• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
281
நீ உடல் நான் நிழல்🌚🌚
பாகம் - 20



கீர்த்தனா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வண்டியை நிறுத்தி விட்டு பையை எடுத்துக் கொண்டு கடைக்குள் சென்றாள்.


தேனருவி வருவதைப் பார்த்த தேவ் ஆனந்த் மனதில் அத்தனை மகிழ்ச்சி குத்தாட்டம் போட்டான் பின்ன இருக்காதா? நான் சொன்னதும் தாவணி போட்டு வந்து இருக்கிறாள்.


வந்தவள் ஒரு டிராலியை எடுத்துக் கொண்டாள். அவளும் தேவ் ஆனந்த் பார்த்து விட்டாள். வாத்தி இங்கே வந்து காத்திருக்கிறது. எம்புட்டு ஸ்பீடு
அங்கேயே உட்கார்ந்து கொண்டு நம்மையே பார்க்கிறாரே சுற்றிலும் எல்லாரும் பார்க்கிறார்களே என்ற கொஞ்சமாச்சும் மனதில் படுதா?

நேற்று தானே கல்லூரியில் பார்த்தாரு இப்ப ஏன் அவரு பார்வை ஒரு தினுசா இருக்கிறது.


இவள் அவனைப் பார்த்த சமயம் பொண்டாட்டி என்று வாயை அசைத்து இதயம் தொட்டு ஒரு ப்ளை கிஸ் அடிக்க, அவ்வளவு தான் தேனருவி ப்ளாட்.

அவள் கையில் இருக்கும் மளிகை லிஸ்ட் காற்றில் பறந்தது கூடத் தெரியவில்லை பயபுள்ளைக்கு தேனருவியைப் பார்த்து தேவ் ஆனந்த் தான் அந்தப் பேப்பரை எடுத்துக் கொண்டு டிராலியோடு அவளையும் அந்த இடத்தில் இருந்து நகர்த்தினான்.

தேனருவி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் லிஸ்டில் இருக்கும் பொருட்களின் பெயர்கள் பார்த்து அப்பொருள்களை எடுத்து டிராலியில் போட்டவன் இவள் இப்படி பார்த்து வைக்கிறாள் இனி நம்மால் முடியாது .

என்னமோ செய்கிறது இவள் பார்வை? என்று இடுப்பைப் பிடித்து கிள்ளி வைத்து விட்டான்.

ஏதோ வேறு ஜென்மத்திற்கு போய்ட்டு வந்தது போல் மூச்சு வாங்கியவள். அப்போது தான் நாம் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இருக்கிறோம்.

அடச்சீ தேனருவி நீ இத்தனை நேரம் மடச்சி மாதிரி அவரையே ஜொள்ளு விட்டாயே அவர் என்ன தான் நினைத்து இருப்பாரு.

அதிலெல்லாம் உன்னை ஒன்றும் நினைத்து இருக்க மாட்டார். அவருக்கு தெரிந்து இருக்கும். இந்நேரத்தில் தனது வீட்டார் முடிவு செய்த படி இன்று உன்னைப் பற்றி தெரிந்து தரகர் மூலமாக செய்தி பறந்து இருக்கும் செல்லக்கிளி.

என்ன? என்று புருவத்தை உயர்த்தவும்..

தேனருவிக்குத் தான் ஐயோ சாமி இந்தக் கண்கட்டு வித்தை தெரிந்த சாமி நம்மால் முடியாது என்னம்மா நம்மைக் கண்ட்ரோல் செய்கிறார். அவரை நிமிர்ந்து பார்த்தால் தான் வம்பு என்று ஓரவிழிப் பார்வை பார்த்தாள்.

எதிர்க்க ஆள் வர அவர்களுக்கு வழி விட வேண்டும் என்ற சாக்கில் தேனருவியைத் தன் நெஞ்சு அருகில் இழுத்து வைத்து விட்டான்.

தேனருவிக்குத் தான் பயம் வேறு யாராவது பார்த்து விட்டு தன் அம்மாவிடமோ? இல்லை தேவ் ஆனந்த் வீட்டிலோ? சொல்லி விட்டாள் என்ன செய்வது?

நம் மகள் காதலில் விழுந்து விட்டாள் என்று எந்தத் தாய் தான் விரும்புவார்கள். தான் தவறு செய்தால் அது தன் தங்கை வாழ்க்கையும் பாதிக்கும் என்பது எல்லாம் தன் கண் முன்னே வரவும். தான் இங்கே எதற்காக வந்தோம் அதை மட்டும் பார்ப்போம் என்று அவள் அவனிடமிருந்து தள்ளி நகர்ந்து சென்றாள்.

அதில் தேவ் ஆனந்த் இத்தனை நேரம் அமைதியாக இருந்தவள் இப்போது எதற்கு விலகிப் போகிறாள். என்று கோபமாக அவளைப் பார்க்க.. அவளோ? அவரிடம் கண்களால் இறைஞ்சினாள்.. ப்ளீஸ் என்னை திட்டாதீர்கள் இது பொது இடம் என்று தன்னைச் சுற்றிலும் பார்வையை சுற்றிக் காண்பித்தாள்.

