Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 277
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
...
பாகம் - 16

தேவ் ஆனந்த் தேனருவி கூடப் போனில் பேசிய பிறகு அவனது கனவில் அவளுக்கு கவிதை பாடுகிறான்..
நிலவைப் பிடித்து தாரேன்
நெற்றியில் வைச்சுக்க மானே
மாமனை மனசில் நினைச்சா
மல்லிகைப் பூவாய் வாரேன்
தன்னாத்தன்னானே.. மானே
என்னைத் தந்தேனே.. உள்ளே
இருக்கும் இதயம் உன் உதட்டுச் சுழிப்பில் கிறுக்குப்பிடிச்சது தேனே..
ஊரைச் சுற்றிலும் ஆறு..
ஓடுது என் மனசில் தேரு..
தண்ணியில் சிக்கிய தவளையா? மாறிப்போனேன் நானே...
தன்னாத்தன்னானே.. மானே
மீன் விழியாலே நீயும்
தூண்டில் விடாதே... ஒரு தடவை இமையைச் சிமிட்டிப் பாரு...
குங்குமச் சிமிழா வாரேன். ..
பாதக் கொலுசில் பட்டம் விடாதே... கட்டிப் போட..
பருத்திச் செடியில் பூவும் பூக்கல... சலங்கையில் என்
மனசு இருக்க அது சினுங்கிப் பேசுது...
தன்னாத்தன்னானே... நானே
சுற்றிவருகிறேன் தேனே..
வளைவி போட உன் கரத்தைப்
பிடிக்கும் நேரம்.. கன்னக்குழி
சிரிப்பிலே கவிழ்ந்து விட்டேனே. ..
நீ பேசும் அழகிலே குயிலும் கூட ஊமையாக.. நடக்கும் பாதம் பார்த்து.. மயிலும்
மையல் கொள்ளுது.. உன்முக அழகில் தாமரைமொக்கும் தலையைக் குனியுது..
(இந்தக் கவிதைப் பாடல் நல்லா இருக்கிறதா? நானே தான் இந்த வரிக்குச் சொந்தக்காரி.. )
காதல் கொண்ட மனது கனவில் டூயட் பாட அவளோ? தேவ் ஆனந்த் குழப்பி விட்டதில் தூக்கத்தைத் தொலைத்தாள்.
நிழல் கூட இவள் என்ன இப்படி கண்ணைத் திறந்து வைச்சுட்டே தூங்குகிறாள் என்று அவளின் மூக்கின் அருகில் சென்று குனிந்து பார்க்கிறது. உயிரோடுஇருக்கிறாளா? இல்லை மூச்சை நிறுத்தி விட்டாளா?
இவள் எல்லாம் நான் அன்றைக்கு இரவு வந்து அத்தனைப் பயப்படுத்தியும் என் கூடவே டீல் பேசியவள். அந்த வாத்தியார் பேசியதிற்கு மூஞ்சியைத் தொங்கப் போடும் ஆள் இல்லையே.
சரி அவளிடமே கேட்போம் என்று ஆமா உனக்கு என்ன கப்பலா கவிழ்ந்து விட்டது. இப்படி முகத்தை தொங்கப் போட்டு உட்கார்ந்து இருக்கிறாய்?
நிழல் நீ எனக்கு உதவி செய்ய வேண்டும். அப்போது தான் நான் உனக்கு உதவி செய்வேன்.
சரி ஓகே டீல்.
நீ தேவ் ஆனந்த் சார் வீட்டைப் போய் நோட்டம் போட்டு வா அங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள். அதிலும் கல்யாணம் ஆகாமல் யாராவது இருக்கிறார்களா?
நாளைக்கு எனக்கு லீவ் வேண்டும் நான் போராடப் போகவேண்டும்.
ஆமா எதுக்குப் போராட போகிறீர்கள்.
அதுவா? பேய்கள் அடிக்கடி கட்சி மாறிவிடுகிறது. அது தான் கூட்டணி கலையாமல் இருக்க
நாங்கள் நாளைக்கு பூராவும் கல்லறைத் தோட்டத்தில் தான்இருக்க வேண்டும். இது எங்கள் கந்தல் பிந்தல் தலைவனின் ஆணை.
தேனருவி இங்கே பாரு நிழல் நீ உன் கல்லறைத் தோட்டத்தின் உன் பதவியை ராஜினாமா செய்து விடு நான் உன்னை இந்த அரண்மனை காவல்காரன் ஆக்கி விடுகிறேன்.
இது பெரிய வேலூர் கோட்டை இதுக்கு இவள் மகாராணி நான் மட்டும் கேட்டில் தொங்கும் காவல்காரனா?
பேயவே பேந்த பேந்த விழிக்க விட்ட பெருமை உனக்குத் தான் சேரும் தேனருவி.
உன் டிகால்ட்டி வேலை எல்லாம் அந்தப் பரணில் தூக்கிப் போட்டு விடு நிழலு. உனக்கு காலையில் வேலையே சார் வீட்டிற்குப் போய் நிலவரம் பார்த்து வருவது தான்.
