Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 346
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 67
பாகம் - 67
தேவ் ஆனந்த் தேவிகா இருவரும் அப்படியே அங்கிருக்கும் சாரு பிரபா வீட்டுக்கும் சென்று அழைப்பிதழ் கொடுக்கின்றனர்.
பிறகு அப்படியே இன்று இதோடு போதும் என்று வீட்டுக்கு வந்து விடுகிறார்கள்.
நாளை மதுரை போக வேண்டும் அதனால் காலையிலேயே வந்து விடுங்கள் மாப்பிள்ளை என்று யசோதா கூறினார்.
சரிங்க அத்தை. ஆர்டர் கொடுத்த நகையும் எல்லாம் வாங்கிட்டு வந்தரலாம். அப்படியே நித்தியா சபரி அந்த ஆலமிட்டாய் அக்கா வீட்டுக்கு போயிட்டு வந்துரலாம் என்று கூறி விடை பெற்று சென்றான்.
காலையிலிருந்து சுத்தி அலைஞ்சது டயர்டா இருக்குமா நான் போய் படுத்து கொள்கிறேன் என்று தேனருவி அவள் அறையில் சென்று படுத்துவிட்டாள்.
அங்கே வந்த நிழலா தேனருவி எனை கண்டுக்கவே மாட்டேங்குற முதல்ல எங்க போனாலும் என்னை கூப்பிடுவ இப்போ என்னை கண்டுக்கவே மாட்டேங்குறாய்.
ஏன் நிழலா உனக்கு என்ன வேணும் இப்போ அதுதான் நீ ரொம்ப குஷியா இருக்கீங்க நல்லா உன் எதிரிகளை நல்லா வச்சு செஞ்சுட்டேன்னு சொன்னியே..
அவன் அதோட விட்டு வெச்சா நல்லா இருக்காதே அவங்களுக்கு இனிமேல் இன்னும் நிறைய இருக்குது சரி நீ தூங்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குது நான் போயிட்டு வரேன்.
நிழலா அட நம்ம வாத்தியார் வீட்ல அந்த விஜயலதா அந்த காமெடி பீஸ் அதோடு விட்டு வைத்திருக்கிறமே இன்னும் ஏதாவது பண்ணனுமே பண்ணுவ இன்னைக்கு வந்துட்டேன் இல்ல எதுக்கு நம்ம கல்லறை தோட்டத்தில் புதுசா சேர்ந்த பேய்களை அழைத்துச் செல்வோம்.
டேய் அப்பர செண்டிகளா என்னடா பண்ணிட்டு இருக்கீங்க சீக்கிரம் எல்லாம் கிளம்பி வாங்கோ உங்களுக்கு இன்னைக்கு ஒரு புது ப்ராஜெக்ட் பத்தி சொல்ல போற எல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வருவீங்களா?
பேய் நிழலா நல்லா அன்னைக்கு அந்த அமைச்சர் வீட்டில் செஞ்ச மாதிரியே இன்னைக்கு ஏதோ பெரிய பார்ட்டி இருக்குது. போய் என்ஜாய் பண்ணிட்டு வரலாம் என்று தங்கள் கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு பறந்து வந்தது.
எத்தனை சுகமாக இருக்கிறது இறக்கை இல்லாமல் பறப்பது..
எவன்டா வெண்ண ராத்திரி நேரத்துல குசு குசு குசு குசு குசு என்று பேசிட்டே வருது பேசாம வாங்கடா நம்மை நம்பி நம்ம நாட்டாம நிழலு ஒரு வேலைக்கு கூப்பிடுது நா அவர் சொன்னதை விட எதிர்பாராத விஷயங்களை செஞ்சு நல்ல பேர் வாங்குற வழி பாப்போம்.
அதனால உங்களோட வாய வச்சிட்டு கம்முனு வாங்கடா. .
