• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
283
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 23


தேவ் ஆனந்த் அவனுக்கும் பெண் முடிவாகி இருக்கிறது நாளைக்கு பெண் பார்க்கப் போகிறோம் என்று விளையாட்டிற்குச் சொன்னதை நிஜம் என்று நினைத்து இத்தனை நாட்கள் தன்னைப் பொண்டாட்டி என்று ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி விட்டாரோ? என்று அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் அப்படியே மயங்கிச்
சரிந்தாள்.

ச்சை அவளே நாம் தான் மாப்பிள்ளை என்று தெரியாமல் அழுது கரைந்தவளை நாமும் சேர்ந்து நோகடித்து விட்டோமே
இப்போது அவள் மயங்கியதைப் பார்த்தும் அமைதியாக இருக்க முடியாதே என்று தான் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அவள் வீட்டிற்கே சென்று பார்த்து வரலாம் என்று வண்டியைக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டான்.

இந்த நிழலும் நிலுவை பழிவாங்கல் குறித்து அறிவதற்கு சென்று விட்டதால் பாவம் தேனருவி மயங்கியது தெரியவில்லை.

தேவ் ஆனந்த் அவள் வீடு இருக்கும் தெருவுக்குள் வந்ததும் அடி ஆத்தி ஒரு வேகத்தில் கிளம்பி வந்து விட்டோம். இப்போது என்ன சொல்லி அங்கே செல்வது என்று யோசித்தவன்.

யோசனை வந்தவனாக தரகர் வீட்டிற்கு வந்தவன் போல் வழி தெரியாமல் இவர்களிடம் சென்று வழி கேட்கலாம் என்று நினைத்து
தேனருவி வீட்டின் காலிங் பெல் அடிக்க.

பூவிழி கதவைத் திறந்தவள் தனது அக்காவின் க்ளாஸ் சார் நிற்கவும். அவளுக்கும் தெரியாது தேவ் ஆனந்த் தான் மாப்பிள்ளை என்று ஆனால் யசோதாவிற்குத் தெரியும் அவர் சமையலில் இருந்தார்.

சார் வாங்க என்று பூவிழி அழைக்கவும் ஓ இது உங்கள் வீடா நான் தரகர் வீடு என்று நினைத்து வழி மாறி வந்து விட்டேன்.

பரவாயில்லை சார் வாங்க அடுத்த தெரு தான் தரகர் மாமா வீடு நான் போன் செய்கிறேன் அவரே வந்து விடுவார் என்று அவள் அவனை உள்ளே அழைத்து அமர வைத்து விட்டு தனது தாயாரிடம் சொல்லச் சென்று விட்டார்.

எப்போதும் யசோ என்று அழைப்பவள் இன்று வாத்தியார் முன்பு தன் தாயை பெயர் சொல்லி அழைக்காமல் அம்மா என்று அழைக்கவும்.

இது என்னடி நீ என்னை அம்மா என்று அழைக்கிறாய்? ஆச்சரியமாக இருக்கிறது ஏதாவது பூதம் பேய் பார்த்து பயந்து விட்டாயா?

அம்மா வாயை மூடு என்று சைகையில் செய்ய அவர் புரிந்து கொள்ளவே இல்லை. ஏண்டி வாயாடி நீ என்னை எப்போதும் என்னவோ நீ தான் பெயர் வைத்தவள் போல் யசோ என்று கூப்பிடுவாய் இன்று அம்மா என்று கூப்பிடவும் தான் எனக்குச் சந்தேகம் வந்து விட்டது. அது தான் இது என் பொண்ணா இல்லை உன்னைப் போலவே வேற யாராச்சுமா? என்று பார்க்கிறேன்.

அம்மா ப்ளீஸ் மா எங்கள் வாத்தியார் வந்து இருக்கிறார்.

அவர் எதுக்கு வந்து இருக்கிறார். கலேஜில் ஏதாவது தகிடுத்தனம் செஞ்சு விட்டாளா? அது தான் அறைக்குள்ளேயே பம்மிட்டு இருக்கிறாளா? என்று தேனருவியைப் வசைபாட.

