Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 275
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 15
பாகம் - 15
தேவ் ஆனந்த் தேனருவியை ஆஸ்பத்திரியில் தூக்கிச் சென்றதை சிவக்குமார் சிநேகிதன் குமரேசன் பார்த்து வந்து சொல்லி விட்டான்.
குமரேசன் வயலின் வரப்பில் நடக்கும் போது சேர் வழுக்கி விட்டதில் சதை பிறண்டு விட்டதை சரிசெய்ய மருத்துவமனை வந்த அன்று தான் தேவ் ஆனந்த் தேனருவிக்கு வழியில் அடிபட்டு சதை பிறண்டதைப் சரிசெய்ய மருத்துவமனைக்கு அழைத்த வந்ததைப் பார்த்து விட்டு குமரேசன் சிவக்குமாருக்குப் அப்போதே போன் செய்து சொல்லி விட.
சரி குமரேசா அந்தப் பெண் எந்த ஊர் யார் பெண் என்று விசாரித்துச் சொல்.
சிவா அது யாருடைய பெண் என்று எனக்குத் தெரியும். பூவரசங்கோட்டை தான் அப்பா இல்லை அம்மா மட்டும் தான் இருக்கிறது. தங்கச்சி ஒன்று இருக்கிறது.
சரி குமரேசா நான் அவனிடம் கேட்டுப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு தேவ் ஆனந்த் பார்த்து எப்படி கேட்பது என்று தயங்கிக் கொண்டு இருந்ததால். இன்று அம்மா ஆரம்பித்து வைக்க இதையே வைத்து அவன் மனதில் ஏதாவது ஆசை இருக்கிறதா? இல்லை தனக்கு கீழ் படிக்கும் மாணவி என்று உதவி செய்து இருக்கிறானா? எதையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் நாமாக ஒரு முடிவுக்கு வந்து விட்டு அதைப் பெரியவர்கள் காதில் போட்டு விடக் கூடாது என்று தான் இப்போது தேவ் ஆனந்த் அறைக்கே வந்தது.
அறைக்குள் வந்ததும் தான் தெரியும்.. அவனின் நிலையைப் பார்த்து பையன் காதலில் விழுந்து விட்டான் என்று சிவக்குமார் புரிந்து கொண்டு தேவ் நான் உள்ளே வரலாமா?
தன் அண்ணன் குரல் கேட்கவும் தான் தேவ் ஆனந்த் அடப்பாவமே நம்மைப் பற்றி அண்ணா என்ன நினைக்கும் இன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக இப்படி செய்து கொண்டு இருந்தால்.
அண்ணா வாங்க என்று எழுந்தவன் தன் மூத்த சகோதரர்சிரித்த பார்வையில் தேவ் ஆனந்திற்கு சிரிப்பு வர,
தம்பிக்கிட்ட ஏதோ விசியம் இருக்குதா கண்ணு. அது தான்
உள்ளார்ந்த சிரிப்பு வருது. என்ற கிட்ட சொல்லறதிற்கு எதுக்கு கூச்சப்படுகிற.. பொண்ணு எந்த ஊரு கண்ணு நீ தயங்காமல் சொல்லு நாளைக்கே போய் பரிசம் போட்டு வந்து விடலாம்.
தேவ் ஆனந்த் உடனே இது என்ன? அண்ணா இப்படி சொல்லுகிறார்.
அப்படீன்னா அவருக்கு யார்? சொல்லி இருப்பார்கள்.
என்ன? கண்ணு நான் உன் கிட்ட கேள்விகேட்டா நீ எங்கோ பார்த்துட்டு இருக்கிறாய்? அப்படீன்னா உன்ற மனசில் ஒன்னுமில்லையா? என்ற கொழுந்தியா வனிதாவையே உனக்குப் பார்த்து புடலாமா? நாளைக்கே நான் அம்மா அப்பா விடம் பேசி விடுகிறேன்.
அண்ணா அது வந்து நான் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் அண்ணா.
தப்பு தண்டா ஏதாவது ஆகி வெளியே தெரிவதற்கு முன்னால் நாம் தெளிவாக இருக்கனும். நம்ம அப்பனு ஆத்தா குலத்திற்கினு ஒரு கவுரவம் இருக்குது. அது என்னைக்கும் தலை நிமிர்ந்து தான் இருக்கனும். தலைக்குனிவு கொடுத்து விடக் கூடாது. அது தான் நான் கேள்விப்பட்டேன்.
அது யார் சாமி ஒரு பொட்டப்புள்ளைய கையிலேந்திட்டு ஆஸ்பத்திரியில் போனாயாமா? குமரேசன் அங்கே பார்த்துட்டு சொன்னான். அவனைப் போல் தான் மத்தவங்களும் பார்த்து இருப்பார்கள்.
ஒன்னுமே இல்லாத விசயம் சாமி காது மூக்கு வைத்து ஊதி ஊதி பெரிசா பேசுவார்கள். இது கிராமம் கண்ணு.. நகரமில்லை யார் எப்படி போனால் எனக்கு என்ன என்று அவனவன் வேலையைப் பார்க்க.
