Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 293
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 25
பாகம் - 25
தேவ் ஆனந்த் தேனருவிக்கு எடுத்த புடவையை தரகர் வீட்டில் கொடுத்தான்.
தரகர் குமாரசாமி மனைவி கமலா தன்னை அம்மா என்று அழைத்த தேவ் ஆனந்த் நெற்றியில் தன்கரங்கொண்டு திருஷ்டி கழித்தவர் விழிநீர் ஆனந்தத்தில் சொரிந்தது. தன்னை அம்மா என்று அழைத்தவனைக் கண்டு, "எத்தனையோ கடும் சொற்கள் கடந்து வந்தவர் அல்லவா?"
குழந்தை இல்லை என்பது அவ்வளவு பெரிய குற்றமா? ஆனால் சமூகத்தில் ஏன் தான் இது போல் பேசுகிறார்களோ? தெரியவில்லை. ஆனால் என் பார்வையில் குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த அண்டத்தை ஆளும் பரம்பொருள் தான் அவர்கள் குழந்தை எந்நேரமும் இறைவனையே நினைத்து உருகும் பாக்கியம் தான் அது கிடைத்தவர்கள் தான் பெரும் பாக்கியசாலிகள்.
கர்மா என்ற அடிப்படையில் தான் பிறப்பு எடுப்பது. அந்த கர்மாவில் என்ன இருக்கிறதோ? அது அந்த நேரத்தில் நடக்கும். கர்மா விதிப்பயன் இப்பிறவியில் இல்லை என்று இருந்தால் அது அவர்கள் எப்படி பொறுப்பாவார்கள். படைத்த இறைவன் தான் அந்த பழிச்சொல்லை ஏற்றுக் கொள்வான்.
அப்படி என்றால் தாய் தந்தை ஸ்தானத்தில் பிறவி எடுத்தவர்கள் இருக்க.. இறைவன் அவர்களின் குழந்தை ஆகிறான். பிள்ளை பெற்றவர்கள் கூட இறுதியில் அநாதை ஆசிரமங்களில் தான் இருக்கின்றனர்.
உன் எண்ணத்தை சொல்ல இது இடமில்லை ரைட்டர் ஜி கொஞ்சம் கதையும் சொல்லுங்க..
கமலா கடந்து வந்த பாதையில் அனுபவித்த கஷ்டம் பூராவும் தேவ் ஆனந்த் பேசிய ஒரு வார்த்தையில் மனது லேசானது போல் உணர்ந்தார். அவனை தன் அருகில் அமர்த்திக் கொண்டு தங்கம் நீ என்னை எப்போதும் அம்மா என்றே அழைக்கிறாயா? என்று கேட்கும் அவரைப் பார்த்தவனும். என்ன நினைத்தானோ? சரிங்க அம்மா என்று கூறியதும் தான் தாமதம் உடனே பூஜை அறைக்குள் சென்றவர் இறைவனை வணங்கி விபூதி எடுத்து வந்து அவன் நெற்றியில் வைத்து விட்டார்.
தன் பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெறாத நிலையில் தன்னை அம்மா என்று அழைக்க
ஒரு ஜீவன் கிடைத்த மகிழ்ச்சியில் அவருக்கு பத்து வயது குறைந்து விட்டது போல் தான் இருந்தது.
சமையல் அறைக்குள் சென்றவர் அவசரத்தில் என்ன செய்ய முடியும். அதனால் அவுல் தான் தண்ணீரில் நனைய வைத்து நாட்டுச் சக்கரை தேங்காய் துருவிப் போட்டு நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து கூடவே அவுலும் வாணிலியில் வறுத்து அவுல் உருண்டையாக செய்து கொண்டு வந்து அவனுக்கு கொடுத்தார்.
அது அத்தனை சுவையாக இருந்தது. அவரின் பாசத்தோடு செய்ததாலோ? என்னவோ? தேவ் ஆனந்த் ருசியில் இரண்டு உருண்டை எடுத்து சாப்பிட அவர் இன்னமும் எடுத்துக் கொள் சாமி என்று ஒரு உருண்டையை எடுத்து ஊட்டி விட அதை திருப்பி அவனின் கையில் வாங்கி கமலா அம்மாவிற்கு திருப்பி ஊட்டி விட்டான். அதில் அவருக்கு விழியோரம் நீர் கோர்த்து கீழே வழிந்து வந்தது.
அம்மா எதுக்கு அழுகிறீர்கள் என்று அவரின் கன்னம் வடிந்து ஓடிய கண்ணீரைத் துடைத்து விட்டவன்.. அறியாததே இது எல்லாம் எத்தனை நாட்கள் ஏக்கம் என்று.. குமாரசாமியிடம் கூட அவரின் ஆசைகளை சொல்லியது இல்லை.
உனக்கு நான் எனக்கு நீ என்று இருவரும் வாழ்ந்து வந்து விட்டனர். குமாரசாமி யிடம் நீங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். அவரோ முதலும் கடைசியும் நீ தான் என் மனைவி நீ ஏதாவது தவறாக முடிவு எடுத்து என்னை விட்டுச் சென்றாய் என்றால் என் மூச்சு அந்த நிமிடமே நின்று விடும் என்று சொல்லியதால் தான் அவரும் தன் கணவரிடம் எதுவும் சொல்ல வில்லை.