அவர் ஏதோ தரகர் மாமா வீட்டிற்கு வந்து இருக்கிறார் மா வழி தெரியாமல் நம் வீட்டிற்கு வந்து விட்டார். வேறு யாராச்சுமா இருந்தால் நான் எதுக்கு மா வீட்டிற்குள் விடப் போகிறேன். சார் மா எப்படி வாசலோடு தாட்டுவது என்று கூறிவிட்டு இப்போது தன் தாயைப் பார்த்தவள். அவர் சொம்பு நிறையத் தண்ணீர் எடுத்துக் கொண்டு வரவேற்க வரவும்.

சரி நீ போய் உன் அக்காவை எழுப்பி அழைத்து வாடி என்று கூறியவர் யார்? அந்த வாத்தியார் என்று பார்க்க வந்தவர். சின்ன வயதாக இருக்கவும் மனதில் எதற்காக வந்து இருப்பார் என்று நினைத்துக் கொண்டு வாங்க தம்பி என்று வரவேற்று குடிக்கத் தண்ணீர் கொடுக்கவும்.

அவனும் சிரித்துக் கொண்டே தண்ணீர் வாங்கிக் குடித்தவன்
நன்றி கூறிவிட்டு என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்க.

அப்போது பூவிழி தான் அம்மா அக்கா மயக்கத்தில் இருக்கிறாள் என்று சொல்லிக் கத்தவும் தான் யசோதா பதறியபடி என்னடி சொல்கிறாய்? காலையில் இருந்து வேலை செய்த களைப்பில் தூங்குவளாக இருக்கும்.

இல்லைம்மா எழுப்பினால் எழவில்லை அது தான் மா நான் வந்து தண்ணீர் எடுக்க வந்தேன் என்று பூவிழி சொல்ல. தேவ் ஆனந்த் உடனே யாருக்கு என்னாச்சு என்று பதற சார் தேனருவி தான் மயக்கத்தில் இருக்கிறாள் என்று கூறியதும்.

அத்தை நான் அவளைப் பார்க்கிறேன். நீங்கள் லெமன் ஜூஸ் போட்டு எடுத்து வாருங்கள் கொஞ்சம் சுகர் ஜாஸ்தியா?

யசோதா மகள் மயக்கத்தில் இருக்கிறாள் என்ற பதட்டத்தில்
அத்தை என்று தேவ் ஆனந்த் கூறியதைக் கவனிக்க வில்லை, ஆனால் பூவிழி தான் சார் எதுக்கு அம்மாவை அத்தை என்று சொல்கிறார் என்று வரவேற்பு அறையில் யோசித்துக் கொண்டு நிற்க.

கிடைச்ச அருமையான சந்தர்ப்பத்தை விடுவானா? தேவ் ஆனந்த் உடனே அவள் அறைக்குள் தண்ணீர் சொம்போடு ஓடி விட்டான்
அவன் உள்ளே சென்றதும் வாடிய கொடியாய்க் கிடந்தவளைப் பார்த்ததும் மனது பதைக்க அவளின் முகத்தைப் பார்த்து அந்த சிவந்த கன்னத்தில் ஒரு முத்தத்தை அவசரமாக வைத்தவன் அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

தன்னைச் சந்தேகம் கொண்டு விடக் கூடாது என்று அவன் வழக்கமாக அழைக்கும் ஹனிபால்ஸ் பொண்டாட்டி என்பதை ஒதுக்கி விட்டு தேனருவி இங்கே பாருமா என்று தான் அவன் அழைத்துக் கொண்டு இருந்தான். பின்னர் பூவிழி தன்னைக் கண்டு கொண்டு விட்டால் என்ன செய்வது? நான் வாய் தவறி அத்தை என்று சொன்னதை அத்தை கவனிக்கவில்லை ஆனால் சில்வண்டு தங்கச்சி சரியான வேக்காணம் போல்
இருக்கிறது. அது பார்வையே சொல்லுது உங்கள் பாசை எனக்குப் புரிந்து விட்டது.

