Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 293
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 26
பாகம் - 26
தேனருவியுடன் தேவ் ஆனந்த் நீண்ட நேரம் பேசிவிட்டு போனை வைத்தான்.
தேன அருவி இத்தனை நேரம் அவனுடன் உரையாடியதில் ஒரு தெளிவு கிடைத்தது. காலையிலிருந்து அழுது கொண்டிருந்தவள் இப்போது சிரிக்கலானாள்.
அதே சந்தோஷத்தோடு அவளது அறையில் இருந்து வெளியே சென்றவள் பூவிழியின் இரு கரங்களைப் பிடித்துக் கொண்டு சுற்றினாள்.
சந்தோஷமாக சிரித்துக் கொண்டு அவளின் செயலை பார்த்து பூவிழியே தேனுக்கா என்ன ஆச்சு காலையிலிருந்து ஒரு மாதிரி கிறுக்குத்தனமாகவே சுத்திட்டு இருக்கிறா??
கப்பலை கவுந்தமாற இருக்க வேண்டியது. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அதுக்கு நேரா ஆப்போசிட்டா பிஹேவ் பண்றது .
ஒரு வேலை அன்னைக்கு கல்லறை தோட்டம் அருகில் கீழே விழுந்ததால் அதனால் ஏதாவது கிறுக்கு பிடிச்சிருச்சோ ?? மொத்தத்தில் எனக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி நம்மளுக்கு என்ன வந்தது அவ ஹேப்பியா இருக்கிறாளா நா ஹேப்பியா இருக்க வேண்டியதுதான்!!!
தேன அருவி யசோதாவிடம் சென்றவள் அம்மா என்ன செஞ்சுட்டு இருக்க?
ஏன் பார்த் தா எப்படி தெரியுது கண்ணு முன்னால தான் இருக்குது. இல்லை பின்னாலே இருக்குதா?
அது சரி நாளைக்கு உன்னை பொண்ணு பாக்க வர்றாங்கடி அதனால் நாளைக்காவது நேரத்தில் எழுந்துக்கோ??
அது என்னம்மா பொண்ணு பாக்க வர்றது? நாம மாப்பிள்ளை பார்க்க போலாமா? ?
ஏண்டி அது எந்த ஊரு வழக்கம் காலங்காலமும் எப்படி இருக்குதோ? அப்படித்தான் நாமும் இருக்க முடியும் புதுசு புதுசா உளறாதே..
நானே நாளைக்கு வருகிற வரன் உன்னை புடிச்சு போகணுமே அப்படின்னு மனசுக்குள்ள பக்கு பக்குன்னு இருக்குது .என்னதான் குமாரசாமி அண்ணன் சொன்னாலும் உனக்கு நல்ல இடமா அமைஞ்சுட்டா அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு வேற எதுவும் இல்லை.
அப்போது கமலா தேனருவி என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லா என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் வந்தார்.
அத்தை வாங்கோ எல்லாம் ஃப்ரீயாவே இருக்கிறோம். அது என்ன பையில என்னங்க ஸ்பெஷலா எனக்குன்னு கொண்டு வந்தீங்களா?
பூவிழி உனக்கில்லை இது நான் தேன் அருவிக்காக கொண்டு வந்தேன். அதுவே மாமன் சொல்லுச்சா நாளைக்கு தேன்ருவி பொண்ணு பாக்க வர்றாங்கோ அதுவே எனக்கும் காலையிலிருந்து தோன்றிட்டே இருந்தது .கடை வீதிக்கு போனேன் ஒரு சேலை எடுத்துட்டு வந்தேன். அதுதான் இது கட்டிக்கிட்டும் என்று நான் இப்ப கொண்டு வந்தேன் பாத்துக்குவே.
ஏன் எனக்கு இல்லை அத்தை?
உனக்கும் பொண்ணு பாக்க வரும்போது எடுத்து தரேன் .நீ சின்ன புள்ள தானே உனக்கு கல்யாணம் ஆகும் போது உனக்கு எடுக்காமலா? இருக்கப்போறேன்.நான் எடுத்து கொடுக்கலைன்னா தான் நீ விட்டு விடுவாயா?