அதனால் பெற்றால் தான் பிள்ளையா? ஊரில் இருக்கும் மற்ற குழந்தைகள் தங்கள் குழந்தைகளாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். அது தான் திருமணத் தரகர் வேலையைக் கூட செய்து வருகிறார்.
கமலா உன் பாச மழையில் இன்னும் எத்தனை நேரம் தம்பியைப் பிடித்து வைத்து இருப்பாய்? அவரும் அவுங்க வீட்டிற்கு போக வேண்டும் தானே. அவரும் வீட்டில் சொல்லிட்டு வந்தாரோ? இல்லையோ? என்று சொல்ல.
ஆமாம் சாமி உனக்கு நேரமாகுது பார் என்று கூறியவர் அப்போது தான் தேனருவிக்கு எடுத்து வந்த புடவையை எடுத்துப் பார்த்தவர்.
மஞ்சள் கலரில் சிவப்பு அகலப் பார்டர் வைத்த இருந்த சேலையைப் பார்த்தவர். அருமையாக இருக்கிறது. நான் ப்ளவுஸ் தைத்து விடுகிறேன் என்று சொன்னார்.
உள்ளேயே ரெடிமேட் ப்ளவுஸ் இருந்தது. அதைப் பார்த்தவர் பரவாயில்லை தம்பி ப்ளவுஸ் கூட
எடுத்து வந்து விட்டீர்களா? ஆமாம் இப்போது தான் புடவையோடு எல்லாமுமே கிடைத்து விடுகிறது. பரவாயில்லை தேனருவி கொஞ்சம் வெள்ளந்தியான மனசு சூதுவாது எதுவும் தெரியாது
படபடனு பேசுமே தவிர நல்ல பெண் அவளை நீ நல்லா பார்த்துக் கொள்வாய். எத்தனை பேர் கட்டிக்கப் போகும் பெண்ணுக்கு சேலை எடுத்து கொடுப்பார்கள். பரவாயில்லை சாமி ,நான் எடுத்துக் கொண்டு போய் கொடுத்து விடுகிறேன்.
அப்புறம் தம்பி நானே உங்கள் அண்ணாவிற்கு அழைத்துச் சொல்லி விட்டேன். கோவிலுக்கு வேண்டாம். வீட்டிற்கே வாருங்கள் என்று கூறிவிட்டேன். அதனால் நாளைக்கு தான் நீங்கள் அங்கே வருகிறீர்கள் இதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் வந்ததை அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டாமே அவர்கள் ஏதாவது தவறாக தேனருவி யைப் பேசி விடுவார்களோ? என்று தான் மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.
சரிங்க அப்பா நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். ஆனால் தேனருவி வீட்டில் இருப்பவர்கள் சொல்லி விட்டால் அதுவும் பூவிழி தான் டேஞ்சரான ஆளு..
அவன் கூறியதும் தான் தாமதம் பூவிழி தன்னிடம் சொன்னதை நினைத்துச் சிரித்தவர். அதை அவ்விடத்தில் சொல்லவும் செய்தார். எதுக்கும் நான் அவளிடமும் சொல்லி விடுகிறேன். நீங்கள் நாளைக்கு இத்தனை மணிக்கு நல்ல நேரம் வந்து விடுங்கள் என்று கூறினார்.
இருவரிடமும் விடை பெற்றவன். தனது என்பீல்டு எடுத்துக் கொண்டு சந்தோச மிகுதியில் விசில் அடித்துக் கொண்டே சென்றான்.
தன் தோட்டத்திற்குச் சென்று அங்கு தோப்பு வீட்டில் கயிற்றுக் கட்டிலில் படுத்தவன் அந்தவளுக்கு அழைத்தான்.
தேனருவி சோர்வாக படுத்து இருந்தவள். போன் அடிக்கவும் தான் எழுந்து போனை எடுத்துப் பார்த்தவள். தேவ் ஆனந்த் வீடியோ காலில் மறுபடியும் வர இப்போது கதவை தாழ் இட்டவள் போனை அட்டன் செய்தாள்.
அதே கலைந்த தலை தான் அவன் அழைக்கிறான் என்று அழகு படுத்திக் கொள்ளவே இல்லை. இயல்பாக எப்படி இருப்பாளோ? அப்படியே தான் இருந்தாள். அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவனே பேசட்டும் என்று தான்.
பேசுடி என்று அவளைப் பார்த்துக் கூறினான். அவள் அதற்கும் பதில் பேசாமல் இருக்கவும் தான்
அவனுக்கு இன்னும் அவள் தான் நாளைக்கு தான் பார்க்கப் போகும் பெண் என்பது தெரியாது என்று உணர்ந்தவன். சரி சொல்லி விடலாம். இப்படியே அழுது கொண்டே இருந்தாள். நாளைக்கு முகம் வீங்கி கண்கள் சிவந்து நல்லாவே இருக்கமாட்டாள். அப்புறம் நம் வீட்டில் எப்படி பிரச்சினை செய்யலாம் என்று சுத்திக் கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கும் அல்வா கையில் கொடுத்தது போல் ஆகி விடும் என்று நினைத்தவன்.