தேனருவி கண்ணயற நிழல் மின் விசிறியைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தது.
அடுத்த நாள் காலையில் எழுந்ததும்.. தேவ் ஆனந்த் முகத்தில் அத்தனை மலர்ச்சி நேற்று கனவில் பாடிய கவிதை மனதில் தோன்றித் தோன்றி அவனைக் கிறங்கடித்தது.
வானதி தனது தங்கை வனிதாவிற்கு நேற்றே அழைத்துச் சொல்லி விட்டாள். நாளைக்கு பொழுது விடிவதே உனக்கு இங்கே தான் என்று அதனால் அதிகாலையிலேயே வனிதா வந்து விட்டாள்.
அதே போல் தான் விஜயலதாவும் தனது தங்கை சுனைனா இறக்குமதி செய்து இருந்தாள்.
கண்ணப்பன் அருகில் வந்த சுனைனா பெரிய மாமா நல்லா இருக்கிறீர்களா? நான் போன தடவை பார்த்த போது இருந்ததை விட ஒரு சுற்று இளைத்து விட்டீங்களே.. இனி நான் வந்து
விட்டேன்ல உங்களுக்கு வகைவகையாக சமைச்சு போட்டு உங்கள் உடம்பைத் தேற்றி விடுகிறேன்.
வனிதா உடனே எது பெரிய மாமாவை உன்னை மாதிரியே தூண் கணக்கா மாற்றப் போகிறாயா? நானே மாமா அத்தை எல்லாம் சிலிம்மா மாற்றுவதற்காக ஊரில் இருந்தே நிறைய பத்தியமான உணவுப் பதார்த்தங்கள் கொண்டு வந்து இருக்கிறேன்.
இதென்ன காலங்காத்தாலே உங்களோட ஒரே ரோதனையா போச்சு.. இப்போது தானே வந்து இருக்கிறீர்கள். போய் குளித்து விட்டு சமையல் கட்டில் பாத்திரங்கள் குவிஞ்சு கிடக்கிறது கழுவி வையுங்கள் என்று கிருஷ்ணவேணி சொல்ல.
அத்தை நான் ஒன்றும் இந்த வீட்டு வேலைக்காரி இல்லை. இந்த வீட்டிற்கு வரப் போகிற உங்கள் வருங்கால மருமகள். என்னமோ? உங்கள் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கிறவள் போல் பாத்திரம் தேய்க்கத்தான் நான் வந்த மாதிரி பேசுகிறீர்கள். நான் சின்னத்தான் மனசில் இடம் பிடிக்கத் தான் வந்துள்ளேன் என்று இரண்டு பேரும் மாறி மாறி சத்தம் விட.
அவனோட மனசில் இந்த குந்தாணிகள் இடம் பிடிக்க அங்கே காலி இடமா? ஏற்கனவே ஒருத்தி பட்டாப் போட்டு விட்டாள்.
தேனருவி காலையில் எழுந்தவள் இன்று சனிக்கிழமை கல்லூரி விடுமுறை ஆனாலும் தினமும் அந்தர் பல்டி அடித்துத் தூங்கும் நாம் அது என்ன லீவ் நாளில் காலையில் ஆறு மணிக்கே எழுந்து விட்டோம்.
நிழல் எங்கே என்று பார்த்தவள் அது மின் விசிறியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு இருக்க. அதன் முடியைப் பிடித்து இழுத்தாள்.
நான் உனக்கு என்ன வேலை கொடுத்தேன் நீ என்ன செந்தில் கழுத்தில் கயிறைக் கட்டிக் கொண்டு சங்கீதம் பழகுவது போல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு கடப்பாறை முழுங்கின
குரலில் இந்தக் கத்து கத்துகிறாய்? நீ இங்கே கத்துவது என் அம்மா காதில் விழுந்தது. உன்னோடு சேர்ந்த என்னையும் தொங்கவிட்டு விடுவாங்க.
நிழல் தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தேனருவி யைப் பார்த்து உனக்கு என்னைப் பார்த்து பயமே இல்லை கொஞ்சம் கூட ஒரு பேய் என்ற மரியாதையே இல்லை.
அப்படிங்களா நிழல் நீ தானே சொன்னாய் நான் உடல் நீ நிழல் என்று பிறகு எனக்கு நானே எப்படி மரியாதை செய்வது. நான் உனக்கு நேற்றே ஒரு வேலையைக் கொடுத்தேன். நீ அதை மறந்து விட்டு உன் பேய் காதலி கூட டூயட் பாடிக் கொண்டு இருக்கிறான்.
