Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 281
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்

பாகம் - 21
பாகம் - 21
தேனருவியைக் கிண்டல் செய்த நால்வரையும் காரோடு கடத்திய நிழல் அவர்களை கல்லறைத் தோட்டத்தில் வைத்து நல்ல மொக்க அடியைக் கொடுத்து அவர்களின் காரைக் பெரிய குளத்தின் அருகில் நிறுத்தி விட்டு அருகில் இருந்த மரத்தில் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு இப்போது அந்தக் காரை தன் சக்தியைக் கொண்டு ஓட வைத்தது.
அது தாறுமாறாக ஓடியது. அந்த ஏரியின் தடுப்பை உடைத்துக் கொண்டு தண்ணீரின் உள்ளே பாய்ந்தது கார்.. அது சென்ற வேகத்திற்கு தண்ணீர் அடியில் சேறில் சிக்கிக் கொண்டது.
நிழலின் ஆட்டம் தொடங்கி விட்டது. ஆம் பெண்களை சூறையாட நினைப்பவர்கள் கதி இது தான் இனி மேல்.. நிழல் ஆவதிற்கு முன் என் வாழ்க்கையைச் சின்னா பின்னமாக்கிய நால்வரை மட்டும் பழிவாங்க வரவில்லை.
பெண் இனத்திற்கு எதிராக செயல்படுபவர்களையும் தான் கருவறுக்கப் போகிறேன். அவர்கள் கார் பிரேக் பிடிக்காமல் குளத்தில் விழுந்தது. இது தான் நாளைய செய்தி.. அது குளத்து தண்ணீரில் மூழ்கும் வரை அங்கு இருந்து விட்டு நிழல் உடனே தேனருவி இருக்கும் இடம் சென்று விட்டது.
தேனருவி பொருட்களை தன் வண்டியில் வைத்தவள் தன்னைக் கேலி செய்தவர்கள் வழியிலே வந்து பின்தொடர்வாகளா? என்று பயத்தோடு வண்டியை எடுக்க
அவளின் பயத்தை போக்கவே
தேவ் ஆனந்த் அவளுக்கு ஒரு பத்தடி கேப்பில் பின் தொடர்ந்தான்.
அதை சைடு மிரர் வழியாக பார்த்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டவளாக வண்டியை நிதானமாக ஓட்டிச் சென்றாள்.
அவள் அறியாதது நிழல் தனக்குத் துணையாக வந்து கொண்டு இருப்பது. அவளை மற்றவர்கள் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதால் தான் நிழல் அவளுக்குத் தெரியாமல் பின் தொடர்கிறது. நிழல் இருப்பது தெரிந்தால் அவள் அதோடு பேசுவாள்.
ஆனால் மற்றவர்கள் ஏதோ புத்தி பிசகி விட்டது என்று நினைத்து விடக் கூடாது என்று தான் இப்போது அவளுக்குத் தெரியாமல் பின்தொடர்கிறது.
அவளின் வீடு அருகில் சென்றதைப் பார்த்தவன். இப்போது தனது வண்டியை தனது வீட்டை நோக்கி செலுத்தினான்.
தேனருவி பொருட்களை எல்லாம் வீட்டின் உள்ளே எடுத்து வைத்தவள். அம்மா நீ சொன்ன பொருட்களை வாங்கி வந்து விட்டேன். எனக்கு டயர்டாக இருக்கிறது. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வருகிறேன் என்று அவள் அறைக்குள் சென்றவள் பெட்டில் படுத்துக் கொண்டு முதல் வேலையாக அலைபேசியை எடுத்தவள் தேவ் ஆனந்த்க்குத் தான் அழைத்தாள்.
பூரா ரிங் ஆகியும் அவன் எடுக்கவில்லை. அவன் ஹாலில்
இருந்ததால் அவள் அழைப்பை எடுக்க இயலவில்லை. அதுவும் இல்லாமல் அவனின் அம்மா அப்பா அண்ணா அண்ணி என்று குடும்பம் முழுதும் வரவேற்பு அறையில் தான் இருந்தனர்.
