• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
277
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 17



நிழல் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டது. தனது நீளமான கையால் வனிதா தலையில் கொட்டி விட.. அவள் எலும்புக் கையில் இரும்பைப் போல் கொட்டு வாங்கி கதி கலங்கி இருக்க.

வனிதா முடியை எடுத்து சுனைனா மூக்கில் விட்டு விட மூக்குப் பொடி இல்லாமல் தும்மி தும்மி அவளின் மூக்குத்தி கழண்டு ஓடியது.

ஐய் ஜாலியாக இருக்கிறது. இந்த விளையாட்டு என்று நிழல் இவர்களை நாம் அப்பப்ப வந்து வெச்சு வேடிக்கை செய்யலாம் என்று நினைத்து விட்டு.

இவர்களை விடுத்து அடுத்து யார் இருக்கிறார்கள் என்று பார்த்தது.

அங்கே வானதி தனது புருசன் கூட நீங்கள் உங்கள் தம்பியிடம் பேசுங்கள் அவன் வனிதாவைத் திருமணம் செய்தால் எங்கள் அப்பா வீட்டுச் சொத்து வேறு எங்கும் போகாமல் நம் வீட்டிற்கே வரும் அதை மனதில் வைத்து தான் நான் இத்தனை நாட்கள் அவளுக்கு வெளியே மாப்பிள்ளை பார்க்க விடவில்லை.

சிவக்குமார் எதையுமே காதில் வாங்க வில்லை. வானதியின் கழுத்தை நிழல் போய் இறுக்கிப்பிடித்து அவளுடைய குரலை கீச் கீச் என்று மாற்றி விட்டது.

அவள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால் குரலின் மாறுபாட்டை கவனிக்க மறந்தால் ஆனால் சிவக்குமார் கண்டு கொண்டான். அதிரா ஆதியா இருவரும் தன் அம்மா கியா மியா என்று பேசுவதைப் பார்த்து அப்பா மகள்கள் சிரி சிரி என்று சிரிக்க அதில் அதிர்ச்சியாகிய வானதி. நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் சிரிச்சு என்னைய கோமாளி ஆக்கிறீர்களா? என்று கேட்க.

அம்மா நீ உண்மையில் கோமாளி மாதிரி தான் பேசுகிறாய்? அதிரா சொல்ல பிறகு தான் பேசுவதைக் கவனித்தவள் தனது குரல் மாறுபாட்டை உணர்ந்தாள். அச்சோ என்று தன் கழுத்தை
தொட்டுப் பார்த்தாள்.

உன் வாயை வைத்துக் கொண்டு கொஞ்ச நஞ்சமா பேசுனாய்? இப்போது உன் குரல் இப்படி ஆனதிற்கு உன் பேச்சு தான் காரணம். இனி நீ வெளியே எங்கே பேசினாலும் உன்னைப் பார்த்து கேவலமாக சிரிப்பாங்க. உன் தங்கச்சிக்கு பேசப் போய் இப்போது உன் பாடே திண்டாட்டம் தான் என்று கூறிவிட்டு.. உன் சொத்து யாருக்கு வேண்டும். என் அப்பா பாட்டன் பூட்டன் சம்பாதித்து வைத்ததே பல தலமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்.

நிழல் தெரிந்து கொண்டது. இங்கே இருப்பவர்கள் எல்லாம் நல்லவங்க தான். இந்த இரண்டு பொம்பளைங்க தான் சரியில்லை.

அடுத்த விஜயலதா ரவிக்குமார் அறைக்குள் சென்றது. அவளும் தன் கணவனிடம் தான் கோரிக்கை வைத்துக் கொண்டு இருந்தாள். இதே போல் புராணம் தான்.

நிழல் விஜயலதாவை நன்றாக கையைப் பிடித்து சுற்று சுற்று என்று சுற்றியது. அதில் அவளால் ஒரு இடத்தில் நிற்கவே முடியவில்லை.

மாவாட்டும் கிரைண்டர் போல் சுற்றிக் கொண்டு இருந்தாள். அப்போது அவனது அறையில்
இருந்தான். அவன் தான் தனது மனைவி விஜயலதாவிற்கு எதுவோ புதுசா பைத்தியம் பிடித்து விட்டது என்று தான் யோசிக்க தோன்றியது.

ஏய் விஜயா நில்லு ஏண்டி இப்படி சுத்துற கிறுக்கு புடிச்சிருச்சா உனக்கு நல்லாத்தான் இருந்த..

ஆமா உங்க கிட்ட போய் பேச வந்தேன் பாரு அதுதான் எனக்கு இப்படி சுத்துது வேடிக்கை பார்க்காமல் என் கை புடிச்சு நிறுத்துங்க.

ரவிக்குமார் அவளின் கையைப் பிடித்து நிறுத்தலாம் என்று நினைக்க விஜயலதா மிகவும் வேகமாக சுற்ற ஆரம்பித்தால் இது என்னது வம்பா இருக்குது அவளா சுத்தி ஓயும் வரை நாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.

