Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 344
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 65
பாகம் - 65
கார்முகிலனின் பி ஏ சுமதியை பழிவாங்கும் நோக்கில் நிழல் அவள் மேல் எறும்புகளை ஏவி விட்டது .அவளுக்கு சுள் என்று கடித்தது எறும்புகள் அவளோ ஒரு எறும்பை நசுக்கினால் பத்து எறும்புகள் அவள் உடலில் ஊறியது சிறிது நேரத்தில் அனைத்தும் மாயமாய் மறைந்து விட்டது.
அவள் முகம் முழுவதும் வீங்கி விட்டது. உடனடியாக ரெஸ்ட் ரூம் சென்று தண்ணீர் கொண்டு கழுவினால் அப்போது அவளது முகம் எங்கும் சிவப்பு சிவப்பாக தடித்து விட்டது.
என்னது எண்ணமோ புரியல ஏன் இப்படி நடக்குது எங்கிருந்து வந்து எல்லாம் கடிச்சிருக்கு என்ன கடிச்சதுன்னு தெரியல இன்றுஅந்த பட்டிக்காடு வந்து கடுப்பேத்துச்சு எப்பவும் என்னை திட்டாத கார்முகிலன் இன்னைக்கு எல்லாரும் முன்னால என்னை திட்டிட்டான்.
அவள் ரிசப்ஷனுக்கு சென்று இன்று அரை நாள் விடுமுறை வேண்டும் என்று கேட்கச் சென்றாள். ஆனால் அவளது வேலையை விட்டு தூக்கி இருந்தார்கள்.
அத்தோடு அவள் இத்தனை நாள் வேலை செய்ததற்கான பணமும் அதிலிருந்து .அவளோ? அதிர்ச்சியோடு எதற்காக என்னை வேலை விட்டு தூக்கினார்கள், என்று அங்கே அவர்களோடு வாதிட்டுக் கொண்டிருந்தாள்.
அவர்கள் எனக்கு தெரியாது எம் . டி தான் உன்னை வேலைய விட்டு தூக்க சொன்னார். எதுவாக? இருந்தாலும் அவரிடமே விளக்கமாக போய் கேட்டுக்கோங்க என்ற பதில் தான் வந்து கொண்டிருந்தது.
எனக்கு என்ன பயமா? நான் போய் கேட்கிறேன். எதனால் என்னை வேலை விட்டு தூக்கணும். நான் என்ன தப்பு பண்ண ஓ இன்னைக்கு வந்த அந்த பட்டிக்காடு முன்னால் அவரோட கெத்த காமிக்கிறாரா?
நான் இத்தனை நாள் வேலை செஞ்சு என்னை திரும்பி பார்க்காத கார்முகிலன் அந்த பட்டிகாட்டைப் பார்த்ததும் அப்படியே கவுந்துட்டான். பாத்தரலாம் .
நானா? அந்த பட்டிக்காடா? என்று வீர வசனம் பேசிக்கொண்டு இப்போது எம்டி அறை நோக்கி நகர்ந்தால் சுமதி தான் கம்பெனியின் முதலாளி என்பது போல் கதவை தட்டாமலே உள்ளே சென்று விட்டாள் .சென்றதோடு மட்டுமல்லாமல் முகில் என்னையே வேலைய விட்டு நீங்க எப்படி நீக்கலாம் என்று சத்தம் போட்டாள்.
அதற்கு கார் முகிலன் அவளை மைண்ட் இட் திஸ் ஈஸ் மை பிளேஸ்.. நான் தான் எம். டி நீ இல்லை. இத்தனை நாட்கள் உன்னை வேலை விட்டு தூக்காமல் இருந்ததே உன் குடூம்பத்தை கருத்தில் கொண்டு தான், ஆனால் இன்று என் ஏஞ்சல் அவளை அத்தனை தரக்குறைவாக பிஹேவ் செய்கிறாய்? உனக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கெட் லாஸ்ட் என்று கத்தினான்.
மை ஏஞ்சல்ஸ் என்று சொன்னது சுமதிக்கு அப்படியே தகதகவென்று எரிந்தது. அவளோ பூவிழியைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்று இருந்தவள். அது தான் வேலையை விட்டு தூக்கியாச்சு இவளைச் சும்மா விட்டுச் செல்வதா? என்று நினைத்து அவள் அருகில் சென்றவள் என்னடி பெரிய இராஜங்கத்தை எதைக் காண்பித்து வளைத்து போட்டாய்?
நானும் மூன்று வருடமாய் எல்லாமே எங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. அது நீ இப்போது தான் வந்து இருக்கிறாய்? அது தான் அவனுக்கு என்னைப் பிடிக்காமல் உன்னில் விழுந்து விட்டான். உன்னையும் என்னைப் போலவே கழட்டி விட்டு விடுவான். என்று இல்லாததும் பொல்லாததும் சொல்லி விட்டு திரும்பும் போது சாரி மேடம் உங்கள் மீது நான் தெரியாமல் தான் கை தவறி ஜூஸ் கொட்டி விட்டேன். அதற்கு எனக்கு இத்தனை பெரிய தண்டனையா?
