Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 279
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 18
பாகம் - 18
தேனருவிக்கு அங்கே யார் இருக்கிறார்கள் என்று சொன்ன நிழல் அவர்களை தன் மாய தந்திரத்தால் சுற்றலலில் விட்டதை தன் நெஞ்சில் இருந்த திரையில் காண்பிக்க.
நிழல் செமயா இருக்கிறது. உனக்கு என்ன வேண்டும் சொல்லு வாங்கித் தருகிறேன்.
எனக்கு ராயல் என்ஃபீல்டு வண்டி வாங்கிக் கொடு எனக்கு அந்த வண்டி ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
நீ விட்டா ராக்கெட் வேண்டும் என்று கேட்பாய்.. நான் இப்போது வெளியே போகிறேன் ஃபாலோ மீ என்று முன்னால் நடந்து சென்றாள்.
பூவிழி அம்மாவிற்கு உதவி செய்து கொண்டு இருந்தாள். சமையல் அறையில்.. தேனருவி
எட்டிப் பார்க்கவும். ஏண்டி லீவு அன்றைக்கு கூட நேரத்தில் எழுந்து வந்து கூடமாட வேலை செய்ய மாட்டாயா?
பூவிழியை விழிகளால் பஷ்பம் செய்தவள். ம்மா என் செல்லம்ல
காஃபி வேண்டும் மா..
சரி காஃபி குடித்து விட்டு போய் வீட்டிற்கு பின்னால் செடிகள் முளைத்து பதவலா இருக்கிறது.
அதை சுத்தம் செய்து விடு அப்படியே விட்டால் விதை விழுந்து மறுபடியும் முளைத்துக் கொண்டே இருக்கும்.
அப்படீனா நாளைக்கு மட்டன் பிரியாணி செய்து தருவாயா?
அப்பவும் திங்கறதுக்குத் தான் கேட்கிறாய்? பாரு.. ஒரு கம்மல் இல்லையா ஒரு மோதிரம் இப்படி நகை வாங்கி சேர்க்கலாம் என்று ஆசை இல்லை.
சோறு முக்கியம் பங்கு.. நகையும் பணமும் போய் வேலை செய்யாது. இதோ என் கை தான் வேலை செய்யும். வியர்வையில் என் இரத்தம் ஆறாக ஓடும் அதை எல்லாம் எங்கே இருந்து ஈடு கட்டுவது. நான் இன்னும் சின்னப் பெண் தான்.
நீ சின்னப் பெண்ணா? உனக்கு இப்போது திருமணம் செய்து வைத்தால் அடுத்த வருடம் உனக்கு வேண்டும் என்றால் சின்னப் பெண் வரும் நீ இன்னமும் குழந்தை இல்லை.
ஒழுக்கமாக காலையில் நேரத்தில் எழுந்து கொண்டு வீட்டில் வேலை பார்த்து பழகு என்று யசோதா திட்ட.
அம்மா நீ ரொம்ப குறும்பு செய்கிறாய்? எனக்கு அப்படி வயசாகி விட்டதா?. முதலில் காஃபி போட்டுக் கொடு எனக்கு நீ சொன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று நிழல் இருக்கும் தையரித்தில் வேலை செய்ய பறந்தாள்.
காஃபியை குடித்து விட்டு கொத்து காரைச்சட்டி எடுத்துக் கொண்டு வீட்டிற்கு பின் புறம் பூச்செடிகள் இருந்த இடத்திற்கு சென்றாள்.
அங்கே சென்று பார்த்தாள் அவளுக்கே மயக்கம் வந்து விடுவது போல் இருந்தது. மழைக்காலம் என்பதால் அவள் இடுப்பு அளவுக்கு செடிகள் வளர்ந்து இருந்தது.
அச்சோ இது என்ன யசோதா செய்த சதி இத்தனை நேரம் தூங்கியதிற்கு இப்படியா வைச்சு செய்வது என்று தன் நெஞ்சில் கை வைத்து யோசனை வந்தவளாக.. நிழல் நீ வா வந்து உன் மேஜிக் கை வைத்து இதை எல்லாம் சுத்தம் செய்து விடேன்.
நாளைக்கு எங்க அம்மா மட்டன் பிரியாணி செய்து கொடுக்கும் போது உனக்கு லெக் பீஸ் தருகிறேன்.
நீ பொய் சொல்கிறாய்.. நான் அப்போது கேட்ட வண்டியை நீ வாங்கித் தரவில்லை. சரி உன் வண்டியை எனக்கு ஓட்ட கொடுத்து இருக்கலாம். உன் வீடு நீயே சுத்தம் செய் என்று கூறிவிட்டு ஓரமாகப் போய் நின்று விட்டது.
நிழல் இது உனக்கும் தானே வீடு இந்த இடத்தில் நீயும் தானே பல ஜென்மத்திற்கு முன்னால் விளையாடி இருப்பாய்?
அச்சோ செண்டிமெண்ட் டச் பண்றாளே.!! உன்னோட வெர்சன் ஆச்சே அப்புறம் எப்படி இருப்பாள் என்று நிழலுக்கு நிழலே பேசியது. பின்னே நிழலுக்கு எல்லாம் மனசாட்சி இருக்குமா?
