• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 9.

மறுநாள் காலை,

சென்னை மாநகரின் முக்கிய பகுதியில் கேஷ் வியசமாக அனைத்து வாகனங்களையும் தனது குழுவுடன் பரிசோதித்துக் கொண்டிருந்தான் இதழரசன்.

அவ்வழியாக தனது மகிழுந்தில் வந்து கொண்டிருந்தாள் இதழருவி.

அவளின் வாகனத்தை நிறுத்த சொல்ல சைகை காட்டியிருந்தான் கார்த்திகேயன்.அவளும் வாகனத்தை நிறுத்தி விட்டாள்.

"நான் உங்க வண்டியை செக் பண்ணனும்மா.கீழ இறங்கு."என்று அவன் கூறவும்

அவளையும் அறியாமல்"சரிங்க அண்ணா."என்று கூறியவள் நினைவு வந்தவளாக "சாரி சார்."பதட்டமாக சொல்லியிருக்க,

"பரவால்லம்மா நீ என்ன அண்ணான்னு கூப்பிடும்மா."என்று புன்னகையுடன் அவன் கூறவும்

"அண்ணா நேத்து நீங்க உதவி செஞ்சதற்கு ரொம்ப நன்றி."என்றபடி தன் மகிழுந்தின் முன்பக்க கதவை திறந்து இறங்கி நின்றாள்.

"பரவால்லம்மா."என்றுபடி அவளின் வாகனத்தை சோதனை செய்ய ஆரம்பித்தவனுக்கு அதிர்ச்சி.

"என்னம்மா கார் டிக்கில்ல இரண்டு புட்டலம் போதை மருந்து பாக்கெட் இருக்கு?"அதிர்வு அகலாத குரலில் இதழருவியை பார்த்து கேட்டிருந்தான் கார்த்திகேயன்.

"அண்ணா இது எப்படி என் வண்டியல வந்துதன்னு சத்தியமா எனக்கு தெரியாதன்னு."என்று அடைக்கப்பட்ட குரலுடன் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவ்விடம் இதழரசன் வந்து விட்டான்.

"என்ன இங்க பிரச்சனை?"என்று இதழருவியை பார்த்தபடி கணீர் குரலில் கேட்டிருந்தான்.

"சார் ..கார் டிக்கில்ல இரண்டு சின்ன பாக்கெட் போதை மருந்து பாக்கெட் இருக்கு சார்.ஆனா, இந்த பொண்ண எனக்கு தெரியும் சார்.

நேத்து இந்த பொண்ணுக்குதான் ஹெல்ப் பண்ணேன்.இந்த பொண்ணு இந்த வேலையை நிச்சயமா பார்த்திருக்காதுங்க சார்."என்றான் நம்பிக்கையான குரலில் கார்த்திகேயன்.

"கார்த்திகேயன் இந்த பொண்ணு எப்படி எனக்கு தெரியாது.ஆனா,இவங்க காருல போதை மருந்த நிச்சயமா இவங்க வெச்சிருக்க முடியாதன்னு எனக்கு நல்லா தெரியும்."என்று ஆழ்ந்த குரலில் இதழருவியை பார்த்தபடி கூறியவன் மேலும் தொடர்ந்தான்.

"கார்த்திகேயன்"

"சார்.."

"இவங்க காருக்கு பின்னாடி டூவிலர்ல இரண்டு காலேஜ் பசங்க இருக்காங்கல்ல அவங்கள இங்க கூட்டிட்டு வாங்க."என்றான் கட்டளை குரலில்.

கார்த்திகேயன் அந்த கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து இவன் முன்பு நிற்பாட்டினான்.

"நீங்கதான இந்த பொண்ணோட காருல இரண்டு சின்ன பாக்கெட் போதை பொருள கார் டிக்கல வெச்சிங்க?"என்று இறுகிப்போன முகத்துடன் கணீர் குரலில் கேட்டிருந்தான் இதழரசன்.

"சார்..இவங்க யாருன்னே எனக்கு தெரியாது.நாங்க எதுக்கு தேவையில்லாம இவங்க காருல வெக்கனும்.நீங்க இவங்கள காப்பாத்த எங்கள பலிஆடா பயன்படுத்திக்க பார்க்கிரிங்க."என்று அவ்விருவரில் ஒருவன் திமிராக பேசினான்.

அவனின் இடது கன்னத்தில் இதழரசன் ஓங்கி ஒரு அறை விட்ட சத்தத்தில் துள்ளி விழுந்தாள் இதழருவி.

"ஏண்டா பண்றதையும் பண்ணிட்டு திமிரா பேசரியா?"என்று கர்ஜித்தவன் தன் கைபேசியை எடுத்து அதில் ஒரு வீடியோவை ஓட விட்டிருந்தான்.

