• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நீ உடல் நான் நிழல் - 66

Administrator
Joined
Sep 3, 2024
Messages
345
நீ உடல் நான் நிழல்
பாகம் - 66



இரண்டு ஜோடிகளும் தனித்தனியாக காரில் செல்வதைப் பொறாமையோடு பார்த்து இருந்தாள். சுமதி இவளுகளை பழி வாங்காமல் விடக்கூடாது இவளுக பெரிய ஜமீன்தார் பேத்தியாம் பார்த்தாலே தெரியுகிறது ஏமாற்றுகாரிகள் என்று என்னம்மா வாய் கிழிய பேசுகிறார்கள்.

உங்களை மானம் கெட வைக்கவில்லை நான் சுமதி இல்லை என்று இவள் சினிமா வசனம் பேசிக் கொண்டு இருந்தாள்.

நிழல் அவள் பக்கத்தில் தான் நின்று கொண்டு இருந்தது. அடப் பேக்குச்சி நான் இருக்கும் வரைக்கும் நீ அவுங்க பக்கத்தில் கூடப் போக முடியாது. உன்னை எல்லாம் எறும்பு விட்டு கடிக்கவிட்டு இருக்கக் கூடாது. நல்ல பெருச்சாளி விட்டு கடிக்க வைத்து இருக்க வேண்டும்.

அங்கே சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறிய சுமதி ஒரு அட்ரஸ் சொல்லி அங்கே போகச் சொன்னால் அட இது நம்ம ஏரியாவாச்சே என்று நினைத்த நிழல் அந்த மந்திரவாதியே
எங்கள் இடத்தில் வந்து தான் வரம் வாங்கிட்டு போகிறான். அவனிடம் போகிறாயா? போ

இதுக்கு மேலே நீ சுமதி இல்லை செமதி நீ தொலைந்தாய் அச்சோ இரவுக்கு வேற கொத்தவரங்காயை மஜால் செய்ய வேண்டும். கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தால் இந்த கொசுறு மண்டைச்சி தானா தலையைக் கொண்டு வந்து தண்டவாளத்தில் விடுகிறாள் .

இவளை எப்படி கண்டும் காணாமல் போவது சரி
ஆட்டோ டிரைவர் ரூட் மாறி போகிறானே ஆனால் இந்தப் பக்கி பன்னாடை கொசுறு தலைச்சிக்குத் தான் தெரியவில்லை .என்று ஆட்டோவின் மேற்கூரையில் படுத்துக் கொண்டு போகும் வரும் பைக்காரர்களை திட்டிக் கொண்டு வந்தது.

இது என்ன ரோடா இல்லை ஒவ்வொரு இடமும் சவக்குழி போல் இருக்கிறது. டேய் முண்டக் கன்னி உன்னால் நான் எல்லாம் ஏரோப்ளேன் இல்லாமல் வானத்தில் பறப்பவன் இப்படி ஆட்டோ மேலே போகவேண்டி இருக்குதே.

நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நல்லவர்களுக்கு
என்று ராகம் போட ஆரம்பித்து விட்டது. நிழல் ஒரு புளியமரத்தை கிராஸ் செய்யும் போது அங்கு தொங்கிக் கொண்டு இருந்த ஒரு பேய் நீ எல்லாம் ஆட்டோவில் ஏறிப் போகிறாயே உனக்கு லைசென்ஸ் இருக்கிறதா?

ஏன் எனக்கு லைசென்ஸ் இல்லாட்டி என்னவாம்.

ஐயோ அங்கே ஒரு போலீஸ் பேய் இருக்கிறது. அது லைசென்ஸ் இல்லாத நிழல் பேய்களிடம் வசூல் செய்கிறது அது தான் நீ மாட்டிக் கொள்ளாதே இப்போதே இறங்கி ஓடி விடு என்று நிழலைச் சொல்ல.

