Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 293
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 24
பாகம் - 24
தேவ் ஆனந்த் யசோதாவிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்று நினைக்கையில் பூவிழி
இருங்கள் சார் வந்து விட்டு எதுவும் சாப்பிடாமல் செல்கிறீர்கள். ஜூஸ் மட்டுமாவது குடித்து விட்டு செல்லுங்கள் என்று தன் தாய் போட்டு வைத்து இருந்த லெமன் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
பூவிழி எதுக்குமா? என்னை அவசரமாக வரச் சொன்னாய்? என்று தரகர் குமாரசாமி கேட்டுக் கொண்டு வந்தார்.
மாமா சார் தான் உங்கள் வீட்டிற்கு வருவதற்கு வழி தெரியவில்லை என்று இங்கே வந்து விட்டார். என்று கூறியவள் நான் இவரைத் தான் சொன்னேன் என்று தன் தாய் மற்றும் தேவ் ஆனந்த் இருப்பதால் அடக்கி வாசித்துக் கொண்டு இருந்தாள்.
குட்டிச் சாத்தான் கோர்த்து விட்டாளே. அவரைப் பார்த்தால் காட்டான் போல் இருக்கிறது. இப்போது எப்படி இவரிடமிருந்து தப்பிப்பது. அடேய் தேவ் ஆனந்த் உனக்கு வந்த சோதனை பாரேன். அவளிடம் உண்மையைச் சொல்லி இருந்தால் இத்தனை லோல் பட வேண்டியதில்லையே.
சரி எதற்கும் சிரித்து வைப்போம் என்று தரகரைப் பார்த்து சிரிச்சு வைத்தான்.
அவர் தேவ் ஆனந்த் பார்த்ததும் புரிந்து கொண்டார். அடடே தம்பி உங்களை நான் வரச்சொன்னேன் தான் ஆனால் வீட்டின் அட்ரஸ் சொல்ல மறந்து விட்டேன். சரி இருங்கள் தம்பி..
என்னம்மா தங்கச்சி நான் காலையில் ஒரு சம்பந்தம் கொண்டு வந்தேனே என்று அவர் பேச ஆரம்பிக்கும் போதே தேனருவி தேவ் ஆனந்த் முகத்தைப் பார்க்க.. அவனுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு எதுவுமே தெரியாதவன் போல் அமர்ந்து விட்டான்.
பூவிழி தான் எங்கே மாமா எல்லார் முன்னும் தான் சொன்னதைச் சொல்லிக் கோர்த்து விடுவாரோ? யசோதா கையில் கரண்டியை வைத்துக் கொண்டு துரத்துவது போல் நினைத்துப் பார்த்தவள் இப்போது தான் ஏதோ படிக்க நியாபகம் வந்தவள் போல் அறைக்குள் போகப் பார்த்தாள்.
பூவிழி சமானங்கள் எல்லாம் கழுவாமல் இருக்கிறது. போய் கழுவி வை என்று சொன்ன யசோதா!!.. தேனருவி போம்மா வீட்டிற்கு பின் புறம் துணி காயப்போட்டு இருக்கிறேன் எல்லாம் எடுத்து வா என்று அனுப்பி விட்டு.. இப்போது குமாரசாமி யைப் பார்த்து இப்போது சொல்லுங்கள் அண்ணா எதுவோ? சொல்ல வந்தீங்க.
தங்கச்சிமா இவர் யார் என்று தெரிந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய். நான் தான் இவரின் அண்ணாவிடம் காலையில் ஒரு ஜாதகம் கொடுத்தேனே அந்த மாப்பிள்ளை போட்டோ வேண்டும் என்று கேட்டு இருந்தேன்.
ஓ.. அதைக் கொண்டு வந்து கொடுக்க வந்தார். இவர் மாப்பிள்ளைக்கு உறவுங்களா??
இல்லைமா? அது என்ன தான் மாப்பிள்ளை போட்டோ செல்லில் பார்த்தாலும் நேரில் போட்டோ பார்ப்பது போல் இருக்குமா? அது தான் இந்தக் காலத்தில் என்னனெம்மோ? செய்கிறார்களே.. அது தான் கிராபிக்ஸ் அது மாதிரி பொருத்தமே இல்லாத மாதிரி அழகா காண்பித்து விடுவார்கள் அது தான் நான் உங்களுக்கு மாப்பிள்ளை போட்டோ கொடுக்கவில்லை என்று அவரிடம் கேட்டேன் அது தான் கொடுக்க வந்து இருப்பார்.
சமீபத்தில் போட்டோ எதுவும் எடுக்கவில்லை அது தான் நான் நேரிலே வந்து விட்டேன் என்று தேவ் ஆனந்த் கூலாக சொல்லவும் தான் யசோதாவிற்கு இப்போது தான் வந்து இருப்பது தான் மாப்பிள்ளை என்பது தெரிந்தது.
