நிழலைத் தூது அனுப்பினாளோ? அப்பவே தேவ் ஆனந்த் வீடான தேவகோட்டை ஜமீன் அரண்மனை நிழலின் கட்டுக்குள் வந்து விட்டது.

அந்த அறைக்குள் வந்த நிழல் சுனைனா அருகில் சென்று அமர்ந்து கொண்டது. அவள் முகத்திற்கு மிக அருகில் சென்று தன் உருவத்தை அவளுக்கு காண்பித்தது.

தன் அருகில் யாரோ? பெருமூச்சு விடும் சத்ததில் மூடி இருந்த தனது கண்ணைத் திறந்தவள்
தனது கண்முன்னே தெரிந்த உருவத்தைக் கண்டு பயத்தில் நாக்கு போய் மேலண்ணத்தில்
ஒட்டிக் கொள்ள பே... பே.. ய்.. என்று பேச்சு வராமல் திக்கித் திணறினாள்.

( அடப்பாவமே இவள் நிழலைப் பார்த்து பயந்து மயக்கமடைவாள் என்று நினைத்து இருக்க இப்படி பே.. ய் என்று ஏதோ வாத்தியார் கேள்வி கேட்டு பதில் சொல்லத் தெரியாதவள் போல் சவாகசாமா
பயக்கிறாளே பாவம் ல நிழல்..)

கரடுமுரடான குரலில் நிழல் பேசத் தொடங்கியது. என்னைப் பார்த்து கூட உனக்கு பயமா இல்லையா?

நான் எதுக்கு பயப்பட வேண்டும். எனக்குப் பேய் படம் தான் மிகவும் பிடிக்கும். நல்லவேளை நான் இங்கு தனியாக வந்து மாட்டிகிட்டேன் என்று இருந்தேன். நல்லவேளை நீ வந்தாய்? என்னை இங்கே இருந்து வெளியே அழைத்துச் சென்று விடு பேய் சார்.

நாளைக்கு எங்கள் தேவ் மாமாவிற்கு பெண் பார்க்கப் போகிறார்கள் அதை நான் தடுக்க வேண்டும் என்னை எப்படியாவது இந்த அறைக்குள் இருந்து வெளியே அழைத்துச் சென்று விடு பேய் என்று அவளும் டீல் பேச கடுப்பான பேய் அவளை மயக்கமடையச் செய்து அந்த அறையில் இருக்கும் சேரில் கட்டிப் போட்டு வாயைத்திறக்க முடியாத அளவுக்கு செய்து விட்டு என் தேனருவிக்கு கெடுதல் செய்ய என்னிடமே உதவி கேட்கிறாயா? நீ இங்கேயே கிட நாளை வரைக்கும் நான் வந்து தான் நாளைக்கு உனக்கு இந்த அறையில் இருந்து விடுதலை என்று கூறிவிட்டு அங்கே இருந்து மறைந்தது.

விஜயலதா தனது தங்கை சுனைனா எங்கே போய்த் தொலைந்தால் நானும் பொழுதோட இருந்து தேடுகிறேன் என்று புலமபிக் கொண்டு இருந்தாள். தன் கணவனிடம் சொல்லவும் பயமாக இருந்தது.

காலையில் இருந்து வெளியே வேலைகளை முடித்து இப்போது தான் வந்து சாப்பிட்டு விட்டு படித்தவரிடம் சென்று இந்த விடயத்தை சொல்லி வாங்கிக் கட்ட வேண்டாம் என்று அவளின் அறைக்குச் சென்று பார்க்க அவள் பெட்டில் தான் படுத்து இருந்தாள். ஆனால் அது சுனைனா இல்லை நிழல் தான் ஆனால் அவள் சுனைனா தான் படுத்து விட்டாள் என்று போய்விட்டாள்.

நிழலுக்கு இப்போது அங்கு இருந்து தேனருவி வீட்டிற்கு சென்று விட்டது.

அவர்கள் வீட்டிற்கு காவலாக அங்கே இருந்து கொண்டது.

அழகாய் புலர்ந்தது பொழுது.. தேவ் ஆனந்த் அவளுக்கு எடுத்துக் கொடுத்த சேலைக்கு
மேட்சாக லைட் மஞ்சள் கலர் சர்ட் மற்றும் ப்ளு ஜீன்ஸ் போட்டு பேரழகனாய் தனது அலையும் கேசத்தை கோதிக் கொண்டு படியில் இறங்கி வந்தவனைப் பார்த்த வனிதாவிற்கு தனக்கு இல்லையே வேறு எவளுக்கோ சொந்தமாகப் போகிறதே இந்த மொத்த அழகும் என மனதில் புழுங்கிக் கொண்டு இருந்தாள்.

விஜயலதா இப்போதும் சுனைனா காணவில்லை அதனால் நாம் இன்று பெண் பார்க்க போகவேண்டாமே என்று வந்து கிளம்பிய வர்கள் முன் நின்று தடை விதித்துக் கொண்டு இருந்தாள்.

கிருஷ்ணவேணி இங்கே பாரு மருமகளே உன் தங்கச்சியை நீயே எங்காவது ஒளித்து வைத்து விட்டு இப்போது வந்து நாடகம் ஆடுகிறாயா? யார் வந்தாலும் வராவிட்டாலும் இன்று பெண் பார்த்து நிச்சயம் செய்வது நிற்கப் போவதில்லை.

என்னங்க அத்தை நான் இந்த வீட்டின் இரண்டாவது மருமகள் என் தங்கையைக் காணவில்லை என்று நான் இந்தப் பாடு படுகிறேன். என்னவோ? உங்கள் மகனுக்கு இந்தப் பெண் இல்லாட்டி வேறு பெண்ணே கிடைக்காது என்பது போல் பேசுகிறீர்கள் நான் இதைச் சும்மா விட மாட்டேன்.

ரவி என்னடா அவளைப் பேச விட்டு நீ வேடிக்கை பார்க்கிறாயா?

அம்மா நான் இப்போது தான் வீட்டிற்குள் வருகிறேன். என்னாச்சு கிளம்பலாமா? என்று கேட்கத் தான் இப்போது வந்தேன்.

விஜயலதா என் பையனுக்கு திருமணம் செய்ய உன் உதவி எல்லாம் தேவை இல்லை. பெற்றவர்கள் நாங்க இரண்டு பேரும் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம் என்று பேசி விட.

அது தான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. இன்னும் செத்துத் தொலையாமல் எங்கள் உயிரை வாங்கிறீர்கள் என்று விஜயலதா வாய்க்குள் முனகியது ரவிக்குமார் காதில் விழுகிறது. தனது தாய் தந்தையை சாகச் சொல்ல இவள் யார்? என்று கன்னத்தில் விட்டான் ஒரு அறை.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top