மச்சான் நீ என்ன காமெடி பண்ணிட்டு இருக்குற நாம என்ன பாஷையில் பேசணும்னு நம்மளுக்கே புரியாது இதுல நாம போய் வேலை செஞ்சு அதை பார்த்து மத்தவங்க பாராட்ட போறாங்களா ?எல்லாம் கிறுக்கு பையன் கூட சேர்ந்துட்டமே நாமளும் அவங்க பின்னால நடக்க வேண்டியது தான்.
கால் இல்லையே மச்சான் நீ எப்படி நடப்ப அட டேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்டா.
அதெல்லாம் நீ மனுசனா இருக்கும்போது ஆனா நீ இப்ப பேயா இருக்கிற அதனால எதுவா இருந்தாலும் யோசிச்சு பேசணும் வாங்கடா.
எல்லாரும் வந்து லைனா என் பின்னாலே பறந்து வாங்க நான் இப்போ ஒரு பெரிய அரண்மனைக்கு உங்களை கூப்பிட்டு போகப் போறேன்.
நெஜமாவா சொல்றீங்க நான் எல்லா அரண்மனை வே பார்த்ததே இல்லை.
டேய் பொய் சொல்லாதடா சுந்தர் சி படம் எடுத்தார்ல அரண்மனை பார்ட் 1 பார்ட் 2 அதில் எல்லாம் நம்ம ஜாதி தான்டா கலக்குது. எத்தனை படி இருந்தது அந்த படிக்கட்டில் சொய் சொய் சொய்னு வழுக்கி வழுக்கி விளையாண்டமே மறந்து போச்சா? உனக்கு இன்னைக்கு அதுக்கு பின்னால நாம் அப்படி விளையாடவே இல்லை. அதனால இன்னைக்கு போயி அந்த விளையாட்டெல்லாம் விளையாடுவோம் வா.
நீங்க ரெண்டு பேரும் காமெடி பண்ணது போதும் நாம மத்தவங்கள வச்சு பண்ணனும் நாமளே பண்ணிட்டா பேய்கள் பயமே இல்லாம போயிரும்.
இப்ப மட்டும் வெளங்குது ஏன் நிழலு நீ ஆரம்பத்துல இருந்து என்னென்ன எல்லாம் பண்ணிட்டு இருக்க தேனருவிங்கற ஒரு பொண்ணு கிட்டா நீ பம்மிட்டு வாழ ஆட்டிட்டு இருக்கிறது எங்களுக்கு தெரியாது நினைச்சிட்டியா?
தேனருவி என்னோட வம்சத்துல பிறந்த பொண்ணு அதனால நான் அவளுக்கு பயந்து இருக்கிறேன். எனக்கு இப்படி சுதந்திரமா வெளியில வர்றதுக்கு வழி இல்லாம ஒரு மந்திரவாதி என்னை ஒரு புக்கு குள்ள வச்சு மூடிட்டு தான் அதையே லேமினேஷன் பண்ணி வச்சுட்டாங்க. நான் எப்படி வெளியில வந்தேன் தெரியுமா?
அந்த புள்ளையை ஏதோ அந்த புக்கை எடுத்து படிக்க ஆரம்பித்தது அப்பனா வெளியில் வந்தேன் .அதனால எனக்கு சுதந்திரம் கொடுத்ததினால் நான் அந்த பொண்ணுக்கு உதவியா இருக்கிற அது தெரியுமா? உனக்கு இப்போது என்ன என் கூட வர்ற பிரியம் இல்லை என்னை பழிச்சுட்டு இருக்காதே.
தாராளமா போய் நீ அங்க அந்த கல்லறை குழியிலேயே படுத்துக்கோ.என்னை எல்லாம் நீ வந்து காமெடி பீஸ் என்று நினைத்து பேசக்கூடாது .நான் எத்தனை சாதனை பண்ணி இருக்கேன் தெரியுமா உனக்கு. சொன்னா புரியுமா ?நீ ஏதோ சிட்டில இருந்ததனால் தான் உனக்கு தெரியல கிராமத்து பத்தி எல்லாம் எங்களுக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்குது ஓவரா பேசிட்டு இருந்தேன் வச்சுக்கோ நிழலுக்கு நிழல் பண்ணி விட்ருவேன் உன்னை.