தேனருவி சொன்ன பிறகு தான் செய்தது தவறோ? என்று உணர்ந்த தேவ் ஆனந்த் அவ்விடம் விட்டு அகன்று தன் நண்பன் அவனிடம் சென்று அமர்ந்து கொண்டான். அங்கே இருந்து சிசிடிவி யில் தேனருவியைப் பார்க்க.

டேய் மச்சான் இது நீ தானடா என்னால் நம்பவே முடியவில்லை. கார்த்திக் சொல்ல.

தேவ் ஆனந்த் வெட்கம் வந்து விட்டது. என்னால் அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை டா அது தான் வீட்டிலிருந்து கிளம்பி வந்தேன். ஆனால் எத்தேச்சையாக தான் அவள் இங்கே வந்தாள். நானே அவளை எப்படி பார்க்கிறது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அவளே வந்து விட
அது தான் அவளைப் பார்த்து விட்டு இது பொது இடம் என்று இங்கே வந்து விட்டேன். உன் கடை பெயர் கெட்டு விடக் கூடாது பார் அது தான் டா.

நம்பிட்டேன் மச்சான் நீ சொல்வதை உன் ஆளு முறைத்ததால் தான் இங்கே வந்து இருக்கிறாய்?

தெரிந்தவன் போல் பேசாதே..

ஆமாண்டா இப்போது தான் கிளி ஜோதிடம் பார்த்தேன் அதில் ஒரு பட்சி சொல்லுச்சு.. டேய்..டேய்.. சிசிடிவி இருக்கிறது என்பதை நீ மறந்து விட்டாயா?

அது தான் தெரிகிறது இல்லையா? அப்புறம் என்னதுக்கு என்னிடம் கேட்டுகிட்டு.

மச்சான் இப்போது தான் என் மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது. நம் செட்டில் எல்லாருக்கும் திருமணம் முடிந்து விட்டது. எங்கே நீ விஸ்வாமித்திரர் ஆகி விடுவாயோ? என்று தான் நினைத்தோம். ஆனால் உன் மனசில் ஆசை விதைச்சு இருக்கிறாங்களே அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆமா எங்கே கிளிக் ஆச்சு.

போடா எனக்கு வெட்கமா வருது. அவள் என் ஸூடண்ட்..

அட வாத்தி என்னடா சொல்கிறாய்? எப்போது இருந்து..

அவளுக்குத் தெரியாது டா அவள் கல்லூரியில் சேர்ந்த போதே அவளிடம் மனசு பறந்து சென்று விட்டது. அவள் அப்போது தான் கல்லூரி சேர்ந்து இருக்கிறாள் என்று என் மனசுக்குள்ளே புதைத்து விட்டேன்.

எப்படா ரீலிஸ் செய்தாய்?

இரண்டு நாட்கள் தான் மச்சான் ஆச்சு..

ஓஹோ? அது தான் நீ வெளிநாட்டு வேலை கிடைத்தும் கூட போகவில்லையா? நான் கூட குடும்பத்தை விட்டு பிரிஞ்சி போகப் பிடிக்கவில்லை வீட்டின் செல்லப்பிள்ளை கடைக்குட்டி சிங்கம் என்று நினைத்து இருந்தேன்.

தேனருவி பில் போடும் இடத்தில் தான் நின்று கொண்டு இருந்தால். அங்கே வந்த சில இளைஞர்கள் அவளின் தாவணி பாவடையில் பார்த்துக் கொண்டு சரியான நாட்டுக்கட்டை.. ஆனால் செம பிகருடா மச்சி அப்படியே அவள் அழகைப் பார்த்தா மூச்சு முட்டுது டா.. என்று அவன்கள் விசமமாகப் பேசுவது தேனருவிக்கு தர்மசங்கடமாக உணர்த்தியது. அது அவள் முகத்தில் தெரிந்ததும். அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு தெரிந்து விட்டது. அங்கே அவளுக்கு எதுவோ? அசௌகரியம் என்பதை உணர்ந்தவன் அடுத்த நொடி அவளின் அருகில் சென்றவன்.

தேனருவியைப் பாதுகாப்பாக தனது அருகில் நிறுத்தியவன். அந்தப் பையன்களைத் தான் முறைத்தான்.

டேய் இது புக்கான பிகர் போலவே. சாரி ப்ரோ உங்கள் ஆளு என்று தெரியாமல் பேசி விட்டோம் என்று நல்லவர்கள் போல் வெளியே வருவாய் தானே அப்போது இருக்கு உனக்கு ஆள் வைத்து மிரட்டுகிறாயா?

