• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
293
நீ உடல் நான் நிழல்🌚
பாகம்- 11

தேவகோட்டை ஜமீன்தார் வம்சம் தான் தேவ் ஆனந்த் பரம்பரை நிலக்கிழார்கள் தான் தனது மூத்த இரு சகோதரர்கள் விவசாயம் பார்க்க இவனுக்கு கற்பித்தல் தான் பிடிக்கும் என்பதால் பி. ஹெச். டி முடித்து விட்டு அவனுக்குப் பிடித்த விரிவுரையாளர் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறான்.

தனது இரு அண்ணன்களுக்கும் திருமணம் முடிந்து இருக்க இவனுக்குத் தான் பெண் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எந்தப் பெண்ணையும் பார்க்காமலே தவிர்த்து வருகிறான்.

கண்ணப்பன் கிருஷ்ணவேணி தம்பதிகள் தனது பேரன் பேத்திகளோடு நிம்மதியாக பொழுதை கழித்து வருகின்றனர்.

பெரிய பையன் சிவக்குமார். அவன் மனைவி வானதி.. இவர்கள் குழந்தைகள் அதிரா ஆதியா இரட்டை குழந்தைகள்..

சின்ன பையன் ரவிக்குமார் அவன் மனைவி விஜயலதா. இவர்கள் குழந்தை பிரணவ் இப்போது தான் ஒரு வயதாகுகிறது.

அதிரா ஆதியா இருவரும் பள்ளி செல்கின்றனர். இந்த வருடம் தான் சேர்ந்து உள்ளனர். அதனால் மதியம் பள்ளியில் இருந்து வந்து விடுவர். கண்ணப்பன் கிருஷ்ணவேணி இருவர்களோடு தான் குழந்தைகள் இருப்பார்கள். தாத்தா பாட்டி என்று கதை கேட்க வேண்டும் என்றாலும் சரி சாப்பாடு எல்லாமே அவர்களோடு தான்.

வானதி விஜயலதா இருவரும் பெரிய வீட்டிற்கு ஏற்ற மருமகள்கள் தான்.. இருவருக்குமே தங்கை இருக்க தேவ் ஆனந்திற்கு யார் தங்கையை மணமுடிப்பது என்பதில் தான் இருவருக்குமே சிறு மோதல்கள் வரும் அதுவும் மாமனார் மாமியார் காதுக்குப் போகாது.

அண்ணன் தம்பி இருவருக்குமே தங்கள் மனைவியின் தங்கையை தேவ் ஆனந்திக்கு மணமுடிக்க விருப்பம் இல்லை. இது அவனுடைய வாழ்க்கை அதனால் நாங்கள் தலையீடு செய்ய மாட்டோம் என்று மனைவியின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர்.

பூவரசங்கோட்டை தேவகோட்டை இரண்டிற்கும் முடிச்சு போட்டு வைத்து இருக்கும் போது வெளியே இருந்து பெண் அமைந்து விடுமா? என்ன.

தேவ் ஆனந்த் அவளோடு பேசியதை ரெக்கார்ட் செய்து வைத்து இருந்ததால் அதைத் திருப்பி திருப்பி போட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தான்.

போச்சா தூக்கம்.. ஆனால் அங்கே பீலிங் கொடுத்தவள் என்ன செய்து கொண்டு இருப்பாள். நாம் பார்த்து வருவோம் வாங்க.

கண்ணாடி முன்பு போய் நின்று இருந்தவள் அவளைப் பார்த்தே, ஐயோ? வாத்தி என்று தெரியாமலே வாய் கொடுத்து மாட்டிக் கிட்டேனே.

கொஞ்ச நஞ்சமா பேசுனாய் ? தேனருவி அவளே அவளுக்கு கேள்வி கேட்டுக் கொண்டாள். நாளைக்கு போய் டெஸ்ட் வைத்தால் நான் எதை எழுதுவது. இப்போது எனக்கு படிக்கும் மூடே போய் விட்டது.

நெசமாலுமே அவரு என்னைப் பொண்டாட்டி என்று சொன்னாரோ? இல்லை நமக்குத் தான் அப்படிக் கேட்டதோ?

இதை இப்போது அவருக்கு போன் செய்து கேட்டு விடலாமா?

தேனருவி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதா? அவர் உன்னை பற்றி என்ன நினைப்பார். படிக்கிற வயதில் கல்யாண ஆசை வந்து விட்டதா? ஏன் என் உயிரை வாங்குகிறாய் என்று சொல்லி விட்டால். இல்லை கனவுகண்டு கொண்டு எனக்கு போன் செய்கிறாயா? என்று கேட்டால் என்ன செய்வது?

அய்யோ? மண்டை காய்கிறது. நமக்கு இப்போது யார் உதவுவார்கள். என்று யோசித்தவள்.

ஹேய் நிழல் இருக்கப் பயமேன். ஆமா இது எங்கு போச்சு இத்தனை நேரம் எங்கே போய் தொலைந்ததோ? தெரியவில்லை.

நிழல் நீ எங்கே இருக்கிறாய்? என்று அவள் கேட்க.