இப்ப சொன்னீங்க பார்த்தீங்களா? இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. யசோதா காது கேக்குதா ? எனக்கு நீ மாப்பிள்ளை பார்க்கும் போது என்னவெல்லாம் எனக்கு வேண்டுமுனு நான் உன்னிடம்
லிஸ்ட் தந்து விடுவேன். நீயும் அதே மாதிரி எனக்கு எந்தக் குறையும் வைக்காமல் செய்து விடனும் ஆமா சொல்லிப் புட்டேன்.
ஆனாலும் உனக்கு ரொம்பத் தான் வாயீ கூடிப் போச்சு கழுதை சட்டுகத்தை அடுப்புல வைத்து அந்த நீட்டி முழக்கிற நாக்கு மேல ஒரு எல்லைக் கோடு போட்டு விடுகிறேன். என் கூட வாயைப் புடுங்காமல் போய் இப்பவே வாசலைக் கூட்டி தெளிச்சு நல்லா பெரிய கோலம் போட்டு விடு போ.
யசோதா நான் உன்னை இப்போ என்ன சொல்லிப் புட்டுனு நீ இது மாதிரி எல்லாம் தண்டனை கொடுக்கிறே.. என் செல்லம்ல என்னைய விட தேனுக்கா தான் நல்லா கோலம் போடுவா அவளைப் போடச் சொல்லு என்று அவள் நழுவி விட்டாள்.
சரிம்மா நானே போட்டுக் கொள்கிறேன். நீங்கள் அவளிடம் கெஞ்ச வேண்டாம் தேனருவி கூற.. இது நம்ம தேனருவி தானா? என்று அனைவரும் வாயைப் பிளந்து கொண்டு பார்த்தனர்.
அத்தை நான் இதை எடுத்துக் கொண்டு போகிறேன் என்று அந்தப் புடவை இருந்த பேக்கை எடுத்துக் கொண்டு அவளின் அறைக்குச் சென்றாள்.
பூவிழி உடனே அக்கா இரு நானும் வருகிறேன் என்று அவள் பின்னால் செல்லப் பார்த்தவளை
யசோதா அவளின் காதைத் திருகி உனக்குச் சொன்ன வேலையைச் செய்ய உனக்கு மொடைமயிறு இப்போது அவள் பின்னால் அவளையும் குழப்பி விட்டு விடாதே..
நானே பொண்ணுப் பார்க்க வருவாங்க அவகிட்ட சொன்னேன் அதையே அவள் ஏத்துக்குவாளா? இல்லை முரண்டு பிடிப்பாளோ? என்று தான் நான் குழம்பி கிட்டு இருந்தேன். எந்த ஆண்டவன் புண்ணியமோ? வாயைத் திறந்து எந்த விதாண்டா வாதம் செய்யாமல் கம்முனு சிரிச்சு கிட்டு இருக்கிறாள்.
உன் வாயீ வைத்துக் கொண்டு நீ கம்முனு இருப்பாயா? நோண்டி நொங்கு எடுத்து அதில் கங்கு போட்டு விட்டு விட்டாய் அதனால் இதோ நாளைக்கு வீட்டிற்கு வருகிறவங்களுக்கு ஸ்வீட் செய்யோனும் அதுக்கு இந்தத் தேங்காய் எல்லாம் சிதறிக்கொடு அவள் கண் முன்னே பத்து தேங்காய் உடைத்து வைத்து இருந்தார்.
யசோ நீ என்ன நாளைக்கு பொண்ணு தானே பார்க்க வராங்க ஏதோ கண்ணாலமே கட்டிப் போகிற மாதிரி இத்தனை தேங்காய் சிதறி வைய்யினு சொல்கிறாய்? இந்தப் பிஞ்சு கை தாங்குமா??
இந்த பாசாங்கு பருப்பு வேகவைக்கிறது. தேனருவிகிட்ட வேண்டுமானும் வைச்சுக்க நான் உனக்கு அம்மாடி நீ என்ன திருட்டுத்தனம் செஞ்சாலும் அதில் சொடக்கு எடுத்து சொருகி விடுவேன்.
எதைமா? இதோ இதை என்று கத்தியைக் காண்பித்தார்.