ஏய் யாருகிட்ட நான் யார் தெரியுமா? கல்லறைத் தோட்டத்தில் நாட்டாமை என்று நிழல் சொல்ல,

என்னது கல்லறைத் தோட்டமா?

ஆமா இதுக்கே வாயைப் பிளக்கிறாயே கல்லறைத் தோட்டத்தில் கல்லூரி இருக்கிறது தெரியுமா? அதில் நான் தான் எச் .எம். வா வா எவன் என்று சொல் அங்கே என் கல்லூரியில் அவனைக் கொண்டு போய் வாட்ச்மேன் வேலைக்கு வைத்து விடலாம்.

ஏன்? வாட்ச்மேன் வேலை அவர் போலீஸார் தெரியுமா?

அது உயிரோடு இருக்கும் போது இப்போது அவரும் நம்மைப் போல் ஒரு ஆவி.

இருந்தாலும் மரியாதை வேண்டும் அல்லவா?

மரியாதை எல்லாம் இல்லை. சொரியாதை தான் கொடுக்க முடியும்.

பாஸ் நீங்க பேசும் பாசை எனக்குப் புரியவில்லை.

அடப் பன்னாடை பக்கி எனக்கே புரியவில்லை. இந்த ரைட்டர் ஜி
எதை எதையோ? டைப் செய்து வைக்கிறது. அதையும் படித்து விட்டு எனக்கு எத்தனை பேன்ஸ் இருக்கிறார்கள் தெரியுமா??

அப்படீனா எனக்கும் ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்க நிழல் ஜி..

கொய்யால என் கிட்டவே சான்ஸ் கேட்கிறாயே சரி இப்போது நான் ஒரு வேலையா போகிறேன் என் கூட வா உன் பர்பாமென்ஸ் பார்த்துட்டு நான் ரைட்டர் ஜி கிட்ட உனக்கு சீன் கேட்கிறேன்.

ஆட்டோ ஒரு சந்தில் போய் நின்றது. இது என்னடா மச்சா சந்துக்குள் வந்து நிறுத்துகிறான். இவள் என்ன ஒரு பொந்துக்குள் இறங்கி போறா வாடா நாமளும் போய் பார்க்கலாம்.

இதென்னடா தலையை விரித்து போட்டு எல்லாம் ஆடுகிறது.

பாஸ் இது தான் பப்..

பப் அப்படீனா என்னாடா இது புது பேரா இருக்குது.

பாஸ் போதை ஊசி போட்டுக் கொண்டு கிப் காட்டி ஆடுகிறது தான் பப்..

ங்கொய்யால நம் கல்லறைத் தோட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் இங்கே தான் டிரெயின் எடுத்து வந்து இருப்பாங்களோ?

பாஸ் சிங்காரி சரக்கு நல்ல சரக்கு சும்மா கும்முனு ஏறுது..

அடேய் காலம் ரொம்ப கெட்டுப் போச்சுடா நான் வந்த வேலையை மறந்தே போயிட்டேன். எங்கே அவ என்று இப்போது சுமதியை தேடியது.

அவள் ஒரு டேபிளில் அமர்ந்து கொண்டு ஒரு மந்திரவாதியோடு பேசிக் கொண்டு இருந்தாள்.

அட நம்ம குடுகுடுப்பி இங்கே என்ன செய்கிறான். போன வாரம் நம்ம தோட்டத்தில் எலும்புக்கூடு
பொறுக்கிட்டு இருந்தானே. இன்னைக்கு கோட்சூட் போட்டு வந்து என்ன செய்கிறான்.


சரி இரண்டு பேருக்கும் நடுவில் போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்று இப்போது குடுகுடுப்பி மூக்கின் உள்ளே ஒரு நூலை விட்டது. அவன் தும்மிய தும்மலில் அவனது மீசை கழண்டு விழுந்து விட்டது.