( நிழல் நினைக்கிறது இந்த ரைட்டர் ஜி ஹீரோ ஹீரோயினுக்கு எல்லாம் பாட்டு போடுது கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா? பேய்க்கு கவிதை போட வேண்டும். அதுக்கு பிடிச்ச துணி போட்டு விட வேண்டும் என்று எப்போதும் அழுக்குத் துணியும்.. நகம் வளர்ந்து கேணச் சிரிப்பு இப்படியே அசிங்கமாக வைத்து இருப்பது. எனக்குமே அழகாக த்ரிசா மாதிரி சிரிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. )
இது மாதிரி கோரிக்கை வைத்து போராடலாம் என்று பார்த்தால் அதுக்கும் நான் பிடித்து தொங்கும் மகராசி ஆப்பு வைத்து விட்டு என் கார் கூந்தலைப் பிடித்து இந்த ஆட்டு ஆட்டுகிறாள்.
நான் பேசிட்டே இருக்கிறேன். நீ என்ன யோசனையில் இருக்கிறாய்? என்று நிழலையே
உச்சா போக வைத்து விட்டாள். அந்தக் கோழிக் குண்டு கண்ணை நிழலின் பக்கத்தில் வைத்து கேள்வி கேட்டு வைக்க.. நிழலோ? அதனுடைய நிலாக் காதலி கூட டூயட் பாடி நிம்மதியா மூச்சு விடும் நேரத்தில் மிரட்டுகிறேன் என்று நிழலையே உச்சா போக வைத்தவள்.
ச்சை நீ எல்லாம் ஒரு பேய் இப்படி தான் நடுவீட்டில் நாறவைப்பாயா?
நீ எனக்கு மட்டும் பேம்பர்ஸ் வாங்கிப் போடவே இல்லை அது தான் இப்படி ஆகி விட்டது. என்று நிழல் சத்தம் போட.
நானே உன்னை சந்தூர் சோப்பு போட்டு குளிக்கச் சொன்னேன் தானே நீ அதை மறந்து விட்டு
மருக்கொழுந்து செண்ட் அடித்துக் கொண்டு வருகிறாய்?
சரி நான் போகிறேன் அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்து உனக்கு அப்பப்ப தகவல் சொல்கிறேன் என்று நிழலை தேவ் ஆனந்த் வீட்டைப் பார்த்து வர அனுப்பி வைத்தாள்.
நிழல் நின்ற இடத்தில் இருந்து தேவ் ஆனந்த் வீட்டிற்குள் கால் எடுத்து வைத்தது. நிழல் யாருடையது கண்ணிலும் படாமல் உள்ளே எட்டிப் பார்த்தது.
வனிதா சுனைனா இருவரும் ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்து கொண்டு ரீல்ஸ் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் எப்போதும் போல் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள். ஆனால் புதுசா இவர்களை வைச்சு செய்ய
வந்து விட்டது நிழல் என்று தெரியாமலையே அமர்ந்து இருக்க.
நிழல் சுனைனா அருகில் சென்று நின்று கொண்டது. அவளது செல்போனில் தனது உருவத்தை பார்க்க அன்று கல்லூரியில் தேனருவி செய்தது போல் செய்யவே ஆசை வந்து விட்டது. அதனால் அவளின் கையில் இருந்த செல் போன் அவளின் கையிலிருந்து இப்போது நிழல் கைக்கு மாறியது.
நிழலுக்கு இது சாதரணமாக நடப்பது போல் இருக்கும்போது
ஆனால் சுனைனா தன் கையில் இருந்த போன் அந்தரத்தில் பறப்பதைப் பார்த்து பே பே என்று கத்தினால் அதற்கு நிழலோ தன் அதிகாரச் சிரிப்பை வைக்க. . இப்போது வனிதா செல்போனும் அந்தரத்தில் பறந்து வந்தது.
அவளுக்கு சுனைனா தான் ஏதோ கண்கட்டு வித்தை காண்பிக்கிறாள். அதனால் அவளையும் முறைத்து பார்த்து விடுகிறாள்.
என் செல்போன் கொடுடி.. அதை நான் சொல்ல வேண்டும் என் செல்போனைக் நீ தான் மலையில் இருக்கும் மந்திரவாதியை பூசையில் அமரவைத்து மந்திரம் செய்து மறைத்து விட்டாய்??
ஆமா நீ பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் நான் உன் அழகைப் பார்த்து திகைச்சு மலைச்சுப் போய் விட்டேன். உன் மூஞ்சியே அக்னி நட்சத்திர வெயிலில் கருகிப் போன கருவாடு மாதுரி இருக்கிறது. என்று இருவரும் சோபாவில் இரண்டு பேரும் உருண்டு பிரண்டு கொள்வதைப் பார்த்து அவர்களுக்கு முன் ஷோபாவில் நிழல் அமர்ந்து கொண்டது.
உடனே தன் கையை நீளமாக வளரச் செய்த நிழல் சுனைனா தலையில் ஒரு கொட்டு வைத்து விட.. வானதி மூக்கில் சுனைனா முடியை சொருகி விட்டது.
ஒருத்தி தலையில் கொட்டு கிடைத்து கதி கலங்க மற்ற ஒருத்தியோ? மூக்குப் பொடி இல்லாமலே தும்மி மூக்குத்தி கழண்டு ஓடியது.
தொடரும்..

Last edited: