Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 279
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 19

அம்மா அப்பா என்ற சிவக்குமார் தேவ் ஆனந்த் ஜாதகத்தை தரகர் கிட்ட கொடுத்தேன். அவரும் நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு ஜாதகம் ஒன்று இருக்குது கொண்டு வருகிறேன் என்று சொன்னார் .மா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
ஜாதகம் பொருந்தி வந்ததுன்னா மேற்கொண்டு பாத்திரலாம் ஏன் காலத்தை தள்ளிட்டு இருக்கணும் சரி அவர் வரட்டும்.
பெண்கள் நான்கு பேருக்கும் மனதில் தீ போல் எரிந்தது நாம் ஒன்று நினைத்தால் இவரு ஒன்னும் பண்ணிட்டு இருக்காரு என்று வானதி தன் கணவனை முறைத்துப் பார்த்தாள்.
தேவ் ஆனந்த் கூட ஒரு நிமிடம் அமைதியாக தன் அண்ணாவைப் பார்த்தான் இவர் என்ன நம்மகிட்ட எல்லாம் கேட்டு தெரிஞ்ச பின்னால் மறுபடியுமா? ஜாதகம் தரகர் என்று சொல்கிறாரே..!!இது பெரிய குழப்பமா இருக்குது அவரின் பேச்சு புரியாமல் தன் அண்ணாவைத்தான் பார்த்தான்.
அவனின் பார்வை புரிந்து எல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ கவலைப்படாதே என்பது போல் கண் ஜாடை காண்பித்தார்.
சாப்பிட்டு முடிந்ததும் தேவ் ஆனந்த் அம்மா நான் வெளியே போயிட்டு வரேன் .என்று கூறி தனது என்பீல்ட் சாவியை கையில் சுழற்றிக் கொண்டு வந்து தன் வண்டியை எடுக்கும் போது தன்னுடைய சில்லாஞ்சிறுக்கியை பார்க்க வேண்டும். என்ற ஆவலில் கிளம்பி விட்டான் பூவரசன் கோட்டையை நோக்கி.. அப்படியே செல் போன் எடுத்துக் காதில் வைத்தவன் அவளுக்கு தான் அழைத்தான்.
தேனருவி அப்போது குளித்து விட்டு வந்து இருந்தால். தனது செல் போன் திரையில் வாத்தி மாம்ஸ் என்ற பெயர் வரவும் ஐய்யோ? இவர் எதற்கு இப்போது அழைக்கிறார்.
ஒரு வழியாக கடைசி ரிங்கில் போனை எடுத்து விட்டாள். ஆனால் எதுவும் பேசவில்லை.
ஏண்டி போன் எடுக்க உனக்கு இத்தனை நேரமா? என்னடி மாமனை நினைத்து கனவு கண்டு கொண்டு இருந்தாயா? பொண்டாட்டி என்று வாயை விட்டான்.
தேனருவிக்கு அவனின் பொண்டாட்டி என்று அழைப்பதில் அருவி போல் சாரல் அடித்தாலும்
மனதில் பயமாகவும் இருந்தது. பழகி விட்டு கடைசியில் தன்னை விட்டு விட்டால் என்ன செய்வது என்று தான் உலகம் போகும் போக்கு அவளுள் பயத்தை ஏற்படுத்தியது.
சில்வண்டு என்ன? பதிலையே காணவில்லை லைனில் இருக்கிறாயா? இல்லை மூர்ச்சை ஆகிவிட்டாயா??
ம்ம் என்று மட்டும் பதில் சொன்னால்.
அவனுக்கோ கோபம் வந்து விட்டது. வாய்க்குள் என்ன கொலக்கட்டையா வைத்து இருக்கிறாய்? நான் எத்தனை ஆசையாக உன்னைப் பார்க்க வந்து கொண்டு இருக்கிறேன். நீ இப்படி எதுவுமே பேசாமல் இருந்தால் என்ன செய்வது?
என்ன? என்னைய எதுக்குப் பார்க்க வருகிறீர்கள்?
எல்லாம் ஒரு ஆசையில் தான் உனக்கு அந்த ஆசை இல்லையா?
அதுக்கு என்ன பதில் சொல்வது. அவளுக்கும் தான் அவன் முகத்தை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது. அதுக்காக அவர் வீட்டிற்கா கிளம்பி போக முடியும்.
நான் உங்கள் ஊரில் இருக்கும் நூலகத்திற்கு வருகிறேன். ஒழுங்கா அழகா தாவணி போட்டுட்டு மாமனை பார்க்க வாடி என்று தேவ் ஆனந்த் சொல்ல.
அச்சோ நீங்கள் நெசமாலுந்தான் சொல்லுகிறீங்களா? நான் கூட சும்மா விளையாட்டிற்கு சொன்னீர்கள் என்று நினைச்சேன். நான் இப்போது என் அம்மாவிடம் என்ன சொல்லிக் கொண்டு வருவது.
