Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 343
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 64
பாகம் - 64
தேனருவி சேலை கட்டத் தெரியாதே அதனால் தன் அம்மாவை அழைத்தால். ஆனால் யசோதா மாட்டுக் கொட்டகைக்குச் சென்று விட்டார்.
அவளின் குரல் கேட்டதும் தேவ் ஆனந்த் அவளின் அறைக்குள் சென்று விட்டான். அது தெரியாமல் பிளவுஸ்வுடன் இங்கே பாருங்க மா இந்த மடிப்பு சொருகவே வரமாட்டீங்குது என்றவாறே திரும்பியவள் தன் மேலே உடனே துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு,
ஆமா நீங்க உள்ளே வந்து விட்டீர்கள்.. உங்கள் பெயர் அம்மாவா? முதலில் வெளியே போங்க என்று திரும்பி நின்று கொண்டு சொல்ல.
சேலை கட்டத் தெரியாமல் நீ என்னடி பெண்.. நான் கண்டேனா? நீ சேலை கட்டத்தான் அழைக்கிறாய்? என்று அது தான் நான் இவள் கத்துகிறாளே என்னாச்சோ? ஏதாச்சோ? என்று பயத்தில் பார்க்க வந்தா எதுவோ? பேயைக் கண்டவள் மாதிரி நிற்கிறாய்?
( தேவ் ஆனந்த் பேயே இவளைக் கண்டு தான் தலைதெறிக்க ஓடுது. இவளாவது பேயைக் கண்டு பயப்படுவது.)
என்னவோ? ஏழு ஊருக்கு வாய் நீளுது சேலை கட்டத் தெரியவில்லை என்றால் யூடிப் பார்த்து கட்டிப் பழகு என்று அவளை நிமிர்ந்து பார்க்காமல்
கடகடவென கட்டி முடித்தவன். இப்போது அவளைப் பார்த்து திருப்த்தி அடைந்தவனாக அவள் அறையில் இருந்து வெளியே சென்று அமர்ந்து விட்டான்.
தேவ் ஆனந்த் அவனுக்கு ஒரு உந்துதலில் அவளுக்கு புடவை கட்டி விட்டு விட்டான். இருப்பினும் ஒரு வேளை அத்தைக்கு தெரிந்து இருந்தால் தவறாக நினைத்து இருப்பாரோ? திருமணம் முடித்து அவள் அறைக்குள் செல்வது வேறு இப்போது சென்றது தவறு தானே அதுவும் உடை மாற்றும் போது என்று தனக்குள்ளே பதட்டத்தை வைத்துக் கொண்டு தேனருவி இதை தன் அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று தான் அமர்ந்து இருந்தான்.
யசோதா உள்ளே வந்தவர் இன்னுமா இரண்டு பேரும் ரெடியாகவில்லை என்று சத்தமிட்டுக் கொண்டே தேனருவி அறைக்குள் சென்றவருக்கு ஆச்சரியம்.. ஏய் தேனு பரவாயில்லை நீயாகவே சேலை கட்டி விட்டாயே ஆமா இத்தனை அழகாக உனக்கு கட்டத் தெரியுமா?
அம்மா நான் யூடிப் பார்த்து கட்டிப் பழகிக் கொண்டேன் என்று பொய் சொல்லி விட்டாள். தேவ் ஆனந்த்தை ஓரக் கண்ணால் பார்த்தபடி. அவனுக்கு சிரிப்பு தான் இருந்தாலும் தான் சிரித்து வைத்து அவள் லூசு டாக் அடித்து விட்டாள் என்றால் என்ன செய்வது என்று அமைதியாக அமர்ந்து விட்டான்.
தேனருவி பூவிழி இருவரும் கிளம்பி இருந்தனர். யசோதா பணத்தை கொடுத்தார். தேனருவி இந்த மாப்பிள்ளை கூடப் போய் இருவரும் துணி எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஐம்பது ஆயிரம் கொடுத்தார்.