இத்தனை நேரம் யாரோ? எவரோ? என்று இருக்க இப்போது இவர் தான் வீட்டு மாப்பிள்ளை என்று தெரிந்ததும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
தம்பி வீட்டில் எல்லாரும் சவுக்கியங்களா? ஏதாவது விசேச வீட்டில் தான் பார்ப்பது அம்மா அப்பாவை நான் நினைச்சு கூடப் பார்க்க வில்லை. அவுங்க வீட்டிற்கு என் பொண்ணு கொடுப்பேன் என்று.. தம்பி நீங்க ஏதோ ஒரு வாத்தியாருனு பூவிழி சொல்லவும் தான் வீட்டிற்குள் விட்டேனுங்க மத்தபடி எங்கள் வீட்டிற்கு உள்ளே வருவது என் அண்ணா இவர் மட்டும் தான் தப்பாக எடுத்துக்காதீங்க தம்பி என்ன இவுக இப்படி பேசிப் புட்டாங்கனு..
அதெல்லாம் நான் எதுவும் மனசிலே வைச்சுக்கிலீங்க.. நான் இங்கே வந்தது கூட வீட்டில் யாருக்கும் தெரியாது ங்க.. நான் டவுனுக்கு போய் போட்டோ எடுத்துக் கொண்டு வந்து தான் தரகர் சாரிடம் கொடுக்க வரலாம் என்று தான் கிளம்பி வந்தேனுங்க. அப்புறம் தாங்க நாளைக்கு நேரில் பார்க்கும் போது தெளிந்து கொள்ளட்டும் சொல்லிட்டு போலாமுனுங்க தரகர் வீட்டைத் தேடி அலைஞ்சேனுங்களா?
அப்படி அட்ரஸ் கேட்க வந்தா பூவிழி கதவைத் திறக்கவும் தான் நம் வகுப்பு தேனருவி தங்கச்சி என்று தெரிந்து தானுங்க நானும் வூட்டுக்குள்ளே வந்தேனுங்க.. நீங்களும் என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க.. நான் உங்களை அத்தைனு கூப்பிடட்டுங்களா? என்று அங்கே ஒரு கேள்வியை வைத்து தொக்கி நிற்க..
அதனால் என்னங்க தம்பி சுத்தி சுத்திப் பார்த்தா ஒன்னுக்குள்ளே ஒன்னு சொந்தக்காரர்கள் ஆகி விடுவோம். அத்தையினு கூப்பிடுவதற்கு போய் அனுமதி கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க. இதோ பேசிட்டு இருங்கள் அண்ணா கூட நிமிசமா கேசரி செஞ்சு விடுகிறேன் என்று சமையல் அறைக்குள் சென்றவரை.. அதெல்லாம் நாளைக்கு பார்த்து செஞ்சுப்புடுங்க இன்னைக்கு எதுக்கு நாளைக்கு காலையில் எப்படி இருந்தாலும் இங்கே தானே வரப் போகிறோம். என்று அவரிடம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு தரகரிடமும் விடைபெற்று இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்து கொண்டு நேராக அவன் சென்றது புடவை எடுக்கத் தான் அங்கே கடை முன் சென்று நின்று கொண்டு அவளுக்கு எந்தக் கலர் சூப்பரா இருக்கும்.
முதன்முதலாக எடுக்கப் போகிறேன் மஞ்சள் கலரில் பட்டுப்புடவை எடுக்கலாம் என்று
மாம்பழக் கலரில் சிகப்பு பார்டர் வைத்த அகலப் பார்டர் ஒரு சைடு மட்டும் இருக்க அதை எடுத்தவன்.
( தேவ் ஆனந்த் நீயா ரொம்ப ஆட்டம் போட்டு கடைசியில் ஆப்பு வைத்துக் கொள்ளாதே டேய் நாளைக்கு நீ யாரைக் கேட்டு உன் வருங்கால மாமியாரிடம் வீட்டிற்கு வருகிறோம் என்று சொல்லி விட்டு வந்தாய். ஆனால் கோவிலில் சென்று பார்க்கலாம் என்று தானே உன் அம்மா அப்பா சொன்னார்கள். நீ என்னமோ நாளைக்கே நிச்சயம் செய்பவன் போல் புடவை எல்லாம் எடுக்கிறாய்? ராசா போதுமடா இதையே நீ யாருக்கும் தெரியாமல் உன் அறையில் கொண்டு போய் பூட்டித் தான் வைக்கப் போகிறாய்?)
( அதெல்லாம் தெரியாது ரைட்டர் ஜி நாளைக்கு அவள் இந்தப் புடவை தான் கட்டிக் கொண்டு வரவேண்டும் என்று வம்படியாக இந்த ரைட்டர் மண்டையைக் கழுவி விட.
சரி சரி அதுக்கு ஏதாவது வழி செய்கிறேன். இல்லாட்டி ரைடர்ஸ் என்னை கைமா செய்து விடுவார்கள்.)
புடவை எடுத்தாச்சு இப்போது இதற்கு மேட்சாகப் போடுவதற்கு ப்ளவுஸ் வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்தவன் கடையில் இருந்த பெண்களிடம் சரி என்று குண்டுமில்லாமல்
ஒல்லியும் இல்லாமல் வேண்டும் என்று அவர்களையும் குழப்பி ஒரு வழியாக கும்மியடித்து அவர்களையும் பிறந்த நாள் காண வைத்து விட்டு வெளியே வந்தவன்.