செம் வருது அதற்கு தேவையான புக் எடுக்க வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு வாடி. இல்லாட்டி நேரா உங்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும் கரும்பு தோட்டத்தில் வந்து உன்னைக் கடத்திட்டு போய் என்று அவன் சொன்ன தோணியில் அவள் சிரித்து விட்டாள்.
சிரிக்கிறாய் பாரேன். நீ கூட என்னை நம்பவில்லை. ஏன் நான் செய்ய மாட்டேனா?
ம்ஹூம் நீங்கள் அந்த அளவுக்கு மோசமானவர் இல்லை. என்னைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? . நான் திங்கட்கிழமை கல்லூரி வருவேன் அப்போது பார்த்துக் கொள்ளலாம் சார். நீங்கள் நினைப்பது போல் என் அம்மாவிடம் நினைத்த நேரத்தில் சொல்லி வெளியே வரமுடியாது.
யசோதா அழைக்கும் சத்தம் கேட்டது. தேனருவி மளிகை லிஸ்ட் எழுதி வைத்து இருக்கிறேன். போய் வாங்கிட்டு வந்து விடு.. அவர் அவளின் அறையின் வெளியே நின்று சொன்னது லைனில் காத்திருந்த தேவ் ஆனந்த் காதிலும் விழுந்தது.
சரிமா நான் தலைசீவிக் கொண்டு வருகிறேன். பணம் பை எல்லாம் எடுத்து வை. பூவிழி என் கூட வருகிறாளா?
அவளுக்கு வேற வேலை இருக்கிறது. நான் எழுதிய அனைத்தும் வாங்கி வந்து விடு பணம் பை அருகில் வைத்து இருக்கிறேன்.
தேவ் ஆனந்த் லைனில் இருப்பதைப் பார்த்து.. நான் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போக வேண்டும் நீங்கள் இரவு அழையுங்கள் என்று சொல்லி போனை வைத்து விட்டாள். தேனருவிக்கு தெரியும் தனது அம்மா பேசியதைக் கேட்டு இருப்பார். அதனால் நம் ஊரில் இருக்கும் அந்த ஒத்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அதை விட்டா வேறு எது இருக்கிறது.
சாரே அங்கே வந்து விடுவார் என்று நினைத்துக் கொண்டு அவன் சொன்னது போல் தாவணி பாவடை அணிந்து கொண்டு தலையை லூசாக பின்னலிட்டு அறையை விட்டு வெளியே வந்தவளைப் பார்த்து
பூவிழி தனது புருவத்தை சுருங்கிப் பார்த்து விட்டு என்னங்க மேடம் நீ தானா? நீ தானா? அந்த தாவணி போட்ட தீபாவளி என்று தேனுக்கா சுற்றி சுற்றி வந்தாள்.
ச்சீப் போடி நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன்.
ஓகோ அப்படியா? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? ஏதோ முகத்தில் ஒரு பொழிவு தெரிகிறது. அது என்ன? அது என்ன? சொல்லி விடு நீ சொல்லி விடு என்று ராகம் போட யசோதா அவள் தலையில் கொட்டி வெயிலில் வேலை செய்தவள் அவள் ஆனால் உனக்குத் தான் கிறுக்கு பிடித்து விட்டது.
உன்னை செல்ப் அடிக்கி வைக்கத்தான் சொன்னேன். அதைப் பார் அதை விடுத்து அவள் கடைக்குப் போறவளை எதுக்கு வம்பு செய்கிறாய்? அப்படியே தேவயாணியும் ரம்பா என்று நினைப்பு அக்கா தங்கை சீன் ஓட்டிக் கொண்டு இருக்கிறாய்?
அம்மா இது நீ தானா? இப்படி காமெடி பேசுவது. அச்சோ இந்த பூவிழிக்கு வந்த சோதனை தான் பாரேன். நான் யாரிடம் சொல்வேன் என்ன சொல்வேன்..
அது தான் உனக்கே தெரியவில்லை தானே போ நான் சொல்வதைச் செய். போ நான் தரகர் வீடு வரைக்கும் போய்ட்டு வருகிறேன். வா வந்து கதவை பூட்டிக் கொள் பூவிழி யார் வந்து கதவைத் தட்டினாலும் ஜன்னலில் யார் என்று பார்க்காமல் திறந்து விடாதே என்று ஆயிரம் பத்திரம் சொல்லவும்.
ஏம்மா அடுத்த தெருவில் இருக்கும் தரகர் வீட்டிற்கு போய் வருவதற்குள் உனக்கு எதுக்கு இத்தனை பத்திரம் சொல்கிறாய்? அவருக்கு போன் செய்தால் அவரே வந்து விடுவார் என்று தேனருவி சொல்ல.