என்னம்மா இவ்வளவு குறைவா கொடுக்கிறீங்க முகூர்த்த சேலை
எல்லாம் இதுக்குள் முடித்துக் கொள்ளவா? என்று தேனருவி கேட்கவும்.
தேனருவி அது எல்லாம் காஞ்சிபுரம் போய் எடுத்துக் கொள்ளலாம். இது சும்மா வீட்டிற்கு கட்டுவது வெளியே கட்டிச் செல்வது போல் பேன்ஸி சேலைகள் எடுக்கத்தான் கொடுத்தேன். உன் அறிவு ஜீவி தனத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
அத்தை அதெல்லாம் நான் என் செலவில் அவளுக்கு எடுத்துக் கொடுக்கவே விரும்புகிறேன்.
இல்லைங்க மாப்பிள்ளை திருமணத்திற்கு பிறகு நீங்கள் எடுத்துக் கொடுக்கத் தான் போகிறீங்க அதுக்கு முன்னாடி எப்படி உங்களிடம் வாங்குவது.
என்னை பிரிச்சு பார்க்கிறீர்களா? நானும் உங்கள் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்யப் போகிறேன் என்ற உரிமையில் தானுங்க நினைச்சு சொல்கிறேன்.
சரிங்க மாப்பிள்ளை நீங்கள் சொல்வதும் சரியே , எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு பெண்கள் பெற்று ஆளாக்குவது அதுவும் ஆண் துணை இல்லாமல் எத்தனையோ? கடந்து வந்த பாதை மாப்பிள்ளை அது தான் ஒரு பயம் தவறாக நினைத்து கொள்ளாதீங்க.
நீங்க இப்படி பேசுவது தான் வருத்தமளிக்கிறது. ஆனாலும் உரிமை இருக்கிறதால் தான் இவ்வாறு பேசுகிறீர்கள். அது மகிழ்ச்சி அளிக்கிறது.
சரிங்க அத்தை நாங்க கிளம்புகிறோம் என்று அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினான். தேனருவி பூவிழி இருவரும் பின்னால் அமர்ந்து கொண்டனர்.
முதலில் சென்று ஒரு மிகப்பெரிய கட்டிடம் முன்பு தான் கார் நின்றது. அப்போது அங்கே இவர்களுக்காகவே காத்துக் கொண்டு நின்று இருந்தான். கார்முகிலன் அவனைப் பார்த்ததும் பூவிழிக்கு ஆச்சரியம்
அவனை இன்று தான் அழகான தோற்றத்தில் பார்க்கிறாள்.
தன்னவளை பாவாடை தாவணியில் பார்த்தவனுக்கு அத்தனை சந்தோஷம்.. அழகான நீண்ட கூந்தல் என்று அவ அழகில் சொக்கி நின்றவனைப் பார்த்து கேட்டாலே ஒரு கேள்வி இந்தக் கம்பெனியில் தான் நீங்க வேலை செய்கிறீர்களா?
என்னது என்னைப் பார்த்தால் இந்தக் கம்பெனியில் வேலை செய்பவன் போலவா? இருக்கிறது.
தேனருவி தேவ் ஆனந்த் இருவரும் அருகில் வரவும் பூவிழி பேசுவதை நிறுத்தி விட்டாள்.
வில்லன் சார் நீங்க இங்கே என்ன? செய்கிறீங்க என்று தேனருவி சடனா கேட்கவும்.
தேவ் ஆனந்த் தேனருவி இது என்ன பேச்சு எப்போ பார்த்தாலும் வில்லன் என்று பேசுவது. இது அவருடைய கம்பெனி சுற்றிலும் அவருக்கு கீழே வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள்.
வாத்தி இருப்பதை மறந்து விட்டாயே தேனருவி என்று அவளுக்கு அவளே மைண்ட் வாய்சில் பேசிக் கொண்டாள்.
அவர்களை முதலில் உள்ளே அழைத்துச் சென்றான். லிப்டில்
ஐந்தாவது தளத்தை பதிந்து விட்டு இப்போது அங்கே இருக்கும் அவனது அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றான்.