அப்பத்தான் இனிமேல் என் தங்கச்சியை உங்க தம்பிக்கு திருமணத்துக்கு பேசுங்க என்று வாக்குவாதம் பண்ண மாட்டாள் நல்லா வேணும் கண்டிப்பா இது நினைச்சு நினைச்சு சிரிக்கிற விதமா தான் இருக்குது.

தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் சுற்றிய விஜயலதா ஐயோ சாமி என்னாலையே முடியல நான் சின்ன புள்ளையா இருக்கும்போது கோபி பிஷ் கூட இத்தனை வேகமா சுத்துனது இல்ல என்று மூக்கால் அழுதாள்.

என்னங்க என்னை அப்படியே கொண்டு போய் செவுத்து கிட்டவாவது நிக்க வையுங்க மண்டையெல்லாம் கிறு கிறுன்னு சுத்துது.

என்னது கட்ட வேண்டுமா உனக்கு? எதுக்கு மண்டையிலே நீயே சாதிக்கிறியா?

ஆமாண்டி நீ கேட்டேன்னு நானும் எடுத்து கொடுத்தா நீ இப்போது வேணும்னு சுத்திட்டு இருக்கிறாயே அதேமாற என்னை அடிச்சு போட்டு நானும் இல்லை என்ற கையும் இல்லை எல்லாம் சொல்லுவ நீ உன்னால எத்தனை நேரம் சுத்த முடியுமோ? சுத்திக்கோ நான் போறேன். அவன் அறையை விட்டு வெளியே வந்து பார்க்கும் போது தான் தனது அண்ணன் சிவக்குமார் அறையிலிருந்து அதிரா ஆதியா இருவரும் சித்தப்பா என்று சிரித்துக் கொண்டு வந்தார்கள்.


குட்டிமா எதுக்கு இப்படி சிரிச்சிட்டு வரீங்க விக்கல் வந்துற போது ஆமா எத பாத்து இப்படி சிரிக்கிறீங்க?

சித்தப்பா அம்மா பேசிட்டு இருந்தாங்களா? அவங்களுக்கு உடனே வாய்ஸ் மாறிப்போச்சு அவங்க பேசும்போது கேட்டா சிரிப்பா வருது..

சுனைனா தும்மல் தும்மி மூக்கு வீங்கி கோரமாக காட்சியளித்தாள். அவளின் மூக்கில் போண்டாவை சொருகி வைத்தது போல் குண்டாக இருந்தது.

வனிதா தலையில் ஒரு கொம்பு முளைத்தது போல் வீங்கி கிடந்தது.

நான்கு பேரையும் ஆட்டி வைத்த நிழல் இன்னைக்கு இது போதும் நாளைக்கு வரேன் என்று சென்று விட்டது.

இவர்கள் இரண்டு பேரும் தங்களது அறைக்குப் போய் அடைந்து கொண்டார்கள். அவர்களுக்கு இன்னமும் தங்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

இங்க இருக்கிறவங்க எல்லாம் மனுஷரா இல்ல பேய் கூட்டமா அக்கா சொன்னாள் இங்க வந்து வசமா மாட்டிட்டேனோ? எனக்கே என்னை அடையாளம் தெரியாத மாதிரி ஆகிவிட்டது .இத்தனை நடந்து வீட்டுக்குள் இருந்து ஒரு சனம் எட்டிப் பார்க்கல என்னதான் நடக்குது? இங்க நான் வேற அந்த சுனைனா வை கொட்டவே இல்ல அவளோ ஏன் என்னை கொட்டுன்னு என்னை பார்த்து கேட்கிறாள் நானே தும்மல் மாற்றி தும்மல் வந்து மூக்கு வீங்கி போயி எப்படித்தான் இந்த மூஞ்சி வச்சிட்டு வெளிய போறது?


வானதியோ எதுவுமே பேச முடியாத மாதிரி குரல் மாறிப்போச்சு என்று அமைதியாக இருந்து கொண்டாள் .அவளை சோதிக்கிற மாதிரி கிருஷ்ணவேணி வானதி இங்கே வா என்று கூப்பிட இவளோ? பதில் பேசினால் தன் குட்டு வெளிப்பட்டு விடுமே அதனால் அமைதியாக அவரின் முன்னே
போய் நின்றாள்.

ஏம்மா ஏதாவது வேலையா இருக்கிறாயா?

தலையை மறுப்பாக அசைத்தாள்.

ஏன் பேச மாட்டேங்கிற ஏதாவது மௌன விரதமா???

அதற்கும் ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.

நான் கூட நீ சும்மாதா இருப்ப அதனால் அந்த ராமாயணம் புக் எடுத்து படிக்கச் சொல்லலாம்னு இருந்தேன்.

வானதி நல்லவேளை தப்பிச்ச இல்லாட்டி இந்த கிழவி நான் பேசுவதை கேட்டு சிரிப்பா சிரிச்சிருக்கு ஆண்டவா என் குரல் என்னாலையே கேட்க முடியல.

சரி நீ போ நானு விஜயா கூப்பிட்டுக்கிறேன்.