அதில், கார்த்திகேயன் இதழருவி பேசிய ஆறுநிமிட இடைவெளியில் இதழருவியின் கார் டிக்கியில் அந்த இரு கல்லுரி மாணவர்கள் அந்த இரண்டு போதை மருந்தை வைத்தது வரை தெளிவாக அந்த வீடியோவில் ஓடி முடிந்தது.

"இப்ப எதுக்கு என்ன காரணம் சொல்லப் போறிங்க?"என்று கார்த்திகேயன் அந்த மாணவர்களை அதட்டியபடி இருவரையும் அடித்திருந்தான்.

"கார்த்திகேயன் அடிக்க வேண்டாம்.அதுதான் நமக்கு எவிடன்ஸ் பக்காவ இருக்கே.இரண்டு பேர்த்தையும் அரெஸ்ட் பண்ணி லாக்கெப்பல போடுங்க."என்று இதழரசன் ஆனையிட
அவர்களை இழுத்துக் கொண்டு போனான் கார்த்திகேயன்.

இதழருவி என்ன செய்வதென்று தெரியாமல் அதே இடத்தில் நின்றிருக்க,

"ஹலோ மேடம் உங்க நல்ல நேரம் நான் இங்க சிக்னல் கிடைக்கலன்னு அந்த மரத்துக்கு பின்னாடி நின்னு போன் பேசிட்டு இருந்தேன்.அதனாலதான் அவங்க மாட்டிக்காம இருக்க உங்க கார் டிக்கில போதை மருந்து வெச்சத நான் பார்த்து வீடியோ எடுத்தேன்.

நான் பார்க்கலன்னா இந்நேரம் அவங்களுக்கு பதிலா
நீங்க ஜெயிலுக்கு போயிருக்கனும்.இனிமேல் இப்படி கேர்லஸ்ஸா இருக்காதிங்க.நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு கொஞ்சம் கவனிங்க.இதை உங்க அண்ணன் கார்த்திகேயன மறுபடியும் பார்த்தா சொல்லிடுங்க."என்று கணீர் குரலில் கூறவும் அவளின் தலை அன்னிச்சையாக சரி என்பதுபோல ஆடியது.

அவனிடம் "ரொம்ப தேங்க்ஸ் சார்."சிறு பயத்துடன் கூறினாள் இதழருவி.

"ம்.. "என்று அவன் கூறவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்ற ரீதியில் ஓடிச்சென்று மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்ப்பித்து அவ்விடம் நீங்கியிருந்தாள் இதழருவி.

'கொஞ்ச நேரத்தல என் உயிரயே எடுத்திருப்பானுங்க அந்த இரண்டு களவாணி பசங்களும்.என்ன சாமி புண்ணியமோ கடவுள் ரூபத்தல அந்த சாரு வீடியோ எடுத்துதால நான் தப்பிச்சேன்.'என்று மனதில் நினைத்தபடி தான் பணிபுரியும் மருத்துவமனையை நோக்கி வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தாள் இதழருவி.

'அந்த சார கட்டிக்கபோற பொண்ணு ரொம்ப பாவம்.என்னே அடி!ஸ்ப்பா.. இப்ப நினைச்சாலும் என் காதே கொய்ங்கிங்குது.'என்று மனதில் நினைத்தவள் தலையை இருபுறம் உலக்கியபடி தான் பணிபுரியும் மருத்துவமனை வளாகத்திற்குள் மகிழுந்தை செலுத்தியிருந்தாள் இதழருவி.
 
Joined
Jan 29, 2025
Messages
111
காவல் நிலையத்தில்,

"சார்..என் பசங்கள வெளியே விடுங்க.இல்லின்னா நீங்க பின்விளைவுகளை பயங்கரமா சந்திக்க வேண்டியதா இருக்கும்."என்று எச்சரித்துக்கொண்டவரை பார்த்து நக்கலாக சிரித்து வைத்தான் இதழரசன்.

"விடமுடியாது சார்.நீங்க எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கங்க."தற்பொழுது இறுகிய முகத்துடன் விரைப்பாக கூறியிருந்தான்.

"நான் யாருன்னு தெரிஞ்சும் இப்படி பேசரது எனக்கு ஒன்னும் ஆச்சரியமா இல்ல.உங்களமாறி நான் நிறையா பேர பாத்திட்டேன்.

இந்தாங்க இந்த பணத்த வெச்சுட்டு என் பசங்கள வெளிய விடுங்க."என்று இதழரன் மேசையில் ஒரு பணக்கட்டை எடுத்து வைத்தார் விஸ்வநாதன்.பெரிய பிஸ்னெஸ் மேன்.அரசியல் பலம் உள்ளவர்.