அடுத்து என்ன வாங்கலாம் என்று யோசிக்கும் போது.. அடங்கொப்பாரானே இவன் செய்வதைப் பார்த்தால் நம்மை குழி தோண்டி உள்ளே போடவைத்து விடுவானோ? என்று வடிவேல் போல் இதுக்கே மூச்சு முட்டுதே.. நிழலு நீ எங்கே இருக்கிறாய்?
வந்து காப்பாத்து என்று ரைட்டர் ஜி புலம்பிக் கொண்டு அவன் பின்னால் சென்று கண்ணு போதுமடா உன் விளக்கம் எல்லாம் கேட்டு அந்தப் புள்ளைக எல்லாம் ஒரு மாதத்திற்கு லீவு குடுங்க சாமி என்று கடையை விட்டு ஓடுதுகள்.. அது தான் அடுத்து நிச்சயம் கல்யாணம் எல்லாம் இருக்கிறதே அப்போது
பார்த்துக்கலாம்.
ஒருவழியாக தேவ் ஆனந்த் ஒத்துக் கொள்ள இப்போது இதை எப்படி அவளிடம் கொடுப்பது என்று யோசித்தவன். மறுபடியும் பூவரசங்கோட்டை தான் சென்றான்.
அவனது வண்டி இப்போது தரகர் வீட்டின் முன் நிற்க அவரும் இது என்ன இந்த மாப்பிள்ளை தம்பி அங்கே சுத்தி இங்கே சுத்தி கடைசியில் இங்கேயே வந்து நிற்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டு வாங்க தம்பி என்று உள்ளே அழைத்தவர்.
வீட்டிற்குள் குரல் கொடுத்தார். இதே புள்ள கமலா மோர் கொண்டு வா நம்ம தேனருவிக்குப் பார்த்த மாப்பிள்ளை வந்து இருக்கிறார் என்று சொன்னதும்.
உள்ளே இருந்து வந்த கமலம் வாங்க தம்பி இப்போது உங்களைப் பற்றி தான் பேசிக் கொண்டு இருந்தோம்.
சார் நான் தேனருவிக்கு ஒரு புடவை எடுத்தேன். இதை அவளை நாளைக்கு கட்டிக் கொண்டு வரச்சொல்லுங்கள். நான் எப்படி அவர்களிடம் கொண்டு போய் கொடுப்பது. அது தான் இங்கே கொண்டு வந்து கொடுத்தேன். நீங்கள் தான் கொண்டு போய் கொடுக்க வேண்டும். ப்ளீஸ் என்று நிற்பவர் கூட அவர்களும் தான் என்ன செய்வார்கள்.
இது என்னடா இந்த வாத்தியோட வந்த ரோதனை என்று நான் நினைத்து இருக்க.. கமலா கொண்டாங்க தம்பி நான் எடுத்து வைத்து இருந்தது போல் கொடுத்து விடுகிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்.
நன்றிகள் அம்மா என்று தேவ் ஆனந்த் சொல்லி விட.. கமலாவிற்கு அடிவயிறே குளிர்ந்து விட்டது.
அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தேனருவி பூவிழி இருவரையும் தான் சிறு வயதில் இருந்து கொஞ்சி அந்த ஆசையைத் தீர்த்துக் கொள்கின்றனர்.
தேவ் ஆனந்த் அம்மா என்று சொன்னதும் வந்து அவனின் நெற்றி வழித்து திருஷ்டி எடுத்தவர் ராசா நல்லா இரு சாமி என்னை அம்மா என்று தானே அழைத்தாய் இனி அப்படியே சொல்லு சாமி என்று கண்ணீர் விடவும்.
அம்மா எதுக்கு அழுகிறீர்கள் என்று அவரின் கண்ணீரை துடைத்து விட்டான்.
குமாரசாமி கூட வெளியே சென்று விடுவார். ஆனால் வீட்டிற்குள் இருக்கும் கமலா தான் மனசுக்குள் இருக்கும் வேதனையை யாரிடமும் பகிராமல் அடக்கி வைத்தவர் இப்போது தேவ் ஆனந்த் அம்மா என்று அழைத்ததில் உருகி விட்டார்.
ஏஞ்சாமி இதுக்கு ப்ளவுஸ் இருக்குதா? என்று தெரியவில்லை சரி நான் தைத்து விடுகிறேன். அவளுடைய அளவு எனக்கு நன்றாகத் தெரியும் என்று புடவையைக் கவரில் இருந்து வெளியே எடுத்தவர்.
ரெடிமேட் ப்ளவுஸ் இருப்பதைப் பார்த்து அவனை ஆச்சரியமாக பார்த்தார். தேனருவி அதிர்ஷ்ட தேவதை தான் இந்த தம்பி நல்லா பார்த்துக் கொள்வார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று மகிழ்ச்சியாக சிரித்தார்.
தொடரும்...