அங்கே அவனுடைய பி. ஏ வாக சுமதி என்ற பெண் இருந்தால் ஏனோ அவளுக்கு பூவிழியைப் பிடிக்க வில்லை.
கார்முகிலன் பூவிழி அருகில் அவளை உரசியது போல் நிற்பதும் அதை அவள் உணர்ந்து சிவந்து போவதையும் பார்த்தவள். ஏதோ அவளுடையதை நேற்று வந்தவள் எடுத்துச் செல்வது போலவே நினைத்தாள். அவளுக்குத் தெரியவில்லை பூவிழி இயற்கையான அழகுக்கு முன்னால் தனது கோட்டிங் போட்ட முகம் எல்லாம் செல்லுபடியாகாது என்று அவளும் இங்கே வேலைக்குச் சேர்ந்து மூன்று வருடங்களாக எப்படி எல்லாமோ? முயற்சி செய்து பார்த்து விட்டாள். எதற்கும் மசியாத அவனை இந்தச் சின்னப் பெண் மயக்கி விட்டாளே என்ற கோபம் தான்.
சுமதி ஜூஸ் கொண்டு வாங்க என்று கார்முகிலன் சொன்னதும். மனதிற்குள் வன்மத்தை வைத்துக் கொண்டு வெளியே சிரித்து எஸ் சார் என்று கூறிவிட்டு இப்போது இருடி பட்டிக்காடு உனக்கு நான் கொடுக்கும் சாக் ட்ரீட் மெண்ட்
துண்டைக் காணம் துணியைக் காணம் என்று ஓடப்போகிறாய் பாரு என்று நினைத்துக் கொண்டு ஜூஸ் எடுத்து வரப் போனாள்.
அனைவருக்கும் எடுத்துக் கொடுத்தவள். பூவிழி கையில் வாங்கும் முன் அவளது தாவணியில் வேண்டும் என்றே கொட்டி விட்டு அச்சோ நீங்க இப்படி கவனம் பூரா முகிலன் சாரையே பார்த்துக் கொண்டு டம்ளர் வாங்கி இப்படி கொட்டிக் கொண்டீங்க ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல் எங்கள் பாஸை பார்க்கிறீங்க என்று நீ பட்டிக் காடு என்று மறைமுகமாக சாடினாள்.
ஹேய் சுமதி வாட் ஸ் திஸ்.. இவங்க யாருனு தெரியாமல் இப்படி அசிங்கமாக பேசுகிறீங்க என்னோட கெஸ்ட் நீங்க நினைக்கிறதை எல்லாம் பேசாதீர்கள். என்ன? கிராமமா இருந்ததா? என்ன? முதலில் கிராமம் தான் இந்தியாவின் முதுகெலும்பு இதைத் தான் அனைவருக்கும் கல்வி போதிக்கிறாங்க.. கொஞ்சமாவது மரியாதை இன்னும் இருக்கிறது என்றால் அது கிராமங்களில் தான் என்ன தாவணி போட்டு இருந்தா உலக மகா குத்தம் போல் பேசுவீங்களோ?
நான் பார்த்தேன் நீங்க தான் வேண்டும் என்று பூவிழி தாவணியில் கொட்டி விட்டு அவுங்க மேலேயே பழி போடுகிறீங்க முதலில் அவுங்கிட்ட மன்னிப்பு கேளுங்கள்.
சுமதி பூவிழியை முறைத்துப் பார்த்தாள். அவளுக்கு தெரியாதே பூவிழியின் பின்புலம். தேவ் ஆனந்த் கூட கோபம் தான் இருந்தாலும் கார் முகிலன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை நாம் எப்படி திட்ட முடியும் என்று அமைதி காத்தான்.
பூவிழி ரெஸ்ட் ரூம் சென்று அதைக் கிளீன் செய்து வந்து விட்டாள். ஆனாலும் அதில் கரை படிந்து இருந்தது. இதே உடையில் எப்படி வெளியே செல்வது என்று தான் இப்போது கவலையாக இருந்தது.