கோணலாக உதட்டை வளைத்தபடி தன் இருக்கையில் இருந்து மேலே எழுந்தவன் அந்த பணக்கட்டை எடுத்த இதழரசன் அவர் முகத்திலே விட்டெரிந்தவன்

"உங்களுக்கு என்ன திமிர் இருந்தா என் டேசனுக்கே வந்து எனக்கே லஞ்சம் தருவீங்களா?பணம் அதிகமா இருந்த அதவச்சு நாலு பேருக்கு நல்லது பண்ணுங்க.உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

அதவிட்டுட்டு பணத்த இந்த மாதிரி என்கிட்ட பயன்படுத்தினிங்கன்னா அதுற்கு இதுதான் என் பதில்."என்று விரைப்பாகவே தன் கணீர் குரலில் பதலளித்திருந்தான் இதழரசன்.

"தம்பி.. நீங்க இடம் தெரியாம மோதிட்டிங்க.இனிமேல் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்."மனதில் வன்மத்துடன் வெளியே மெலிதாக புன்னகைத்தபடி கூறியிருந்தார் விஸ்வநாதன்.

"சார்.. நான் இடம் தெரிஞ்சுதான் மோதரேன்.உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கிங்க."என்று நெஞ்சை நிமிர்த்தி திமிராக கூறியிருந்தான் இதழரசன்.

"நீங்களே இப்படி சொன்னதுக்கப்புறம் நான் என்ன பேசரது.சரிங்க தம்பி.நாம களத்துல சந்திக்கலாம்."புன்னகையுடன் கூறியவர் திரும்பி லாக்கப்பில் இருந்த தன் பசங்களை பார்த்தவர் "பயப்படாம இருங்க.நானும் உங்க அண்ணனும் எல்லாத்தையும் பார்த்துக்குவோம்."என்று விஸ்வநாதன் அழுத்தமாக சொல்லவும்

"அப்பா.. நீங்க சொல்ரத பார்த்தா அண்ணன் யூஎஸ் லிருந்து வந்துட்டா ரா?"விழிகளில் ஒர் ஒளியுடன் இருவரும் ஒரு சேர கேட்டிருந்தனர் அவரின் மகன்கள் இருவரும்.

"அதெப்படிடா உங்களுக்கு ஒரு பிரச்சினையின்னா அவன் பார்த்துட்டு சும்மா இருப்பானா?கேள்விப்பட்ட மறுநொடி தன்னோட சொந்த ஹெலிகாப்டர்ல கிளம்பிட்டான்.வந்துருவான்.நீங்க கவலப்படாம இருங்க."என்று தன் மகன்களுக்கு தைரியம் அளித்து விட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி இருந்தார் விஸ்வநாதன்.

"சார்.. அவங்க ரொம்ப ஆபத்தானவங்க."சிறு தயக்கத்துடன் கூறியிருந்தான் கார்த்திகேயன்.

"இருக்கட்டும் கார்த்தி.அதப்பத்தி எல்லாம் நான் கவலப்பட மாட்டேன்.அவங்க என்னதான் செஞ்சிடுவாங்க? நான் பார்த்துக்கிறேன்."என்று அலட்சியமாக பதில் தந்தவன் தான் பார்க்க வேண்டிய வேலைகளை அடுத்தடுத்து பார்க்க தொடங்கியிருந்தான் இதழரசன்.

மருத்துவமனையில்,

"உங்க பொண்ணுக்கு நல்லபடியா ஹார்ட் ஆப்ரேசன் முடிஞ்சது.இப்ப அவங்க மயக்கத்தல இருக்காங்க.அவங்களுக்கு கான்சியஸ் வந்ததுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம்."சிறு புன்னகையுடன் அவள் கூறியிருக்க,

"ரொம்ப நன்றிம்மா."உணர்ச்சிகரமாக அப்பெண்ணின் தாய் தன் இருகரங்களை கூப்பி இதழருவியிடம் தெரிவித்திருக்க

"உங்க நன்றிய கடவுளுக்கு சொல்லிடுங்க."என்று சிறு புன்னகையுடன் அவர்களை கடந்து தனது கேபினுக்குள் சென்றிருந்தாள் இதழருவி.

தனது கேபினுக்குள் வந்து தன் இருக்கையில் சற்று ஆசுவாசமாக அமர்ந்தவள் தன் மேசையின் மீது இருந்த வாட்டர் பாட்டிலின் மூடியை கழட்டி சிப்சிப்பாக தண்ணீர் பருக ஆரம்பித்தவளுக்கு திடீர் என்று புரையேறி இருமியவள் நெஞ்சை நீவி விட்டு தன்னை ஆசவாச படுத்திக்கொள்ள பத்து நிமிடம் ஆனது.