யசோ இது அடுக்குமா? நீ தவமாய் தவம் இருந்து பெத்த மகள் உன் பேர் சொல்லும் மகளை இரத்த வெள்ளத்தில் பார்க்க முடியுமா?
அதுக்குத் தான் சொல்கிறேன். சீக்கிரம் துருவிக் கொடு என்று யசோதா சொல்ல..
சரிங்க மேடம் செஞ்சு தாரேன், ஆமா இத்தனை தேங்காய் எதுக்குமா?
ஆமா யசோதா இத்தனை தேங்காய் எதுக்கு என்று கமலா கேட்க..
அண்ணி செவன்கப் ஸ்வீட் செய்யத்தான். அது எனக்கு எல்லா இனிப்பும் செய்யத் தெரியும். கடையில் போய் காசைக் கொடுத்து கலர் போட்டதை வாங்கி சாப்பிடாட்டி
தான் என்னங்க அண்ணி அது தான் அப்படியே கொஞ்சம் தேங்காய் ஒப்பிட்டும் செய்யலாம் தான் என்று யசோதா கூறியதும் தான் பூவிழி அம்மா லிஸ்ட் இங்கே இருந்து தான் ஆரம்பிக்கிறது.. எனக்கும் இதே மாதிரி தான் செய்யனும் என்று கூறிவிட்டு அந்தத் தேங்காய் மூடிகளை சிதற ஆரம்பித்தாள்.
அப்படியே சிறு பூவா தான் இருக்கோனும் எங்காச்சும் கண்ணா பின்னானு செஞ்சு வை
உன்னை சும்மா விடமாட்டேன்.
அறைக்குள் சென்ற தேனருவி அந்தப் புடவையைத் தான் எடுத்துப் பார்த்தாள். அவளுக்கு அதை தொட்டதுமே உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது.
மஞ்சள் கலர் அவளுக்குப் பிடித்த கலர்.. புடவை எடுத்து தோல் மேல் வைத்து பார்த்தாள் கண்ணாடியின் முன் சென்று நின்று கொண்டு தன்னைப் பார்க்கும் போது அவ்விடம் தேவ் ஆனந்த் நின்று கொண்டு தன்னையே பார்ப்பது போல் ஒரு யூகம்.. ப்ளவுஸ் வைத்து தன்னை ஒரு செல்பி எடுத்து தேவ் ஆனந்த் செல்லுக்கு அனுப்பி விட்டாள்.
அலைபேசியையே பார்த்துக் கொண்டு இருந்தாள் தேனருவி தனக்கு அழைப்பான் என்று..
அப்போது நிழல் வந்து நின்று கொண்டு இவளையே பார்த்தது.
அவளின் முன்னால் வந்து நின்று கொண்டு நீ என்னை தேடவே இல்லை பார்த்தாயா? என்று அவளிடம் கேட்டதிற்கு அவளிடம் எந்தப் பதிலும் இல்லை.
சரி இவள் இப்படியே உட்கார்ந்து இருக்கட்டும் என்று பூவிழி அருகில் சென்று நின்று கொண்டது. நிழலுக்கு பூவிழியை பார்க்கும் போது என்னை ஆசையா ஊஞ்சல் ஆடவிடாமல் நீ தானே கலைத்து விட்டாய்? இரு உனக்கு கொஞ்சம் விளையாட்டு காட்டுகிறேன். நான் உன் அக்கா கண்ணுக்கு மட்டும் தான் தெரிவேன்.. இப்போது என் விளையாட்டு பார் மகளே என்று அவள் துருவிக் கொண்டு இருக்கும் தேங்காய் மேல் அமர்ந்து கொண்டு அதை மின்னல் போல் துருவி விட்டது.
இத்தனை நேரம் நானும் இந்த தேங்காய் கூடா பாடாதபாடு பட்டு ஒரே ஒரு தேங்காய் மூடி கூட துருவ வக்கில்லையா? என்று யசோதா கிட்ட திட்டு வாங்கினேன் ஆனா இப்போது என் கையில் ஏதோ பவர் வந்து விட்டது என்று நினைத்தவள்.
ஸ்பைடர் மேன் செய்வது போல் கையை வைத்து அதில் நூல் வருகிறதா? என்று கண்கட்டு வித்தை எல்லாம் செய்து பார்த்தாள். அதில் ஒன்றும் வரவில்லை.
இதென்ன ஒன்னுமே வரவில்லை என்று சோர்ந்தவள் மறுபடியும் தேங்காய் எடுத்து துருவ ஆரம்பிக்க வைச்ச மாயம் என்ன அது காலியானதும் தான் அடச்சீ நான் தான் ஒரு மடச்சீ இந்த அறிவாள்மனையில் தான் ஏதோ பூதம் இருக்கிறது.
ஒருவேளை விளக்குள்ளே பூதம் இருந்தது போல் நம் கைபட்டதும் இந்த அறிவாள் மனையில் இருந்து பூதம் வெளியே வந்து விட்டதோ? அப்படீனா என்னைப் பார்த்து அது ஏன் நான் உங்கள் அடிமை என்று பேசவில்லை.
இவள் பேசுவதைக் கேட்ட நிழலுக்கு ஆமா நான் யார் என்று உன் முன்னால் வந்து நின்னா? என் உருவமில்லா நிழலைப் பார்த்து உன் வாய் தந்தியடிக்க ஆரம்பித்து தான் விடும்.. ஆனாலும் உன் ஆசையில் நான் மண் அள்ளிப் போட விரும்பவில்லை.
பூவிழி க்கு எண்ண அலைகள் தறிகெட்டு ஓடியது. அப்படி மட்டும் எனக்கு ஒரு அடிமை வாய்ச்சது.. யசோ ஏவும் வேலை பூராவும் சும்மா மின்னல் மாதிரி செய்யவைத்து விடலாம். அப்புறம் நம் வாத்தீஸ் கொடுக்கிற அசைண்மெண்ட் இந்த ரெக்கார்டு நோட் எழுகிறது. லொட்டு லொசுக்கு எல்லாம் அது தலையில் கட்டிவிட்டு ஐயாம் சோ வெரி ஹாப்பி மச்சினு உலா வரலாம்..
(அடியே அடங்கு இல்லை என்றால் நீ துருவி வைத்து இருக்கும் தேங்காய் எல்லாம் மறுபடியும் தேங்காய் மூடியாவே மாறிவிடும். நிழல் தேனருவியையே விழி பிதுங்க வைத்து விழாக்கோலம் கண்டது. உன் எண்ணம் இப்படி ராக்கெட் ரேஞ்சில் போச்சு அப்புறம் நான் உனக்கு போனா போச்சுனு உதவும் நிழலை வாங்கி விடுவேன். ரைட்டர் ஜி இப்படி
பொழம்ப விட்டுட்டியே..)
தேனருவி மயக்கத்திலிருந்து தெளிந்து விட்டாள்.. அதன் என்ன நான் மயக்கமா போட்டு விழுந்தேன். ரைட்டர் ஜி என்று கீச்மூச் என்று சண்டைக்கு வருகிறாள்.
அம்மாடி கீழே விழுந்தா தான் மயக்கம் என்று இல்லை. நீ புடவையைத் தூக்கி மராப்பு போட்டுக் காதல் மயக்கத்தில் உட்கார்ந்து இருந்தா? நான் என்ன தான் செய்ய அது தான் அப்படி சொல்லிட்டேன் அது ஒரு குத்தமா?
சரி ஜி கோவித்துக் கொள்ளாதீங்க.. இந்த நிழல் எங்கே போச்சு தான் தெரியவில்லை.
இப்போது தான் உனக்கு அது நியாபகம் வந்துச்சோ?
கோலம் போடனும் அது தான் அது உதவி வேண்டும் அதற்கு தான்.. நிழல் என்று பயம் கூட
இல்லை. அதையும் அக்காளும் தங்கச்சியும் இப்படி வடிவேலு மாதிரி சக்கையை பிழிகிறீர்களே
இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.
நீங்கள் வாங்க ரைட்டர் ஜி.. ஆமா நான் எப்படி உன் வீட்டில் வந்து கோலம் போடமுடியும். உனக்கு வேலை செய்வதற்கு நிழல் ஒன்றே போதும்.
தேனருவி?
தொடரும்...
அடுத்த பதிவில் நிழல் கோலம் எது மாதிரி கோலம் போடும் பார்ப்போம்..