பொண்டாட்டி நீ ரொம்ப மோசம் போடி நான் பேசிக் கொண்டு இருக்கும் போதே நீ மயக்கம் போட்டு விட்டாயே நான் என்னமா? துடித்துப் போய் விட்டேன் தெரியுமா?
அவள் அதற்கும் எதுவும் பேசாமல் மௌனமாக அவனையே பார்த்தாள்.
நாளைக்கு பெண் பார்க்கப் பொண்ணு யார் என்று தெரியுமா? அவளை உனக்குத் தெரியும். நீ அவளை சிறுவயதிலிருந்தே பார்த்து இருக்கிறாய்? என்று பீடிகை போட்டான்.
அதில் புருவத்தை சுருக்கி யோசித்தாள். அவளுக்கு அவளுடைய இப்போதைய தோழிகள் எல்லாம் கல்லூரியில் பழக்கமான வர்கள் தான் அதுவும் இவளின் வாயாடித் தனத்தால் ஈர்க்கப் பட்டவர்கள் தான்.
மலர்க்கொடியோ? இல்லை சில்பாவோ? என்று தாறுமாறாக சிந்தித்தவள் தேங்கிய கண்ணீரை உள்ளிழுத்தவளின் மூக்கு உறிஞ்சவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன்.
அச்சோ என் பொண்டாட்டி சரியான மக்கு என்று தெரியாமல் நான் க்ளு கொடுக்கிறேன் பாரு என்று அடியே கிறுக்கி அது நீ இப்போது போய் கண்ணாடி முன் நில்லுடி என்று அவன் சத்தம் போடவும்.. தன்னைக் குனிந்து பார்த்தவள் தன் தலை களைந்து இருப்பதால் தான் தலையைச் சீவ சொல்வானோ? என்று அதற்கும் தவறாகவே நினைத்தவள்.
கண்ணாடி முன் போய் நின்றாள். சரி பொண்டாட்டி இப்போது உனக்கு எதிர்க்க ஒருத்தி தெரிவாள் பாருடி அவ தாண்டி நான் நாளைக்கு பார்க்கப் போகும் பெண் என்று ஒரு வழியாக கூறி முடித்தான்.
அதைக் கேட்டவள் உடனே கதறி அழுதாள்.. ஆனந்தத்தில் தன் காதல் கருகி விடாது.. என்று நினைத்தவள் கண்ணாடி முன் நின்று கொண்டே எகிறி குதித்தாள். அவளையே அலைபேசியில் ஒருத்தன் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறந்து அவள் குதிக்க அவளின் குதித்தல் அவனுக்குத் தான் எகிறியது மனசு.
என்ன இருந்தாலும் அவனும் ஆண் மகன் தானே அய்யோ? கொல்றாலே இந்தக் குதி குதிக்கிறாள். அவளுக்கு இன்னமும் அவன் லைனில் இருக்கிறான் என்பதை மறந்தவள். அச்சோ ? வாத்தி மாம்ஸ் செம நீ தானா? அது நீ தானா? என் இதயத்தை களவாண்டன் தான் என்னையும் களவாடும் கண்ணாலனா? என்று வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியவள் தான் போட்டிருந்த
தாவணி பாவடையில் சுற்றி சுற்றி இப்போது தனது அழகைப் பார்த்தாள்.
அவளே அவளின் முகத்தை மூடிக் கொண்டு கண்ணாடி முன்பு கொஞ்சம் கொஞ்சமாக கையை விலக்கி அவளின் முகத்தைப் பார்ப்பதும் பின் வெட்கிச் சிரிப்புதுமாக செய்து கொண்டு இருந்தாள்.
அவள் செய்த சேட்டைகளை பார்த்து சிரித்தவன். இனிமேல் அவள் எல்லை மீறும் முன் அடியே
பொண்டாட்டி நான் இன்னும் லைனில் தான் இருக்கிறேன் என்று சொல்லவும் தான் தேனருவிக்கு தான் இத்தனை நேரம் அவன் கூட பேசாமல் வீராப்பாக இருந்து விட்டு இப்போது தான் செய்த அலப்பறைப் பார்த்து அவன் என்ன நினைத்து இருப்பான் என்று அவளும் அவள் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ளத் தான் நினைத்தாள். ஆனால் அதற்கு அவள் மனது ஒத்துக் கொள்ள வேண்டுமே.
என்னடி பொண்டாட்டி உன் முகத்தில் சிவப்பு கூடிப் போச்சு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. கமலா அம்மா கொடுப்பாங்க அதைத் தான் நீ நாளைக்கு போட வேண்டும்டி பொண்டாட்டி என்று கூறியவன். அவள் கூட நீண்ட நேரம் பேசிவிட்டு தான் போனை வைத்தான்.
தொடரும்...