சரிடா நண்பா இந்த ஒரு தடவை மன்னிச்சுக்கடா நானும் இதுக்கு முன்னால இருந்த பக்கம் தான் எல்லா பேய் படத்தையும் எடுக்க வருவாங்களா அந்த ஆர்வக்கோளாறுல பேசிட்டு இருந்தேன் மச்சான்.
விஜயலதா நாம என்ன முயற்சி பண்ணாலும் இவ்ளோ ஸ்பீடா அவனுக்கு கல்யாணம் ஆகுதே நம்ம தங்கச்சி வராட்டி பரவால்ல ஆனா அந்த கல்யாணத்துல ஏதாவது குழப்பம் பண்ணவனுமே நாம என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
நம்ம மாமியா நடந்து வரும்போது அந்த இடத்தில் எண்ணெய் ஊற்றி விடலாமா ?இடுப்பு கட்டாயிருச்சுன்னா அதே சாக்கா வச்சு இந்த பொண்ணு வந்த நேரம் சரியில்ல அதனால இப்போதைக்கு கல்யாணத்த பண்ணாம விட்டுடுவாங்க என்று யோசித்து இருந்தாள்.
நிழலா எல்லா அங்க கூட்டமா இருந்தது அடடா இன்னைக்கு நாம காமெடி பண்ணலாம்னு பார்த்தா இவளே காமெடி பண்றா சரி எண்ணெய் ஊத்துறான்னு பாக்கலாம்.
அதே போல் கிருஷ்ணவேணி அறைக்கு முன்பு விளக்கெண்ணையை கொண்டு வந்து ஊத்தி வச்சுட்டா.
நிழல்கள் எல்லாம் அதை அப்படியே உறிஞ்சி கொண்டு போயி விஜய் லதா கால் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிற இடத்துல ஊத்திக்கிட்டது.
அது தெரியாம விஜயலதா அந்த எண்ணெய் மேலையே கால வச்சு விடவும் வழுக்கி விடவும் மாட்டுக்கு அரைத்து வைத்திருந்த புண்ணாக்கு சட்டிக்குள் விழுந்து விட்டாள். இந்த நாத்தம் நாறுகிறது என்று அவள் மேல் கொட்டி இருந்த பருத்திக் கொட்டை புண்ணாக்கு பூராவும் அவள் மேலயே கொட்டி விட்டது.
அங்கிருந்து எப்படியோ எந்திரித்தவள் திருப்பியும் கால் வழுக்கி விட்டு மக்காச்சோள மாவில் விழுந்து விட்டாள். அவள் முகத்தைப் பார்த்து அந்தப் பக்கமாக வந்த வனிதா யாராவது வீட்டில் இருந்தால் வெளியில வாங்க நம்ம வீட்டுக்கு புது வகையா ஒரு மிருகம் வந்து இருக்குது என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.
அடப்பாவி ஒரு கை வந்து கீழே விழுந்தவளைத் தூக்கி விடாம என்னை பார்த்து புதுசா ஒரு மிருகமுன்னு சொல்றாளே என்னை பார்த்தா அப்படியே இருக்குது. இந்த வாயும் தொறந்து பேச முடியலையே, பூராவும் வாய்க்குள் எல்லாம் போய் இருக்குது. என்ன பண்ணுவது என்று தெரியவில்லையே. என்று விஜயலதா முழித்துக் கொண்டிருக்கும் போதே.