நான் ஏதாவது உன்னைக் குத்தம் சுமத்தி பேச வேண்டும் என்று சொல்லவில்லை கண்ணு. நீ என்ன தப்பாக நினைக்காதே கண்ணு. ஆனால் நீ சீக்கிரம் கண்ணாலத்தை கட்டிக்க வேண்டும்.
நீ வருவதற்கு கொஞ்சம் முன்னால உன் அண்ணிகள் இரண்டு பேரும் வீட்டிற்குள் சண்டை இழுத்து விட்டு விட்டார்கள். அவளுக தங்கச்சி தான் இந்த வீட்டில் மருமகளாக வரவேண்டும் என்று இரண்டு பேரும் முகத்தைத் திருப்பிட்டாங்க.
ஆனால் அம்மா அப்பா முடிவா சொல்லி விட்டாங்க இன்று வந்த நம் குடும்ப ஜோசியர் சொன்னதை சொல்லியதும் அமைதி ஆனார்கள்.
அண்ணா நான் ஒரு இரண்டு நாளில் சொல்கிறேன்.
ஏந்தம்பி சும்மா இருந்த உன் மனசில் நான் தான் எதையாவது கிளப்பி விட்டு விட்டேனா?
அண்ணா அப்படி இல்லை அண்ணா நான் இன்னும் அவளிடமே சொல்லவில்லை. அதுவும் இல்லாமல் அவள் நான் பணியாற்றும் அதே கல்லூரியில் தான் படிக்கிறாள்.
அது தான் ஏதாவது இப்போது செய்து அது அவளது படிப்பை பாதித்து விடக் கூடாது. அது தான் பார்க்கிறேன்.
என்ன கண்ணு சொல்கிறாய்?
அது படிப்பு சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரை.. எதையோ? காட்டி மயக்கி விட்டாள் என்று அவளைத் தவறாகப் பேசி விடுவார்களோ?
அந்தக் கவலையை நீ விடு கண்ணு பொண்ணு யார் என்ன விவரம் என்று மட்டும் நீ சொல் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.
வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள் என்று சொல்லி விடுங்கள். நீயாகச் சொன்னால் தான் வெளியே தெரியும் நீங்கள் விரும்பியது. சரியா நீ எதைப் பற்றியும் விசனப்படாமல் இரு மற்றவற்றை அண்ணா பார்த்துக் கொள்கிறேன்.
சிவக்குமார் பேசிச் சென்றதும். தேவ் ஆனந்த் குளித்து ப்ரெஸ் ஆகி விட்டு. கீழே சென்று தன் வீட்டுக் குட்டீஸ் கூடக் கொஞ்ச நேரம் பேசி விளையாடி விட்டு இரவு டிபன் சாப்பிட்டு விட்டு இப்போது தனதறைக்கு வந்தவன். மணி ஒன்பதாகவும் அவனும் செல்போனைக் கையில் எடுத்துக் கொண்டு..
அவனுடைய ஹனிபால்ஸ் தான் அழைத்தான். தேனருவி ஒன்பது மணிக்கு தேவ் ஆனந்த் போன் செய்வேன் என்று சொன்னதால் எட்டரை மணிக்கே அவளின் அறைக்குள் புகுந்தவள் அவளது கை விரல் நகத்தைத் தான் கொறித்துக் கொண்டு இருந்தாள்.
நேற்று மாதிரி போன் செய்து பொண்டாட்டி சொல்லி விடுவானோ? எங்கே வேறு ஏதாவது பேசி விடுவானோ? என்ற பதட்டத்தில் நேற்று தனது தாய் நீண்ட நேரம் லைட் எரிந்தது என்று சொன்னதால். லைட் அனைத்தும் ஆப் செய்து விட்டு போனில் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
வாத்தி மாம்ஸ் என்று பதிவு செய்து வைத்து இருந்தாள். அவனுடைய போன் வரவும் ஒரு நிமிடம் எடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். அந்த யோசனையிலேயே போன் முழு ரிங்கும் முடிந்து கட்டாக அவள் எடுக்கவே இல்லை.
தேனருவிக்கு தான் வெத்துப் பேப்பரைக் கொடுத்தமே அதில் எப்படி தான் விடைகள் அனைத்தும் என் ஹேண்ட் ரைட்டில் வந்தது. என்று ஆச்சரியத்தோடு அமர்ந்து இருந்ததால். இரண்டாவது தடவையாக போன் வரவும் இப்போதும் அவளுக்கு இருந்த கவலையில் அவள் போனை அழைப்பை ஏற்று கொள்ளதா மன உளைச்சலில் இதையும் தவிர்த்து விட.