அதெல்லாம் வைக்க முடியாது போ.. என்று ரைட்டர் ஜி துரத்தி விட்டார்.
தேனருவியும் துரத்துகிறாள். ரைட்டர் ஜி துரத்துகிறார் என்று நிழல் தன் கோரப்பற்கள் தெரிய கை இரண்டையும் வலிப்பு வந்தது போல் செய்ய.
உன் நடிப்பு திறமைக்கு சுந்தர். சி அடுத்த பார்ட் அரண்மனை எடுக்கும் போது உனக்கு வாய்ப்பு கொடுப்பார் நீ இதை எனக்காக செய் என்று சொன்ன தேனருவி போய் அங்கே மரத்தில் கட்டி இருந்த ஊஞ்சலில் போய் உட்கார்ந்து விட்டாள்.
நிழல் அவள் ஒரு தடவை ஆடிக்கொண்டு திரும்பி வருவதற்குள் ஒரு பாத்தியை சுத்தம் செய்து விட்டது.
பூவிழி தன் அக்காவிற்கு ஜூஸ் கொண்டு வருவதைப் பார்த்து நிழல் அருகில் சென்று அவள் தான் சுத்தம் செய்தவள் போல் இடுப்பைப் பிடித்துக் கொண்டு நல்லவேளை பூவிழி உனக்காவது என் மேல் இரக்கம் இருக்குதே வெயில் மண்டைய பிளக்குது ஆனால் இந்த யசோதாவிற்கு ஏதாவது ஆகி விட்டதா? என்னைக் கல்யாணம் செய்து துரத்துவதில் குறியாக இருக்குது.
தேனுக்கா நீ என்ன வந்து கொஞ்ச நேரம் தான் ஆச்சு அதுக்குள்ள இத்தனை இடத்தை சுத்தம் செய்து அதை எல்லாம் அள்ளி எங்கே போட்டு இருக்கிறாய்? நான் வேண்டும் என்றால் உன் கூட சுத்தம் செய்யட்டுமா?
தேனருவிக்கு பக் என்று ஆனது. அடப்பாவமே எனக்கு ஒரு அடிமை வாய்த்து இருக்கிறது. அதை ஆட்டி வைச்சு ஆட்டம் காட்டிக் கொண்டு இருக்கிறேன். இவள் இங்கே இருந்தாள் எப்படி அதை பெண்டு எடுப்பது. அப்புறம் நம் இடுப்பு தான் பெண்டு கழண்டு விடும்.
அச்சோ பூவிழி நீ சின்னப் பெண் இந்த வெய்யில் வேலை செய்தால் மயக்கம் வந்து விடும். அப்புறம் கொத்து (மண்வெட்டி) கையில் பிடித்தால் கை எல்லாம் காப்பு காய்ச்சி கொப்பளம் வந்து விடும்.. நீ போய் அம்மா கூட சமையலில் உதவி செய்.
சரிக்கா நீயே செய் நான் உனக்கு கொஞ்ச நேரம் கழித்து கம்பங்கூழ் கொண்டு வருகிறேன்.
அவள் வீட்டிற்குள் சென்றதும் நிழல் தனது துணைக்கு அதன் சகாக்கள் மற்ற பேய்களைத் துணைக்கு அழைத்து இருந்தது.
அரை மணி நேரத்தில் அங்கே சுத்தம் செய்யப்பட்டு செடிகளுக்கு அழகாக பாத்தி கட்டி தண்ணீர் கூட பாய்ச்சு விட்டு தேனருவியிடம் சென்ற நிழல் அவளிடம் வேலை முடிந்தது என்று சொன்னது.
என்னது அதுக்குள்ள முடித்து விட்டாயா? எங்கள் அம்மாவிற்கு சந்தேகம் வந்து விடும். லூசா நீ என்னைப்பற்றி எங்கள் அம்மாவிற்கு தெரியும். நீ யசோதாவை லேசு பட்ட ஆளு என்று நினைத்து விடாதே எனக்குத் தெரியாது. பாதி இடம் தான் சுத்தம் செய்து இருக்க வேண்டும். மற்ற இடத்தில் மறுபடியும் நீ முதலில் எப்படி இருந்ததோ? அதே போல் செடியை நட்டு வை என்று கட்டளை விடுத்தாள்.
தன் அக்கா வெயிலில் வேலை செய்கிறாள். அவளுக்கு பசிக்கும் என்று கம்பங்கூழ் கையில் எடுத்துக் கொண்டு வந்த பூவிழி அக்கா கையைக் கழுவு கூழ் கொண்டு வருகிறேன் என்று வந்து பார்த்தவள்.
தோட்டம் பளிச்சென்று இருக்க, இது எப்படி சாத்தியம் என்று தன் அக்காவைப் பார்த்து விட்டு திரும்பவும் தோட்டத்தைப் பார்க்க அங்கே பாதி இடத்தில் தான் சுத்தம் செய்து இருந்தது. மீதியிடம் பயங்கர புதராக இருந்தது. அங்கே இங்கே இதற்கு முன்னர் இல்லாத புதிய செடிகள் எல்லாம் மரம் போல் வளர்ந்து இருந்தது.
இது என்ன நம் வீடா கொஞ்சம் நேரம் முன் சுத்தமாக தெரிந்தது. பிறகு மறுபடியும் குப்பையா? இருக்கிறதா? பின்னர் தேனுக்கா அவ்வளவு வேலை செய்யும் ஆள் இல்லை என்பதால் சிரித்துக் கொண்டே.
தேனுக்கா என்ன அதிசயம் நம் வீட்டில் இத்தனை நாட்கள் இல்லாத இந்த மரம் எல்லாம் எப்படி வந்தது என்று பூவிழி கேட்க தேனருவிக்கு கூழ் புரைஏறியது.
உடனே நிழலைப் பார்த்து மாத்து அதை என்று கண்சாடை காட்ட, அது உடனே அந்த மரத்தை மறையச் செய்து விட்டு பழையபடி மாற்றி வைத்து விட்டது.
பூவிழி இப்போது பார்த்து விட்டு அக்கா இங்கே இருந்த மரத்தைக் காணவில்லை. பாரேன்.
என்னது மரமா நான் இங்கே தான் கடந்த ஒரு மணிநேரமாக இருக்கிறேன். என் கண்ணுக்குத் தெரியாத மரம் உன் கண்ணுக்கு தெரியுதா? உன் கண்ணில் தான் ஏதோ பிராப்ளம் வந்து விட்டது.
இதுக்கு தான் உன்னை வெளியே வெயிலுக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். இனி நீ வரவேண்டாம் நானே இன்னும் கொஞ்ச நேரம் இந்த மரத்தில் ஊஞ்சல் ஆடி விட்டு வருகிறேன் போ என்று கூறிவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டாள்.
பூவிழி அந்த மரம் இருந்த இடத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றே விட்டாள்.
நிழல் அருகில் சென்ற தேனருவி அதன் தலையில் கொட்டு கொட்டு என்று கொட்டி விட்டு தன் கையைத் தான் வலிக்கிறது என்று எடுத்துக் கொண்டாள்.
அட நீயே நிழலு நான் அதை மறந்து உன் தலையில் கொட்டினாள்.. உன் கூடச் சேர்ந்து நானும் லூசாகிப் போனேன்.
தேவ் ஆனந்த் வீட்டில் வனிதா தலையில் முக்காடு போட்டுக் கொண்டு மதிய சாப்பாடு சாப்பிட அமர்ந்தாள்.
கிருஷ்ணவேணி என்னம்மா எதுக்கு தலையில் முக்காடு போட்டு இருக்கிறாய்? உன் அக்கா தான் மௌன விரதம் இருக்கிறாள். நீ எந்த கோவிலுக்கு வேண்டி இருக்கிறாய்?
அதிரா ஆதியா பாட்டி எங்கள் அம்மா மௌன விரதம் எல்லாம் இருக்கவில்லை. அவுங்க பேசும் போது காலையில் குரல் மாறிப் போச்சு அதைக் காதில் கேட்கும் போது சிரிப்பு சிரிப்பா வருது. என்று அத்தனை பேர் முன்பும் சொல்லிட வானதி தான் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பது என்று இருந்தாள்.
சித்தி உன் தலையில் ஒரு இடத்தில் கொம்பு முளைத்து இருக்கிறது என்று வனிதா தலையில் இருந்து சேலையை எடுத்து விட்டார்கள். அதில் வடிவேலு தலைபோல் இருக்க அனைவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.
என்னமோ என் சின்னப் பையன் மனதில் இடம் பிடிக்கப் போகிறேன் என்று சொன்னாய்? கடைசியில் பார்த்தால் உன் தலையில் தான் வேறு எதுக்கோ இடம் ஒதுக்கி இருப்பாய் போல் இருக்கிறது.
உன் கூடவே இன்னும் ஒருத்தி சுத்திட்டு இருந்தாலே அவள் எங்கே என்று சுனைனாவைக் கேட்க அவள் முகத்திற்கு மாஸ்க் போட்டுக் கொண்டு வந்து நின்றாள்.
இது என்ன சுனைனா முகத்தில் மாஸ்க் போட்டு இருக்கிறாய்? உனக்கு என்ன ஆச்சு என்று கேட்க?
அத்தை வனிதா தான் என் மூக்கில் மூக்குப் பொடி போட்டு விட்டாள். அது தான் இப்படி ஆகி விட்டது என்று தன் மாஸ்க் எடுத்து காண்பித்தாள்.
சிவக்குமார் தேவ் ஆனந்த் முகத்தைப் பார்த்துக் கொண்டே அப்பா அம்மா நம் தேவ் ஆனந்த் சாதகம் நான் தரகர் கிட்ட கொடுத்து இருந்தேன். அவரும் நம் குடும்பத்திற்கு ஏற்ற ஒரு பெண் சாதகம் கொண்டு வருகிறேன் என்று சொன்னார்.
அங்கே இருந்த நான்கு பெண்களுக்கு மனதில் தீ போல் எறிந்தது.
தொடரும்...