அட ஆமாம் ல இந்த அறிவு எனக்கு இல்லை பாரேன். சரி நான் அதைச் செய்கிறேன். நீ போய் மறக்காமல் அனைத்தும் வாங்கி வா.
தேனருவி வண்டியைக் கிளப்பும் போது நிழலுக்கு ஒரே கொண்டாட்டம். அவள் வரும் வரைக்கும் அந்த ஊஞ்சலில் ஆடி விடலாம் என்று தான் இத்தனை ஆசை.
பூவிழி செல்ப்பில் துணி அடிக்கியவள் எத்தேச்சையாக திரும்பியவள் சன்னலில் நின்று பார்த்தாள். அங்கே மரத்தில் ஊஞ்சல் அத்தனை விசையாக ஆடிக் கொண்டு இருந்தது. ஆனால் உருவம் எதுவும் இல்லை.
அதாவது யாரும் அமர்ந்து இல்லை பிறகு எப்படி இத்தனை விசையாக ஆடுகிறது. ஒருவேளை காற்று தான் பலமாக வீசுகிறதா? என்று மரத்தைப் பார்க்கிறாள். ஒரு கொம்பு கூட அசையவில்லை.
பூவிழிக்குப் பயம் பிடித்து விட்டது. தன் அக்கா அன்றைக்கு இரவு கத்தியது எல்லாம் நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அந்தப் பேய் தான் அந்த இரவில் இருந்து இங்கே தங்கி விட்டதோ? என்று நின்ற இடத்தில் இருந்தே அம்மா இங்கே வாயேன் என்று கத்தினாள்.
அவளின் குரல் நிழல் அறிந்து கொண்டது. உடனே ஸ்விட்ச் போட்டது போல் ஊஞ்சல் நின்று விட்டது. இது என்ன அதிசயம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே ! ஏய் எதுக்குடி உயிர் போவது போல் கத்தினாய்?
சொன்ன வேலையைச் செய்யாமல் சன்னலில் என்ன வேடிக்கை பார்க்கிறாய்?
அம்மா உனக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். இங்கே வா அந்த ஊஞ்சலைப் பாருமா?
அதுக்கு என்னடி அது அங்கே தான் இருக்கிறது. அம்மா அது இத்தனை நேரம் ஆடிக் கொண்டு இருந்தது. உன்னை நான் சத்தம் போட்டு அழைத்ததும் நின்று விட்டது. ஏம்மா நம் வீட்டில் பேய் இருக்கிறதா?
ஆமாண்டி மூன்று பேய் இருக்கிறது.
என்னமா சொல்கிறாய்?
இது உனக்கு தெரிந்தும். பயமில்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறாய்?
யார்? மா அது.. நீ நேரில் பார்த்து இருக்கிறாயா??
ஓ பார்த்து இருக்கிறேனே. உனக்கு பயமா? இருக்கிறதா??
பேயைப் பார்த்தால் பயமாக இருக்காதா?
ஒரு பேய் கடைக்குப் போய் இருக்கிறது. ஒரு பேய் என் எதிர்க்க பேசிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேய் உன் கூடப் பேசிக் கொண்டு இருக்கிறது.
ச்சை போம்மா நான் என்ன சொல்கிறேன். நீ நம் மூன்று பேரையும் பேய் என்கிறாய்??
பேயும் இல்லை பூதமும் இல்லை. எல்லாம் நம் மனம் தான் காரணம். என்று கூறியவர் காலிங் பெல் அடிக்கும் சத்ததில் கதவைக் திறக்கச் சென்றார்.
அங்கே தரகர் கோவிந்தசாமி நின்று கொண்டு இருந்தார்.
அண்ணா வாங்க வாங்க என்று அழைத்து சோபாவில் அமர வைத்து விட்டு குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.
தங்கச்சி நானே வரவேண்டும் என்று தான் நினைத்து இருந்தேன். தேவகோட்டை ஜமீன்தார் மகன் ஜாதகம் ஒன்று வந்து இருக்கிறது. நம் ஊரில் நீங்கள் தான் ஜமீன் வம்சம் அது தான் நானே பெரிய பாப்பா சாதகம் வந்து வாங்கலாம் என்று இருந்தேன்.
அலமேலு சொன்னால் அது தான் மா நீ தான் கூப்பிட்டாய் என்றதும் உடனே வந்தேன் என்று தன் வாய் எல்லாம் பல்லாக சொன்னார்.
மஞ்சள் தாவணி யில் தேவதை மாதிரி வந்தாள் தேனருவி. அவளைப் பார்த்து விட்டான் தேவ் ஆனந்த்.
தேவ் ஆனந்த் ப்ரண்ட் கடை தான் கீர்த்தனா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அது ஒன்று தான் இருப்பதால் அதுக்குத் தான் வருவார்கள் அந்த ஊர் மக்கள் அதனால் தேனருவியைப் பார்க்க தேவன் வந்துவிட்டான்.
தொடரும்...