Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 283
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்

பாகம் - 22
பாகம் - 22
தேவ் ஆனந்த் தனது அறைக்குள் தேனருவி போட்டோவை எடுத்து வந்தவன் அவளைப் பார்த்துக் கொண்டு அலைபேசியை எடுத்தான்.
தேனருவிக்கு அழைக்கலாம் என்று செல்லை ஆன் செய்ய
அவளிடமிருந்து இருபதுக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் வந்து இருக்க. ஹனிபால்ஸ் எதுக்கு இத்தனை தடவை அழைத்து இருக்கிறாள். ஒரு வேளை அவளுக்கும் நாம் தான் மாப்பிள்ளை என்று தெரிந்து இருக்குமோ? அது தான் காதல் வளர்க்க அழைத்து இருப்பாளோ?
(அடேய் நீயாக முடிவு செய்தால் எப்படி அவளைக் கேட்டதால் தான் தெரியும். )
தேனருவி கடையில் இருந்து சோர்ந்து வந்தவள். தன் தாயிடம் சொல்லி விட்டு படுக்கையில் விழுந்தவள். தேவ் ஆனந்த் கூறிய
பொண்டாட்டி என்பதே திரும்பும் மனதில் வரவும் தான் அவனுக்கு அழைக்க நினைத்து அலைபேசியைக் கையில் எடுக்கும் நேரம் பூவிழி தேனுக்கா என்று வந்தவளைப் பார்த்து இவள் முன்னால் வேண்டாம் தெரிந்தால் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விடுவாள்.
நாம் இன்னும் நம் மனதில் இருப்பதை அவர்கிட்ட சொல்லவே இல்லை. அவரும் நிஜமாலும் நம்மை விரும்புகிறாரா? இல்லை சும்மா டைம் பாஸாக இருந்தால் எதையும் உறுதிப் படுத்தாமல் நாமாக ஒரு கற்பனையை வளர்த்திக் கொள்ளக் கூடாது.
பூவிழி எதுக்கு இப்போது ராகம் போடுகிறாய்? அக்கா நீ கடைக்குப் போனதும் நம் வீட்டிற்கு ஒருத்தர் வந்தார்.
யார்? சீக்கிரம் சொல்டி எருமை எனக்கு வெய்யில் போய் வந்தது ஒரு மாதிரி இருக்கிறது.
தரகர் தான் வந்தாரு.. வந்தவர் சும்மா இல்லாமல் உனக்கு ஒரு மாப்பிள்ளையும் செட்டாகி விட்டது. என்று சொல்லி விட்டு உன் போட்டோவை வாங்கி விட்டு போய் விட்டார்.
தேனருவிக்கு உடனே முகம் சோர்ந்து போனது. அவளுக்கு மனதும் சோர்ந்து விட்டது. தன் காதல் இப்போது தான் மொட்டு விட்டது அதற்குள் கருகி விட்டதேஎ ன்று தன் கண்ணில் நீர் கோர்க்க தன் தங்கை முன் அழுகவேண்டாம் என்று நினைத்தவள் அமைதியாக எண்ணச் சிதறல்களை உழலவிட்டு படுத்து இருந்தாள்.
பூவிழி பிறகு சொன்னது எதுவும் அவள் காதில் விழுகவில்லை. நீட்டி முழக்கிய பூவிழி அந்த மாப்பிள்ளை தேவ் ஆனந்த் தான் என்று சொல்லவில்லை. அவள் சொல்லி விட்டு போய்விட்டாள்.
தனது காதல் கருகி விட்டது என்று உழலன்றவள் தான் தேவ் ஆனந்த் அழைத்து விடயத்தை சொல்ல அழைக்க அவன் தான் வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்ததால் தெரியவில்லை.
அவளைத் தான் பெண் போட்டோ வைத்து பேசிக் கொண்டு இருந்தது பாவம் அவளுக்குத் தெரியவில்லை.
அழுதுகொண்டு படுத்து இருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். தேவ் ஆனந்த் அழைத்த ரிங் டோனில் எழுந்து அமர்ந்தவள். தன் கண்ணன் தான் அழைப்பது என்று ஏற்கலாம் என்று நினைத்து அழைப்பை ஏற்கும் நேரம் கட்டாகி விட.
உடனே இவள் அழைக்க. அவனும் அழைக்க.. இருவரும் அழைக்க பிஸி என்று வரவும் தான் தேவ் ஆனந்த் அவளும் தனக்குத் தான் அழைப்பாள் என்று அமைதியாக தனது செல்பேசியைப் பார்க்க
அப்போது வந்து விட்டது. அவளிடமிருந்து அழைப்பு முதல் ரிங்கிலேயே எடுத்துக் காதில் வைத்தான்.
ஹலோ என்று சொன்னது தான் தாமதம் பொரிய ஆரம்பித்து விட்டாள். போன் செய்தால் எடுக்க மாட்டீர்களா? ஒருத்தி உங்கள் நினைப்பாவே இருக்கிறாளே அவளுக்கு பேச வேண்டும் என்று தோன்றினால் அழைப்பாளே நாம் செல்போன் கையில் வைத்து இருப்போம் என்று உங்களுக்கு தோனவே தோனாதா? உங்கள் மனசில் என்ன தான் நினைச்சுக் கொண்டு இருக்கிறீங்க?