அவனின் கல்யாண விடயம் தான் பேசிக் கொண்டு இருந்தனர்.
இருவரது ஜாதகமும் ஒத்து போய் இருப்பதால் நாளைக்கு பெண்ணைப் பார்த்து விடலாம். பிடித்து இருந்தால் மேற்கொண்டு பேசி முடிவு செய்யலாம்.
அப்படீனா நாளைக்கு பெண்ணை கோவிலில் வைத்து பார்த்துக் கொள்ளலாம்மா என்று சிவக்குமார் சொல்லவும்.
பெண்ணோட போட்டோ கொடுத்து இருக்கிறார்கள் என்று தரகர் கொடுத்துச் சென்ற தேனருவியின் புகைப்படம் அடங்கிய கவரை இப்போது தன் தாய் தந்தையிடம் சிவக்குமார் காண்பிக்க.. அவர்கள் இருவருக்கும் தேனருவியைப்
பிடித்து விட்டது.
பொண்ணு அழகாக இருக்கிறாள். என்ன படித்து இருக்கிறாள். என்று கிருஷ்வேணி கேட்க.
அம்மா பொண்ணு இன்னும் படிப்பை முடிக்கவில்லை. இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. அதற்கு பிறகு தான் நாம் திருமணத்தை வைக்க முடியும்.
அதனால் என்ன தம்பி பெண்ணைப் பிடித்து பிறகு மண்டபம் பார்த்து பத்திரிக்கை ஜவுளி இது எல்லாம் செய்ய நாள் ஆகுமா? அதற்குள் பெண்ணும் படிப்பை முடித்துக் கொள்ளட்டும்.
பிறகு கண்ணாலத்திற்குப் பின்னால் படிக்கப் போக முடியுமா? அது நம் குடும்பத்திற்கு செட்டாகுமா??
அதை நாம் இப்போது பேசமுடியுமா? இதுக்குத்தான் மாமா என் தங்கச்சி படிப்பையே முடித்து விட்டாள். அவளையே மணமுடித்து விடலாம் என்று நான் சொல்கிறேன். உங்களுக்கு யாருக்கும் புரியவே மாட்டீங்குது.
எது புரிய மாட்டீங்குது வானதி உங்கள் வீட்டிலிருந்து ஒரு பெண் நீயே போதும் இவனுக்கு வேறு பொண்ணா கிடைக்க மாட்டார்கள் என்றால் கூட உன் தங்கை வேண்டாம். ஏன் விஜயலதா உன் தங்கச்சி சுனைனா வும் வேண்டாம். நாங்கள் புது சம்பந்தி தான் தேடுகிறோம்.
அத்தை அதுக்கு இல்லைங்க சொந்தம் போல் வருமா? இதே நான் இங்கே இருப்பதால் என் தங்கையும் இங்கே வாழ்க்கைப்பட்டு வந்தால் கடைசி காலத்தில் என் அப்பா அம்மா இரண்டு பேரும் இங்கே வந்து தங்கிக் கொள்வார்கள். இரண்டு பெண்ணும் ஒரே இடத்தில் வாழ்க்கைப் பட்டு இருப்பதால் அவர்களுக்கும் கூச்சம் இருக்காது அதுக்குத்தான் சொல்கிறேன் அத்தை.
அம்மாடி இப்போதும் உன்
அம்மா அப்பாவை நாங்கள் யாரும் இங்கே வந்து தங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தராளமாக வந்து மகள் வீட்டில் தங்கச் சொல் அது தான் இங்கே இத்தனை ரூம் இருக்கிறதே. நீங்கள் இரண்டு பேரும் சாப்பாடு ஆக்கிப் போட்டு உங்கள் அம்மா அப்பாவை நல்லா பார்த்துக் கொள்ளுங்கள் நாங்கள் யாரையும் வரவேண்டாம் என்று சொல்லவில்லை.