சுமதி காதுக்குள் ஒரு பெரிய விசில் சத்தம் கேட்டது. அவளோ காதை பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டு இருந்தாள். போச்சே என் காது அட நாய்களா? அந்தப் பால் குக்குர் விசிலை நிறுத்துங்கடா என்று.. அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று எதிர்க்கே உட்கார்ந்து இருந்த குடுகுடுப்பி சொல்ல சுற்றிலும் இருந்தவர்கள். ஆமா நீ யார் உன்னை இதுக்கு முன்பு இங்கே பார்க்கவே இல்லை உன் கிட்ட இந்த பப்புக்கு வருகிற அடையாள அட்டை இருக்கிறதா?

பாஸ் நான் சொன்னேன் இல்லை எல்லா இடத்திலும் இப்படித்தான் அடையாள அட்டை கேட்பாங்க நல்லவேளை நம்ம இவுங்க கண்ணுக்குத் தெரிய மாட்டோம்.
அதனால் இப்போது போலீஸ் வந்தாலும் பிரச்சினை இல்லை என்று கூறியது.

அதே போல் கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்தது. அங்கே இருந்த அத்தனை பேரையும் அள்ளிக் கொண்டு போனது. அது தான் இப்போது போதை வஸ்துகளை
உபயோகிப்போர் அனைவரையும் கைது செய்கிறார்களே.. அதில் இந்த சுமதியும் ஒரு ஆள் குடுகுடுப்பி வெளியே அந்த வேடம் ஆனால் பப்பில் தான் போதை வஸ்து விற்று பெரிய ஆள் அவன் இப்போது கூண்டுக்குள்ளே போய் விட்டாள்.

நிழல் வந்த சோலி முடிந்தது என்று இப்போது கிளம்பும் போது
புதுப் பேயை அழைத்துக் கொண்டு சென்றது. நீ வருகிறாய் ஆனால் உனக்கு அப்ரண்டீஸ் வேலை தான் முதலில் நீ செய்யும் வேலையில் இம்ப்ரெஸ் ஆனால் தான் கன்பார்ம் செய்யப்படும்.

தேவ் ஆனந்த் தேனருவி கார்முகிலன் பூவிழி அனைவரும் மாலுக்குச் சென்று முதலில் தேவையான பொருட்களை வாங்கி விட்டு அப்படியே புதுசா
ரிலீஸ் ஆன படத்திற்குச் சென்றனர்.

படம் எங்கே பார்த்தார்கள் அவுங்க அவுங்க ஜோடிப் புறாக்களைத் தான் கண்ணால் கதக்களி செய்து கொண்டு இருந்தனர்.

பிறகு ஒரு ஐஸ்கிரீம் கடையில் நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு தேவ் ஆனந்த் கார்முகிலனைப் பார்த்து சரி நான் வீட்டில் பேசி விட்டு சொல்கிறேன் என்று இப்போது கூறிவிட்டு அவர்கள் இருவரையும் தனது காரில் அமரவைத்து அழைத்து வந்தான்.

இதற்கிடையே கார்முகிலன் பூவிழியை வீட்டிற்கு போனதும் போன் செய்ய வேண்டும் என்று கூறித்தான் அனுப்பி வைத்தான்.

தேவ் ஆனந்த் பூவிழி உனக்கு சம்மதமா நான் உன்னைக் கேட்காமல் கார்முகிலன் அப்பா அம்மா கூடப் பேசி விட்டேன்.

அதெல்லாம் அவ எப்பவே ஆள் பிலாட் ஆகி விட்டாள். நம்மள மாதிரி எல்லாம் இல்லை.

அக்கா போக்கா நீ முன்னால மாமா பக்கத்தில் உட்கார்ந்து கொள் போ என்று அவளை விரட்டி விட்டாள்.

அன்றைய இரவு நிழலா தன்னோடு மற்ற நான்கு நிழல் அழகிகளை அழைத்துக் கொண்டு காத்தவராயனின் காட்டுப் பங்களாவில் அவனுக்காக அவனின் கூட்டாளிகளுக்காக காத்து இருந்தது.