என்று நல்லவள் போல் வேடமிட்டாள்.
பூவிழிக்கு குழப்பமாக இருந்தது. இவள் நல்லவளா? கெட்டவளா?
தேனருவிக்கு சுமதி மேல் நிறையவே கோபம் வந்து விட்டது. இங்கே பாருங்கள் அது தான் கார்முகிலன் உங்களை வேலையை விட்டு தூக்கியாச்சு தானே இன்னமும் இங்கே என்ன வேலை என்று சொல்லவும்.
ஹலோ உங்க வேலை என்னவோ? அதை மட்டும் பாருங்கள் என்று பேசுவதைக் கேட்டதும். தேனருவிக்கு சுள் என்று கோபம் வந்து விட்டது.
யாரைப் பார்த்துடி வேலையைப் பார்க்கச் சொல்கிறாய்? மாதச் சம்பளத்திற்கு வேலை செய்யும் உனக்கே இத்தனை திமிர் இருந்தால் என்று சொல்லி நிறுத்தி விட்டு தேவ் ஆனந்த் எங்கே என்று பார்த்தாள்.
ஆமா நான் மாத சம்பளம் தான் ஆனால் நீ அன்றாடம் காய்ச்சியா? என்று மரியாதை காற்றில் பறந்தது.
நான் யார் என்பதை தெரிந்து நீ என்ன செய்யப் போகிறாய்? நீ தவறு செய்தாய் அதற்கு கார்முகிலன் வேலையை விட்டு தூக்கினார். ஆனால் நீ தேவை இல்லாமல் என் தங்கையை எதற்கு காயப்படுத்துகிறாய்??
அக்காளும் தங்கச்சி மா இப்பவே ஆளுக்கு ஒரு ஆம்பளை தேடிட்டீங்க இப்படியே என்ன ஹோட்டல் போக போறீங்களா என்று சுமதி இளக்காரமாக கேட்டாள்.
ஏய் உனக்கு இது தாண்டி மரியாதை இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினே பல் பூரா உலுத்தி கையில் கொடுத்து விடுவேன்.
என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் நான் யார் தெரியுமா? தேன் அருவி தேவ் ஆனந்த் அங்கு இருக்கிறார் இல்ல அவர் தான் என் வருங்கால கணவர் அவர் யார் தெரியுமா நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? கேவி குரூப்ஸ் எம். டி தேவகோட்டை ஜமீன்தார்.
நாங்க யார் தெரியுமா? பூவரசன் கோட்டை ஜமீன்தார் பேத்திகள் இந்த விளக்கம் எல்லாம் சொல்லணும்னு அவசியமில்லை. என்ன வேலையா இருந்தா என்ன? பணக்காரரா? ஏழையோ?இருந்த என்ன உன் வேலை பொறுக்கிற வேலையை அதோட நிறுத்திக்கோ. பூவிழி யார் தெரியுமா கார்முகில் பூவிழி கல்யாணம் பண்ணிக்க போறாங்க. என்னம்மா வாய்க்கு வந்ததை பேசிட்டு இருக்குற உங்க மூஞ்சி போய் கண்ணாடியில் பார் எப்படி இருக்குது குரங்கு மாதிரி இருக்குது செங்குரங்கு மாதிரி இருக்குது இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினேன் மவளே தொலைச்சிடுவேன்.
தேனருவி சொன்னதை கேட்டு திகைத்து நோக்கியவள் சாரி மேடம் என்று கூறி அங்கிருந்து சென்றிருந்தாள்.
உண்மையில் தேன் அருவியை பார்த்து பூவிழிக்கு சிரிப்பு தான் வந்தது. நல்ல வேளை அக்கா உன்கிட்ட அடியிலிருந்து தப்பிச்சு போயிட்டா
நீ இவ்ளோ வீரமா பேசுனது என்னால் நம்பவே முடியல.
நான் உனக்காக தாண்டி பேசினேன் ஆமா நீ சும்மாவே வம்பிழுப்பிற்கு போவ இதுல தானா வந்து வம்பு மாட்டுனா சும்மா விடுவாயா?
எங்கடி பூவு ரெண்டு பேரும் எங்க போனாங்கன்னு தெரியல. மொக்க போடுது இல்ல என்று சரிவாடி நாமும் அவர்கள் எங்கே என்று பார்க்கலாம் என்று இருவரும் எழும் நேரம் தேவ் ஆனந்த் கார்முகிலன் இருவரும் ஒரு சேர உள்ளே வந்தனர்.
விழியாலே பேசிக் கொண்டது இரண்டு ஜோடிகளும். சரி வாங்க என்று நான்கு பேரும் கிளம்பினர் இப்போது தேவ் ஆனந்த் தேனருவியைப் பார்த்து இங்கே பாருடி உன் தங்கச்சியும் கார்முகிலனும் அவுங்க காரில் வரட்டும் நாம் இருவரும் ஒன்றாகச் செல்லலாம் என்று சொன்னதும்.
என்னது இப்படி சொல்கிறீங்க எனக்குப் பயமாக இருக்கிறது. அவளை எப்படி அவரை நம்பி விடுவது என்று இப்போது தேவ் ஆனந்தைப் பாவமாகப் பார்த்தாள்.