சிவக்குமார் தான் இவள் என்ன சொன்னாலும் அடங்க மாட்டாள் என்று நினைத்து கண்ணால் வாடி உள்ளே என்று சமிக்கை செய்து இப்போது அவனின் அறைக்குள் சென்றான்.
வானதி அறைக்குள் வரும் போதே பயந்து கொண்டு தான் வந்தாள். அவனுக்கு கோபம் அவ்வளவு சீக்கிரம் வராது வந்தால் ஆடித் தீர்த்து விடுவான்.
நான் அத்தனை சொல்லியும் அங்கே அனைவர் முன்பும் என் தம்பி தலையில் நீ மிளகாய் அரைக்கப் பார்க்கிறாயா?
உனக்கு என்னடி உன் தங்கச்சி இந்த வீட்டிற்கு மருமகள் ஆக வேண்டும் அவ்வளவு தானே. என அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான். அவன் சொல்ல வருவதை முழுதாக கேட்காமல் வானதி வாயை விட.
நல்லவேளைங்க நீங்கள் இப்போது வாவது புரிந்து கொண்டீர்களே எங்கே நான் பேசாமல் இருந்து இருந்தால் அந்த விஜி பேசி இருப்பாள். நான் வாயை மூடிக் கொண்டு இருந்து இருந்தால் உங்களுக்கு என் எண்ணம் புரிந்து இருக்குமா?
நீங்களே அத்தை மாமாகிட்ட பேசுகிறீர்களா? நான் பேசட்டுமா? இப்போதே என் அப்பா அம்மாவிற்கு போன் செய்கிறேன்.
ஓ போன் செய் அப்படியே உன் பெட்டியையும் மூட்டை கட்டி விடு என்று ஒரு மார்க்கமாக சிரித்துக் கொண்டு சொல்லவும்.
நான் எதுக்குங்க என் துணிகளை எடுத்துச் செல்ல வேண்டும். என்ன விளையாடுகிறீர்களா?
நீ தானே சொன்னாய்? உன் தங்கச்சி இந்த வீட்டில் மருமகளாக வேண்டும் என்று அது நிறைவேற வேண்டாமா? நீ இங்கே இருந்தால் எப்படி உன் தங்கச்சிக்கு கல்யாணம் ஆவது.
அவளுக்கு கல்யாணம் ஆவதற்கும் நான் வீட்டை விட்டு போவதற்கும் என்னங்க சம்பந்தம். உங்களுக்கு மூளை ஏதாவது குழம்பி விட்டதா??
உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை தானே அது என் தம்பியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை தானே நானே அவளை கல்யாணம் செய்து கொள்கிறேன். இப்போது சொத்து முழுதும் உன் கையில் தான் எப்படி வசதி அது தான் முதல் பொண்டாட்டி நீ இங்கே இருந்தால் அவள் எப்படி என் கூட சந்தோசமா வாழ்வா? அப்புறம் அது தான் அடுக்குமா??
வானதிக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. தன் புருசனா இப்படி பேசுவது. நான் என் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க வேண்டுமா? என் தங்கச்சிக்காக என நினைத்தவள். அவனின் சட்டையைப் பிடித்தாள்.
அவளின் கன்னத்தில் அறைந்தவன் உன் தங்கச்சி நான் என் தங்கச்சி மாதிரி தான் மனதில் நினைத்து இருந்தேன். உன்னுடைய கேவலமான புத்திக்கு உரைக்க வேண்டும் என்று தான் இவ்வாறு பேச நேர்ந்தது.
என் தம்பி பார்த்தால் உனக்கு என்னடி தோன்றுகிறது. உன் அப்பன் ஊரை ஏமாற்றி சேர்த்து வைச்ச சொத்துக்கு பந்தம் பிடிக்கும் வேலை செய்வான் நினைத்தாயா? என்னைப் பார்த்தால் பொண்டாட்டி முந்தானையைப் பிடித்துக் கொண்டு சுற்றுபவன் நினைத்தாயா?