உன்னைத் தாண்டி இந்த மாமன் என் நேரமும் நினைத்துக் கொண்டு இருப்பேன்.
ம் ம்.. நான் நம்பிட்டேன் அது தான் தெரியுதே என்று பேசப் பேசவே அழுக ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு இப்போது அவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அதை எப்படி அவனிடம் சொல்வாள். இன்னும் காதலைக் கூட பரிமாறிக் கொள்ளவில்லை.
ஹனி அழுகாதேடி எதுக்குடி அழுகிறாய்? லூசு சொல்லிட்டு அழு.. இல்லாட்டி நேரே உன் அறைக்கே வந்து விடுவேன்.
அதைக் கேட்டு இன்னும் அழுதாள்.
தேவ் ஆனந்த் இவளுக்கு என்னாச்சு ஏன் அழுகிறாள்??
புஜ்மா ஏண்டா அழுதிட்டே இருக்கிறாய்? ஸ்டோரில் அந்தப் பையன்கள் பேசியதை நினைத்து அழுகிறாயா? அது தான் மாமா உன் பக்கத்தில் வந்து விட்டேன் தானே. நான் இருக்கும் போது உனக்கு ஒரு ஆபத்தும் வராது. சரியா? பயப்படாதே..
அவள் மறுபடியும் அழுது கொண்டே இருந்தாள். அவள் எப்படி சொல்வாள் இத்தனை பாசமாக பேசுபவன் அதுவும் உரிமையோடு பொண்டாட்டி என்று பேசுபவன் முன் எனக்கு மாப்பிள்ளை முடிவு ஆகி இருக்கிறது என்று அதையும் நினைத்து அழுக..
தேவ் ஆனந்த் இவள் எதுக்கு இப்படி அழுமூஞ்சியா இருக்கிறாள் என்று அழைப்பைத் துண்டித்து விட்டான். வீடியோ கால் பேச. ஆனால் தேனருவிக்குத் தான் தன்னுடன் பேச விருப்பம் இல்லை போல அதுக்குத் தான் போன் கட்டாகி விட்டதோ? என்று அதற்கும் அழுது கரைந்தவள்.. மறுபடியும் அலைபேசி அழைக்க உடனே வீடியோ கால் வாட்சாப்பில் வந்து விட்டான்.
தான் அழுதது அவனைச் சென்றதால் அவன் நம் முகத்தைப் பார்க்க நேரில் அழைத்து விட்டான் என்று செல்லையே பார்த்தவள் அட்டன் செய்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் முகம் முழுவதும் புன்னகையாக இருந்தது. அவனுக்குத் தெரியும் இவள் தான் தன் மனைவி மனதைத் திருடியவளையே தான் மணமுடிக்கப் போகிறோம் என்று ஆனால் அவள் எதற்காக இப்படி தேம்பித் தேம்பி அழுகிறாள் என்று நினைத்து ஒரு வேளை தான் தான் மாப்பிள்ளை என்று என்னைப் பிடிக்க வில்லையோ? அது தான் அழுகிறாளோ? நொடி நேரத்தில் கோபம் எட்டிப் பார்க்க.
ஹனிபால்ஸ் அந்த அளவிற்கு நினைக்கும் ஆள் இல்லை இப்போது தான் போன் செய்ததும் பொரிந்து தள்ளினாலே உங்க நினைப்பாக இருக்கிறேன். என்றுஅ வனின் மனசாட்சி சொல்லி விட அது தானே என்னைப் பிடிக்க வில்லை என்று சொல்லி விடுவாளோ? அப்படியே தூக்கிட்டு வந்து விடமாட்டேன்.
அவள் முகம் முழுவதும் வீங்கி
சிவந்து இருந்தது. ஏய் எதுக்குடி
அழுகிறாய்? நல்லாவே இல்லை உவ்வே என்று வாமிட் செய்வது போல் சொல்லவும்.
தேனருவிக்கு கோபம் வந்து விட்டது. என்ன? சொன்னீங்க என் முகத்தைப் பார்த்தாள் உங்களுக்கு வாந்தி வருதா? என்று அதுக்கும் ஒரு மூச்சு அழுக
ஏய் அழுவறதை நிறுத்துடி எதுக்குடி என்ன விடயம் எதுக்கு அழுகிறாய் சொல்லாமல் அழுது கொண்டே இருக்கிறாய்?
உங்களுக்கு என் மனசு படும் பாடு புரியவில்லை. நான் எதுக்கு அழுகப் போகிறேன். உங்களை இங்கே வைத்து இருக்கிறேன். என்று நெஞ்சில் தொட்டுக் காண்பிக்க.
எப்படி டி நான் எச்சோட்டு பையன் என்னை அந்த இடத்தில் வைத்து இருக்கிறேன் என்று சொல்கிறாய்? பார்த்தால் நான் வெளியேவே தெரியவில்லை. நான் வேண்டும் என்றால் நேரில் வருகிறேன் டி.. உன் நெஞ்சில்
பதிந்து கொள்கிறேன் என்று சொல்லவும்.