அதுவோ? மேலே சீலிங் பேன் பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தது.

நான் இங்கே இருக்கிறேன் என்று சொல்ல. அவள் குரல் வந்த திசையில் பார்க்க நிழல் இவளைப் பார்த்து சிரித்தது.

தினமும் பல்விளக்க மாட்டாயா? இந்த நாத்தம் நாறுது .

அது உங்கள் பற்பசையில் தான் உப்பு இருக்கிறதே அது தான் நாங்க பல் துலக்குவது இல்லை.

உப்பு இருந்தால் என்ன?

உப்பிட்டவரை உள்ளவிலும் நினை என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அதுக்கு?

அவுங்க மேல் எல்லாம் போய் இறங்க முடியாதுல அது தான் எங்கள் கல்லறைக் கல்லூரியில் முதல் பாடமே.

யார் எது கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட கூடாதாம். அப்புறம் சில பேய்கள் சொல்லி இருக்கிறது.

பிரியாணி வாங்கி சாப்பிட கொடுப்பாங்க பின்னாடியே சவுக்கால் அடி கொடுப்பாங்க என்று அது தான் நான் முன் எச்சரிக்கையாக நீ சைவம் தான் சாப்பிடுவாய் தெரிந்து தான் உன் மேல் இறங்கவே ஒத்துக் கொண்டேன்.

நான் உன்னை எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. நிழல் எனக்கு ஒரு உதவி செய்கிறாயா?

உனக்கு உதவி மட்டும் தானே செய்து கொண்டு இருக்கிறேன். சொல்லு.

அது வந்து நான் என்ன நினைக்கிறேனா? அதை எப்படி சொல்வது என்று தான் தெரியவில்லை எனக்கு கூச்சமாக இருக்கிறது. என்று வாயில் விரலை வைத்துக் கொண்டு சிரித்தாள்.

நிழலோ? இது நீ நான் நம்ப வேண்டுமா? கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அத்தனை வாய் பேசுனாய்? அப்போது எங்கே போச்சு உன் வாயாடித்தனம்.

அதில் விலுக்கென நிமிர்ந்தவள் இப்போது, நீ என்ன சொன்னாய்?

உண்மையைச் சொன்னேன்.

அப்படீனா நீ இங்கே இருந்து கொண்டு தான் எனக்கு உதவ வில்லை.

இது எந்த ஊரு நியாயம் அது தான் எனக்குத் தெரியவில்லை. யார் பேசுவது என்று தெரியாமல் நீ வாயை வளர்த்தது உன் தவறு என்னை எதுக்கு குற்றம் சொல்கிறாய்?

அது சரி நீ எனக்கு உதவி செய்யமாட்டாயா?

சரி சொல்லு எனக்கு அந்த புக்கில் இருந்து விடுதலை கொடுத்தவள் நீ தான் அதனால் உனக்கு நான் உதவுகிறேன்.

அது... அவர் என்னை ஒன்று சொன்னாரு அது உண்மை தானா? என்று எனக்குத் தெரிய வேண்டும்.

அதை நீ அவருக்கே போன் செய்து கேட்கவேண்டியது தானே.

எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கிறது.

அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்.

நீ அவர் வீட்டிற்கு போய் அவர் மனசுக்குள் புகுந்து அவர் எண்ணத்தை அறிஞ்சு வந்து சொல்லு.

அப்புறம்..

நான் என்ன கதையா? சொல்கிறேன்.

எல்லோரும் உன்னை மாதிரி இருப்பார்களா?

ஏன்? அப்படிச் சொல்கிறாய்?

அவர் நான் நிழல் என்று தெரிந்ததும் என்னை மறுபடியும் சிறைபடித்தி விட்டா? நான் என்ன செய்வது?

லூசா நிழல் நீ தான் யார் கண்ணுக்கும் தெரியமாட்டீயே. அப்போது எப்படி உன்னை அவர் போலீசில் பிடித்துக் கொடுப்பார். உன்னை சிறையில் அடைப்பார்கள்.

தேனருவி நீ நிஜமாலுமே கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறாயா?

ஏன்?

சிறையில் என்றால் வெளிச்சிறை இல்லை மறுபடியும் ஏதாவது பாட்டிலில் வைத்து அடைத்து வைத்து விட்டால் நான் மறுபடியும் நூறு ஆண்டுகள் வெளியே வரமுடியாது.

இப்போது வெளியே வந்தாலும் உனக்கு உருவம் தான் இல்லையே. நிழலாகத் தானே இருக்கிறாய்?

ஆமாம் அடுத்த நூறு ஆண்டுகள் கழித்து நான் வெளியே வந்து மட்டும் என்ன சாதிக்கப் போகிறேன். எல்லோரும் நிழலாகத்தான் சுற்றிக் கொண்டு இருப்பார்கள்.

எதுக்கு அப்படிச் சொல்கிறாய்?

நானே இது போல் நிறைவேறாத ஆசைகளோடு நிழலாக மாறியதே உன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வந்தேன்.