வனிதா சத்தம் போட்டதில் வீட்டுக்குள் இருந்தவர்கள் அனைவரும் வெளியே வந்தனர் வெளியே வந்தவர்கள் வனிதா யாரைப் பார்த்து இப்படி கத்துன அந்த திசையில் அங்க பாருங்க அங்க மாட்டு கொட்டைக்கு பக்கத்துல ஒருத்தர் பேய் மாதிரி இருக்குது பேய்க்கு கால் இருக்கு அதெல்லாம் இது நாலு கால் இருக்குது பாருங்க அப்போ நாலு கால் மிருகம் தான் இருக்கு இந்த மிருக புதுசா இருக்குது.
நான் இதுக்கு முன்னால பார்த்ததே இல்லை டிஸ்கவரி சேனல் கூட வராத புது மிருகம் எனக்கு பயமா இருக்குது.
என்ன நீ புதுசா சொல்ற பக்கத்துல இருக்குற காட்டுக்குள் இருந்து நரி தப்பிச்சிட்டு வந்துருச்சோ? இவ்ளோ பெரிய நரி நானும் பார்த்ததே இல்லை என்று வானதி சொல்லிக்கொண்டே..
என்னுங்க எல்லாரும் பாத்துட்டு இருக்கீங்க தோட்டக்காரரே அந்த அங்க இருக்குற அந்த பெரிய தடி எடுத்துட்டு வாங்க நல்ல மொத்திவிடலாம் இல்லாட்டி அது நம்ம தூங்கிட்டு இருக்கிற நேரம் வீட்டுக்குள்ள வந்து நம்மள எல்லாம் கடிச்சு வச்சிட்டா என்ன பண்றது.
சரிங்க அம்மா இதோ கம்பு எடுத்துட்டு வர்றாங்க .டேய் மாடசாமி ஒரே பக்கம் போகாதீங்கடா அப்படியே ரவுண்டு கட்டி போகலாம் இல்லாட்டி அது தப்பிச்சு போயிரு நாம ஏமாந்து இருக்கிற நேரத்துல வந்து கடிச்சு வச்சு என்ன பண்றது விஷம் ரொம்ப அதிகமா இருக்கு டா பார்த்த புது வகையான விலங்கா தெரியுது.
என்ன பக்கத்துல போக போக ஒரே நாத்தமா இருக்குது அடடா மாட்டுக்கரைச்சி வச்சிருந்தது பூரா வந்து கவுத்து வெச்சி இருக்குது நல்லா சாத்துங்க வாங்கோ பெரிய போடா டேய் அந்த மண்டை பார்த்து போடுடா.
அப்பத்தான் அது நகராம அதே இடத்தில் சுருண்டு விழுது, பாம்பு அடிக்கும்போது நாம் எப்படி மண்டை பார்த்து போடுறோம் அது மாறியே தான் நல்ல மண்டை பார்த்து போடு .
ஒருவன் மண்டை பார்த்து போடும்போது விஜயலதாவினால் பேசவும் முடியவில்லை. அதே சமயம் அந்த அடி நல்ல மண்டைல விழுக பொத்து என்று கீழே விழுந்து விட்டாள்.
டேய் மாடசாமி இருடா விழுந்துருச்சு உயிர் கீது போயிருச்சுனா அப்புறம் கேசாகி வனவிலங்குகளில் இருந்து வந்துருவாங்கடா..
ஓ இது வேற இருக்குதா சரி பக்கத்துல போய் பாக்கலாம் வாங்க முதல்ல அந்த தொட்டியில் இருந்து கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்கடா..
மாடசாமி அதுக்கு முன்னால கயிறு எடுத்துட்டு வா. தண்ணீர் தெளித்து அதற்கு மயக்கம் தெளிஞ்சுருச்சுன்னு என்ன பண்றது அதனால கயிறு முதல் கட்டிடலாம்.
அப்புறம் தண்ணி ஊத்தி எந்த மாதிரி விலங்கு என்று பார்க்கலாம் நாம் கட்டி வைத்துவிட்டு அப்புறம் வனத்துறைக்கு தகவல் சொல்லிடலாம் அவங்க வந்து கூண்டுல வச்சு புடிச்சிட்டு போயி வனத்தில் விட்டுடுவாங்க...
தொடரும்...