தேனருவிக்கு வெட்கம் வந்து விட்டது. உடனே முகம் சிவந்து விட்டாள். அதைப் பார்த்தவன் அந்த செம்மை பூசிய கன்னத்தில் ஒரு இச் வைக்கத் தோன்றிய எண்ணத்தை விடுத்து ஆமா எதுக்கு என் பொம்மி அழுதாளாம் என்று அவள் மறந்து இருந்த விடயத்தை மறுபடியும் நியாபகப் படுத்த. அவளுக்கு உடனே நீர் அருவி வந்து விட்டது.
அவனிடம் தனக்கு மாப்பிள்ளை பார்த்து இருப்பதை எப்படி சொல்வது என்று இருந்தவள். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம்..
என்னங்க.. நான் கடையில் இருந்து வந்தேனா? அப்போது பூவிழி வந்தாளா? அவள் வந்து என்னிடம் சொன்னது தான் என்று அழுக ஆரம்பித்து விட..
அவள் நீ அழுகிற மாதிரி என்ன சொன்னாள்?
எனக்கு மாப்பிள்ளை முடிவாகி இருக்கிறது என்று திக்கித் திணறி ஒருவாறாக சொல்லி முடித்து விட்டாள்.
இதுக்காடி அழுத.. நீ சந்தோசம் தானே பட வேண்டும். மாப்பிள்ளை யார் எந்த ஊர் என்று தெரியுமா? அவளை வம்பிழுக்கும் நோக்கில் கேட்க.
அவளுக்கு வந்த கோபத்திற்கு
அளவே இல்லை. ஏய்யா வாத்தி
உனக்கு கோபமே வரவில்லையா? நீ காதலிக்கும் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறாங்க என்று சொல்கிறேன். சிரித்துக் கொண்டு சந்தோசப் படச் சொல்கிறாய்?
என்ன? நீ என்னக் காதலிக்கிறாயா? சொல்லவே இல்லை. இது எப்போது இருந்து நீ சொல்லவே இல்லை எனக்கும் கூடத்தான் பெண் பார்த்து விட்டார்கள். நாளைக்குப் பெண் பார்க்கப் போகிறேன்.
தேவ் ஆனந்த் சொன்னதும் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள். தன் மனதில் ஆசைவார்த்தை கூறி ஒவ்வொரு தடவையும் பொண்டாட்டி என்று கூறிவிட்டு இப்போது அவனும் திருமணத்திற்கு சந்தோசமாக ரெடியாகி விட்டானே என்று அவன் சொன்னதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் அடைப்பது போல் இருக்க..
கண் சோர்ந்து மயக்கத்திற்குச் சென்றாள். அதை அவன் பார்த்து விட்டான். அச்சோ என்ன இப்படி ஆகி விட்டது. நான் சும்மா ஒரு பேச்சிற்குத் தான் சொன்னேன் அதுக்கே இப்படி மயக்கம் ஆகி விட்டாளே இப்போது என்ன செய்வது?
நாம் அவள் வீட்டிற்கும் போக முடியாது. எப்படி அவள் மயங்கியதை சொல்வது. சரி ஆனது ஆகட்டும் என்று இப்போது வண்டியை எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்பி இருந்தான். தேனருவியைப் பார்க்க.
இந்த நிழல் எங்கே போச்சு தேனருவிக்கு மனதில் இத்தனை வருத்தம் இருக்கும் போது என்று ரைட்டர் ஜி யோசித்துக் கொண்டு இருக்க..
நிழல் அந்த நால்வரையும் குளத்தில் தள்ளியது. அதற்கு பிறகு தான் அது கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று விட்டது.
நிழலுக்கு தனது கல்லறைத் தோட்டத்தில் புதிதாக ஒரு பிணம் வந்து இருக்க. அதுவும் அநியாயமாக விபத்து வேண்டும் என்றே விபத்து ஏற்படுத்தி அந்த உருவத்தை அழித்து நிழல் போல் சுற்ற வந்து இருப்பதைக் கண்டு அதன் சோகத்தைத் தெரிந்து கொள்ள அங்கே விரைந்தது.
நிழல் ஏற்கனவே பழிவாங்கச் சுற்றிக் கொண்டு இருக்க.. அது பழி வாங்க நினைப்பவர்களும்
இப்போது குளத்தில் விழுந்து இறந்தவர்களுக்கும் உள்ள சம்பந்தம் அனைத்தும் புதிதாக
இருக்கும் நிழல் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தான் இப்போது அங்கே செல்கிறது.
நிழலிடம் என்ன தான் ஒரு சக்தி இருந்தாலும். அது ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான்.. அது இங்கே தான் சுற்றிக் கொண்டு இருக்கும். கண்டிப்பாக அவர்களை பழிதீர்க்கும் நாளுக்காக காத்து இருக்கும் நிழல்..
தேவ் ஆனந்த் தேனருவியைப் பார்க்க அவள் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறான்? பார்க்கலாம் என்ன ஆகும் அடுத்த பதிவில்..
தொடரும்...