விஜய லதா தள்ளாடிக்கொண்டே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டு பயங்கரமான தலைவலியா இருக்கிறது. மூளையே குழம்பி விட்டது.

மூளை குழம்பி காது வழியாக வெளியே வந்து விடுமோ? என்று யோசித்து யோசித்து மண்டையே
தெறித்து விடுவது போல் வலிக்க தனது தங்கை சுனைனா வை அழைக்க.

சுனைனா மூக்கு போண்டா போல் வீங்கி இருந்ததால் தனது அக்கா அழைத்தும் வெளியே வராமல் இருக்க விஜயலதாவே அவளின் அறைக்குச் சென்று பார்க்க தனது தங்கை முகத்தைப் பார்த்து ஆமா நீ யாருமா? புதுசா வந்த வேலைக்காரியா?

அங்கே பாத்திரம் தேய்க்காமல் இருக்கிறது. இங்கே என் தங்கை அறையில் படுத்துக் கொண்டு இருக்கிறாய்? என்று அவளின் முதுகில் ஒரு அடி வைக்க.

அக்கா உனக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா?

இது என்ன சுனைனா குரலில் பேசுகிறாள். என்று தன் கிறுகிறுத்த மண்டையால் தான் தனது தங்கை முகம் இப்படி தெரிகிறதா? என்று நன்கு கண்ணைத் தேய்த்து விட்டு இப்போது பார்த்தாள். அதே போல் மூக்கின் மேல் வேறு ஏதோ இருப்பது போல் தோன்ற அந்த வீங்கிய மூக்கின் நுனியில் ஒரு தட்டு தட்டி இது என்னடி கூத்து கட்டி வைத்து இருக்கிறாய்? இந்த மேக்கப் போடுபவர்கள் போல
இருக்கிறது. இந்தியன் பட தாத்தா மாதிரி கமலஹாசன் வேசம் கட்டுகிற மாதிரி செய்து வைத்து இருக்கிறாய்? இதை முதலில் கழட்டி வீசு என்று அந்த நுனி மூக்கின் மீது ஒரு அடி வைக்க.. சுனைனா வலியில் கத்தி விட்டாள்.

அக்கா எனக்கு அதிகமாக தும்மல் வருகிற மாதிரி வனிதா ஏதோ பொடியை என் மூக்கின் உள்ளே போட்டு விட்டாள். அதில் தும்மல் போட்டு தான் என் மூக்கு இப்படி ஆகி விட்டது.

நான் ஆசைப்பட்டு வாங்கிய மூக்குத்தி பார் பிய்ந்து வளைஞ்சு கீழே விழுந்து விட்டது.

என்ன திமிர் அந்த கூளச்சிக்கு உன்னையவே இப்படி செய்து இருக்கிறாள். அவளை சும்மா விட்டாயா?

ஆமா உன் கண் ஏன் அக்கா இரத்தம் போல் சிவந்து இருக்கிறது. மாமா அடித்து விட்டாரா? அது தான் அழுதாயா?

அது சும்மா தலைவலியா இருக்கிறது. என்று எங்கே தான் சுற்றியதைச் சொன்னால் தங்கை தன்னைக் கேவலமாக நினைத்து விடுவாளோ? அதனால் மிளகாய் கையை கண்ணில் வைத்து விட்டேன் என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட.

அதே நேரம் வானதி தனது தங்கை அறைக்குச் சென்றாள். அங்கே தன்னை யாரும் தேடி வரமாட்டார்கள் என்று தான் அங்கே சென்றாள். ஆனால் வனிதா தலையைப் பார்த்து இது என்ன கொம்பு முளைத்து இருக்கிறது.


உடனே அவளின் அருகில் சென்றவள். என்னடி யார் மேலேயாவது ஒரு தடவை தலையை முட்டி விட்டாயா? உனக்கு அறிவே இல்லை. அது தான் ஒத்தக் கொம்பு முளைத்து விடும் என்று மறுபடியும் ஒரு தடவை முட்டி இருக்க வேண்டியது தானே. நாம் சின்னப்பிள்ளையா? இருக்கும் போது செய்வோமே மறந்து விட்டாயா? அது தான் இப்போது உனக்கு கொம்பு முளைத்து இருக்கிறது.


அக்கா நீ என்ன இப்படி பேசுகிறாய்? உன் குரல் என்ன கிழவிகள் பேசுவது போல் நடுங்குகிறது.

அய்யோ இவள் தலையைப் பார்த்ததும் அவசரப்பட்டு பேசி விட்டோமே இவளிடம் என்னத்தைச் சொல்வது. சரி எதையாவது சொல்லி சமாளிப்போம்.

அது ஒன்றும் இல்லை வனிதா நான் ஐஸ் வாட்டர் குடித்தேனா? அது தான் குரல் நடுங்குகிறது.

நிழல் செய்த சுழற்சி முறையில்
அதை எல்லாம் தனது நெஞ்சில் இருந்து திரையில் தேனருவிக்கு காண்பித்தது.

யாராச்சும் வெயிலுக்கு ஐஸ் வாட்டர் குடிப்பீங்களா?



தொடரும்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top