தேனருவியின் நிலை குத்திய பார்வையில் நிழல் வந்து அவளின் காதோரம் சொன்னது போன் அடித்துக் கொண்டு இருக்கிறது. எடுத்துப் பேசு நாளைக்கு நான் வரமாட்டேன். பிறகு வகுப்பறையில் நீ மாட்டிக்கிட்டு முளிக்க வேண்டும் என்று அவளின் காதுக்குள் சொல்லி விட்டு அது அடுத்த ரவுண்ட் வீட்டைச் சுற்றி வந்தது.
நீ எங்கே போகிறாய்? நிழல் என்று அவளும் கேட்டு வைக்க.
அது நாளைக்கு கல்லறையில் போராட்டம் செய்யப் போகிறோம் . மற்ற நாள் நான் வகுப்பிற்கு செல்ல முடியாது. ஆனால் நாளைக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நிழல் கூறிவிட இப்போது அவளின் போனில் ஸ்கிரீனையே பார்த்தாள். நான்கு தடவை வந்து கட்டாகி இருக்க. இப்போது அவளுக்கு வாட்சாப் கால் மட்டும் தான் மெசேஜ் வந்தது. இப்போது எனக்குப் அழைக்கவில்லை என்றால் உன் அறைக்கு நான் வந்து விடுவேன் . என்று மிரட்டும் இமோஜியை போட்டு விட.
அதைப் படித்தவள் உடனே தேவ் ஆனந்திற்கு அழைப்பு விடுத்தாள்.
அவள் செய்தது போல் செய்யாமல் முதல் அழைப்பிலேயே போனை எடுத்து தேவ் ஆனந்த் பொண்டாட்டி சாப்பிட்டுச்சாடி என்று உரிமையோடு கேட்டு வைக்க.
தேனருவி தலையை ஆட்ட தஞ்சாவூர் பொம்மை மாதிரி நீ அங்கே தலையாட்டினால் எனக்கு
எப்படி தெரியும்.
சரி நான் கொஞ்ச நேரம் முன்பு உனக்குப் போன் செய்தேன் நீ ஏன் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை.
அது வந்து எனக்குப் பயமாக இருந்தது.
பயமா எதுக்கு உனக்கு இது மாதிரி கதை எல்லாம் ஏதாவது காதில் பூ சுத்தும் வேலை வைத்துக் கொள்ளாமல். இத்தனை நேரம் நீ படித்து விட்டு என்ன செய்து கொண்டு இருந்தாய் என்று அதில் ஒரு அழுத்தம் வைத்து மாமனைத் தான் மனதில் நினைத்து டூயட் பாடிக் கொண்டு இருந்தாயா?
இல்லை சார் எந்த மாமன் அது யார்? எனக்குத் தெரியாமல் நான் எதுக்கு அந்த ஓல்டு மேனை நினைத்து டூயட் பாடுகிறேன்.
அப்படீனா நீ என்னைய நினைக்கவே இல்லையாடி? ப்பூ அவ்வளவு தானா மை ஸ்வீட்டி அப்புறம் எதுக்கு இன்றைக்குக் காலையில் என்னை அப்படி சைட் அடித்துக் கொண்டு இருந்தாய்?
அது வந்து நான் உங்களைப் பார்க்கவில்லை. உங்களுக்குப்பின்னால் ஒரு குட்டிக் குழந்தை அழகாக இருந்தது. அந்தக் குழந்தையைத் தான் பார்த்து வந்தேன்.
சரி நீ என்னை நினைக்கவே இல்லை. நான் எதுக்கு உனக்கு பொன்தாலி போடவேண்டும். என் அண்ணிகள் தங்கையைக் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு போனை அனைத்து விட்டதுபோல் பாவலா காட்டிக் கொண்டு இருந்தான்.
தேனருவிக்குத் தான் அவன் இன்னமும் இரண்டு பேர் இருக்கிறார்கள் என்று சொன்னது பயங்கர காண்டில் இவருக்கு இந்த சுமார் மூஞ்சி குமாருக்கு நானே அதிகம். இதில் ஒருத்தி எல்லாம் இல்லை இரண்டு பேர் வேண்டுமோ? என்று போனைப் பார்த்து திட்டிக் கொண்டு இருந்தாள். அது எதிரில் இருந்த அவனுக்கு நன்றாக கேட்டு விட்டது.
அவனும் சிரித்துக் கொண்டே எப்படியோ? அவளக்கு கிளப்பி விட்டாச்சு.
சிறிது நேரம் கழித்து மீண்டும் தேவ் ஆனந்த் அழைத்து விட இப்போது உடனே எடுத்துக் மூக்கை உறிஞ்சும் சத்தம் அவனுக்கு நன்றாகவே கேட்டது.
ஹனி என்று அழைக்கவும்.. போய்யா வாத்தி நான் தேனருவி இந்தப் பூச்சாண்டி காமிக்கும் வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் என்று கூறிவிட்டு போனை அனைத்து விட்டாள்.
நிழல் இவளையே பார்த்துக் கொண்டு நின்றது.
தொடரும்...