"மேம் பேசன்ட் வந்திருக்காங்க உள்ள அனுப்புட்டுமா?"என்று செவிலியர் இதழருவியிடம் அனுமதி கேட்டிருக்க

"அனுப்புங்க."என்று கூறியவள் தன் ஸ்டத்ஸ்கோப்பை எடுத்து கழுத்தில் போட்டுக்கொண்டு தனது இருக்கையில் நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.

உள்ளே வந்தவனை பார்த்து தன்னையும் அறியாமல் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து மேலே எழுந்து நின்றாள்.

"சார்.. நீங்க எங்க இங்க வந்திருக்கிங்க?"என்று சிறு பயத்துடன் கேட்டிருந்தாள் இதழருவி.

அவள் அப்படி பயத்துடன் கூறவும் இதழரசன் தன் மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் 'இதழருவி'அவளின் நேம் போர்டை பார்த்து மனதில் படித்தவன் வரிசையாக டாக்டர் டிகிரியை பார்த்து விட்டு அவளின் முகத்தை தீர்க்கமாக பார்த்து

"வேற எதுக்கு வருவாங்க? எல்லாம் உங்கள விசாரிக்கதான்."என்று அவன் சீரியஸாக கூறவும் அவளின் முகம் பயத்தில் வெளிரிவிட்டது.

"சார்.. நான் தப்பு பண்ணலன்னு உங்களுக்கே தெரியுமே.அப்புறம் எதுக்கு சார் என்ன விசாரிக்க வந்திருக்கிங்க?"என்று அப்பாவியாக கேட்டவளை பார்த்து அவனுக்கே சற்று பாவமாகதான் இருந்தது.அவளிடம் இப்படி சீண்டுவது அவனுக்கு பிடித்திருந்தது.

"நீங்க பயப்படர அளவுக்கு இது பெரிய விசாரணை கிடையாது.ஜெஸ்ட் ஒரு பார்மலிட்டி.உங்க பேரு சொல்லுங்க.அப்புறம் உங்க போன் நம்பர் கொடுங்க.

எனக்கு ப்ர்தரா தகவல் தேவைப்பட்டா உங்களுக்கு போன் பண்றேன்.நீங்க காவல் நிலையத்திற்கு எல்லாம் வரவேண்டியதில்லை.நீங்க போன்ல பதில் சொன்னாலே போதும்."என்று அவன் சீரியஸாக அடித்து விட்ட பொய்யை உண்மைன்னு நம்பி நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தாள் இதழருவி.

"என்பேரு இதழருவி.நான் இந்த ஹாஸ்பிடல்ல வொர்க் பண்றேன்.அவளுடைய கைபேசி நம்பரையும் கூறியவள், சார் நான் நீங்க கேட்ட தகவல சொல்லிட்டனே.

நீங்க வெளிய போனா நான் என் வேலையை பார்ப்பேன்.
பேசன்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணுவாங்க."என்றாள் சிறு தயக்கத்துடன்.

"ஹலோ.. டாக்டர் மேடம்
நானும் உங்ககிட்ட வைத்தியம் பார்க்கனும்."என்றபடி தன் வலது உள்ளங்கையை காண்பிக்க அதில் அவன் சுற்றியிருந்த துணியை மீறி ரத்தம் வெளிவந்துகொண்டிருந்தது.

"என்னங்க நீங்க வந்ததும் இதைதான முதல்ல சொல்லியிருக்கனும்."என்று அவனை கடிந்து கொண்டபடி அவனின் வலது உள்ளங்கையில் உள்ள சுற்றியிருந்த துணியை நீக்கிவிட்டு முதலில் பஞ்சை வைத்து காயத்தை சுத்தம் செய்து அதற்குண்டான வைத்தியத்தை பார்த்து முடித்தபின்புதான் அவனை நிமிர்ந்து பார்த்திருந்தாள்.

பின்பு ப்ரிஸ்கிரிப்ஷன் நோட்டை எடுத்துக்கொண்டவள் "சார் உங்க பேர அப்புரம் உங்க வயசு சொல்லுங்க."என்று அவனிடம் கேட்டிருக்க,

"இதழரசன்.வயசு இருபத்தியெட்டு."அவன் கூறியதை ப்ரஸ்கிரிப்ஷனில் எழுதியவள் மூன்று மாத்திரையின் பெயர்களை தான் எழுதிய ப்ரிஸ்கிரிப்ஷன் தாளை
அந்த நோட்டிலிருந்து கிழித்து அவன்புறம் நீட்டியிருந்தாள்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top