ஏன் எங்களைப் பார்த்தால் அவன் வந்தால் விட்டுக் கொடுத்து சென்று விடுவோம் என்று நினைத்தாயா? என்று கண்ணில் வன்மத்தை வைத்துக் கொண்டு வெளியே சென்றனர்.

தேனருவி உடனே தேவ் ஆனந்த் அவனுக்கு நன்றியைத் தெரிவித்து விட்டு இந்த நிழலுக்கு மட்டும் இவன்கள் என்னிடம் இப்படி பேசியது தெரிந்தது. அவன்களைப் போட்டு பந்தாடி இருக்கும்.

தேனருவிக்குத் தான் தெரியவில்லை. நிழல் ஏற்கனவே வந்து விட்டது. பூவிழி ஊஞ்சல் அதுவாகவே ஆடுகிறது என்று சொன்னதைக் கேட்ட நிழல் தேனருவியைத் தேடி வந்து விட்டது.

தேனருவியை தவறாக பேசியவர்களை சும்மா விடுமா? சுழட்டி அடிக்க வேண்டும் அல்லவா? அதனால் அவர்கள் காரில் ஏறி அமர்ந்து கதவைச் சாத்தியது தான் தாமதம் கார் தன்னப் போல் ஓட ஆரம்பித்தது. அவனுகளுக்குப் பயம் வந்து விட்டது.

டேய் கார் எப்புட்ரா சாவியே போடாமல் ஸ்டார்ட் ஆகி ஓடுகிறது.

அது தாண்டா எனக்கும் பயமாக இருக்கிறது. ஒரு வேளை இது ஆட்டோமேட்டிக் கார் போல் இருக்கிறது. அது தான் அதுவாகவே ஓடுது போல் இருக்கிறது.

சரி நாம் தான் அந்த தாவணி போட்டு இருந்த பெண்ணை எப்படி பிக்கப் செய்வது. அவளுக்காக வெயிட் செய்யலாம் என்று நினைக்கும் போதே கார் கிளம்பி விட்டது.

சரி மச்சான் விடுடா எப்படி இருந்தாலும் இந்த வழியில் தான் வருவா நாம் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவன்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்களின் கார் கல்லறைத் தோட்டத்தில் வந்து நின்றது.

டேய் இது என்னடா கார் சுடுகாட்டில் வந்து நிற்கிறது. எனக்குப் பயமாக இருக்கிறது.

நிழல் உடனே ஒரு சத்தம் எழுப்பி தன் சகாக்களை தான் அழைத்தது. அதன் குரல் கேட்டதும் நிறைய நிழல்கள் வந்தது. அதுகளிடம் அது பாசையில்.. எதுவோ சொல்ல அவைகள் அனைத்தும் அந்தக் கார்மீது தான் ஊர்ந்தது.

அதில் பயந்தவர்கள் அடக்கருமமே இனி நாம் தப்பிக்க முடியாத புதையில் வந்து சிக்கி விட்டோம். நம்பிக்கையே இல்லை நாம் இனி உயிரோடு இருப்பமா
என்ற நம்பிக்கை போச்சுடா.

ஒருத்தன் தலையைப் பிடித்து இரண்டு பக்கமும் ஆட்டி ஆட்டி விளையாண்டது ஒரு குட்டிச் சாத்தான்.

மற்றொருவனின் மூக்கைப் பிடித்து கொக்கி போல் இழுத்தது ஒரு பேய். மற்றொருவனை இரண்டு பேய்கள் கையை ஆளுக்கொரு பக்கமாக வேகமாக இழுத்து கரகவென்று சுற்றி வீசியதில் அவன் அங்கே இருந்த மரத்தில் போய் தலைகீழாக விழுந்தான்.

வெடிச்சிரிப்பு கேட்டது. ஹா ஹா ஹா ஹா ஹா என்று கல்லறைத் தோட்டம் முழுவதும். அந்தக் காரில் இருந்த நாலு பேரும் நாலு திசைக்கு தெறித்து ஓடினர்.

என்னடா இது வம்பா போச்சு. நாம் என்னடா தப்பு செய்தோம். அவளைத் தான் அப்படி பேசினோம் அதைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை. ஆனால் அவளைப் பேசினால் நமக்கு ஏண்டா இது போல் நடக்க வேண்டும்.

ஒருவேளை அந்தப் பெண்ணின் காதலன் இறந்து விட்டானோ? அவன் தான் ஆவியாகி தன் முன்னால் காதலியைக் காக்க வந்து விட்டானோ????

அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. இது எதுவோ? ஒரு மந்திர சக்தி போல் இருக்கிறது.

அனைவருக்கும் மொக்கை அடி அடித்து விட்டு இப்போது நிழல் தன் முழு உருவத்தை அவர்கள் முன் காட்ட அதில் அவர்கள் பயத்தில் கத்தினர். அவர்களை பழையபடி காரில் தூக்கிட்டு வந்து அவர்களது காரை இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பெரிய குளத்தின் அருகில் நிறுத்தி விட்டு நிழல் சென்று விட்டது.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top