அதைத் தன் அக்கா தேனருவிகிட்டச் சொல்லும் போதே அவளுக்கு விழிநீர் கோர்த்து விட்டது.
கார்முகிலனுக்கு பூவிழி விழியில் நீர் கோர்த்ததும் அவனுக்கும் கண் கலங்கி விட்டது.
இருப்பினும் அவளுக்கு உடனடியாக அவனுடைய மாலுக்கு அழைத்து ஒரு தாவணி கொண்டு வரச் சொல்லி விட்டான். அவள் அணிந்து இருந்த கலரில் சுமதியை இப்போது அறையை விட்டு வெளியே செல்லச் சொல்லி விட்டான்.
விமலனிடம் கொண்டு வரச் செய்தவன். பூவிழியிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னான். அவனின் தனிப்பட்ட அறைக்குள் சென்று ஆடை மாற்றப் போன பின்பு தேனருவி தேவ் ஆனந்த் இருவரிடமும் மன்னிப்பு வேண்டினான்.
அண்ணி இங்கே வந்து இது போல் நடக்கும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
தேனருவிக்கு தன்னை அண்ணி என்று அழைத்தது. மகிழ்ச்சி அளித்தது.
( அடிப்பாவி உள்ளே வரும் போது வில்லன் சார் இப்போது அண்ணி சொன்னதும் அந்தர் பல்டி அடித்து விட்டாளே.. )
தேனருவிக்கு அந்த சுமதியை சும்மா விட மனசே வரவில்லை. இருந்தாலும் தன் நிழல் கிட்ட சொல்லி விடலாம். அவள் தான் நினைத்தாலே ஆஜர் ஆகி விடுமே நிழல் வந்து விட்டது.
தேவ் ஆனந்த் கார்முகிலன் முன்பு அவளால் பேசமுடியாது அதனால் அவள் மௌனமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட நிழல் தன் முன்பு தெரியும் திரையில் தெரிந்து கொண்டது.
சுமதியா இவ பெரிய சுந்தரி என்று நினைப்பு இவளுக்கு அங்கங்கே குடிப்பதற்கு ஜூஸ் கிடைக்காமல் எல்லாரும் வெயிலோடு விளையாண்டு கொண்டு இருக்கிறாங்க.. அய்யோ இவ பூவிழி யை கேவலப் படுத்தி இருக்கிறாளே.
இவள் காலில் என்ன ஏணி மாதிரி போட்டு இருக்கிறாள். ஓ இதுக்கு பேர் தான் ஹீல்ஸ்சா அது தான் டொக் டொக் என்று நடந்து வருகிறாளா?
இது என்ன ஆப் டிராயர் போட்டு இருக்கிறா? பட்டணம் ரொம்ப கெட்டுப் போச்சு என்று நினைத்துக் கொண்டு, தலையைப் பாரு குட்டிப் பேய் மாதிரி விரிச்சுப் போட்டு இருக்கிறாள்.
சரி இந்த கூத்தாடியை நாம் எதுக்கு வர்ணிக்க வேண்டும். அவள் நடக்கும் போது கால் வாரி விடலாமா? இச்சை இது என்ன சீரியல் வில்லி மாதிரி தோன்றுகிறது.
சரி இருக்கவே இருக்கு எறும்பு கூட்டம் அதை அவளைச் சுற்றிலும் கொண்டு போய் விட்டு விடலாம். அது போதும் யார் மேலேயும் பழி வராது என்று அவள் மேல் நிறைய எறும்புகள் மொய்க்க ஆரம்பித்தது.
அது அவளுக்கு சுல் என்று எறும்பு கடிப்பது உணர முடிந்தது. ஆனால் அவள் ஒரு எறும்பு நசுக்கினால் பத்து எறும்புகள் அவள் உடலில் அதிகமாகியது. கொஞ்ச நேரத்தில் அவள் முகம் அவளுக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தது.
தொடரும்...