அப்படீனா நம் வாத்திக்கும் அக்காவிற்கும் இடையில் ரயில் ஓடுதா? ஐய் இது செமயா இருக்குதே. நான் எல்லாரிடமும் பந்தா காண்பித்துக் கொள்ளலாம். எப்படியாவது சார் தான் எங்கள் அக்காவிற்கு மாப்பிள்ளையாக வரவேண்டும். நாம் இதை தரகர் மாமா மூலம் தான் டீல் பேச வேண்டும். ஆமாம் அவர் தானே ஒரு மாப்பிள்ளை கொண்டு வந்தார். அவரிடம் எப்படியாவது தேவ் ஆனந்த் சார் தான் மாப்பிள்ளையாக வருவதற்கு மாப்பிள்ளை மாற்றி விடும் வேலைக்கு உதவி வேண்டி நிற்கலாம்.

( அடியே அந்த மாப்பிள்ளையே இவன் தாண்டி. இதுக்குத் தான் இந்த தரகர் சார் மாப்பிள்ளை போட்டோ கொடுத்து இருக்க வேண்டும் என்று சொல்வது. பெண் போட்டோ மட்டும் வாங்கிச் சென்றீரே இப்போது இங்கே மிகப் பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. )

யசோதாவிற்கு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் தெரியும். ஆனால் தேவ் ஆனந்த் போட்டோ பார்த்தது இல்லை. அவனும் எந்த ஊர் என்று சொல்லவும் இல்லை.

யசோதா ஜூஸ் எடுத்து வந்தவள் பூவிழி தலையில் கொட்டி இங்கே என்னடி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு இருக்கிறாய்? அந்த சார் அவள் அறையில் இருக்கிறார். அங்கே சென்று அவருக்கு ஒத்தாசை செய்யலாம் என்று இல்லை.

அவருக்கு என்ன இருந்தாலும் அவர் ஒரு வழுசப் பையன் பயமாகத் தானே இருக்கும். பூவிழிக்கு உப்பும் புளியும் போட்டு விளக்க முடியாது என்று போகும் போக்கில் அவளது தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு உள்ளே சென்றார்.

தேனருவி அப்போது தான் மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு இவர் எப்படி இங்கே ஒரு வேளை இது கனவோ? என்று பிதுங்க பிதுங்க விழித்துக் கொண்டு இருந்தாள்.

தேனு என்னாச்சுடி எதுக்கு மயக்கம் போட்டு இருந்தாய்? காலையில் இருந்து உன்னை அதிகமாக வேலை வாங்கி விட்டேன் டி. இந்தா இந்த ஜூஸ் குடி என்று கையில் திணித்தார்.

தேவ் ஆனந்த் ஒரு ஓரமாக நின்று இருந்தான். இன்னமும் அவளுக்கு இவர் எப்படி இங்கே வந்தார். இவர் என்ன சொல்லி இருப்பார் அம்மாவிடம் என்று நினைத்துக் கொண்டு கீழ்க் கண்ணால் அவனைப் பார்க்க அவனும் உதட்டைக் குவித்துக் காண்பிக்க. உடனே அவளுக்கு புரை ஏறிவிட்டது.

பார்த்து மெதுவாக குடி என்று யசோதா தலையைத் தட்டி விட்டார்.

பூவிழி அதுக்குள் தரகர் குமாரசாமி யிடம் அழைத்துச் சொல்லி இருந்தாள். மாமா உங்களைத் பார்க்க எங்கள் வீட்டிற்கு எங்கள் சார் வந்து உள்ளார்.

என்ன? பூவிழி சொல்கிறாய்? உங்கள் சார் எதுக்கு என்னைப் பார்க்க உங்கள் வீட்டிற்கு வரவேண்டும். நேரே இங்கே தானே வரவேண்டும்.

மாமா அவர் வழி மாறி வந்து விட்டார். எனக்கு நீங்கள் தான் ஒரு உதவி செய்ய வேண்டும். அந்த சார் தான் எங்கள் வீட்டிற்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் எப்படி என் ஐடியா? எனக்கு நீங்கள் உதவித் தான் ஆகவேண்டும்.