ஒரு டாட்டா சுமோ வந்தது. அதில் தான் அந்த அல்ப்ப அல்லக்கைகள் அனைவரும் இறங்கி முழுப் போதையோடு வந்தனர்.

மச்சான் மல்லிகைப் பூ மணம் சொல்லுது எல்லாம் இளம் தான் இருப்பாங்க இப்பவே சில் சில் சிகா தான் போ எனக்கு அப்படியே குச் குச் என்று ரயில் ஓட்ட வேண்டும் போல் இருக்கிறது.

இந்த கொசுபத்தி தலையன் எதுக்கு இப்படி பைத்தியம் மாதிரி
மண்டையை ஆட்டுகிறான். அவன் மண்டையை கழட்டி கொடுத்து விடலாம் அதுவே திருவோடு மாதிரி தான் இருக்கிறது என்று நிழலா சொல்ல இப்போது அவன் யார் இப்படி என் மீது காதல் கொண்டு பாடுவது என்று கேட்டு வைத்தான்.

வாங்கடா தீவட்டிகளா உங்களுக்கு எல்லாம் சின்ன வயசுப் பெண்கள் கேட்கிறதா? அது இருந்தால் தானே அதை இன்றைக்கு ஆப்ரேஷன் செய்து விடுகிறோம் என்று நிழலா தன் சகாக்களை அழைத்துக் கொண்டு உள்ளே இழுத்து சென்று ஒரு படுக்கையில் படுக்க வைத்து ஆண் என்று ஆடும் முக்கியமான நரம்பை ஆசிட் ஊற்றி அழித்தது.

அய்யோ எரியுதே போச்சு என் கு** சு.. இனி நான் என்ன செய்வேன் என்று புலம்ப டேய் மூடிட்டு படு இல்லாட்டி பொம்பளையா மாத்தி விடுவேன் என்று பயம் காண்பித்தது.

இனி பெண்களை பாலியல் சீண்டல் செய்பவர்களை எல்லாம் இந்த மாதிரி தான் நாங்கள் தேடிச் சென்று ஆசிட் ஆப்ரேஷன் செய்வோம் என்று நிழலா எல்லாம் சபதம் எடுத்தது.

அடுத்து வந்த நாட்களில் கல்லூரியில் தேர்வு தொடங்கியது. தேர்வு எழுதியதும் தேனருவி வீட்டிற்கு வந்து விட்டாள். ஒரு பத்து நாட்கள் தேர்வு முடிந்ததும் தேனருவியை அழைத்துக் கொண்டு தேவ் ஆனந்த் கல்லூரிக்குச் சென்றான்.

அங்கே அனைவருக்கும் இருவரும் சேர்ந்தே பத்திரிகை வைத்தனர். அப்படியே தேனருவி தனது தோழிகள் சில்பா மலர்விழி இருவரின் வீட்டிற்கும் சென்று பத்திரிகை வைத்தனர்.

தேவ் ஆனந்த் தேனருவியை அழைத்துக் கொண்டு திருச்சி சென்றான். முதலில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு இப்போது அங்கே இருக்கும் கனவுகளின் தோழி ஆதிரா வீட்டிற்கு சென்றார்கள். திருமணப் பத்திரிகை வைப்பதிற்கு தேவ் ஆனந்த் அவர்களின் வீட்டில் உள்ளே சென்றதும் அவர்களை வாய் நிறைய வரவேற்ற தோழி அவர்களுக்கு பலகாரம் கொடுத்து உபசரித்தாங்க..

அப்படியே தேனருவி தேவ் ஆனந்த் இருவரும் ஒரு தாம்பூழத் தட்டில் பட்டுச் சேலையும் வேட்டியும் வைத்து பூ பழங்களோடு பத்திரிக்கையும் வைத்து குடும்பத்தோடு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top