இனி மேல் என் தம்பி வாழ்க்கையில் தலையீடு செய்ய மாட்டேன் சொல்லு நீ இங்கே இருக்கலாம். இல்லாட்டி உன் அப்பன் ஆத்தாளை வரச் சொல்கிறேன் கிளம்பிப் போடி.
பொட்டை மாதிரி பெண் குடுத்த இடத்தில் பெண்ணை அனுப்பி ஆம்பளை பிடிக்க அனுப்பி வைப்பவன் எல்லாம் எப்பேர்ப்பட்ட ஜென்மமாக இருப்பாங்க. நான் தான் ஏமாந்து விட்டேன். உன் தோலைப் பார்த்து ஆனால் உன் வெள்ளைத் தேலுக்குள் விசம் இருப்பது இன்றைக்குத் தெரிந்து விட்டது.
அந்த விசம் என்னோடு இருந்து இருந்தால் பரவாயில்லை ஆனால் என் குடும்பத்தில் பரவும் போது அதை கழுவரைக்க வேண்டும் டி
நீயே முடிவு செய்து கொள் டி.
திட்டி விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான். நல்லவர்களுக்கு நல்ல துணை அமைவது இல்லை.
சிவக்குமார் வானதி முதலில் நன்றாகத் தான் இருந்தார்கள். ஆனால் வானதியின் அம்மா வீட்டிற்கு சென்று வந்தாள் அவளின் பேச்சே மாறிவிடும்.
காளியாம்பாளையம் தான் வானதியின் வீடு அவளோட அப்பா குமாரசாமி பஞ்சாயத்து போர்டு தலைவராக இருக்கிறார்.
கமலா தான் வானதி சுனைனா இருவரின் தாய். குமாரசாமி ஊருக்குள் செலவு செய்கிறேன் என்று தரமில்லாத முறையில்
ரோடு போட்டு அதில் கூட ஊழல் செய்து சொத்து சேர்த்து வைத்து இருக்கிறார்.
முதலில் தெரியவில்லை தன் மாமனார் செய்த ஊழல்கள் தற்போது தான் கமிஷன் தகராறுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிந்தது. சரி அவர்கள் சொத்தே நமக்கு வேண்டாம் என்று தான் அவன் மாமனார் வீடு செல்வதே இல்லை. ஆனால் அங்கே இருந்து வந்தாலும் அவர்களை வெறுத்து ஒதுக்குவதும் இல்லை.
இது அனைத்தும் வானதிக்குத் தெரிந்தே அவள் இன்று அவ்வளவு தூரம் அனைவர் முன்பும் பேசி விட பொங்கி எழுந்து விட்டான்.
அவன் எதுவும் நடக்காதது போல் கரும்பு ஆலைக்கு சென்று விட்டான். தேனருவியின் புகைப்படத்தை கையில் வாங்கிக் கொண்டு தேவ் ஆனந்த் அவனது அறைக்குள் வந்தான்.
வந்தவன் செல்போனை எடுத்துப் பார்க்க ஹனிபால்ஸிடமிருந்து நிறைய அழைப்புகள் வந்து இருந்தது.
இவள் எதுக்கு இத்தனை தடவை அழைத்து இருப்பாள். ஒருவேளை நாம் தான் மாப்பிள்ளை என்று தெரிந்து விட்டதா?
தேனருவி கடையில் இருந்து சோர்வோடு படுக்கையில் விழும் முன் பூவிழி தான் அரைகுறையுமாக சொன்னால் உனக்கு மாப்பிள்ளை முடிவாகி இருக்கிறது என்று தரகர் வந்து அம்மாவிடம் கொடுத்துச் சென்றார்.
தேனருவிக்கோ? இப்போது தான் தன் காதல் மொட்டு மலர்ந்தது. அதற்குள் அது கருகி விடுமோ? என்ற பயத்தில் தான் அத்தனை தடவை அழைத்து இருந்தாள்.
தொடரும்...