அதெப்படி பூவிழி அவர் யார்? எந்த ஊர் என்று தெரியாமல் அவரை உன் அக்காவிற்கு மாப்பிள்ளையாக உன் அம்மாவிடம் சொல்வது.

மாமா நான் தான் சொல்கிறேனே அவர் எங்கள் கல்லூரியில் தான் பிரொப்சராக இருக்கிறார். நீங்கள் அவரை நேரில் பார்க்கலாம் வாங்க என்று அழைத்தாள். அவரோ இப்போது தான் சாப்பிட்டு விட்டு படுத்தார்.

அவருக்கு பூவிழியை எப்போதும் மிகவும் பிடிக்கும். அவள் சிறு வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட வேறு யாரிடமும் அதிகமாக ஒட்டாத பூவிழி குமாரசாமி அவரை மாமா என்று இயல்பாகவே அழைக்கத் தொடங்கி விட்டாள். அவள் இத்தனை தூரம் அழைக்கவும் தான் அவரும் இன்று காலையில் கொடுத்த ஜதாகப் பையனும் கல்லூரியில் தான் வேலையில் இருப்பதாக அவரின் அண்ணா சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு சென்றார்.

தேவ் ஆனந்த் இனிக் கிளம்பலாம் என்று யசோதாவிடம் சொல்லி விட்டு வெளியே வர..

பூவிழி சார் இருங்கள் உங்களுக்கு ஜூஸ் கொண்டு வருகிறேன் என்று சமையல் அறைக்குள் சென்றவள் தனது அன்னை போட்டு வைத்து இருந்த லெமன் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள். அதை மறக்க முடியாது என்று அதை வாங்கி பருகிக் கொண்டு இருந்தான்.

அப்போது பூவிழி எதுக்குடா என்னை அவசரமாக வரச் சொன்னாய் என்று கேட்டுக் கொண்டே தரகர் வந்து விட.

மாமா இதோ இவர் தான் உங்களைப் பார்க்க வந்தவர். வழி தெரியாமல் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார் என்று சொல்லவும்.

குட்டிச் சாத்தான் கோர்த்து விடுகிறாளே. என்று தேவ் ஆனந்த் இப்போது என்ன சொல்லி இவர்கிட்ட தப்பிக்கிறது என்று விழித்துக் கொண்டு இருக்கும் போதே. அவர் கண்டு கொண்டார் தேவகோட்டை ஜ மீன் மகன் தான் காலையில் கொடுத்த ஜதாகம் தான் என்று புரிந்து கொண்டவர்.. அடடே நான் தான் வரச் சொன்னேன் மா வரச் சொன்னேன் வழி சொல்ல மறந்து விட்டேன்.

சிவக்குமார் தன் தம்பி தேனருவி மேல் ஆசைப்படுவதும். ஆனால் பெரியவர்களுக்குத் தான் தெரிய வேண்டாம். உங்கள் மூலமாக வந்த வரனாக இருக்கட்டும் என்று சொல்லவும்.

தரகர் என்ன தான் பெரிய இடமாக இருந்தாலும். பையன் போட்டோ வாங்கிப் பார்த்து விட்டு தான் என்னால் இதற்கு ஒத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

அதனால் சிவக்குமார் தனது செல்போனில் தன் தம்பி போட்டோவைக் காண்பித்து அவனின் படிப்பு என்று அனைத்தும் சொன்னார். அதனால் இந்த சம்பதத்தை விடக் கூடாது. தேனருவி வீட்டிலும் ஆண்கள் இல்லை. நாம் தான் முன்னின்று நடத்தி வைக்க வேண்டும் என்று முடிவோடு காலையில் வந்து கொடுத்தார்.

பூவிழி அந்தக் கேப்பிலும் வந்து மாமா என்று சாடை காண்பித்து கொண்டு இருந்தாள். என் சாய்ஸ் எப்படி என்று??

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top