இப்போது இருக்கும் மக்களுக்கு நிறைய ஆசைகள் இருக்கிறது. அதை நிறைவேற்ற தவறான வழியில் போய் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு செத்துப் போகிறார்கள்.

நீ எந்த நூற்றாண்டைச் சேர்ந்த நிழல் 🌚 நீ ஏன் உலகத்தில் இத்தனை பேர் இருக்கும் போது என்னைத் தேர்ந்தெடுத்தாய்?

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு அழகான பெண் நான் ஒரு நாட்டின் இளவரசி 👸👑.

எனக்குப் பருவ வயதில் என்னுள் நிறைய மாற்றங்கள் அதற்கு அப்புறம் தான் எனக்கு நிறைய
பிரச்சனை வரத் தொடங்கியது.

நான் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு என்னை ஒதுக்கி வைத்தார்கள்.

ஏன் உனக்கு என்னாச்சு?

என் உடலில் மாற்றம் வந்தது என்று சொன்னேன். அது தான் பிரச்சினை ஆகி விட்டது எனக்கு மீசை முளைத்து என் குரல் ஆண்கள் குரல் போல் மாறிவிட்டது.

உருவத்தில் தான் நான் பெண் ஆனால் உள்ளத்தைப் பொறுத்தவரை ஆண் இதில் தான் இளவரசியா? இளவரசனா? என்று நாட்டு மக்கள் தன்னைக் கேவலமாக பேசி விடக் கூடாது என்று என் தந்தையே என்னைக் காட்டில் விட்டு விட்டார்.

என் விதியை நொந்து கொண்டு நான் அங்கே கிடைக்கும் பழங்கள் கிழங்குகள் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தேன்.

அதற்கும் ஒரு நாள் சோதனை வந்தது. என்னை நான்கு கயவர்கள் சீரழித்து விட்டனர். இதற்கு பிறகு உயிர் வாழ விருப்பம் இல்லாமல் நான் என் உயிரை மலை உச்சியில் இருந்து குதித்து உயிர் நீத்தேன்.

எனக்கு நிறைய ஆசைகள் இருந்தது. அது நிறைவேறாமல் இறந்ததும். என் உயிர் போகக் காரணமாக இருந்தவர்களைப் பழி வாங்க வேண்டும் என்று தான் நான் நிழலாகச் சுற்றிக் கொண்டு இருக்கிறேன்.

உனக்கு எப்படி தெரிந்தது அவர்கள் பிறப்பெடுத்து இருக்கிறார்கள் என்று ஏன் இத்தனை ஆண்டுகள் அவர்கள் பிறப்பெடுக்கவில்லையா?

நீ இந்த வீட்டில் இருக்கும் புத்தகத்தில் எப்படி வந்தாய்?

இந்த வீடு தான் நான் பிறந்து வளர்ந்த வீடு.. நீ தான் நான் நான் தான் நீ.. என்று நிழல் சொன்னது.

தேனருவிக்குப் புரியவில்லை. மறுபடியும் நீ ஆரம்பித்து விட்டாயா? நீ உடல் நான் நிழல் என்று.. சரி உனக்கு எப்போது உதவி வேண்டுமோ? நான் செய்கிறேன்.

இப்போது நீ எனக்கு வந்து இருக்கும் சந்தேகத்தை நீகக வேண்டும்.

நான் உன் சந்தேகத்தை நீக்க முடியாது. அது நீயாகவே உணர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும்.

ஏன் இப்படி சொல்கிறாய்?

எனக்குப் பழைய நியாபகம் வந்து விட்டது. நான் போய் கொஞ்ச நேரம் கல்லறைத் தோட்டத்தில் இளைப்பாறி வருகிறேன் என்று கூறிவிட்டு நிழல் நாளைக்கு நல்லா தேர்வு எழுது என்று கூறிவிட்டு சென்று விட்டது.

இதுக்கு மேல் கண்டிப்பாக படிக்க முடியாது என்று தேனருவி படுத்துக் கொண்டாள். ஆனால் கண் தான் தூக்கத்தைத் தொலைத்து விட்டதே. அவன் சொன்ன ஒற்றை வார்த்தையில்.

ஒரு வழியாக உரண்டு பிரண்டு தூங்கி விட்டாள். தேனருவி காலையில் அவளின் அம்மாவின் சுப்பரபாதத்தில் தான் எழுந்து வந்தாள்.

அம்மா ஏம்மா காலையில் உசிரை வாங்குகிறாய்?

கல்லூரி போகவேண்டும் எழுந்து தொலை.. நைட் அத்தனை நேரம் உன் ரூமில் லைட் எரிந்து கொண்டு இருந்தது.

அம்மா நான் படித்துக் கொண்டு இருந்தேன்.

தேனருவி பொய் கூட சொல்லிப் பழகி விட்டாய் நீ நான் வந்து பார்க்கும் போது நல்லா குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்தாய்? யசோதா சொல்லவும்
அப்படியா? அம்மா நான் படிக்கப் படிக்க தூக்கம் வந்து விட்டது அது தான் தூங்கி விட்டேன்.

அதை என்னை நம்பச் சொல்கிறாய்?

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top