ஆமா நாங்க இரண்டு பேரும் இத்தனை நேரம் எங்கே சென்றோம் என்று உனக்குத் தெரியுமா?
அது நீங்கள் சொன்னால் தான் தெரியும். நான் என்ன ஸ்கேனிங் மெசினா? எல்லாமே தெரிந்து கொள்வதற்கு.
கார்முகிலன் அப்பா அம்மாவோடு பேசுவதற்கு தான் அவரிடம் ஏற்கனவே கார்முகிலன் சொல்லி வைத்து இருக்கிறார். அது தான் இன்று நேரில் சந்தித்துப் பேச வரச் சொல்லி இருந்ததால் தான் பூவிழியையும் அழைத்து வந்தது.
அச்சோ அம்மாவிடம் என்ன சொல்லி சமாளிப்பது. அம்மாவிற்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது என்று பயந்தவாறே இப்போது பூவிழியைப் பார்த்தாள்.
அவளோ கார்முகிலன் கூட அவனின் காரில் முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
தேவ் ஆனந்த் தான் உன் தங்கச்சி கூட புரிந்து கொண்டாள். நீ தாண்டி ஹனி மக்குப் பெண்ணாகவே இருக்கிறாய்?
யாரைப் பார்த்து மக்கு என்று சொன்னீங்க நீங்கள் வாத்தியாரா? இருந்தா என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லி திட்டுவீங்களா?
பொண்டாட்டி இப்படியே சிலுப்பிக் கொண்டு இருந்தாய் வைத்துக் கொள் அப்புறம் அப்படியே இன்று காலையில் உனக்கு சேலை கட்டும் போது நான் மிஸ் செய்த லிப்லாக் இப்போது இரட்டிப்பாக அரங்கேறி விடும் என்று அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.
அய்யோ வாத்தி எதுக்கு நம் உதட்டையே பார்வையில் மேயுது. இது என்ன புல்கட்டா அப்படியே பாய்ஞ்சு மேய்வதற்கு என்று வறண்டு போன உதட்டில் நாவினால் ஈரப்படுத்தினால் கொஞ்சம் தூரம் சென்றதும் கார் ஒரு மரத்தடியில் நின்றது. அது ஒரு மறைவான இடம் தான் அதனால் தேனருவியின் இதழில்
தேவ் ஆனந்த் சில ஆராய்ச்சி செய்தான்.
ஹனிபால்ஸ் என்று ஹஸ்கி வாய்ஸில் ஏண்டி இப்படி வறண்டு கிடக்கிறது என்று இப்போது நான் என்று கூறிக்கொண்டே அவளின் அதரங்கள் இரண்டிலும் தனது இதழை வைத்தான். அதற்கே தேனருவிக்கு மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு துள்ளல் உடனே கன்னம் இரண்டும் சிவந்து விட.
இமைக்குடைகள் இரண்டும் தோகை மயில் தோகையை கீழே சாய்ப்பது போல் அவளின் இமைக்குடைகள் தாழ்ந்தது.
தேவ் ஆனந்த் மென்மையிலும் மென்மையாக இதழ் ஒற்றல் ஒன்றைக் கொடுத்து அவளை விலக்கியவன்.. காலையில் என்னால் என்னைக் கண்ட்ரோல் செய்யவே முடியவில்லை. ஆனால் இப்போது என் உயிரே நீ டி எனக்கு எப்படா திருமண நாள் வரும் என்று இருக்கிறது.
எனக்கும் தான்க மாம்ஸ் தினமும் கல்லூரி வந்தால் கூட உங்களைப் பார்த்து கொள்வேன். ஆனால் நீங்க அதுக்கும் ஆப் வைத்து விட்டீர்கள்.
நோ தேனு நான் உனக்கு எதிராகச் சொல்லவில்லை. ஆனால் இத்தனை நாட்களை விட இப்போது நம் பேசுவது கூட கண்காணிப்பார்கள். நான் உன்னைத் தினமும் வந்து பார்த்து இது போல் ஏக்கம் தீர்த்து வைக்கிறேன் என்று வாய்க்குள் சிரித்துக் கொண்டே சொன்னான்.
நான் வருவேன் கல்லூரிக்கு நீங்கள் தானே கல்லூரியின் முதல்வர் நான் வருவதைக் கொஞ்சம் கன்சிடர் செய்யலாமே மாமு என்று இப்போது கொஞ்சி கெஞ்சுவது அவள் வேலையாகிப் போனது.
இன்னொரு ஜோடி கையைப் பிடிப்பதற்கே கையைக் கொடுக்காமல் விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தாள் பூவிழி..
எனக்கு கனவு மாதிரி இருக்குடி விழி நீ படிப்பதை நாம் திருமணம் செய்து பிறகு தொடர்ந்து கொள் எனக்கு பிரச்சினை இல்லை. உன் அக்கா திருமணம் முடித்து அடுத்த மூன்று மாதத்தில் நம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கார்முகிலன் சொல்ல அந்திமல்லிப் பூவாய் பூவிழி!
தொடரும்...